Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Featured Replies

புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/109663

  • தொடங்கியவர்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளர்.

இலங்கையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

இதேவேளை,1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/109663

மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி
 
 

article_1467434026-ccupew6p.jpgஇலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி,  பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆளுநர், தனது கடமைகளை 4 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார்.

 2  0  0 Google +
- See more at: http://www.tamilmirror.lk/176024/மத-த-ய-வங-க-ஆள-நர-க-இந-த-ரஜ-த-க-ம-ரச-வ-ம-#sthash.kcZkGKQe.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி்றிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனராக பணியாற்றிய அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 30 ஆம் நாளுடன் நிறைவடைந்ததை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் பிரபல பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கொமன்வெல்த் செயலகத்தில், பொருளாதார விவகாரப் பணிப்பாளராகவும் முன்னர் பணியாற்றியுள்ளார்.

Dr. Indrajit Coomaraswamy

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் பிரித்தானியாவின் ஹரோ பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலைப்பட்டத்தையும், சூசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டத்தையும் பெற்றவர்.

1973இல் சிறிலங்கா மத்திய வங்கியில் இணைந்த இவர், 1989ஆம் ஆண்டு வரை, பொருளாதார ஆய்வு மற்றும் புள்ளிவிபர, வங்கிகள் மேலாண்மைப் பிரிவில், அதிகாரியாக பணியாற்றினார்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை, கொமன்வெல்த் செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியிருந்தார்.

1971-72 காலப் பகுதியில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியில், முதற்தர துடுப்பாட்ட வீரராகவும், இருந்த இந்திரஜித் குமாரசுவாமி, 1974ஆம் ஆண்டு ஆசியாட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா ரக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2016/07/02/news/17191

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூனா மகேந்திரனின் பதவி நீடிப்பினை மகிந்த சார்பு இனவாதக் கட்சிகள் மூர்க்கமாக எதிர்த்த நிலையில், அரசுக்கு தர்ம சங்கடத்தை தராது, தானே நீடிப்பு கோரப்போவதில்லை என ஒதுங்கிக் கொண்டார் அவர்.

இந்நிலையில், புதிய ஆளுனர்களாக நான்கு சிங்களவர்கள் பேர்களை அரசு பரீசீலிப்பதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு அவர்கள் தகுதிகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று, Dr இந்திரஜித் குமாரசாமி என்பவரை புதிய ஆளுனராக ஜனாதிபதி அறிவித்து இனவாதிகளை மிரள வைத்துள்ளார்.

http://www.dailymirror.lk/111882/Dr-Indrajit-Coomaraswamy-appointed-as-CB-Governor-

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
4 hours ago, Nathamuni said:

Dr இந்திரஜித் குமாரசாமி என்பவரை புதிய ஆளுனராக ஜனாதிபதி அறிவித்து இனவாதிகளை மிரள வைத்துள்ளார்.

இது தமிழ் மிரரின் கருத்து!

ஆனால், அதையும் தாண்டிய உண்மை என்னவென்றால், .நா. மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி என்ற பெயரில் இவர்கள் நடத்திய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகத்திரை பல நாடுகளால் கிழிக்கப் பட்டிருந்தன.

உண்மையில் நான்கு சிங்களவர்களில் யாரை நியமிப்பது என்பதில் தான் மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் கடைசி நிமிடம் வரை முரண்பாடுகள் இருந்தன. 2 மணித்தியாலத்தில் ஆளுநராக நியமிப்பதாக கூறி மத்திய வங்கி வரை சென்ற மைத்திரியும் ரணிலும் மேலும் 2 நாட்கள் எந்த சிங்களவனை நியமிப்பது என்று முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.  

இதன் போது ஜெனீவாவில் இருந்து கிடைத்த செய்தி பேரிடியாக இருந்தது. சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் கூக்குரல்களுக்கு மட்டும் தான் நல்லாட்சி என்ற பெயரில் இவர்கள் நடத்திய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரங்கள் செவிசாய்ப்பதாக கடுமையான செய்தி அனுப்பப்பட்டது.

இதனால் வேறு வழிகள் இன்றி மைத்திரியும் ரணிலும் மிகவும் மூத்த அதிகாரியான தமிழரை புறம்தள்ள முடியாமல் அவரை வேண்டா வெறுப்பாக நியமித்துள்ளார்.

இதனால் தான் மிக மோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களில் ஒருவரான தினேஷ் டுவீட்டரில் வாழ்த்தும், மைத்திரி தான் எல்லாருக்கும் செவிசாய்ப்பவன் என்ற கபட வார்த்தை ஜாலங்களுடன் கூடிய பெரும் பொய்யையும் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உலக புலம்பெயர் தமிழ் அமைப்புகள், உலக மனித உரிமை அமைப்புகள், குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல நாடுகளுக்கும் ஐநா சபைக்கும் வழங்கிய எழுத்துமூல ஆவணக்கள், தமிழக அமைப்புகள் சிலவற்றின் ஆவணங்கள் போன்றவை இந்த முடிவுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.

மேலும், வழமையாக குட்டையைக் குழப்பும் சம்சும் குழுவினர் இம்முறை முதல் தடவையாக ஏனைய தமிழர் உரிமைகளுக்கு தொடர்ந்து போராடும் அமைப்புகளின் கோரிக்கைக்கு வலுவூட்டும் விதத்தில் செயற்பட்டதும் இந்த முடிவுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.

