Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை

Featured Replies

துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை

160720033747_turkey_rally_istanbul_640x3

 துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

துருக்கியில் கடந்த வாரம் நிகழ்ந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, 50 ஆயிரத்திற்கு மேலானோர் இனம் காணப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் ரசிப் தயிப் எர்துவானுக்கு விசுவாசமாக இல்லாதோரை பணியிலிருந்து நீக்குவது ஆசிரியர்கள், பல்கலைக்கழக டீன்கள் மற்றும் ஊடகங்கள் என செவ்வாய்கிழமை விரிவானது.

151227151105_erdogan_tuekey_640x360_ap_n

 துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான்

இவர்கள் அனைவரும், இந்த எழுச்சியை தான் இயக்கவில்லை என்று மறுத்துள்ள அமெரிக்காவில் வாழும் மதப் போதகர் ஃபெத்துல்லா க்யூலெனின் கூட்டாளிகள் என்று துருக்கி அரசு கூறியுள்ளது.

இந்த மதப் போதகர் ஒரு “தீவிரவாத அமைப்பை” வழிநடத்தினார் என்று பிரதமர் பினாலி இல்டிரிம் கூறியிருக்கிறார்.

160719130111_turkey_512x288__nocredit.jp

 துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம்

“அவர்களை வேரோடு பிடுக்கி விடுவோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா க்யுலெனை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை செவ்வாய்கிழமை அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அதிபர் எதுவானும் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது எழுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

160717090503_cn_fethullah_gulen_640x360_

 அமெரிக்காவில் வாழும் மதப் போதகர் ஃபெத்துல்லா ஹூயூலென்

அவரை துருக்கியிடம் ஒப்படைப்பது பற்றிய தீர்மானம் இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி உருவாக்கப்படும் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

க்யுலெனுக்கு எதிரான வழக்கில் சான்றுகளை கேட்பதற்கு பதிலாக, அவரை “சந்தேகத்தின் அடிப்படை“ - யில் அமெரிக்காவால் திருப்பி அனுப்ப முடியும் என்று துருக்கியின் செய்தித் தொடர்பாளர் முன்மோழிந்துள்ளார்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னால் தான் இருப்பதாக தெரிவிக்கப்படும் கூற்றுகள் “கேலிக்குரியவை” என்றும், நாடுகடந்து வாழ்வோரை தாய் நாட்டுக்கு ஒப்படைக்கும் வழிமுறையை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கலை நிறைவேற்ற நினைக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்க அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் க்யுலென் கூறியிருக்கிறார்.

    150120203405_istanbul_640x360_epa_nocred

இந்நிலையில், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற பிறகு முதல் முறையாக தலைநகர் அங்காரவுக்கு புதன்கிழமை வரயிருக்கும் அதிபர் எர்துவான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு அரசின் மற்றும் படைப்பிரிவுகளின் முக்கிய அனைத்து உறுப்பினர்களுடனும் நேரடியாக பேசும் முதல் வாய்ப்பாக அதிபருக்கு இது அமையும் என்று அங்காராவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் நிக் தோர்பே கூறியுள்ளார்.

160720034527_turkey_policemen_512x288_ap

இந்த குழப்பத்தின் மத்தியில் ஸ்திரத்தன்மைய உருவாக்கும் கடமையில் இருக்கும் அதிபர் எர்துவான், அவருக்கு எதிரான பல விமர்சகர்களை களையெடுப்பதில் இறங்கவில்லை என்பதை நாட்டிற்கும், கூட்டாளி வெளி நாடுகளுக்கும் உறுதி செய்ய வேண்டிய நிலிலையில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

துருக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள வேலைநீக்கம் செய்யப்பட்டோர் பட்டியல்
01 ஆசியரியர்கள் மற்றும்பிற கல்வி பணியாளர்கள் 5, 200
02 பல்கலைக்கழக டீன்கள் 1,577
03 உள்துறை அமைச்சு பணியாளர்கள் 8,777
04 நிதி அமைச்சு ஊழியர்கள் 1,500
05 பிரதமர் அலுவலக ஊழியர்கள் 257
06 உரிமம் பறிக்கப்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் 24

