Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனிப்புக்கும், கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ள மருதங்கேணி! - முதலமைச்சர்

Featured Replies

கவனிப்புக்கும், கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ள மருதங்கேணி!

வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன.

பல தடவைகள் மருதங்கேணியில் நடமாடுஞ்சேவையை நடாத்த வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருந்தாலும் ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது வருகை தடைப்பட்டுக் கொண்டே வந்தது.

இன்று எமது பலநாள் எதிர்பார்ப்பு பூரணப்படுத்தப்பட்டதில் பூரிப்பு அடைகின்றேன். பருத்தித்துறையில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசத்தில் மருதங்கேணி சரி மத்தியில் அமைந்துள்ளது.

பல வருடகாலமாக இந்தப் பிரதேசம் கைவிடப்பட்ட ஒரு நிலையில் இருந்து வந்துள்ளமை நாம் யாவரும் அறிந்ததே.

இதன் காரணத்தினால் தான் எமது வடமாகாணசபை பல விதமான அபிவிருத்தித் திட்டங்களை மருதங்கேணிப் பிரதேசத்தில் முன்னெடுக்க முயற்சி செய்து இன்று வெற்றியுங்கண்டுள்ளது.

சுமார் 67 மில்லியன் வரையிலான நிதியத்தை எமது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடைப் பணத்தில் இருந்து நாம் ஒதுக்கி வைத்து மணல்காடு கடற்கரையில் சுற்றுலா அபிவிருத்திக்காக பல நிர்மாணங்களைக் கட்டி முடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

பல கிராமப் பாடசாலைகள், வகுப்பறைகளுக்குப் பணம் ஒதுக்கியுள்ளளோம்.

நாகர் கோயில், குடத்தனை, உடுத்துறை போன்ற இடங்களில் வகுப்பறைகளையும், தாளையடியில் நூலகக் கட்டிடத்தையும், உடுத்துறையிலும் மாமுனையிலும் விளையாட்டு மைதானங்களையும்,மேலும் மணல்காடு, உடுத்துறை போன்ற கிராமங்களில் சுகாதாரக் குடிநீர் வசதி போன்ற சேவைகளுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க முன்வந்துள்ளோம்.

விளையாட்டுக்கான அனுசரணைகளை ஏற்படுத்த மருதங்கேணி விளையாட்டுத்திடலின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பனில் மருந்தக அனுசரணைகளை மேம்படுத்த பணம் இவ்வருடத்தில் ஒதுக்கியுள்ளோம், வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முள்ளியானில் வைத்தியர்கள் வதிவிடம் கட்டப் பணம் ஒதுக்கியுள்ளோம். மருதங்கேணி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுசரணைகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

இப் பிரதேச மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலாக உள்ளதால் பல நடவடிக்கைகள் இது சம்பந்தமாகவும் எடுத்து வருகின்றோம்.

மருதங்கேணியில் கருவாட்டுத் தொழிற்சாலை நிறுவவும், இங்குள்ள கடலேரியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

இங்குள்ள தெருக்கள் பல காலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்ததாலும், போக்குவரத்து சீரற்ற நிலையில் இருந்து வந்ததாலும் நாம் பல தெருக்களை அடையாளம் கண்டு அவற்றைச் சீர்செய்ய பணம் ஒதுக்கியுள்ளோம்.

மாமுனை -கட்டைக்காடு தெரு அமைக்க ஒன்பது மில்லியன்களும், மருதங்கேணி – ஆழியவளை தெருவைத் திருத்த 6 மில்லியன்களும் ஒதுக்கியுள்ளோம்.

மேலும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்புறத்தில் பஸ்தரிப்பு நிலையம் கட்டவும் பணம் ஒதுக்கியுள்ளோம்.

இவற்றை விட “அண்மையில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அம்பன், ஆழியவளை, உடுத்துறை, தாளையடி, செம்பியன்பற்று, கேவில், மாமுனை, வெற்றிலைக்கேணி, நாகர்கோயில், மணற்காடு, மருதங்கேணி போன்ற இடங்களில் பாடசாலைகள் பல அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

உலக வங்கி நிதியத்தின் கீழ் தெருக்கள் பல அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மருதங்கேணி – ஆழியவளை வீதி, மாமுனை – கட்டைக்காடு வீதி, வெற்றிலைக்கேணி – விநாயகபுரம் வீதி, மேலும் கட்டைக்காடு குடியிருப்பு வீதிகள், வதிரயான் குடியிருப்பு வீதி, உடுத்துறை குடியிருப்பு வீதி, நாகர் கோயில்சந்தி – கடற்கரை வீதி போன்ற பல வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டு அவற்றிக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

மொத்தமாக உலகவங்கி சுமார் 38 கிலோமீற்றர் தெருக்களைப் புனருத்தாபனம் செய்ய முன்வந்துள்ளது.

