Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர்

Featured Replies

2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர்
 
 
2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக  இருந்தார்கள் : வடக்கு முதல்வர்
இலங்கையில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக  இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது - இவ்வாறு  வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்படும்   நல்லைக் குமரன் 24 வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். 
 
தான் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு விமானத்தில் வரும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமத்துடன்  உரையாடியபோது  அவர்  தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பிட்டார். அவற்றுள் முக்கியமாக வடக்கு கிழக்கை  இணைக்க வேண்டும் என கோருகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேட்டார்.
 
அதற்கு அவரிடம், சிங்கள மக்கள் பரம்பரை பரம்பரையாக  இருந்தார்கள் என்பது எங்களுடைய மக்களின் எண்ணம். எனவே வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு உரியது என்று  எவ்வாறு கூறமுடியும்? என்றும், ஆங்காங்கே வடகிழக்கில் பௌத்த சின்னங்கள் இருக்கிறதே அது எவ்வாறு? போன்ற பல கேள்விகளை கிழக்கு முதலமைச்சர்  தன்னிடம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
தான் இதற்கு பதில் கூறியதாகவும் அதாவது காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மொழியே பேசப்பட்டு வந்தன. அதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. மேலும் இங்கு பௌத்த சின்னங்கள் இருக்கின்றன. ஏனென்றால் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் எல்லாம் தமிழர்கள் பௌத்தர்களாக  இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது என்றும் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
 
தேவநம்பிய தீசன் சிங்களவராக இருக்க முடியாது ஏனனில்  சிங்கள மொழி கி.பி 6ம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் கல்வெட்டுகளில் காணப்படுவதாகவும் தான் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தெளிவு படுத்தியதாக தெரிவித்தார்
 
நாம் உடனடி பூர்வமான  அரசியலிலேதான் ஈடுபட்டு வருகிறோம். இவ் உடனடி பூர்வமான அரசியலிலே எமக்குள், நான் பெரிதா? நீ பெரிதா? யார் பெரிது? யார் முதலில் வந்தவர்? யார் பிந்தி வந்தவர்? போன்ற பல்வேறான கேள்விகள் எழக்கூடும்.
 
இவ்வாறு பிரச்சினைகள்  எழுவதால் தான்   மனிதாபிமானத்துடன்  எதை எல்லாம் செய்யலாம் என்பதை சிந்திக்காமல் உடனடி பூர்வமாக சிந்திப்பதால் தான் எமது அரசியல் இந்நிலைக்கு வந்துள்ளது. நாம் எமது பெற்றோர்களிடம் எடுத்துக்கொண்டு இருக்காது கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு எமது இளம் சமுதாயம் செயற்படுமாக இருந்தால்  தமிழர்களின் எதிர்காலம் வளமாக அமையும் என  வடக்கு முதலமைச்சர்  கூறினார்

http://onlineuthayan.com/news/16649

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, ஆனால் எங்களுடைய போராட்டம் நிறுத்தப்படவில்லை!

ஆயுதம் ஏந்திப் போராடினோம். அது மௌனிக்கப்பட்டது, ஆனால் எங்களுடைய போராட்டம் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் ‘நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட்டு விழா’ இன்று புதன்கிழமை(24) காலை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகர சபையின் தலைவர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில் அர்ப்பணிப்புள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலுள்ள சிங்கள நண்பர்கள் என்னிடம் சற்றே விட்டுக் கொடுக்கலாமே? எனச் சொல்லுவார்கள். அதற்கு நான் அவர்களுக்குப் பதிலளிக்கும் போது எங்களின் உரிமைகளை, எங்களுக்குத் தேவையானவற்றை, உண்மையை எடுத்தியம்புகிறோம். நீங்கள் அதனைப் பிழையானதாகச் சிந்தித்துப் பிழையானதாக நோக்கினால் நாங்கள் பொறுப்பல்ல எனத் தெரிவித்தேன்.

