Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று மாதங்களுக்குள் காணிகள் முழுமையாக திருப்பியளிக்கப்படும்!

Featured Replies

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த அவர், இளைய சமூகத்துக்கு ஊடகங்கள் பிழையான அர்த்தங்களை வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் உள்ளது. யாரையும் விமர்சனம் செய்யமுடியும்.எனினும் நல்லிணக்கம் போன்ற விடயங்களை பரிகாசம் செய்யும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று அவர் கோரியுள்ளார்.

நல்லிணக்கம் என்பது சர்வதேச சூழ்ச்சியின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் இதனால் நாடு பிளவுப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், உண்மையான நல்லிணக்கத்தை பாதிக்கும்.

அத்துடன், இளைய சமூகத்தினரை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நேற்று தம்மை சந்தித்தவேளையில், இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனைதவிர, நல்லிணக்க நடவடிக்கைகள்,வடக்கில் பொதுமக்களின் காணிகள் மீண்டும் கையளிக்கப்படல், மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக, பான் கீ மூன் விளக்கமளித்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

வடக்கில் காணி உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக திருப்பியளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் வடக்கின் முதலமைச்சரும் வேறுப்பட்ட நிலைப்பாடுகளை கொண்டிருப்பது குறித்து வினவப்பட்டபோது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வேறுப்பட்ட கருத்துக்களை கொண்ட வடக்கு தெற்கில் உள்ளவர்களை ஒரு மையத்துக்கு கொண்டு வரும் நடைமுறை அரசியல் சுயமாகவே வெற்றியளிக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/116230

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆமித் தலைவர் சொன்னாரே...காணீ கொடுக்க மாட்டம் என்ரூ....

  • கருத்துக்கள உறவுகள்

இது மைத்திரி பதவிக்கு வந்து எத்தனையாவது 3 மாதங்கள். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டை குறீப்பிடவில்லை....அது புதுப்பிக்கலாம்..

6 hours ago, போல் said:

வடக்கில் காணி உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக திருப்பியளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர்ல மைத்திரி விடுவித்த காணிகளுக்கு மீண்டும் ஜூலையில் முள்ளுக்கம்பி வேலி அடிச்சிட்டாங்கள். இப்ப என்ன பண்ணலாம்?

IMG_9885.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, alvayan said:

அப்ப ஆமித் தலைவர் சொன்னாரே...காணீ கொடுக்க மாட்டம் என்ரூ....

10 hours ago, nedukkalapoovan said:

இது மைத்திரி பதவிக்கு வந்து எத்தனையாவது 3 மாதங்கள். tw_blush::rolleyes:

9 hours ago, alvayan said:

ஆண்டை குறீப்பிடவில்லை....அது புதுப்பிக்கலாம்..

இதைப்போய் சீரியஸாய் எடுத்துக்கொண்டு.....:grin:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.