இவற்றைவிட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை 127.5 மில்லியன் பணத்தை உங்கள் அபிவிருத்திக்காக தந்துதவ முன்வந்துள்ளது.

உங்கள் குடிநீர்ப் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனைகள், கிராமக் கட்டமைப்புக்கள், விவசாயம், மீன்பிடித் தொழில் போன்ற பல பிரச்சனைகளைக் குறித்த நிதியம் தீர்க்க இருக்கின்றது.

ஆகவே மருதங்கேணிப் பிரதேசம் எமது கவனிப்புக்கும்,கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்று இந்த குறைநிவர்த்தி நடமாடும் சேவையை இங்கு நடாத்துவதால் எம்மைத் தேடி நீங்கள் வராது உங்களைத்தேடி எங்களை வரவழைத்துள்ளோம்.

உங்கள் பலகால குறைபாடுகள் இன்றுடன் தீர்வு காண்பன என்பது எமது எதிர்பார்ப்பு. பல திணைக்களங்கள், அமைச்;சுக்கள் தமது அமைச்சர்கள் அலுவலர்களுடன் இங்குமுகாமிட்டுள்ளனர்.

இன்று இங்கு உடனேயே முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விடயங்கள் எம்மால் கருத்துக்கு எடுக்கப்பட்டு மிக விரைவில் அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று எம்மால் கூறமுடியும்.

மத்திய அரசாங்கத்துடன் பேசவேண்டிய விடயங்களையும் நாம் உரியவாறு நடவடிக்கை எடுத்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முழுமையுடன் முயற்சிப்போம் என்று கூறிவைக்கின்றேன்.

உங்கள் யாவரதும் பலகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கே இந்த குறைநிவர்த்தி நடமாடும் சேவை பல இலட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் முழு நன்மைகளையும் பெற முயற்சிப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் குறைகளுக்குப் பதில் காண்பது எங்கள் பொறுப்பு. இன்றைய தினம் எமது யாழ் அரசாங்க அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் யாழ் மாவட்டச் செயலகமும் சேர்ந்து இந்த கைங்கரியத்தில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த சூழ்நிலை இப்பொழுது இல்லை. எம்மால் ஒன்றிணைந்து ஒருங்கு சேர்ந்து எமது மக்கள் நன்மை கருதி எமது சேவைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது.

நாம் யாவரும் எமது மக்கட் சேவையில் ஈடுபட்டுள்ளோம் என்ற எண்ணம் மேலோங்கினால் எம்மால் எந்த இடர் வரினும் அவற்றைத் தாண்டி முன்செல்ல முடியும்.

எமக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் யாழ் அரச அதிபருக்கும் அவரின் அலுவலர்களுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக! எம் யாவருடைய சந்திப்பால் இந்தப் பிரதேசம் முற்றிலும் அபிவிருத்தி அடையவும் மக்கள் மகிழ்வுடன் வாழவும் இறைவன் வழியமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=36627

மருதங்கேணி பிரதேசம் எதிர்காலத்தில் அபிவிருத்தியில் வீறுநடை போடும்
முதலமைச்சர் விக்னேஸ்வரன்
showImageInStory?imageid=288555:tn
 

வட­ம­ராட்சி,

யாழ். மாவட்­டத்தில் பின்­தங்­கிய கிரா­மங்­களில் ஒன்­றான வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கேணிப் பிர­தேசம் வட­மா­காண சபையின் கவ­னிப்­புக்கும் கூர் நோக்­குக்கும் உள்­ளா­கி­யுள்­ளது. இப்­பி­ர­தே­சத்­திற்­கான அபி­வி­ருத்­திக்கு தேவை­யான நிதிகள் ஒதுக்­கப்­பட்ட பின்­னரே இப்­பி­ர­தே­சத்­திற்கு தாங்கள் வர­வேண்டும் என்­பது இறை­வ­னது சித்தம். எனவே எதிர்­கா­லத்தில் இப்­பி­ர­தேசம் அபி­வி­ருத்­தியில் வீறு­ந­டை­போடும் என்­பதில் சந்­தேகம் இல்லை என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

வடக்கு மாகாண சபையும், யாழ். மாவட்டச் செய­ல­கமும் இணைந்து நேற்று (வியாழன்) வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்தில் நடத்­திய 7ஆவது குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவையை முத­ல­மைச்சர் ஆரம்­பித்து வைத்தார்.