நான் இன்று கொழும்பிலிருந்து விமானத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் விமானத்தில் வந்திருந்தார். அவரும் என்னிடம் நீங்கள் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது எவ்வாறு சாத்தியப்படும்? சிங்கள மக்கள் பல வருட காலமாக வடக்குக் கிழக்கில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்குரியது என நீங்கள் கூறுவது பிழை எனத் தெரிவித்தார்.

அதற்கு நான் பதிலளிக்கும் போது, காலாதி காலமாகத் தமிழ் மொழி தான் வடக்கு, கிழக்கில் நடைமுறையிலிருந்து வருகின்ற மொழி. அதிலே எந்த விதமான சந்தேகங்களும் இருக்கமுடியாது. இல்லையே…. அங்கெல்லாம் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன என என்றார். அதற்கு நான் ஆம்…. பெளத்த சின்னங்களிருக்கின்றன. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பெளத்தர்களாகவிருந்தார்கள். அதனால் தான் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நீங்கள் சிங்கள மக்கள் தான் வாழ்ந்தார்கள் என நீங்கள் எவ்வாறு கூற முடியும்? என அவரைப் பார்த்துக் கேட்ட போது அவரால் எனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

இந்த உரையாடலில் அவர் ஒரு சிங்களவர் என்ற ரீதியில் தேவநம்பிய தீச மன்னனைப் பற்றிய சில விடயங்களையம் பகிர்ந்து கொண்டார். தேவநம்பிய தீச மன்னன் சிங்களவராக இருக்க முடியாது? சிங்கள மொழி கிறிஸ்துவிற்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் தானே நடைமுறைக்கு வந்தது என்பது குறித்துத் தெரியப்படுத்தினேன். ஆகவே, சரித்திர ரீதியாகப் பலவிதமான பிழையான எண்ணங்களை, தகவல்களைச் சேகரித்துக்கொண்டு எங்களுடைய மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றேன். அதற்கு அவர் உங்கள் எண்ணங்கள், நோக்குகள் வித்தியாசமாகவும், எங்களுடைய நோக்குகள் வித்தியாசமாகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது சரித்திரசம்பந்தமானதொரு விடயம் தானே? ஆகவே, சரித்திர சம்பந்தமானதொரு விடயத்தை நாங்கள் சர்வதேச ரீதியான சரித்திர ஆய்வாளர்களை அழைத்து நான் சொல்லுவது சரியா? நீங்கள் சொல்லுவது சரியா? என ஆராய்ந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டேன். அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? என அவர் சொன்னார். இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிந்தால் தான் இவ்வாறான குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும் என நான் அவருக்குக் கூறி வைத்தேன்.

நாங்கள் தற்போது உணர்ச்சி பூர்வமாகவே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த உணர்ச்சி பூர்வமான சூழலுக்குள் எங்களுக்குள் நான் பெரிதா? நீ பெரிதா? யார் முதலில் வந்தது? யார் பிறகு வந்தது? எனப் பலவிதமான கேள்விகள் உள்ளன. இதனால் தான் எங்களுடைய அரசியல் கீழ் நிலையிலுள்ளது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=38924

2ம், 3ம் நூற்றாண்டுகளில் பௌத்தம் என்ற ஒரு மதமே உலகில் இருக்கவில்லை!

புத்தரும் (சித்தார்தனும்) ஒரு மதத்தை உருவாக்க முயலவில்லை. புத்தர் இந்து சமயத்தில் சில சீர்திருத்தங்களை முன்வைத்தார். சில சீர்திருத்த போதனைகளை தனது அறிவுக்கு எட்டியபடி செய்தார். அவ்வளவு தான்.

