Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஒரு இலட்சம் படையினர் சமாதானம் எவ்வாறு மலரும்?

Featured Replies

வடக்கில் ஒரு இலட்சம் படையினர் சமாதானம் எவ்வாறு மலரும்?
 
 
வடக்கில் ஒரு இலட்சம் படையினர் சமாதானம் எவ்வாறு மலரும்?
வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
ஐரோப்பிய ஒன்றிய, நாடுகளின் சமாதானமான ஸ்தீரன நிலையை உருவாக்குவதற்கு தடையாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலகினுடைய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
 
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் முதலமைச்சருக்கும் ஜோடி கறஸ்கோ முனோஸிற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இதுகுறித்து, வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,  அரசாங்கம் சமாதானம் தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஆராய்ந்திருந்தார். அரசாங்கம் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன்.
 
இருந்த போதிலும் அதில் ஓர் விடயத்தை அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன் அதாவது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகளானது தான்தோன்றித்தனமானதாக மேற்கொள்ளப்பட்டதாகும். அவை தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை குறிப்பிட்டேன்.


 
சமாதான சூழல் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் அதற்குரிய சூழல் இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய ஓர் சூழல் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக தென்னாபிரிக்காவில் அங்கு காணப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னரே மீள் இணக்க அல்லது நல்லிணக்க ஆணைக்குழு தயாரிக்கப்பட்டது.
 
அவ்வாறான நிலைமை இங்கு காணப்பட்டால் அவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாமும் இணைந்து செயற்படுவோம்.

ஆனால் வடக்கு மாகாணத்தில் அவ்வாறான ஒர் சூழல் இல்லை.
 
இன்னமும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் உள்ளனர். பொதுமக்களது காணிகளை முழுமையாக விடுவிக்காது படையினரே வைத்துள்ளனர். இதனூடாக வருகின்ற வருமானத்தை தாமே எடுத்துக்கொள்கின்றனர்.
 
வீடுகளை வைத்துள்ளனர் இதனால் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். மீன்பிடித்துறை வளங்கள் சூறையாடப்படுகின்றன. இத்தகைய சூழலில் எவ்வாறு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர முடியும் என்ற எனது கருத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
 
அத்துடன் இதுதொடர்பாக தாம் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

என்னிடம் அவர் கேட்டிருந்தார், யாப்பினூடாக நல்லிணக்கத்தை கொண்டுவரகூடியதாக இருக்குமா எனவும் சுயாட்சி அடிப்படையில் தீர்வை எட்டமுடியாதா எனவும் கேட்டிருந்தார்.
 
இதற்கு நான் தெரிவித்தேன், அமையவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எமது முன்மொழிவுகளை கொடுத்திருக்கின்றோம் என்பதை குறிப்பிட்டேன். அத்துடன் எவ்வாறானாலும் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள கூடிய ஆட்சி செய்யக் கூடிய நிலை உருவானால் அது நன்மை பயப்பதாகவே அமையும் என தெரிவித்திருந்தேன்.
 
எனினும் சட்டரீதியாக சமஸ்டி ஆட்சி என்பதற்கு கொடுக்கப்படும் வரையறைகளை வேறோரு விதத்தில் கொடுக்க முனைந்தால் அவை தொடர்பில் நீதிமன்றங்கள் பிறிதொரு வரையறைகளை குறிப்பிடும் என்ற பிரச்சனையும் எடுத்துகாட்டியிருந்தேன்.
 
அதற்கான முன்மொழிவுகளைக் கொடுத்திருக்கின்றோம் என்றும் சமஷ்டி அரசியல் யாப்பு தேவை என்பதை அவர்களுக்கு குறிப்பிட்டிருந்தோம். சுயாட்சி என்ற அடிப்படையில் இந்த தீர்வை எட்டமுடியாதா? என்ற கேள்வியை முன்வைத்தார்.
 
சமஷ்டி என்பதிலும் பார்க்க சுயாட்சி என்ற அடிப்படையில் தீர்வை எட்டமுடியாதா? எதுவாக இருந்தாலும் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் யாப்பு. அதற்கேற்ற விதத்தில் அதனை செய்யக்கூடியதாக இருந்தால் அது நன்மை பயக்கும்.
 
