Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீதான சர்வதேசத்தின் 'நம்பிக்கை அற்றுப்போகும்

Featured Replies

article_1471354189-aa.jpg

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்படவில்லை என மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டால், சர்வதேசம் முழு தமிழர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும்' என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக - வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது என அனைவரும் வாதம் புரிகின்றார்கள். அதனடிப்படையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்படுமாயின், அதன் பின்னர் தமிழர்கள் சொல்லும் அனைத்தும் பொய் என சர்வதேசம்  எண்ணும்  நிலைமை ஏற்படும்.

எனவே, இவ்வாறான விடயங்களை நாம், மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்து ஆர்ப்பரித்து செய்யக்கூடாது. இதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டிருக்க வேண்டும்' என்றார்.

http://www.tamilmirror.lk/179663/2016-08-16-13-30-44

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக இரகசியமாக மேற்கொண்டு அறியவேண்டிய உண்மையை அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் அவர்கள், அது பரகசியமான பின்பு தெரிவித்துள்ளமை பொருத்தமானதாகத் தெரியவில்லை. பொல்லைக் கொடுக்கிறாரோ எனத் தோன்றுகிறது.  சீனா சிறீலங்காவில் காலூன்றுவதைத் தடுக்க முயலும் இந்தியாவுடன், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், முழுப்பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் வல்லமையைச் சிறீலங்காவிற்கு வழங்கிவருவது கண்கூடு.  :rolleyes: :(    

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் லொஜிக் இல்லாமல் அலம்பதே !tw_anguished:

குற்றவாளிகளை பொலீசார் கைது செய்வது சந்தேகத்தின் பெயரில். குற்றவாளியா என்பதை முடிவு செய்வது நீதிமன்றம்.

ஒருவர் நிரபராதி என்றால், பொலீசார் பொய்யர்களாவார்களா?

இந்தச் சந்தேகத்தை தெரிவித்தது, பாதிக்கப்பட்ட போராளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்துபோன போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனையின்மூலம் விஷ மருந்து ஏற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னவோ சர்வதேசம் பெரிய நம்பிக்கை வைச்சு தமிழர்களுக்கு வெட்டிக்கிழிக்கிற கணக்கா எல்லோ இருக்கு இவற்ற பேச்சு. இத்தனை ஆயிரம் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கே ஒரு நீதி விசாரணையை சர்வதேச மட்டத்தில் செய்ய விளையாத சர்வதேசம்...???!

முன்னாள் போராளிகளின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய செய்யப்படும் மருத்துவச் சோதனைகளுக்கும்.. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் நேரடித் தொடர்பு வைக்கும் இவர் தான் சந்தேகிக்கப்பட வேண்டியவராக உள்ளார். இவர் சிங்கள அரசையும் அதன் அராஜக ஆக்கிரமிப்புப் படைகளையும் பாதுகாக்க தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தை உச்சரிச்சு பயம் காட்டிறாரோ என்றும் சந்தேகிக்க வேண்டி உள்ளது. 

முன்னாள் போராளிகளுக்கு சகல விதமான மருத்துவப் பரிசோதனைகளும்.. தேவையான உதவிகளும் அளிக்க வேண்டிய கடமை அவர்களை சரணடைய வற்புறுத்திய சர்வதேசத்துக்கு உண்டு. ஆனால் அதனை அவர்கள் செய்யத் தவறியதை சுட்டிக்காட்ட வக்கில்ல.. தமிழ் மக்களை வெருட்டி வெளிக்கிட்டினம். tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Athavan CH said:

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்படவில்லை என மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டால், சர்வதேசம் முழு தமிழர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும்' என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக - வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஓமோம் 60 வருச நம்பிக்கை துண்டற அற்றுப்போகும்.....கவனம் சொம்பு பத்திரம்....:1_grinning:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.