Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோபாலபுரத்தில் சாய்பாபா...

அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது!

p44a3le.jpg

கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கருணாநிதியும், புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள். பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கருணாநிதியும், பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணா குடிநீர் திட்டத்துக்காகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால்வாய் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக சத்ய சாய்பாபா டிரஸ்ட் செய்து கொடுத்ததற்காக சாய்பாபா வுக்கு சென்னையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடானது. இதற்காக அவர் வந்தபோதுதான் முதல்வரைச் சந்தித்தார்.

முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த சாய்பாபா, காரிலிருந்து இறங்கி வீல் சேரில் அமர்ந்து, முதல்வரின் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு ஐந்து புகைப்படக்காரர்களும், ஐந்து தொலைக்காட்சி கேமராமேன்களும் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். சாய்பாபா அறைக்குள் நுழைந்ததுமே முதல்வர் எழுந்து நின்று, அவரது கையைப் பற்றி வரவேற்றார். அவர் அருகில் இருந்த அவரது மனைவி தயாளு அம்மாள், பாபாவின் காலைத் தொட்டு வணங்கியபோது புகைப் படக்காரர்களுக்கு முக்கியமான போட்டோ ஒன்று கிடைக்க... அதைப் பார்த்து, ‘‘பாட்டி, பாட்டி’’ என்று பதறினார் தயாநிதி மாறன். முதல் வரோ தன் மனைவியை எந்த சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்படி நிகழ்ந்தது இந்த எதிரெதிர் துருவ சந்திப்பு?

தி.மு.க-வின் முக்கிய பிரமுகர் ஒருவர் இதற்கான பின்னணி குறித்து நம்மிடம் கிசுகிசுத்தார். ‘‘ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என எல்லோருமே சாய் பாபாவை தேடிப்போய் பார்ப்பார்கள். அதேபோல், ‘முதல்வர், பாபாவை சந்திக்க விரும்பினால் நேரம் ஒதுக்கத் தயார்’ என்று முதல்வர் அலுவலகத்துக்கு சாய்பாபா டிரஸ்டில் இருந்து தகவல் வந்தது. ஆன்மிகவாதியைத் தேடி பகுத் தறிவுத் தலைவர் ஒருவர் எப்படிப் போக முடியும்? ஆகவே ரொம்ப நாசூக்காக ‘முதல்வருக்கு நிறைய அப்பாயின்ட் மென்ட் இருக்கிறது’ என்று சொல்லித் தவிர்த்துவிட்டோம். ஆனால் அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே... விஷயம், அமைச்சர் தயாநிதி மாறனிடம் போனது. அவர் பாபா தரப்பு ஆட்களிடம், ‘பாபா விருப்பப்பட்டால் முதல் வரைச் சந்திக்கலாம்’ என பக்கு வமாக எடுத்துச் சொன்னார். அதன்பிறகு, அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

இதற்கிடையில் என்ன நடந் ததோ தெரியவில்லை... ‘பாபா முதல் வர் வீட்டுக்கு வருவார்’ என்று டிரஸ்டி யில் இருந்து தகவல் வந்தது. ஆக, இந்த விஷயத்தில் தலை வருக்கு ஏற்பட்ட சங்கடத்தை சாதுர்யமாக சரிசெய்தது, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்தான்’’ என்று சொன் னார்.

முதல்வர் வீட்டுக்கு பாபா வந்தது, தி.மு.க&வினரை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. ‘‘சங்கராச்சாரியாரை காஞ்சி சங்கர மடத்துக்குத் தேடிப்போய்தான் அந்த அம்மா (ஜெயலலிதா) பார்த்தாங்க. இங்கே நம்ம தலைவரைத் தேடி சாய் பாபாவே வந்துட்டுப் போறாரு... அதான் நம்ம தலைவ ரோட பவரு!’’ என்று அவர்கள் புல்லரித்துக் கொண்டிருக் கின்றனர். அதேசமயம், நாத்திகவாதி ஒருவர் வீட்டுக்கு சாய்பாபா போனது, அவரது பக்தர்களை மனம் ஒடிய வைத்து விட்டதும் உண்மை.

