Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார்

Featured Replies

தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார்
 
தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார்
ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்த்தார்.
 
தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
 
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்ட கை அவர்கள் பற்றிய ஆங்கில நூல்  நேற்று (1) வியாழக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது.
 
குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,
 
ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும், திருச்சபைக்காகவும், நாட்டி ற்காகவும் அரும் பணி ஆற்றியுள்ளார். ஆயர் அவர்களுடன் கடந்த 9 வருட ங்க ளாக இருப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
 
முக்கியமான கால கட்டத்தில் நான் அவருடன் கூட இருந்திருக்கின்றேன்.
 
சமைய சூழ் நிலைகளை பொறுத்தவரையில் அவர் மறைமாவட்டத்தின் ஆயர். இரண்டு மாவட்டங்களுக்கு அவர் ஆயராக இருந்தார்.
 
கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு அவர் பொறுப்பாக இருந்தார்.பல விதமான ஆன்மீக முன்னேற்றத்திட்டங்கள் அவருடைய காலத்தில் எடுக்கப்பட்டது.
 
அதை விட மேலாக அவர் ஆற்றிய பல்வேறு பணிகளை நாங்கள் இந்த நூலிலே பார்க்கின்றோம்.
 
மிகவும் சிறப்பாக சொல்லப்போனால் தமிழ் மக்களின் வாழ்விலே அவர் பின்னிப்பிணைந்தவராக அவரின் உரிமைப்போராட்டத்திலேயே அவர் இரண்டற கலந்தவராக இருந்திருக்கின்றார்.அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.
 
சர்வதேச சமூகமே அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதைத்தான் அவர் அடி க்கடி செல்லியிருக்கின்றார். நாங்களும் சொல்லி இருக்கின்றோம்.
 
தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார்.இதனை பலர் பலவிதமாக புரிந்து கொண்ட தும் நமக்கு தெரியும்.
 
சர்வதேச மட்டத்திற்கு அவரின் குரல் சென்றது என்றால் தமிழ் மக்கள் கௌர வமான,நீதியான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலே அவர் விடா ப்பிடியாக இருந்தார்.
 
மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவர் அரும் பாடுபட்டார்.மக்களின் குறைகளை,மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கிடைக்கின்ற சந்தர்ப்ப ங்களை பயன்படுத்தி வெளிப்படுத்தினார்.
 
இலங்கையில் என்றால் என்ன சர்வதேசம் என்றால் என்ன மக்களுக்கு இழைக்க ப்பட்ட அநீதிகளை எடுத்தியங்கி நீதி கிடைக்கவேண்டும்,தீர்வு கிடைக்க
வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
 
பிரச்சினைகள் நடந்த கால கட்டத்தில் ஆயர் அவர்கள் யுத்தம் இடம்பெற்ற இடமாக இருந்தால் என்ன, தனது அலுவலகத்தில் இருந்தால் என்ன அவருடைய குரல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே சென்றது.
 
படகுத்துறையிலே விமானத்தாக்குதல் இடம்பெற்ற பொழுது தனது அலுவல கத்தில் இருந்து கொண்டு சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கூறினார் அப்பாவி மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள் என்று.அப்போது அவ ர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
ஆனால் ஆயர் அவர்கள்  நீங்கள் இதை செய்வது பிழை என சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் தொடர்ந்து சொன்னார்.
 
அப்பாவி மக்களை கொன்றுவிட்டு நீங்கள் பெருமிதம் அடைய வேண்டாம் என்று கூறினார்.அவர் உரிமைக்காகவும் மக்கள் சார்பாகவும் நின்று பேசிய ஓர் தன்மை யை காட்டுகின்றது.
 
இவ்வாறு அவருடைய வாழ்க்கையிலே பல சம்பவங்களை சுட்டிக்காட்டக்கூடிய வகையில் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் அவற்றை தொகுத்து ஒரு நூல் வடிவிலே கொண்டு வந்துள்ளார்.
 
ஆயர் அவர்கள் ஆரம்பித்த பல்வேறு நலத்திட்டங்களை நான் அறிவேன்.அது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கஸ்டப்பட்ட நொந்து போயுள்ள யாராக இருந்தா லும் தன்னிடம் வருகின்றவர்களுக்கு இல்லை என்று சொல்லது அவர்களுடைய குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கின்ற ஓர் ஆயராக வாழும் நாயகனாக இருந்தார் என்பதனை கூறும் வகையில் இந்த நூல் சுட்டி க்காட்டுகின்றது.
 
