Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரிக்கு முன்பாக பாடசலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடி இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் கடமையாற்றி வரும் அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குனர் சபை அறிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2016/09/யாழ்-உடுவில்-மகளிர்-கல்ல/

அரைவேக்காட்டு அரசியல் செய்யும் சுமந்திரன் கும்பலுக்கு எதிராக களம் இறங்கிய உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்.

சுமந்திரனோ திருமதி சுமந்திரனோ எமது கல்லூரியில் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை அவ்வாறான நிலையில் எதற்காக எமது பாடசாலை மாணவர்களின் கல்வியில் தலையீடு செய்கின்றனர் எனவும் மாணவிகள் கேள்வி?

  • தொடங்கியவர்
உடுவில் மாணவிகள் உண்ணாவிரதம்
 
 

article_1473146670-sss.jpg

-சொர்ணகுமார் சொரூபன், நடராசா கிருஸ்ணகுமார்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

'அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குநர் சபை (ஆளுநர் சபை) அறிவித்துள்ளது' என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

எனினும், தாங்கள் அதிபரை நீக்கியமைக்கான காரணம் குறித்து, பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா,  விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சிரானி மில்ஸ், 7 ஆம் திகதியன்று 60 வயதைப் பூர்த்தி செய்யவிருப்பதால், அவர் தனது பிறந்த தினத்துடன் ஓய்வுபெறுவார் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டார். எனினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி மாணவர்களையும், பொதுமக்களையும் குழப்பும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் சிரானி மில்ஸை நீக்கிய பாடசாலையின் ஆளுநர் சபை, பாடசாலையில் உப அதிபராக இருந்த திருமதி பற்ரீசியா சுனித்தாவை புதிய அதிபராக நியமித்தது.

புதிய அதிபருக்கான நேர்முகத் தேர்வுக்கு சிரானி மில்ஸ் உள்ளிட்ட நால்வர் அழைக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/181276/உட-வ-ல-ம-ணவ-கள-உண-ண-வ-ரதம-#sthash.juJDD2wD.dpuf

Edited by நவீனன்

நான்காவது நாளாக தொடரும் போராட்டம் - உண்ணாவிரதத்தில் குதித்த மாணவிகள்

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் கவனயீர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது கல்லூரி அதிபராக பதவி வகித்து வரும் சிரானி மில்ஸின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த மாணவிகள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் நேற்று இரவு முதல் உண்ணாவிரதத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

இரவு பகலாக தொடரும் இந்த மாணவிகளின் போராட்டத்தின்போது ஒரு மாணவி இன்று காலை மயங்கி விழுந்துள்ளதுடன் மேலும் பல மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

இவர்கள் ஆரம்பித்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டமானது தமக்கான தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்று தொடரும் என எச்சரித்தார்கள்.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டமானது பாரதூரமானதாக மாறிவருவதோடு, இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை காணப்படுகின்றது, இவர்களுடைய போராட்டத்திற்கு பெற்றோர்களும் பழைய மாணவிகளும் கூட ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்த மாணவிகளை பார்வையிடுவதற்கு வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் சென்றுள்ளார்.

மாணவிகளுடன் கலந்துடையாடிவிட்டு பிரதான நுழைவாயில் ஊடாக பாடசாலையை விட்டு செல்ல முட்பட்டுள்ளார். எனினும் பாடசாலை மாணவிகள் அவரை செல்லவிடாமல் தடைசெய்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனால் குறித்த பகுதியில் மேலும் பதற்றம் நிலவியுள்ளது. இதைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வரைந்து உரிய தீர்வு வழங்கப்படும் என்று உறுதி மொழியளித்துள்ளார்.

எனினும் உரிய பதில் தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவேண்டும் என்றும் உடனடி தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilwin.com/education/01/116688

 

உடுவில் மகளிர் கல்லூரி தனியார் பாடசாலையா அல்லது அரச பாடசாலையா? இளைப்பாறுவதற்கான வயது 65தானே? தனியார் பாடசாலை என்றால் நிர்வாகம் கூறும் முடிவை ஏற்கவேண்டியதுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, போல் said:

அரைவேக்காட்டு அரசியல் செய்யும் சுமந்திரன் கும்பலுக்கு எதிராக களம் இறங்கிய உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்.

சுமந்திரனோ திருமதி சுமந்திரனோ எமது கல்லூரியில் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை அவ்வாறான நிலையில் எதற்காக எமது பாடசாலை மாணவர்களின் கல்வியில் தலையீடு செய்கின்றனர் எனவும் மாணவிகள் கேள்வி?

திரு சுமந்திரனை விட திருமதி சுமந்திரனுக்கு வாய் ரலண்ட் கொஞ்சம் கூடவாம்.....அவுஸ்சிலை அடி வாங்கேக்கை இவவும் கொஞ்சம் வாய் காட்டினவவாம்.... கொஞ்ச பொயின்ஸ்சும் அவருக்கு எடுத்து குடுத்தவவாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் ஏன் இதில் பங்கெடுக்கவேண்டும் ஒரே குழப்பமுமாக இருக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.