p45a3qf.jpg

மறுநாள் நேரு ஸ்டேடியம் உள்ளரங்கில் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா நடந்தது. கவர்னர் பர்னாலா, மத்திய அமைச் சர்கள் லாலு பிரசாத் யாதவ், சிவராஜ் பாட்டீல் என ஏகப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். ஆனால், ஆந்திர முதல் வர் ராஜசேகர ரெட்டி வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின், உடல்நல பிரச்னையால் பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

விழாவில் கருணாநிதி பேசும்போது, ‘‘பாபா இலவச மருத்துவம், இலவச கல்வி என்று எத் தனையோ நல்ல உதவி களை செய்கிறார். அங்கே யும் இலவசம், இங்கேயும் இலவசம்... இலவசம் அதிகமாகக் கொடுத்தால், திவாலாகி விடும் என்று சொல்கிறார்கள். திவாலாக மாட்டோம், எடுக்க எடுக்க அன்பு குறையாது. அன்பு குறையவில்லை என்றால், ஆஸ்தியும் குறையாது. அந்த நம்பிக்கையோடுதான் நம்முடைய அருள்மிகு சாய்பாபாவும் தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதைத்தான் அவர் ‘ஆண்டவர் பணி’ என்று கருதுகிறார். இதைத்தான் நானும் ‘ஆளுகிறவன் பணி’ என்று கருதிக் கொண்டிருக்கிறேன். ஆண்டவன் பணிக்கும் ஆளுகிற வன் பணிக்கும் ஏறத்தாழ இப்படித்தான் ஒற்றுமை இருக் கிறது. இல்லாதவர்களுக்கு இலவச மாக வழங்குவதில் தவறில்லை. அதில் எந்த குற்றமும் இல்லை... மக்களுடைய கஷ்டங் களைப் போக்குகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனுக்கே ஒப்பானவர் கள்’’ என்ற கருணாநிதி, ‘‘கடவுளை நான் ஏற்றுக் கொள் கிறேனா என்பது பிரச்னையல்ல... கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நான் நடக்கிறேனா என்பதுதான் பிரச்னை. நான் அப்படி நடந்துகொண்டால் கடவுள் இருந்தா லும் இல்லாவிட்டாலும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்’’ என்றார்.

சாய்பாபா பக்தர்களாக விழாவுக்கு வந்திருந்த அனைவரை யும் முதல்வரின் பேச்சு கவர்ந்தது.

‘‘பகுத்தறிவு, ஆத்திகம், நாத்திகம் என்பதையெல்லாம் தாண்டி, ‘மாநில மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால்... அது தான் உண்மையான மகேசன் பணி’ என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டார் முதல்வர். நாட்டை ஆள்பவர் களுக்கு இருக்க வேண்டிய உச்சகட்டமான பக்குவம் இது. அவர் வீட்டுக்கு சாய்பாபா நேற்று சென்றதில் எங்களில் பலருக்கும் நெருடல் இருந்தது. ஆனால், இந்த விழாவுக்குப் பிறகு அந்த நெருடல் நீங்கிவிட்டது’’ என்றார்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்.

நன்றி-விகடன்

இவர் என்ன தன் சொந்தப் பணத்திலிருந்தா செலவு செய்கிறார்?

மூடர்கள் கொடுக்கும் காணிக்கையிலிருந்து விளம்பரத்துக்காக கொஞ்சம் செலவு செய்கிறார்.

மிகுதியை ஆடம்பரமாகச் செலவளிக்கிறார்.

ஆனால் ஒரு கோடியில் கலைஞரயே சரிய வைத்த பாபா கில்லாடிதான்.

நானும் ஏதோ அதிசயமாம் என்று விழுந்தடித்து ஓடிவந்தா அட சாய்பாபாவும் கருணாநிதியும் சந்தித்ததா அந்த அதிசயம்?

இதற்குமேல் இதைப்பற்றி ஒன்றும் எழுதவில்லை. தெய்வக்குற்றம் நமக்கு வேண்டாமப்பா! :(

எம்மதமும் சம்மதம் என்று சொல்கிற கலைஞர் பாபாவை சந்தித்தது ஒரு மரியாதை நிமித்தம்.இதற்கு முதல் அன்னை தேராசாவையும் சந்தித்துள்ளார்.