6 ஆயிரத்திற்கு மேலான ராணுவத்தினர் கைது, 9 ஆயிரம் காவல் துறையினர் பணிநீக்கம், சுமார் 3 ஆயிரம் நீதிபதிகள் இடைநீக்கத்திற்கு பிறகு இந்த செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160720_turkey_coup

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, நவீனன் said:

துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை

இது உதியோகபூர்வமான தகவல் என்றால்!!!!!!!!!!
மிகுதி எத்தனை ஆயிரங்களை தாண்டுமோ?
எது எப்படியிருப்பினும் துருக்கியின் எதிர்காலம் நல்லதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவரை உள்ளே விட்ட எந்த நாடும் உறுப்பட்டதா உதாரணத்திட்கு 
சொல்ல கூட ஒரு நாடில்லை. 

சிங்களவரும் முக்கி முக்கி தேங்காய் துருவி அப்பம் சுட்டு போடுகினம் 
வழமையாவே அப்பம் சாப்பிட்டுவிட்டு ஆப்பு அடிக்கிறதுதான் பெரியவரின் குணம்.

25 வருடம் முன்பு சதாம் உசைன் சுடாத அப்பமா ?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

பெரியவரை உள்ளே விட்ட எந்த நாடும் உறுப்பட்டதா உதாரணத்திட்கு 
சொல்ல கூட ஒரு நாடில்லை. 

சிங்களவரும் முக்கி முக்கி தேங்காய் துருவி அப்பம் சுட்டு போடுகினம் 
வழமையாவே அப்பம் சாப்பிட்டுவிட்டு ஆப்பு அடிக்கிறதுதான் பெரியவரின் குணம்.

25 வருடம் முன்பு சதாம் உசைன் சுடாத அப்பமா ?? 

Super ..Super.. ..Super

வாவ் சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

பெரியவரை உள்ளே விட்ட எந்த நாடும் உறுப்பட்டதா உதாரணத்திட்கு 
சொல்ல கூட ஒரு நாடில்லை. 

சிங்களவரும் முக்கி முக்கி தேங்காய் துருவி அப்பம் சுட்டு போடுகினம் 
வழமையாவே அப்பம் சாப்பிட்டுவிட்டு ஆப்பு அடிக்கிறதுதான் பெரியவரின் குணம்.

25 வருடம் முன்பு சதாம் உசைன் சுடாத அப்பமா ?? 

மருதர்.. உங்களுக்கு ஒரு பச்சை கடன்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

பெரியவரை உள்ளே விட்ட எந்த நாடும் உறுப்பட்டதா உதாரணத்திட்கு 
சொல்ல கூட ஒரு நாடில்லை. 

சிங்களவரும் முக்கி முக்கி தேங்காய் துருவி அப்பம் சுட்டு போடுகினம் 
வழமையாவே அப்பம் சாப்பிட்டுவிட்டு ஆப்பு அடிக்கிறதுதான் பெரியவரின் குணம்.

25 வருடம் முன்பு சதாம் உசைன் சுடாத அப்பமா ?? 

என்டாலும், நீங்கள் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

பெரியவரை உள்ளே விட்ட எந்த நாடும் உறுப்பட்டதா உதாரணத்திட்கு 
சொல்ல கூட ஒரு நாடில்லை. 

சிங்களவரும் முக்கி முக்கி தேங்காய் துருவி அப்பம் சுட்டு போடுகினம் 
வழமையாவே அப்பம் சாப்பிட்டுவிட்டு ஆப்பு அடிக்கிறதுதான் பெரியவரின் குணம்.

25 வருடம் முன்பு சதாம் உசைன் சுடாத அப்பமா ?? 

உண்மை.. சில வருடங்களுக்கு முன்னம் உக்ரேன் கதறக் கதற அடிவாங்கினது ஞாபகத்தில இருக்கு.. ஆனால் பெரியவர் தானும் தன்ரை பாடும்.. :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.