எனவே தமிழ் சமூகம் ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/17060

1 hour ago, நவீனன் said:

தமிழ் மக்களின் வாழ்விலே அவர் பின்னிப்பிணைந்தவராக அவரின் உரிமைப்போராட்டத்திலேயே அவர் இரண்டற கலந்தவராக இருந்திருக்கின்றார்.

பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு அவர் பொறுப்பாக இருந்தார்.பல விதமான ஆன்மீக முன்னேற்றத்திட்டங்கள் அவருடைய காலத்தில் எடுக்கப்பட்டது.

இவை ஓய்வுபெற்ற ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் பணிகளை சுருக்கமாக கூறி நிற்கின்றன. போர் சூழலில் முக்கிய பங்கை ஆற்றிய ஒருவர்.

அவரின் பின்னால் வருபவர்கள் அவரைப் போலவே பொறுப்புடன் நடப்பது அவசியமாகிறது. சம்பந்தமற்ற இடங்களில் இரவோடிரவாக சிலைகளை வைக்கும் கேவலமான வேலைகளை தற்போதைய ஆயர்கள் நிறுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, போல் said:

சம்பந்தமற்ற இடங்களில் இரவோடிரவாக சிலைகளை வைக்கும் கேவலமான வேலைகளை தற்போதைய ஆயர்கள் நிறுத்தவேண்டும்.

இதை சிங்களவர்களிடமும் இராணுவத்திடமும் சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா போல் ....?

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதை சிங்களவர்களிடமும் இராணுவத்திடமும் சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா போல் ....?

நிறையவே இருக்கிறது! 

ஆனால் திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளையும், எம்மோடு ஒருவராக தமிழராக இருந்துகொண்டு அடிப்படை உரிமைப் போராட்டத்தை நலிவுபடுத்தும் வகையில்  சகோதர  மதத்தவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் சிலைகளை இரவோடிரவாக வைப்பதையும் ஒப்பிடும் உங்கள் சிந்தனை மிகவும் கவலைக்கிடமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2016 at 5:17 PM, போல் said:

எம்மோடு ஒருவராக தமிழராக இருந்துகொண்டு அடிப்படை உரிமைப் போராட்டத்தை நலிவுபடுத்தும் வகையில்  சகோதர  மதத்தவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க

இதே ஆயர்மார்களும் பாதிரிகளும் மத பேதம் பார்க்காமல் மக்களுக்காக  உயிரைக்கொடுத்த சம்பவங்களும் உள்ளனவே ...? அப்போது கேவலமாக தெரியவில்லையா உங்களுக்கு ...சிலை வைப்பதால் என்னவாகிவிடப்போகிறது ....? நாங்கள் புத்தர் முளைப்பதால் கத்தவில்லை 
அவரை சுற்றி சிங்கள குடியேற்றங்களும் நாளடைவில் முளைப்பதால் தான் கத்துகிறோம் ...இல்லாவிடின் யாருமே இல்லாத இடத்தில் யாருக்கப்பா டீ ஆத்துறீர் என்று ஒண்டியாக நிக்கும் புத்தரை பார்த்து சிரித்துவிட்டு சென்றுகொண்டே இருப்போம்...நீங்கள் உங்கள் மதத்தில் பற்றுறுதி கொண்டிருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது. அதை விட்டு சிலை வைத்து மதம் மாற்றுகிறார்கள் என்றால் ...? நீங்கள்ம தம் மாறுவதால் தானே அவர்கள்  மாற்றுகிறார்கள் ....?
 
  • கருத்துக்கள உறவுகள்

 பாதிரிமார் மேல பழியைப்போட்டு இந்து, கிறிஸ்தவ மதமோதலை எழுப்ப யாராவது செய்வதை எல்லாம் நம்பி இங்கே விவாதிப்பதை தவிர்ப்போம். நாளடைவில் எல்லாம் அடங்கிவிடும். மன்னார் மாவட்டத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தால் அது யார் வேலை என்பது எல்லாருக்கும் விளங்கும். தாங்கள் செய்யும் சுரண்டல்களை  மறைக்கவும், முரண்பாடுகளை வளர்த்து தமிழர்களை கூறுபோடவும்  பலவிதமான வேலைகள் இடம்பெறுகின்றன.

On 2 September 2016 at 10:17 AM, போல் said:

நிறையவே இருக்கிறது! 

ஆனால் திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளையும், எம்மோடு ஒருவராக தமிழராக இருந்துகொண்டு அடிப்படை உரிமைப் போராட்டத்தை நலிவுபடுத்தும் வகையில்  சகோதர  மதத்தவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் சிலைகளை இரவோடிரவாக வைப்பதையும் ஒப்பிடும் உங்கள் சிந்தனை மிகவும் கவலைக்கிடமானது.