அவர் அனைத்து தமிழக மக்களின் முதல்வர். எல்லாராயும் சமமாக மதிக்க வேண்டும்.

சாதி எதிர்ப்பு போராட்டத்தில் கூட தனது குடும்ப்பத்தையே இணைத்துக்கொண்டவர். அவரது பிள்ளைகள் அனைவரும் கலப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

‘‘பகுத்தறிவு, ஆத்திகம், நாத்திகம் என்பதையெல்லாம் தாண்டி, ‘மாநில மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால்... அது தான் உண்மையான மகேசன் பணி’ என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டார் முதல்வர். நாட்டை ஆள்பவர்களுக்கு இருக்க வேண்டிய உச்சகட்டமான பக்குவம் இது. அவர் வீட்டுக்கு சாய்பாபா நேற்று சென்றதில் எங்களில் பலருக்கும் நெருடல் இருந்தது. ஆனால், இந்த விழாவுக்குப் பிறகு அந்த நெருடல் நீங்கிவிட்டது’’ என்றார்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்.

காஞ்சிப் பெரியவரை கொலைக் கேசில ஜெயலலிதா உள்ள போடேக்கையும் கருணாநிதி ஐயா குரல் கொடுத்தவர். கோடிக்கால கோடி கோடியா வரும் என்றால் ஐயா யார் காலையும் கழூவுவார். "பகுத்தறிவு" "நாத்திகம்.." அடுக்கு மொழியில் மேடைப் பேச்சோடுதான். அரசியலுக்காக அவர் உச்சரித்துக் கொள்வார்.

இத்தனையும் அரசியல் முதிர்ச்சியோடு செய்பவர் ஒரு தடவை என்றாலும் இந்த ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்விடங்களுக்குச் ( அகதிமுகாம்களுக்குச்) சென்று ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாரா...???! :(:lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்தீகத்துக்கும்,நாத்தீகத்த

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்களுக்காக குடிப்பதற்கு குடி நீரினை ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வர உதவியதற்காகத்தான் கலைஞ்சர் சாய் பாபாவுக்கு பாராட்டு விழா வைத்துள்ளார். இதில் அரசியலும், ஆன்மிகமும், பகுத்தறிவை விட குடினீர் தான் மக்களுக்கு அத்தியாவசியத்தேவை. ஆந்திரப்பிரதேசத்திலும் பல இடங்களுக்கு சாய் பாபாவின் குடி நீர் திட்டத்தின் மூலம் குடி நீர் கிடைத்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிப் பெரியவரை கொலைக் கேசில ஜெயலலிதா உள்ள போடேக்கையும் கருணாநிதி ஐயா குரல் கொடுத்தவர். கோடிக்கால கோடி கோடியா வரும் என்றால் ஐயா யார் காலையும் கழூவுவார். "பகுத்தறிவு" "நாத்திகம்.." அடுக்கு மொழியில் மேடைப் பேச்சோடுதான். அரசியலுக்காக அவர் உச்சரித்துக் கொள்வார்.

பகுத்தறிவு உள்ளவர்கள் ஆன்மிகவாதிகளினைச் சந்திக்கக் கூடாதா?. கலைஞ்சர் சந்தித்ததன் நோக்கம் சாய் பாபாவின் உதவியினால் தமிழ் நாட்டு மக்களுக்கு குடி நீர் கிடைத்ததற்கு நன்றி சொல்லவே. ஆன்மிகத்துக்காவும், பகுத்தறிவிற்காகவும் சந்திக்கவில்லை, குடி நீருக்காகவே சந்தித்துள்ளார்

எம்மதமும் சம்மதம் என்று சொல்கிற கலைஞர் பாபாவை சந்தித்தது ஒரு மரியாதை நிமித்தம்.இதற்கு முதல் அன்னை தேராசாவையும் சந்தித்துள்ளார்.

...

அன்னை தெரேசாவையும் சாய்பாபாவையும் ஒப்பிடாதீர்கள்.