எனவே "இந்திரஜித் குமாரசாமி என்பவரை புதிய ஆளுனராக ஜனாதிபதி அறிவித்து இனவாதிகளை மிரள வைத்துள்ளார்" என்பது உண்மையை திசை திருப்பி நல்லாட்சி என்ற பெயரில் நடக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் முயற்சியாகும். தமிழ் மிர்ரர் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை அறிந்தால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  

இதன் பின்னணியிலேயே தற்போது சகல தமிழின விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை  புலிப் பயங்கரவாதி என்று சாயம் பூச சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் ஊடகங்கள் மற்றும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசியல்வாதிகள் தொடங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

இது தமிழ் மிரரின் கருத்து!

போல், 

உங்கள் கருத்துடன் விவாதம் இல்லை. ஆனால் நீங்கள் கோட் பண்ணி ஏழுதியது எனது சொந்த வசனம்.... தமிழ் மிரலிலும் வந்ததா? நான் வாசிக்கவில்லை, எனினும் ஆச்சரியமாக உணர்கிறேன்.

ஜெனிவாவில் என்ன தான் பெரிசா நடைபெறப் போகுது என்ற எண்ணத்தால், அது பற்றிய செய்திகள் படிப்பதில்லை. எனவே நீங்கள் ஜெனிவா பேரிடி என்று சொல்வது ஏன் என்று தயவுடன் விளக்க முடியுமா?

நன்றி

  • தொடங்கியவர்
6 hours ago, Nathamuni said:

நீங்கள் கோட் பண்ணி ஏழுதியது எனது சொந்த வசனம்.

அது செய்தியின் தொடராக இருந்தபடியால் உங்கள் அது தமிழ் மிரர் கருத்து என்று நினைத்து விட்டேன்.

வழமையாக லிங்கில் சென்று மூலம் பார்ப்பதில்லை. தேவையும் இல்லை.

எனவே சொந்தக் கருத்தை இணைக்கும் போது ஏதாவது வித்தியாசத்தை காட்டினால் இது போன்ற தவறுகள் ஏற்படாது.

நான் எனது சொந்தக் கருத்துக்களை மூலச் செய்தியில் எப்போதாவது (மிகக் குறைவு) இணைக்கும் போது, இறுதியாக அந்த செய்தி லிங்கின் கீழ் தனியாகத் தான் இணைப்பது வழக்கம்.

நன்றி நாதமுனி!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

அது செய்தியின் தொடராக இருந்தபடியால் உங்கள் அது தமிழ் மிரர் கருத்து என்று நினைத்து விட்டேன்.

வழமையாக லிங்கில் சென்று மூலம் பார்ப்பதில்லை. தேவையும் இல்லை.

எனவே சொந்தக் கருத்தை இணைக்கும் போது ஏதாவது வித்தியாசத்தை காட்டினால் இது போன்ற தவறுகள் ஏற்படாது.

நான் எனது சொந்தக் கருத்துக்களை மூலச் செய்தியில் எப்போதாவது (மிகக் குறைவு) இணைக்கும் போது, இறுதியாக அந்த செய்தி லிங்கின் கீழ் தனியாகத் தான் இணைப்பது வழக்கம்.

நன்றி நாதமுனி!

நன்றி போல்,

ஆனால் எனது கேள்வி 'ஜெனீவா பேரிடி' பற்றியது.... tw_cry:

1 hour ago, Nathamuni said:

நன்றி போல்,

ஆனால் எனது கேள்வி 'ஜெனீவா பேரிடி' பற்றியது.... tw_cry:

 

3 hours ago, போல் said:

அது செய்தியின் தொடராக இருந்தபடியால் உங்கள் அது தமிழ் மிரர் கருத்து என்று நினைத்து விட்டேன்.

வழமையாக லிங்கில் சென்று மூலம் பார்ப்பதில்லை. தேவையும் இல்லை.

எனவே சொந்தக் கருத்தை இணைக்கும் போது ஏதாவது வித்தியாசத்தை காட்டினால் இது போன்ற தவறுகள் ஏற்படாது.

நான் எனது சொந்தக் கருத்துக்களை மூலச் செய்தியில் எப்போதாவது (மிகக் குறைவு) இணைக்கும் போது, இறுதியாக அந்த செய்தி லிங்கின் கீழ் தனியாகத் தான் இணைப்பது வழக்கம்.

நன்றி நாதமுனி!

இதுக்குமேலயுமா உங்களுக்கு விளக்கம் தேவை நாதம்ஸ். :grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
10 hours ago, Nathamuni said:

நன்றி போல்,

ஆனால் எனது கேள்வி 'ஜெனீவா பேரிடி' பற்றியது.... tw_cry:

ஆரம்பத்தில் நான் எழுதிய பதிவில் இதற்கு சுருக்கமான பதில் உள்ளது. கவனமாக வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 தனக்கு தவில் வாசிப்பவர்களை கூட்டத்தில்  சேர்த்து ஆதாயம் தேடுவார்கள், நாங்கள் தமிழருக்கு சமஉரிமை கொடுக்கிறோம் என்றும், தாம்  நியமித்த  அதிகாரிகளையும் பட்டியலிட்டு, அவர்கள் தங்கள் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கிறார்கள்,சில இனவாதிகள் குழப்புகிறார்கள் என்று வாதித்து ஆதாரமும் கொடுப்பார்கள்.  நியமிக்கப் பட்டவர்களும் பிரதி உபகாரமாக சில திணிப்புகளை தமிழர் மேல் சுமத்துவார்கள். உண்மைக்காக  முரண்டு பிடிப்பவர்களை இனவாதியாகச் சித்திருப்பார்கள். இதில் என்ன வியப்பு இருக்கிறது? "சோழியன் குடுமி சும்மா ஆடாது."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.