போல் இது முஸ்லிம்களின் வேலை, தாம் கள்ள காணி பிடிப்பதை மறைக்க எடுக்கும் முயற்சி தான் இது !!!!

அதே போல மகிந்தவின் முயற்சியாகவும் இருக்கலாம் , ஏன் என்றால் இது சம்பந்தமான விடயங்கள் எல்லாம் மகிந்தவுக்கு ஆதரவான முக புத்தக பக்கங்களில் தான் முதலில் வந்தன !!!!

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதே ஆயர்மார்களும் பாதிரிகளும் மத பேதம் பார்க்காமல் மக்களுக்காக  உயிரைக்கொடுத்த சம்பவங்களும் உள்ளனவே ...? அப்போது கேவலமாக தெரியவில்லையா உங்களுக்கு ...சிலை வைப்பதால் என்னவாகிவிடப்போகிறது ....? நாங்கள் புத்தர் முளைப்பதால் கத்தவில்லை 
அவரை சுற்றி சிங்கள குடியேற்றங்களும் நாளடைவில் முளைப்பதால் தான் கத்துகிறோம் ...இல்லாவிடின் யாருமே இல்லாத இடத்தில் யாருக்கப்பா டீ ஆத்துறீர் என்று ஒண்டியாக நிக்கும் புத்தரை பார்த்து சிரித்துவிட்டு சென்றுகொண்டே இருப்போம்...நீங்கள் உங்கள் மதத்தில் பற்றுறுதி கொண்டிருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது. அதை விட்டு சிலை வைத்து மதம் மாற்றுகிறார்கள் என்றால் ...? நீங்கள்ம தம் மாறுவதால் தானே அவர்கள்  மாற்றுகிறார்கள் ....?
 
தமிழரின் சொத்துக்களை அழிப்பவர்களுக்கும், அபகரிப்பவர்களுக்கும், கள்ளக்காணி பிடிப்பவர்களுக்கும், அடுத்தவர் நிலங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை நிறுவும் காடையர் கும்பலுக்கும், மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற்றும் ஈனத்தொழிலை செய்யும் ஈனப்பிறவிகளுக்கும் ஈழ மண்ணில் இடமில்லை.

1 hour ago, போல் said:

மதம் மாற்றுகிறார்கள் என்றால் அதை தடுக்க நாம் என்ன செய்திக்கு என்பதே கேள்வி ??

புலம் பெயர் தமிழரிடம் இருக்கும் வளங்களை பயன்படுத்தினாலே தாயக மக்களை சுபிட்சமாக  வாழ வைக்கலாம்.

இப்ப என்ன நடக்க போகுது எண்டால் சைவ மக்களும். கத்தோலிக்க மக்களும் பிரச்சனைப்பட இறுதியில் முழு வன்னியையும் முஸ்லீம் எடுக்க போகிறான்.

குறிப்பாக முஸ்லிம்களின் அட்டகாசத்தை சிங்கள ஊடகங்களில் பார்க்க வேண்ண்டும் , எவ்வளவு காலம் தான் இஸ்சலாமியரை எதிர்த்து தமிழன் நிக்க முடியும்  என்று தெரியவில்லை !!!

இதில் உச்ச கட்ட சோகம் என்றால் எந்தவொரு தமிழ் ஊடகமோ/அரசியல்வாதியோ/புலம்பெயர் அமைப்ப்போ அக்கறை எடுப்பதில்லை.

2 minutes ago, Dash said:

மதம் மாற்றுகிறார்கள் என்றால் அதை தடுக்க நாம் என்ன செய்திக்கு என்பதே கேள்வி ??

சைவசமயத்தை வீழ்த்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுப்பு

ஆன்மீக விழிப்புணர்வுத் திட்டம் என்ற இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கை முழுவதும் காணப்படுகின்ற இந்து இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் இந்துசமயம் சார்ந்த ஆன்மீக விடயங்களைச் சிறந்த முறையில் எடுத்து இயம்ப வேண்டுமென்பதற்காக இந்த ஆன்மீகப் பிரசாரகர் பயிற்சி நெறியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

கடந்த ஒரு மாத்திற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடலை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