பிற்காலத்தில் (5, 6ம் நூற்றாண்டின் பின்னர்) புத்தர் போதனைகளை பரப்பியவர்கள் சுய ஆதாயங்கள் கருதி புத்தரின் போதனைகளுக்கு முரணாக பௌத்த மதத்தை மெதுவாக உருவாக்கினார்கள். தம்மை பௌத்தம் என்று தனிமைப்படுத்தி கூறிய சில தசாப்தங்களில் பௌத்தம் தமிழ் நாட்டிலிருந்தும், பின்னர் இந்தியாவிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டது. இது தான் வரலாறு.  

ஈழத்தில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் புத்தரின் போதனைகளை தமிழ் சைவர்கள் சிலர் (எல்லோரும் இல்லை) பின்பற்றினார்களே தவிர, அவர்கள் பௌத்தர்களாக இருக்கவில்லை. அவர்கள் சைவர்களாகவே இருந்தார்கள்.

இன்று எப்படி விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சாயிபாபா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ..... போன்றவர்களின் போதனைகளை குறித்த இயக்கங்கள் சைவ (இந்து) வழிபாட்டு முறைகளை முன்வைத்து ஈழம் முழுவதும் பரவலான வழிபாடுகளை நடத்துகின்றனவோ, சிலைகளை அமைகின்றனவோ, வழிபாட்டிடங்களை (கோவில்களை) அமைகின்றனவோ அதைப் போலவே 2ம், 3ம் நூற்றாண்டுகளில் புத்தரின் போதனைகள் சைவத் தமிழர் சிலரால் பின்பற்றப்பட்டு வந்தது.

எப்போது  இந்த பௌத்த போதனைகள் ஒரு தனிமதமாக உருவாக தொடங்கியதோ, அதன் காரணமாக எப்போது பௌத்தம் தமிழ்நாட்டில் தூக்கி வீசப்பட்டதோ அப்போதிலிருந்தே ஈழத்து தமிழர் மத்தியிலும் பௌத்தம் செல்வாக்கை இழந்து, மெதுவாக கைவிடப்பட்டுவிட்டது.

தமிழர்களால் கைவிடப்பட்ட பௌத்தத்தை சுமார் 1800 - 1500 ஆண்டுகளின் முன்னர் கள்ளத் தோணிகளில் வந்திறங்கிய வங்கதேச காடையர் கும்பல் கைப்பற்றி, பல நூற்றாண்டுகளில் அது தனித்துவமான தேரவாத சிங்கள பௌத்தமாக உருவாகி, இன்று சிங்கள-பௌத்த பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது. புத்தரின் போதனைகளுக்கும் நடைமுறையில் இருக்கும் சிங்கள-பௌத்த மதத்துக்கும் ஒரு பொருத்தமும் இல்லை. பௌத்த மதம் என்பதும், புத்தரும் சிங்களப் பயங்கரவாத சொரூபத்தை மறைக்கும் முகமூடிகளாகவே உள்ளன.

இது தான் உண்மையான வரலாறு என்பதை பல வரலாற்று நூல்களை, நடைமுறை யதார்த்தங்களை ஆய்வதன் மூலம் அறியலாம்.

 

முன்னர் பதிந்த பதிவு ஒன்று:

உண்மையில் இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி சாயிபாபா இயக்கம் உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி அனுமான் வழிபாட்டு ஆக்கிரமிப்பு உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி இராமகிருஷ்ண மிஷன் இயக்கம் உள்ளதோ, இன்று தமிழர் (சைவர்கள்/ இந்துக்கள்) மத்தியில் எப்படி சின்மயா மிஷன் இயக்கம் உள்ளதோ, - அதே போலத்தான் அன்று புத்தர் இயக்கமும் இருந்தது. இவை ஒரு சிறிய எண்ணிக்கையிலான சைவர்கள்/ இந்துக்கள் மத்தியில் மட்டுமே இடம் பிடித்திருந்தன.

