Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? : சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது அரசாங்கம்

Featured Replies

கூட்டமைப்பின் தலைவர்  சம்மந்தனா? சுமந்திரனா? : சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது அரசாங்கம்  

 

(ஆர்.யசி)sumanthiran-sambanthan.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

சம்பந்தனின் கருத்துகளை மீறி சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பது ஒருபோதும் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நியமிக்க இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் எனவும், அரசியல் அமைப்பில் அதற்கான சிக்கல்கள் இல்லையெனவும் சுமந்திரன் வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரக்கதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில்  உள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்  

இலங்கை அரசாங்கம் சரியான வகையில் செயற்படுகின்றது எனவும் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்றை பத்திரிகையின் முன்பக்கத்தில் நான் அவதானித்தேன். அவர் தமிழ் மக்களின் தலைவர்.  அத்தோடு எதிர்க்கட்சி தலைவர். அவ்வாறு இருக்கும் ஒருவர் சரியான வகையில் கருத்து ஒன்றை முன்வைக்கும் நிலையில் சுமந்திரன் சர்வதேச அரங்கில் தெரிவிக்கும் கருத்துக்கள் எந்தளவு முக்கியம் பெறும்.? உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தன் பொறுப்புமிக்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ள நிலையில் அதையும் மீறிய வகையில் சுமந்திரன் கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகுமா என நாம் கேள்வி எழுப்புகின்றோம். 

http://www.virakesari.lk/article/8875

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர்

இனிமேல் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப இவர்

இனிமேல் அவர்.

இப்பவும் இவர்

இனி

எப்போதும் அவர்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசாங்கம் இதையிட்டுப் பதறத் தேவையில்லை. கூட்டமைப்பை அடுத்த தேர்தலுக்கு முன் உடைப்பது தான் இவர்கள் இருவரினதும்.. 2016ம் ஆண்டின் அதிசய நிகழ்வாக இருக்கப் போகுது. அதுதானே தேவை நல்லாட்சி அரசுக்கு. அப்புறம் யார் தான் தலைவரா இருந்தால் என்ன.. விட்டால் என்ன. tw_angry::rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சமரசிங்க உங்களுக்கு தெரிலயா சேம் டவுட்டு தமிழ் மக்களுக்கு 

இதை கேட்க இந்த சிங்கள-பௌத்த இனமதவெறியர் சமரசிங்க யார்?

  • கருத்துக்கள உறவுகள்

மோதகம் இருந்தால் என்ன ?
கொளுக்கொட்டை  இருந்தால் என்ன?

உள்ளுடன் சுவை எல்லாம் மக்களுக்கு ஒன்றுதானே?
அரசுக்கு இதில் எதை கூட்டி கழித்தாலும் நனமை தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Maruthankerny said:

மோதகம் இருந்தால் என்ன ?
கொளுக்கொட்டை  இருந்தால் என்ன?

உள்ளுடன் சுவை எல்லாம் மக்களுக்கு ஒன்றுதானே?
அரசுக்கு இதில் எதை கூட்டி கழித்தாலும் நனமை தானே ?

மோதகம்

கொளுக்கட்டை

இனிப்பானவை யுவர் ஆனர்.....

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.