இலங்கை முழுவதும் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இதிலே சுமார் ஐந்தாயிரம் கிராம சேவகர் பிரிவுகளில் இந்துமக்கள் செறிவாக வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஒருவர் என்ற அடிப்படையில் ஆன்மீகம் சார்ந்த பிரசாரகர் காணப்படுமிடத்து நிச்சயமாக இந்து சமயம் சார்ந்த விடயங்களை சிறார்களும், இளைஞர்களும் தமது சுய முன்னேற்றத்திற்காகவும், வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான நல்லதொரு வாய்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எங்களுடைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையில் இந்து சமயத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்துதல் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் மிக முக்கியமான ஐந்து செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடைய இந்துசமய அறநெறிக் கல்வி அபிவிருத்தி, இந்துசமய ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களுடைய அபிவிருத்தி, இந்துசமய விவகாரம் தொடர்பான மேம்பாடு, இந்து சமய மற்றும் கலை, கலாசார மேம்பாடு, இந்துசமய ஆராய்ச்சி என ஐந்து செயற்பாடுகளில் எமது திணைக்களம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமேகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை முழுவதும் ஐயாயிரம் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் ஆன்மீகப் பிரசாரகர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்றுச் சனிக்கிழமை (03) முற்பகல் யாழ்ப்பாணம் ஆனைப் பந்தியிலுள்ள குருகுல மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே கடந்த காலங்களில் ஏனைய மதங்களின் ஊடாக எங்களுடைய சமயத்தை வீழ்த்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களுடைய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஒரு தனிநபராக இருந்து எங்களுடைய மண்ணிலே சைவத்தையும், தமிழையும் வீழ்ச்சியுறாது காப்பாற்றியவர். ஆறுமுகநாவலரின் வழிகாட்டலின் விளைவாகவே நாம் இன்று சைவசமய பிரசாரகர் பயிற்சி நெறியை ஆரம்பித்திருக்கிறோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எனினும், தற்போதைய சூழலில் எங்களுடைய சமயத்தை நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய மதம் தற்போது விருட்சமாக வளர்ந்துள்ள போதிலும் எங்களுடைய சமயத்தின் மத்தியில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

இந்துக்களாகிய நாங்கள் எங்களுடைய சமயத்தை எமது எதிர்காலச் சந்ததிக்குச் சிறந்த முறையில் கடத்த வேண்டிய தேவையுள்ளது. எங்களுடைய கல்வி முறைகள் மற்றும் எம்மிடையேயுள்ள சில நடைமுறைகள் வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தை உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வளர்த்தெடுப்பதற்கு உறுதுணையாகவிருந்த போதும் ஆன்மீக ரீதியாக அவர்களை மேம்படுத்துவதற்கான விடயங்கள் மிகமிகக் குறைவு.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எங்களுடைய சமயத்தைச் சிறந்த முறையில் வளர்த்துக் கொள்வதற்குரிய விடயங்கள் பாடசாலைக் கல்வியில் காணப்படுகின்றது. அதேபோன்று அறநெறிப் பாடசாலைகள் மூலம் சமயம் மற்றும் ஆன்மீக விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் காணப்பட்ட போதும் இந்த சிறார்கள் மத்தியில் அவர்களது சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவாகவுள்ளது.

இந்த நிலையில் எமது இளம் சந்ததியினருக்குச் சமயத்தையும், அதிலுள்ள விடயங்களையும் எடுத்துக் கூறிச்சிறந்த ஆன்மீக பலம் பெற்றவர்களாக மாற்ற வேண்டிய கடமை இந்து சமுகத்திற்குரியது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அந்தக் கடமையை நாங்கள் பொறுப்பேற்று ஆன்மீகப் பிரசாரகர்களை நாங்கள் பயிற்றுவித்து எதிர்காலத்தில் ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், பாடசாலைகள் போன்றவிடங்களில் ஆன்மீகப் பிரசாரகர்கள் மூலம் குறிப்பாக இளம் சிறார்கள் மத்தியில் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தத் திட்டம் தொடர்பாகப் பலருடைய ஆலோசனைகளையும் நாங்கள் பெற்றிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/culture/01/116433

27 minutes ago, போல் said:

இணைப்புக்கு நன்றி , ஆனால் என்னைப்பொறுத்தவரையில் எமது இனத்துக்கும் மதத்துக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை.

1.பொருளியல் மற்றும் வாழ்வாதார பிரச்சனை

2. எமது நிலம் பறி போதல் 

3.வேகமாக அரேபிய நாடுகளிடம் பணம் வேண்டி கட்டப்படும் பள்ளி வாசல்கள்.

உதாரணமாக வன்னியில் இருக்கும் தமிழனுக்கு வேலை வேண்டும் என்றால் இப்பொழுது முஸ்லிமிடம் தான் கை எந்த வேண்டும் .