முத­ல­மைச்­சரின் செய­லாளர் அ.பத்­தி­நாதர் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் முத­ல­மைச்சர் மேலும் கூறி­ய­தா­வது பாண்­டி­யன்­குளம், புளி­யங்­குளம், செட்­டிக்­குளம், மடு, நெடுந்­தீவு போன்ற இடங்­களில் முன்­னைய நட­மாடும் சேவைகள் நடை­பெற்­றுள்­ளன. பல தட­வைகள் மரு­தங்­கே­ணியில் நட­மா­டும் ­சே­வையை நடத்த வேண்டும் என்று நாம் திட்­ட­மிட்­டி­ருந்­தாலும் ஏதோ தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் எமது வருகை தடைப்­பட்டுக் கொண்டே வந்­தது. இன்று எமது பலநாள் எதிர்­பார்ப்பு பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டதில் பூரிப்பு அடை­கின்றேன்.

பருத்­தித்­து­றையில் இருந்து சுண்­டிக்­குளம் வரை­யி­லான கிழக்குக் கடற்­க­ரை­யோரப் பிர­தே­சத்தில் மரு­தங்­கேணி சரி மத்­தியில் அமைந்­துள்­ளது. பல வரு­ட­கா­ல­மாக இந்தப் பிர­தேசம் கைவி­டப்­பட்ட ஒரு நிலையில் இருந்து வந்­துள்­ளமை நாம் யாவரும் அறிந்­ததே. இதன் கார­ணத்­தினால் தான் எமது வட­மா­கா­ண­சபை பல வித­மான அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மரு­தங்­கேணிப் பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்க முயற்சி செய்து இன்று வெற்­றி கண்­டுள்­ளது. சுமார் 67 மில்­லியன் வரை­யி­லான நிதி­யத்தை எமது மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நன்­கொடைப் (PSDG) பணத்தில் இருந்து நாம் ஒதுக்கி வைத்து மணல்­காடு கடற்­க­ரையில் சுற்­றுலா அபி­வி­ருத்­திக்­காக பல நிர்­மா­ணங்­களைக் கட்டி முடிக்க நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்றோம். பல கிராமப் பாட­சா­லைகள், வகுப்­ப­றை­க­ளுக்குப் பணம் ஒதுக்­கி­யுள்ளோம். நாகர்கோயில், குடத்­தனை, உடுத்­துறை போன்ற இடங்­களில் வகுப்­ப­றை­க­ளையும், தாளை­ய­டியில் நூலகக் கட்­ட­டத்­தை­யும் உடுத்­து­றை­யிலும் மாமு­னை­யிலும் விளை­யாட்டு மைதா­னங்­க­ளையும் மேலும் மணல்­காடு, உடுத்­துறை போன்ற கிரா­மங்­களில் சுகா­தாரக் குடிநீர் வசதி போன்ற சேவை­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க முன்­வந்­துள்ளோம்.

விளை­யாட்­டுக்­கான அனு­ச­ர­ணை­களை ஏற்­ப­டுத்த மரு­தங்­கேணி விளை­யாட்­டுத்­தி­டலில் அபி­வி­ருத்­திக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பனில் மருந்­தக அனு­ச­ர­ணை­களை மேம்­ப­டுத்த பணம் இவ்­வ­ரு­டத்தில் ஒதுக்­கி­யுள்ளோம். வேலைகள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. முள்­ளி­யானில் வைத்­தி­யர்கள் வதி­விடம் கட்டப் பணம் ஒதுக்­கி­யுள்ளோம். மரு­தங்­கேணி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ச­ர­ணைகள் வழங்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுத்­துள்ளோம்.

இப்­பி­ர­தேச மக்­களின் முக்­கிய வாழ்­வா­தாரம் மீன்­பிடி தொழி­லாக உள்­ளதால் பல நட­வ­டிக்­கைகள் இது சம்­பந்­த­மா­கவும் எடுத்து வரு­கின்றோம். மரு­தங்­கே­ணியில் கரு­வாட்டுத் தொழிற்­சாலை நிறு­வவும், இங்­குள்ள கட­லே­ரியை விஸ்­த­ரித்து அபி­வி­ருத்தி செய்­யவும் நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்றோம்.

இங்­குள்ள தெருக்கள் பல கால­மாக கைவி­டப்­பட்ட நிலையில் இருந்து வந்­த­தாலும், போக்­கு­வ­ரத்து சீரற்ற நிலையில் இருந்து வந்­த­தாலும் நாம் பல தெருக்­களை அடை­யாளம் கண்டு அவற்றைச் சீர்­செய்ய பணம் ஒதுக்­கி­யுள்ளோம். மாமுனை – கட்­டைக்­காடு தெரு அமைக்க ஒன்­பது மில்­லி­யன்­களும், மரு­தங்­கேணி – ஆழி­ய­வளை தெருவைத் திருத்த 6 மில்­லி­யன்­களும் ஒதுக்­கி­யுள்ளோம். மேலும் மரு­தங்­கேணி வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பு­றத்தில் பஸ்­த­ரிப்பு நிலையம் கட்­டவும் பணம் ஒதுக்­கி­யுள்ளோம்.