சட்ட ரீதியாக சமஷ்டி என்ற சொல்லுக்கு கொடுக்கப்படும் வியாக்கியானங்கள் வேறு ஏதாவது ஒரு முறையில் கொடுக்க முனைந்தால், அதனை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றங்கள் பிறிதொரு வியாக்கியானங்களைக் கொடுக்க கூடும் என்ற பிரச்சினையும் எடுத்துக்கூறியதாக சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/15890

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் எதிர்பார்ப்பது எங்களை நாங்களே நிர்வாகிக்க கூடிய ஒரு ஆட்சிமுறையே என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாங்கள் எதிர்பார்ப்பது எங்களை நாங்களே நிர்வாகிக்க கூடிய ஒரு ஆட்சிமுறையே என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

   

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ், இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தளவில் சர்வதேச நாடுகள் உதவியாக இருக்க முடியுமென்பதனை அறிந்து கொள்ள வருகை தந்திருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-

“இலங்கை அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உருவாக்க தான்தோன்றித்தனமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. உண்மையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் உருவாக்கப்பட வேண்டுமானால், முதலில் அதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான சூழல் வடக்கில் இன்றுவரை உருவாக்கப்பட்டிருக்கவில்லை. வடக்கில் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டிருக்கின்றனர், மக்களுடைய நிலங்களில் படையினர் நிலை கொண்டிருக்கின்றார்கள், மக்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள், கடற்றொழில் செய்கிறார்கள், மக்களோ நலன்புரி நிலையங்களில் பொருளாதார வளம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சூழலே வடக்கில் காணப்படுகின்றது.

உதாரணமாக தென்னாபிரிக்காவில் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு உருவாக்கப்பட முன்னதாகவே அந்த நாட்டில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நல்லிணக்கத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும் அரசியலமைப்பு ஊடாக மாற்றத்தை உண்டாக்க முடியுமா என என்னிடம் கேள்வி கேட்டார்கள், அதற்கு, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான யோசனைகளை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். அதில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

மேலும், சுயாட்சி அடிப்படையில் நீங்கள் தீர்வை எட்ட முடியாதா என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேள்வி யெழுப்பியதாகவும், எதுவாக இருந்தாலும் நாங்கள் எதிர்பார்ப்பது எங்களை நாங்களே நிர்வாகிக்க கூடிய ஒரு ஆட்சிமுறையே என்பதை சுட்டிக்காட்டினேன்.என்றார்

 

eu-rep-jaffna-050816-seithy.jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162981&category=TamilNews&language=tamil

3 hours ago, தமிழரசு said:

“இலங்கை அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உருவாக்க தான்தோன்றித்தனமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. உண்மையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் உருவாக்கப்பட வேண்டுமானால், முதலில் அதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான சூழல் வடக்கில் இன்றுவரை உருவாக்கப்பட்டிருக்கவில்லை. வடக்கில் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டிருக்கின்றனர், மக்களுடைய நிலங்களில் படையினர் நிலை கொண்டிருக்கின்றார்கள், மக்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள், கடற்றொழில் செய்கிறார்கள், மக்களோ நலன்புரி நிலையங்களில் பொருளாதார வளம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சூழலே வடக்கில் காணப்படுகின்றது.

முதலமைச்சர் மிகவும் விவரமாக தொடர்ந்து கதைப்பது தமிழின விரோதிகளுக்கு பிடிக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

முதலமைச்சர் மிகவும் விவரமாக தொடர்ந்து கதைப்பது தமிழின விரோதிகளுக்கு பிடிக்காது!

நியூஸ் பேப்பர் படிக்கும்  சம்பந்தனையும் 
அவுஸ்திரேலியாவில், அடி  வாங்கிய...  சுமந்திரனையும்....
நம்ம, சனம் மறக்கவில்லை. :grin:

18 hours ago, நவீனன் said:

ஒரு இலட்சம் படையினர்

படையினர் இல்லை தமிழினப் படுகொலைகளை செய்த ஒரு லட்சம் சிங்கள பயங்கரவாதிகள்!

1 hour ago, போல் said:

படையினர் இல்லை தமிழினப் படுகொலைகளை செய்த ஒரு லட்சம் சிங்கள பயங்கரவாதிகள்!

மிக விரைவில் பல லட்சம் முஸ்லிம்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.