மேற்கூறிய அத்தனை இயக்கங்களும் சைவ (இந்து) வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தியே தமிழர் மத்தியில் இடம் பிடித்தன. இவற்றால் எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக அனுமன் சிலைகள் முளைக்கின்றனவோ, எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக விவேகானந்தர் சிலைகள் முளைக்கின்றனவோ, எப்படி இன்று இலங்கை முழுவதும் பரவலாக எமது கண்கள் முன்னே புதிதாக சாயிபாபா சிலைகள் முளைக்கின்றனவோ, அது போலவே புத்தர் சிலைகளும் முளைத்தன.

இவை அனைத்தும் சைவ (இந்து) வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தியே தமிழர் மத்தியில் இடம் பிடித்தன. அதனால் இந்த தனிநபர் போதனைகள் (இந்துவாகிய சாயிபாபா, இந்துவாகிய விவேகானந்தர் / இராமகிருஷ்னர், இந்துவாகிய புத்தர், இந்து மரபுக் கதைகளில் வந்த அனுமார், இந்துவாகிய சின்மயானந்தா) சார்ந்த இயக்கங்களின் செயற்பாடுகளை இன்று போல், அன்றும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. இவர்களின் ஆராதனைகள் அனைத்தும் சிவலிங்கத்தை வைத்தே நடந்தன என்பதை கூர்மையாக அவதானிக்கும் அனைவரும் அறிந்து கொள்ளலாம். இதுவும் இவற்றை தமிழர் ஏற்றுக்கொள்ள காரணம் ஆயின.

பின்னர் சுமார்  1800 வருடங்களின் முன்னர் வந்தேறு குடிகளாக வந்த குழுவினர் சில நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகி, முதலில் ஒரு தனித்துவமான இனமாக, பின்னர் சிங்களவர்களாக பல்கிப் பெருகி வரும்  காலத்தில் தான் தமிழகத்தில் பௌத்தம் முழுமையாக தோல்வியடைந்தது. அதன் பிரதிபலிப்பு ஈழத்து தமிழர் மத்தியிலும் பரவ, பௌத்த இயக்கங்கள் தமிழர் மத்தியில் இருந்து விலக, பின்னர் தனித்துவம் தேடிய சிங்களவர் கைகளில் புத்த இயக்கம் சிக்கி இன்று சிங்கள-பௌத்த இனமதவெறியாக வளர்ந்துள்ளது.

இது சுருக்கமான வரலாறு. பல வரலாற்று நூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும். அனுராதபுரத்தில் பல சிவாலயங்களின் மீது தான் இன்று உள்ள பெரிய விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள உண்மைகள் 1990 களில் யுனெஸ்கோ செய்த ருவான்வெலிசாய விகாரை மீள்நிர்மாணப் பணிகளில் தெரியவந்து, மிகக் கவனமாக மறைக்கப்பட்டன. அங்கு 1990 களில் யுனெஸ்கோ நிபுணர்களால் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி சிலைகள் (அரச டெயிலி நியூஸ் பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வந்திருந்தது) யுத்த செய்திகளுக்குள் மத்தியில் மிக நுட்பமாக மறைக்கப்பட்டன.  

6 minutes ago, போல் said:

பின்னர் சுமார்  1800 வருடங்களின் முன்னர் வந்தேறு குடிகளாக வந்த குழுவினர் சில நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகி, முதலில் ஒரு தனித்துவமான இனமாக, பின்னர் சிங்களவர்களாக பல்கிப் பெருகி வரும்  காலத்தில் தான்

700 பேர் வந்து குட்டி போட்டு ஏற்கனவே இருந்த இயக்கர், நாகர், வேடர் இனத்தை விட பல்கிப் பெருகிவிட்டார்களாம். இதை இப்பவுமா நம்புகிறீர்கள் போல்.

2 minutes ago, ஜீவன் சிவா said:

700 பேர் வந்து குட்டி போட்டு ஏற்கனவே இருந்த இயக்கர், நாகர், வேடர் இனத்தை விட பல்கிப் பெருகிவிட்டார்களாம். இதை இப்பவுமா நம்புகிறீர்கள் போல்.

