Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படு கொலை என்பதனை ஒருபோதும் ஏற்க முடியாது - மங்கள

Featured Replies

இனப்படு கொலை என்பதனை ஒருபோதும் ஏற்க முடியாது - மங்கள

 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கையின் யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஓருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை குறித்து நாம் நம்பகரமான விசாரணை நடத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தில் வைத்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய  விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் இதன்போது மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையில் யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவ்வாறு இனப்படுகொலைகள் நடைபெறவில்லை. மாறாக யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களும் போர் குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை குறித்து நாம் விசாரணை நடத்துவோம். 

ஆனால் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்றும் அவர் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. 

asasa.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுத்தகாலத்தில் அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காலப்பகுதியில் ஒரு சில நாட்கள் மட்டும் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார். எனவே ஒரு சில நாட்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பதற்காக அவர் நல்லிணக்கத்தை முன்னெடுக்க மாட்டார் என கூறமுடியாது. 

எமது அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நல்லிணக்கத்துக்காக பாரியளவில் குரல் கொடுத்து வருகிறார் என்பதை கூற வேண்டும். இதேவேளை வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்திற்குள் வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கில் இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனூடாக நல்லிணக்கம் முன்னெடுக்கப்படும். இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து நல்லிணக்கத்துக்காக செயற்பட வேண்டும். 

நான் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் புலம்பெயர் சமூகத்தில் 472 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்கள் மீதான தடையை நீக்கினேன். எனவே அவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியமாகும் என்றார். 

http://www.virakesari.lk/article/8299

19 minutes ago, நவீனன் said:

இலங்கையின் யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஓருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பட்டவர்த்தமான உண்மையை மறைக்கும் இப்படிப்பட்ட சிங்கள-பௌத்த இனமதவெறியர்களிடமிருந்து எந்தவொரு நீதியையும் தமிழர் எதிர்பார்க்க முடியாது என்பதை மனித உரிமை ஆணையாளர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

முழுமையான சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை ஒன்றே தமிழர்களுக்கு ஓரளவு நீதியை பெற்றுக் கொடுக்கும் என்பது இவரது கூற்றுக்கள் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ..சம் ..சும் ....இதற்கு ..நல்ல சர்டிபிகேட் ..கொடுப்பினமே....ஏன் நீங்க வருந்துகிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு ஒரே குணம் தான். தமிழரை கொல்ல வேண்டும். அவற்றை உலகுக்கு மூடி மறைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து நல்லிணக்கத்துக்காக செயற்பட வேண்டும். 

நான் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் புலம்பெயர் சமூகத்தில் 472 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்கள் மீதான தடையை நீக்கினேன். எனவே அவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியமாகும் என்றார். 

என்ன பகிடி விடுறீயள் நாங்கள் ஏற்கனவே ஐக்கியப்பட்டிட்டம்.......கோவிலிலும் ,சாய் பஜனையிலும் கிறிபத் பிரசாதமாக வைக்கிறோம்.....வீடுகளில் பார்ட்டி என்றால் அப்பத்தோடு கட்டு சம்பல் சாப்பிடுகிறோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.