31 minutes ago, Dash said:

நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட 3 விடயங்களும் முக்கியமானவை, யதார்தமானவை.

தமிழ் வியாபார  முதலாளிகள், தமிழ் பணக்காரர்கள், தாயகத்தில் அக்கறையுள்ள புலம்பெயர்ந்து வசதியாக வாழும் தமிழரும் சிந்திக்க வேண்டிய விடயங்கள்.

செய்யப்படும் முதலீடுகளை தான்தோன்றித்தனமாக செய்யாமல் திட்டமிட்ட முறைகளில் செய்ய வேண்டும்.

தாயகத்தில் நிலைமைகளை சீராக்க கடுமையாக உழைக்கும் ஒருசிலரால் மட்டும் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அரசியல்வாதிகள் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது பாரிய தவறு.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற்றும் ஈனத்தொழிலை செய்யும் ஈனப்பிறவிகளுக்கும் ஈழ மண்ணில் இடமில்லை.

ஆயர் இராயப்பு என்ற கலைப்பின்கீழ்,   பாதிரிமார் என்று குறிப்பிட்டு போல் எழுதிய கருத்தைப் பார்க்கும்போது, எங்கோ ஒரு தப்பான கருத்து வெளிக்கிளம்புவதுபோலத் தெரிகிறது. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். வறுமையைப்பயன்படுத்தி மதமாற்றம் நடைபெறலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஆயர் இராயப்புவை கொண்ட மதத்தில் அப்படி நடப்பதில்லை என நான் அடித்த்துக் கூறுவேன். எனது நண்பர் ஒருவர் இந்து மதப்பெண்ணை விரும்பியிருந்தார். ஒருநாள் அந்தப்பெண் அவன் வீட்டுக்கு வந்து விட்டாள்   அத்தோடு தனது வீட்டுக்கு போக மறுத்து விடடாள். நண்பரின் பெற்றோரோ கலியாணம் செய்யாமல் இருவரையும் ஒரு வீட்டில் தங்க வைக்க மறுத்து விட்டார்கள். நண்பருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த ஊர்ப் பாதிரியாரிடம் சென்று விஷயத்தை சொன்னார். அதற்கு பாதிரியார் முதற் கேட்ட கேள்வி உமக்கு என்ன உரிமை இருக்கிறது அந்தப்பெண்ணை உமது மதத்திற்கு மாறும்படி வற்புறுத்த. அவன் தான் வற்புறுத்தவில்லை  என கூறினான். அவனை அனுப்பி விட்டு, அந்தப் பெண்ணை தனியாக அழைத்து விசாரித்தார். அவன் வற்புறுத்தவில்லை என்றும், .   தனது பெற்றோர், அவர் சைவ மதத்திற்கு மாறினாலும் அவரை வீட்டில் சேர்க்க மறுத்தபடியால்,  தானாகவே அந்த முடிவை எடுத்ததாகவும் கூறினாள். பாதிரியார் நண்பரின் பெற்றோரை அழைத்து விசாரித்தார். வாழப்போவது அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த மதத்தை தேர்ந்தெடுத்தாலும் தமக்கு சம்மதமே என்றனர். பெண்ணின் பெற்றோரை அழைத்துப் பேசியபோது வீட்டை விட்டு வேதக்காரனோடை ஓடினவளை நாங்கள் தலை முழுகி விட்டோம். இனி எங்களுக்கு அப்பிடி ஒரு பிள்ளை இல்லை என்று கூறிச் சென்று விட்டார்கள்.  நிற்கதியாய் நின்ற பெண்ணை அவர்களின் கன்னியர் மடத்தில் விட்டு பார்த்தார்கள்.  ஒருவேளை அவர்களின் வாழ்க்கை முறைகள் பிடிக்காமல் மனம் மாறலாம் என எண்ணினார்கள். அவளோ  மனம் மாறவில்லை. வேறு வழியின்றி வேதமுறைப்படி திருமணத்தை முடித்தார்கள். எத்தனையோ இந்து பிள்ளைகள் வேதப்பாடசாலையில் படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்து ஆசிரியர்களை வரவழைத்து இந்து சமயம் படிப்பிக்கிறார்கள். இது நானறிந்த உண்மை.  அப்படி இருக்கும் போது சிலை வைத்தோ, வறுமையைப் பயன்படுத்தியோ மாற்றுவது என்பது நிலைத்து நிக்காது. அதனால் அவர்களுக்கு  என்ன லாபம்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.