காடையர்கள், மதவெறியர்கள் வகை தொகை இல்லாமல் பெருகுவது உலகெங்கும் நடக்கும் சாதாரண நிகழ்வு! பாமரருக்கும் தெரிந்த இந்த அடிப்படை விடயம் கூட தெரியவில்லையா ஜீவன்?

1 minute ago, போல் said:

காடையர்கள், மதவெறியர்கள் வகை தொகை இல்லாமல் பெருகுவது உலகெங்கும் நடக்கும் சாதாரண நிகழ்வு! பாமரருக்கும் தெரிந்த இந்த அடிப்படை விடயம் கூட தெரியவில்லையா ஜீவன்?

இல்லை எனக்கு தெரியாது, எனக்கு ஒரு பாமரனுக்கு உள்ள அடிப்படை அறிவுகூட இல்லை - மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர்

அட சும்மாபோங்கப்பா ...?
ஐயா பௌத்தர்களாக இருந்தோம் என்று தானே சொன்னார் ....சிங்களவர்களாக இருந்தோம் என்று சொல்லவில்லையே 
பிறகேன் இப்படி குத்தி முறிகிறீர்கள் ...பௌத்தம் ஒரு தத்துவம்,மெய்ப்பொருளியல் (Philosophy) உண்மையான பௌத்ததத்தை பின்பற்றுபவன் ஒரு நாளும் அதனை மதம் என்று சொல்லமாட்டான் ..இங்கே பின்பற்றுபவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் பௌத்தத்தை பற்றி பத்து வீத அறிவு கூட இல்லாதவர்கள்... பௌத்தம் சொல்கிறது எதிலும் பற்று வைக்கக்கூடாது என்று இந்த சிங்களவன் உண்மை பௌத்தனாயிருந்தால்  தமிழீழம் கேட்டு நாம் போராடிய போது முழு நாட்டையும் எம்மிடம் தந்து விட்டு காவியுடை தரித்து தவ வாழ்க்கை வாழ்த்திருக்க வேண்டும் ....மாட்டை அறுப்பது குற்றம் என்று பந்தா  காட்டும் பிக்கிகள் எல்லாம் வாய்ப்புகிடைத்தால் மாடே அழும் அளவுக்கு மாட்டிறைச்சியை கொளுத்தி  வெட்டி தள்ளுவினம் அவ்வளவு தான் அவர்களின் பௌத்தம்  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அட சும்மாபோங்கப்பா ...?
ஐயா பௌத்தர்களாக இருந்தோம் என்று தானே சொன்னார் ....சிங்களவர்களாக இருந்தோம் என்று சொல்லவில்லையே 
பிறகேன் இப்படி குத்தி முறிகிறீர்கள் ...பௌத்தம் ஒரு தத்துவம்,மெய்ப்பொருளியல் (Philosophy) உண்மையான பௌத்ததத்தை பின்பற்றுபவன் ஒரு நாளும் அதனை மதம் என்று சொல்லமாட்டான் ..இங்கே பின்பற்றுபவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் பௌத்தத்தை பற்றி பத்து வீத அறிவு கூட இல்லாதவர்கள்... பௌத்தம் சொல்கிறது எதிலும் பற்று வைக்கக்கூடாது என்று இந்த சிங்களவன் உண்மை பௌத்தனாயிருந்தால்  தமிழீழம் கேட்டு நாம் போராடிய போது முழு நாட்டையும் எம்மிடம் தந்து விட்டு காவியுடை தரித்து தவ வாழ்க்கை வாழ்த்திருக்க வேண்டும் ....மாட்டை அறுப்பது குற்றம் என்று பந்தா  காட்டும் பிக்கிகள் எல்லாம் வாய்ப்புகிடைத்தால் மாடே அழும் அளவுக்கு மாட்டிறைச்சியை கொளுத்தி  வெட்டி தள்ளுவினம் அவ்வளவு தான் அவர்களின் பௌத்தம்  

சா என்ன ஒரு விளக்கம் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.