என்ன இருந்தாலும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை கலைஞர் சந்திதிருக்க கூடாது! உண்மையான ஆன்மீகவாதிகளை சந்தித்தாலும் பரவாயில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு உள்ளவர்கள் ஆன்மிகவாதிகளினைச் சந்திக்கக் கூடாதா?. கலைஞ்சர் சந்தித்ததன் நோக்கம் சாய் பாபாவின் உதவியினால் தமிழ் நாட்டு மக்களுக்கு குடி நீர் கிடைத்ததற்கு நன்றி சொல்லவே. ஆன்மிகத்துக்காவும், பகுத்தறிவிற்காகவும் சந்திக்கவில்லை, குடி நீருக்காகவே சந்தித்துள்ளார்

சந்திப்பை அரச மட்டத்தில் செய்திருக்கலாமே. மாநிலத்தின் சார்பில் நன்றி சொல்வதென்றால். ஏன் தனிப்பட சந்திக்க வேண்டும். ஆக அவருக்கு பாபா மேல ஒரு பக்தி. கலைஞரே பக்தி காட்டும் போது அவர் பகுத்தறிவூட்டிய மக்கள்..???????! என்னடா உலகமிது. ஒரு பக்கம் பார்ப்பர்னனை வெட்டா கொத்தடா நச்சுப் பாம்படா.. இன்னொரு பக்கம் பக்திமானின் உதவியுடன் தண்ணீர்...அவர் என்ன மானோ எத்தனை மானை வேட்டையாடி வந்த பணமோ யார் அறிவார். நாளை சிவபெருமான் சன்ரீவிக்கு 10 கோடி கொடுத்தால் கலைஞர் பூனூல் பூணவும் பின் நிற்கார் போல இருக்கே..! :blink:<_<

கலைஞராவது பராவியில்லை. அவருடைய கட்சியின் முக்கிய அமைச்சர் துரைமுருகன் பக்திப் பரவசத்தில் திளைத்து விட்டார்.

பாபா துரைமுருகனுக்கும், தயாநிதிமாறனுக்கும் மந்திரத்தில் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். அதை துரைமுருகன் மேடையில் சொல்லி பரவசப்பட்டார்.

தமிழ்நாட்டு மக்கள்தான் பாவம்!

கலைஞராவது பராவியில்லை. அவருடைய கட்சியின் முக்கிய அமைச்சர் துரைமுருகன் பக்திப் பரவசத்தில் திளைத்து விட்டார்.

பாபா துரைமுருகனுக்கும், தயாநிதிமாறனுக்கும் மந்திரத்தில் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். அதை துரைமுருகன் மேடையில் சொல்லி பரவசப்பட்டார்.

தமிழ்நாட்டு மக்கள்தான் பாவம்!

சில கருத்துகளில் வார்த்தை பிரயோகம் கடுமையாகவுள்ளது. பொது இடங்களில் இவற்றை தவிர்க்க வேண்டுகிறேன். கிறீஸ்தவமைப்புகளுக்கு அரசாங்கங்கள் கோடி கோடியாக கொட்டிகொடுக்கிறார்கள். முஸ்லீம் அமைப்புக்கள் கூட அப்படித்தான். இங்கே அப்படியில்லை. மக்கள் இனமத பேதமற்று வழங்குகிறார்கள் இதை பார்க்கும் உங்களுக்கு அவர்கள் மூடர்களாகத் தெரிகிறார்களா? டொரன்டோவில் சாயி பாடசாலையில் அனுமதிக்காக எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் தெரியுமா? எதையும் நம்பிக்கையுடன் பார்த்தால் அல்லது விசாரிக்கவேண்டும். அதற்காக அம்மாவிட்டை கொண்டுபோய் தாலி தானம் செய்தால் கணவனின் கஸ்டம் குறையுமென்று பிரான்ஸ் வாழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்களே.. இப்படியும் நடக்கிறது இதிலே உண்மை என்னவெனில் தாலிப்பொருத்தம் இல்லாமல் மணமுடித்தவர்களுக்கு சாத்தியமாகும். அதற்காக அம்மாவிடம் அல்ல நகைகடையிலேயே கொடுத்து காசுவேண்டலாம்.. இதுவெல்லாம் உதாரணங்கள்தான். நிதியம் என்றாலே 40_65% தான் அபிவிருத்திக்கு போய்சேரும்.

