Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் 45 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Featured Replies

பருத்தித்துறையில் 45 கிலோகிராம் கஞ்சா மீட்பு
 
 

article_1467693345-Found.jpg-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை நாவலடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் 45 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (04) இரவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர் - சவக்காட்டு சந்திப்பகுதியில் மேற்படி நபர் கஞ்சா பரிமாறுவதாக விசேட குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

சம்பவ இடத்துக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸார், தப்பியோட முயன்ற சந்தேகநபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருந்தனர்.

அத்துடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பருத்தித்துறையிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்வதாக தெரியவந்தது.

சந்தேகநபரை, பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 45 கிலோகிராம் எடையுள்ள கேரளா கஞ்சாவை  மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/176249/பர-த-த-த-த-ற-ய-ல-க-ல-க-ர-ம-கஞ-ச-ம-ட-ப-#sthash.dbGimmoG.dpuf

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, மாதகல், மன்னார் மக்கள் தம்முள் மறைந்திருக்கும் போதைப் பொருள் கடத்தும் களைகளை  அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

 

பருத்தித்துறையில் 45 கிலோகிராம் கஞ்சா மீட்பு

 

கிராம் கணக்கு போய் கிலோ கணக்கிலை வந்து நிக்கிது........இனி தொன்னிலைதான் வந்து நிக்கும் போலை கிடக்கு:cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கிராம் கணக்கு போய் கிலோ கணக்கிலை வந்து நிக்கிது........இனி தொன்னிலைதான் வந்து நிக்கும் போலை கிடக்கு:cool:

தோட்டம் எங்கு இருக்கிறது எனபதே என்னுடைய பல நாள் தேடலாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

தோட்டம் எங்கு இருக்கிறது எனபதே என்னுடைய பல நாள் தேடலாக இருக்கிறது.

எந்த சாரே....தோட்டம் கேரளாவில்  ஆக்கும்....கேரளா கஞ்சாவும் திறம்....கேரள......tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

எந்த சாரே....தோட்டம் கேரளாவில்  ஆக்கும்....கேரளா கஞ்சாவும் திறம்....கேரள......tw_tounge_wink:

இப்படி ஏக்கர் கணக்கில் தோடடம் செய்வது என்றால் ...?
ஒழித்து செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை 

4 hours ago, Maruthankerny said:

இப்படி ஏக்கர் கணக்கில் தோடடம் செய்வது என்றால் ...?
ஒழித்து செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை 

மாதாந்தம் இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பல்லாயிரம் கிலோ போதை பொருட்கள் கற்பிட்டி முதல் ஆழியவளை வரை வட கடலில் பிடிபடுகின்றன.

அண்மையில் தமிழ் நாட்டிலும் மாணவர்கள் மத்தியில் போதை சொக்கலேட் விநியோகம் பற்றிய செய்திகள் வந்தன.

இதுவும் தமிழின அழிப்பின் ஓர் அங்கமாக ஹிந்திய, மலையாள நாசகாரக் கும்பல்களால் திட்டமிட்டு செய்யப்படும் செயலாகவே இருக்கலாம்.

 

Edited by போல்

சாலையோரத்தில் போதை சாக்லெட்டுகள்?- கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவையில் சாலையோரத்தில் பெட்டி பெட்டியாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள சாக்லெட்டுகள் குறித்து, உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பெரிய குளத்தை ஒட்டியவாறு செல்லும் செல்வபுரம் சாலையின் ஓரத்தில் சாக்லெட்டுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொட்டப்பட்டிருப் பதை அப்பகுதி மக்கள் நேற்று பகலில் பார்த்தனர். மூன்று வகையான சாக்லெட்டுகள் கிடப்பதை அறிந்த பொதுமக்களில் சிலர் அதனை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், திடீரென சாக்லெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்ததால் அது போதை தரும் சாக்லெட்டுகளாக இருக்கலாம் என தகவல் பரவியது. சமீபத்தில் சென்னையில் போதை தரும் சாக்லெட்டுகளை பல்வேறு கடைகளில் பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பழனிசாமி கூறும்போது, "சாலையில் கொட்டப்பட்ட சாக்லெட்டுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டது. ஆனால், அந்த சாக்லெட் மாதிரிகளை பரிசோதனைக் கூடத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்ய முடியாது. போதை தரும் சாக்லெட்டாக இருந்தாலும் அது கடையில் வைத்து விற்றால்தான் குற்றம். அதனை அழிப்பதற்காக இவ்வாறு கொட்டிச் சென்றால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம், கொட்டியவர்கள் யார் என்பது தெரியாது" என்றார்.

இந்நிலையில், சாலையில் கொட்டப்பட்டிருந்த சாக்லெட்டு களை பொதுமக்கள் சிலர் அள்ளிச் சென்றதால் அது மீண்டும் சிறு கடைகளுக்கு விற்பனைக்கு வரலாம் என சந்தேகம் எழுந்துள் ளது. அதுபோன்ற சாக்லெட்டுகள் மீண்டும் விற்பனைக்கு வராமல் தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறு கடைகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சாலையோரத்தில்-போதை-சாக்லெட்டுகள்-கோவையில்-உணவுப்-பாதுகாப்புத்துறை-அதிகாரிகள்-விசாரணை/article8819142.ece?ref=sliderNews

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

இப்படி ஏக்கர் கணக்கில் தோடடம் செய்வது என்றால் ...?
ஒழித்து செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை 

ஆயிரக்கணக்கில் கூலித் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில்

ஒளித்துச் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

17 hours ago, போல் said:

மாதாந்தம் இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பல்லாயிரம் கிலோ போதை பொருட்கள் கற்பிட்டி முதல் ஆழியவளை வரை வட கடலில் பிடிபடுகின்றன.

அண்மையில் தமிழ் நாட்டிலும் மாணவர்கள் மத்தியில் போதை சொக்கலேட் விநியோகம் பற்றிய செய்திகள் வந்தன.

இதுவும் தமிழின அழிப்பின் ஓர் அங்கமாக ஹிந்திய, மலையாள நாசகாரக் கும்பல்களால் திட்டமிட்டு செய்யப்படும் செயலாகவே இருக்கலாம்.

ஏற்கனவே போதைப் பொருளை கடத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரை மோடி தலையிட்டு விடுவித்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். இது  தமிழின அழிப்பின் ஓர் அங்கமாக ஹிந்திய, மலையாள நாசகாரக் கும்பல்களால் திட்டமிட்டு செய்யப்படும் செயலாகவே இந்தப் பாரிய போதைப் பொருள் கடத்தல் இருக்கும் என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.