Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமானத்தளத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க முடிவெடுக்கவில்லை: ரணில்

Featured Replies

பலாலி விமானத்தளத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க முடிவெடுக்கவில்லை: ரணில்

160621070646_srilanka_parliment_512x288_

 

யாழ் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது கேள்வியொன்றை எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளப் பட்டுள்ளதா? என்று வினவினார்.

அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறான ஒப்பந்தங்கள் எதுவும் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று அறிவித்தார்.

111224135442_palaly_map_304x171_bbc_nocr  

மேலும் கேள்வியொன்றை எழுப்பிய உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக இந்திய சிறப்பு குழுவொன்று இலங்கை வந்து ஆய்வொன்றை மேட்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறான ஆய்வொன்றை மேற்கொள்ள முடியாதென்று அறிவித்த பிமல் ரத்னாயக்க இதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதா? என்று கேள்வியொன்றை எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறான ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியமில்லை என்று பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160906_srilanka_jaffna_airport

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் ரணில் .. அவரு நாடோடி மன்னன். ஒசியிலேயே உலகத்தை சுற்றி பார்த்துவிடணும் உலகம் சுற்றும் வாலிபனாக கிடக்காறு... அவரு எங்க போயிருக்காரு.. என்று யாருக்குமே தெரியல.. இந்த கேப்புல ..நீங்க  கிடா வெட்டுறீங்க... நடக்கட்டும் ..நடக்கட்டும் :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஒடுக்க அந்நிய நாட்டு துணை வேண்டும், உள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய நாட்டு உதவி வேண்டுமெனில் உங்களுக்கென "ஒன்றுமே" இல்லையா..? vil-bah.gif

 

 சமீபத்திய அமெரிக்க தேர்தல் விளம்பர யுக்தி வரிகள் ஞாபகம் வருகிறது..

The Emperor Has No Balls!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடம் தயாரிப்பதற்கு இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா கோரப்பட்டுள்ளதாக, இந்திய தூதரக வட்டாரங்கள்தெரிவித்தன.

பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகச் சீரமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது.

சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழு கடந்த மார்ச்17ம் திகதி பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டது.

இந்தக் குழுவினர், பலாலி விமான நிலையத்தின் சீரமைப்புத் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்வதற்கு, வரைபடம் தயாரிப்பதற்கு ஓர் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

பலாலியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான மாதிரி வரைபடங்கள்தயாரிப்பதற்கு மாத்திரம் இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா வரையில் செலவாகும்என்று தெரிவிக்கப்பட்டது.

http://www.tamilwin.com/development/01/112908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.