கிறீஸ்தவ முஸ்லிம் அமைப்புக்களுக்கு அந்தந்த நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தார்கள் என்பதும் எப்படி செலவு செய்யப் படுகிறதென்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அங்கே கடவுளின் பெயரால் கொள்ளை அடிப்பவர்கள் குறைவு.

இந்து அமைப்புக்களை நடத்துபவர்கள் பலர் கள்ளசாமிகள். வெளிநாடுகளிலுள்ள கோயில்களில் பெரும்பாலானவை தனியொருவரின் வருமானத்திற்காக நடத்தப்படுகிறது. வரவு செலவு என்ற பேச்சுகே இடமில்லை. அப்படி கேட்டால் கடவுள் கோபித்துக் கொள்வார்.

கண்ணை மூடிக்கொண்டு நாம் கடவுளுக்காக உண்டியலில் காசு போடுவதும், அதை நடத்துபவர்களின் வங்கிக் கணக்கில் போடுவதும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சாய்பாபா இந்து மதத்தைப் பிரதிநிதிப்படுத்துபவர் என்ற சிந்தனையோடு எழுதுவதை மாற்றுங்கள். அவரின் சின்னத்தில் கூட அனைத்து மதங்களின் இலட்சணைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இந்து ஆலயங்கள் அவரை உள்வாங்கவில்லை. அவர் இலிங்கம், எடுக்கின்றாரோ, வாந்தி எடுக்கின்றாரோ என்பது எல்லாம் அவரது பிரச்சனை. அவருக்கும் இந்து மதத்துக்கும் முடிச்சுப் போடாதீர்கள். அவரை வழிபடுபவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து பிரிவினரும் இருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதி தொடக்கம் பலர் அவரது பக்தர்களாக இருக்கின்றனர். அதை விட சாய்பாபா தன்னை இந்து மதம் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அவரது குரு எனக் கூறப்படும் ரஸ்டிபாபா முஸ்லீம் மதச்சார்பு கொண்டவர் என்றே சொல்வார்கள்.

அதை விட, கிறிஸ்தவம் உயர்வா தாழ்வா என்று நான் அறியேன். ஆனால் மதத்துக்கு ஆட்களைச் சேர்த்துக் கொடுத்தால் குறித்தளவு பணத்தை கொடுக்கும் கத்தோலிக்கம் இல்லாத மதப் பிரிவுகளை நான் அறிவேன்.

--------------------------

ஆத்தீகச் சார்பில் சாய்பாபா குறித்துச் சொல்ல வேண்டுமானால், தனக்கு கிடைக்கின்ற நிதியை சமூகத்துக்கு பயன்படுத்துகின்றார். உண்டியலில் போடுகின்ற பணத்தை கட்டாயம் இவ்வாறு செலவு செய்தாக வேண்டும் என்று யாரும் போடாதபோது, அவரின் செயலைப் பாராட்டலாம்.

முக்கியமாக பகுத்தறிவு வாதம் கதைப்பவர்கள், கொள்ளையடித்த பணத்தில் ஒரு துளியைக் கூட மக்களுக்குச் செலவளிக்காது இருக்கின்ற போது, அவர் ஒரு வகையில் இவர்களை விட உயர்ந்தவர் தான். அதுவும் பகுத்தறிவுவாதிகள் 50 வருடங்களாக, தமிழ்நாட்டுக்கு காவேரி வழியாகத் தண்ணீர் கொண்டு வந்ததைப் பார்க்கிலும், தனக்கு வந்த பணத்தில் கிர்ஸ்ணா நதியை தமிழ்நாடு கொண்டு வரும் சாய்பாவை புகழலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:blink:<_<

