Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதில் இந்தியர்களைப் பின்னுக்குத் தள்ளிய சீனர்!

Featured Replies

சிறீலங்காவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதில் இந்தியர்களைப் பின்னுக்குத் தள்ளிய சீனர்!

சிறிலங்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்களைப் பின்தள்ளிவிட்டு சீனர்கள் கடந்த இரண்டு மாதங்களாக முன்னிலை வகிக்கின்றனர்.

சீனாவிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27,519 சுற்றுலாப் பயணிகள் சிறீலங்காவுக்குப் பயணம் செய்துள்ளனர். இது கடந்த மாதத்தைவிட 11 வீதம் அதிகமாகும்.

அதேவேளை, இந்த ஆண்டில், முதல் எட்டு மாதங்களில் மாத்திரம், சீனாவில் இருந்து 190,992 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32 வீத அதிகரிப்பாகும்.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் 24,418 இந்திய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்கா வந்துள்ளனர்.

கடந்த காலங்களில் சிறீலங்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்பவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையிலிருந்தனர். இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக சீனர்களின் வருகை அதிகரித்துள்ளது.

http://thuliyam.com/?p=40559

சீனர்கள் எல்லாவற்றிலும் ஹிந்தியாவை பின்னுக்கு தள்ளி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, போல் said:

சீனர்கள் எல்லாவற்றிலும் ஹிந்தியாவை பின்னுக்கு தள்ளி வருகின்றனர்.

உலகம் முழுக்க அதுதானே நடக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்..... கடந்த இரண்டு மாதமாக, 
கபாலி படம் பார்க்க.. சனம் ஆவலாக இருந்ததால்,
சுற்றுலா செய்ய... அவர்களுக்கு நேரம் இருக்க வில்லை. இனி வருவார்கள். :grin:

  • தொடங்கியவர்

மீண்ட சொர்க்கம்...

article_1469599027-Paradise-Regained-web-version.jpg

http://www.tamilmirror.lk/178040

  • கருத்துக்கள உறவுகள்

Air China magazine warns London visitors to avoid ethnic minority areas.

லூசுப் பசங்க. கடின உழைப்பு. உலகம் தெரியாது...

ஏர் சைனா விமான இதழில், பயணிகளுக்கான அறிவுரையில், லண்டன் பொதுவாக பாதுகாப்பானது.... இருப்பினும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், கறுப்பர்கள் நிறைந்த இடங்களில் அவதானம் தேவை. பெண்கள் தனியே போக்க கூடாது என்று போட்டு வைக்க, பெரும் சர்ச்சையினை உண்டாக்கி உள்ளது.

இனவெறிக்கு கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீன தூதருக்கு கடிதங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து போவதுடன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, சீனத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோர பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அடப்பாவிகளா?! இப்பிடி வெளிப்படையா எழுதிப் போட்டிருக்காங்கள்.. சீனருக்கு மான்டரின் மொழியில் எழுதினால் போதும்தானே.. எதுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு? இது வேண்டுமென்றே சீண்டுவதற்காக எழுதி வைத்தது போல இருக்கு.. :unsure:

44 minutes ago, இசைக்கலைஞன் said:

அடப்பாவிகளா?! இப்பிடி வெளிப்படையா எழுதிப் போட்டிருக்காங்கள்.. சீனருக்கு மான்டரின் மொழியில் எழுதினால் போதும்தானே.. எதுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு? இது வேண்டுமென்றே சீண்டுவதற்காக எழுதி வைத்தது போல இருக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரத்தில் ஒரு தப்புமில்லை.அதை ஆங்கிலத்தில் போட்டது தான் தப்புtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

விளம்பரத்தில் ஒரு தப்புமில்லை.அதை ஆங்கிலத்தில் போட்டது தான் தப்புtw_blush:

அதே....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Air China magazine warns London visitors to avoid ethnic minority areas.

லூசுப் பசங்க. கடின உழைப்பு. உலகம் தெரியாது...

ஏர் சைனா விமான இதழில், பயணிகளுக்கான அறிவுரையில், லண்டன் பொதுவாக பாதுகாப்பானது.... இருப்பினும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், கறுப்பர்கள் நிறைந்த இடங்களில் அவதானம் தேவை. பெண்கள் தனியே போக்க கூடாது என்று போட்டு வைக்க, பெரும் சர்ச்சையினை உண்டாக்கி உள்ளது.

1 hour ago, நந்தன் said:

விளம்பரத்தில் ஒரு தப்புமில்லை.அதை ஆங்கிலத்தில் போட்டது தான் தப்புtw_blush:

1 hour ago, விசுகு said:

அதே....

பாகிஸ்தானியர்கள், கறுப்பர்களிடம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை.. ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால்... இந்தியர்களும் ஆபத்தானவர்களா?
இதனை... மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 

ஏதோ... என்னாலை முடிந்தது, இம்புட்டுத்தான்..... :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.