இவற்­றை­விட “அண்­மையில் உள்ள பாட­சா­லையே சிறந்த பாட­சாலை” என்ற திட்­டத்தின் கீழ் பல பாட­சா­லைகள் அபி­வி­ருத்­திக்­காக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. அம்பன், ஆழி­ய­வளை, உடுத்­துறை, தாளை­யடி, செம்­பி­யன்­பற்று, கேவில், மாமுனை, வெற்­றி­லைக்­கேணி, நாகர்­கோயில், மணற்­காடு, மரு­தங்­கேணி போன்ற இடங்­களில் பாட­சா­லைகள் பல அபி­வி­ருத்­திக்­காக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உலக வங்கி நிதி­யத்தின் கீழ் தெருக்கள் பல அபி­வி­ருத்­திக்­காக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மரு­தங்­கே­ணி–­ஆ­ழி­ய­வளை வீதி, மாமுனை– கட்­டைக்­காடு வீதி, வெற்­றி­லைக்­கேணி – விநா­ய­க­புரம் வீதி மேலும் கட்­டைக்­காடு குடி­யி­ருப்பு வீதிகள், வதி­ரயான் குடி­யி­ருப்பு வீதி, உடுத்­துறை குடி­யி­ருப்பு வீதி, நாகர் கோயில்­சந்தி – கடற்­கரை வீதி போன்ற பல வீதிகள் அபி­வி­ருத்­திக்­காக அடை­யாளம் காணப்­பட்டு அவற்­றிற்­கான வேலைகள் தொடங்­கி­யுள்­ளன. மொத்­த­மாக உல­க­வங்கி சுமார் 38 கிலோ­மீற்றர் தெருக்­களைப் புன­ருத்­தா­பனம் செய்ய முன்­வந்­துள்­ளது.

இவற்­றை­விட தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை 127.5 மில்­லியன் பணத்தை உங்கள் அபி­வி­ருத்­திக்­காக தந்­து­தவ முன்­வந்­துள்­ளது. உங்கள் குடிநீர்ப் பிரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சி­னைகள், கிராமக் கட்­டமைப்­புக்கள், விவ­சாயம், மீன்­பிடித் தொழில் போன்ற பல பிரச்­சி­னை­களைக் குறித்த நிதியம் தீர்க்க இருக்­கின்­றது. இன்று இந்த குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவையை இங்கு நடத்­து­வதால் எம்மைத் தேடி நீங்கள் வராது உங்­க­ளைத்­தேடி எங்­களை வர­வ­ழைத்­துள்ளோம். உங்கள் பல கால குறை­பா­டுகள் இன்­றுடன் தீர்வு காண்­பன என்­பது எமது எதிர்­பார்ப்பு.

பல திணைக்­க­ளங்கள், அமைச்­சுக்கள் தமது அமைச்­சர்கள் அலு­வ­லர்­க­ளுடன் இங்கு முகா­மிட்­டுள்­ளனர். இன்று இங்கு உட­னேயே முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­மு­டி­யாத விட­யங்கள் எம்மால் கருத்­துக்கு எடுக்­கப்­பட்டு மிக விரைவில் அவற்­றுக்­கான தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று எம்மால் கூற­மு­டியும்.

மத்திய அரசாங்கத்துடன் பேச வேண்டிய விடயங்களையும் நாம் உரியவாறு நடவடிக்கை எடுத்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முழுமையுடன் முயற்சிப்போம் என்று கூறிவைக்கின்றேன். உங்கள் யாவரதும் பலகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கே இந்த குறைநிவர்த்தி நடமாடும் சேவை பல இலட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் முழு நன்மைகளையும் பெற முயற்சிப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் குறைகளுக்குப் பதில் காண்பது எங்கள் பொறுப்பு, எம்முடைய சந்திப்பால் இந்தப் பிரதேசம் முற்றிலும் அபிவிருத்தி அடையவும் மக்கள் மகிழ்வுடன் வாழவும் இறைவன் வழியமைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=05/08/2016

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் காலம் காலமா சொல்றாங்க..............

(வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன.)

என்னைத்தான் பின் தொடர்கின்றார்களோ என்று பயமாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

 

என்னைத்தான் பின் தொடர்கின்றார்களோ என்று பயமாக இருக்கிறது. 

மருதங்கேணியிலிருந்து அமேரிக்காவுக்கு நேரடி விமானசேவையை நீங்கள் தொடங்க வேண்டும் 

10 hours ago, Maruthankerny said:

பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன.

மருதங்கேணியின் நடமாடும் சேவையைத்தான் சொல்கிறார்!

10 hours ago, Maruthankerny said:

என்னைத்தான் பின் தொடர்கின்றார்களோ என்று பயமாக இருக்கிறது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.