தி.க தோன்றி நாத்திகம் பேச என்று ஆரம்பித்தார்களோ அன்று பிடித்தது தமிழ்நாட்டுக்கு சனி. கடவுள் பயம் ஒன்று எல்லோரிடமும் இருந்தது என்று ஈ வே.ரா பெரியார் ராமர் சிலைக்கு செருப்பால் அடித்து காட்டினாரோ அன்றிலிருந்து மக்களுக்கு பயம் போய்விட்டது. கடவுளாவது ஒன்றாவது எனநினைக்கஆரம்பித்தார்கள் அதன் பின்தான்தமிழ்நாட்டில் ஆரம்பித்தது கொலை கொள்ளை வழிப்பறி பதுக்கல் கலப்படம் பித்தலாட்டம் மற்றும் அனைத்தும். ஆன்மீகம் கண்டிப்பாக மக்களுக்கு தேவை

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரே முன்னுக்குப் பின் முரணாக தான் சொன்னதைத் தானே பின்பற்றாதவர். அப்படி இருக்க வாரிசுகள்.

தூயவன் சொன்ன ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். சாயி பாபா இந்து மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவரல்ல என்பது சரியானதே. அவர்கள் தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள். இந்து மதம் மனிதர்களைக் கடவுள் என்று சொல்லவில்லை. அன்பைத்தான் கடவுள் எங்கிறது. எம்மை இயக்கும் சக்தியைத்தான் கடவுள் எங்கிறது.

சாயி பாபா போல சிவபெருமான் கருணாநிதி முன் தோன்றி 100 கோடி கொடுத்து பூணூலும் அணிவித்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

கருணாநிதி இப்படித்தான் பேசுவார்..

சிவபெருமான் ஒரு மக்கள் தொண்டன். நான் தமிழ் நாட்டின் தொண்டன். இதைப் பூணூல் என்று பார்ப்பவர்கள் அப்படியே பார்க்கட்டும். நான் பூணூலாய் பாப்பவர்களுக்கு பூணூலாயும் வெறும் நூலாய் பார்ப்பவர்களுக்கு நூலாயும் தெரியவே இதை அணிந்துள்ளேன். இதை அறுத்தெறியச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பூணூல் அணிந்ததால் என்னை ஆத்திகன் என்று பிராமணர்கள் பார்த்துப் பெருமைப்படலாம். நாத்திகர்கள் சிறுமைப்படலாம். நான் இருவருக்கும் தொண்டன் தமிழ்நாட்டில் என்பதையே நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் நாத்திகனாக இருப்பதும் ஆத்திகனாக இருப்பதும் சிவபெருமானிடம் 100 கோடி வாங்கியதாலோ பூணூல் போடுவதாலோ அல்ல என்பதை என்னைப் பழிப்பவர்கள் உணர வேண்டும். சிவபெருமானை வணங்குபவர்களும் எனக்குத் தொண்டன் பெரியாரை வாழ்த்துபவர்களும் எனக்குத் தொண்டன். இதுவே என் பகுத்தறிவின் விளைவு. --- மொத்தத்தில் இதைத்தான் சொல்வது இரண்டும் கெட்டான் நிலை என்று. :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்னுட்ட நெடுக்கரே.

அன்னை திரேசாவும். பாபாவும் ஒன்றுதான் இருவரும் மதத்தின் பெயரால் வந்த பணத்தை நல்ல மக்கள் பயனுள்ள உதவிகளை செய்தார்கள் அல்லது செய்கிறார்கள்.

இதைத்தான் புலம் பெயர் தமிழரிடம் உள்ள இந்துகோயில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் எங்களது மக்களூக்கு உதவி செய்யும்படி கேட்கிறோம். அவர்கள் தங்களது வங்கிக்கணக்கை நிரப்புகிறார்கள்.

புலத்தில் உள்ள மத நிறுவனங்கள் எங்களது மக்களுக்கு உதவி செய்ய வெளிக்கிட்டால் தமிழர்புனர்வாழ்வுக்கழகமே தேவை இல்லாமல் போய்விடும். அந்தளவுக்கு பணம் சேர்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை திரேசாவும். பாபாவும் ஒன்றுதான் இருவரும் மதத்தின் பெயரால் வந்த பணத்தை நல்ல மக்கள் பயனுள்ள உதவிகளை செய்தார்கள் அல்லது செய்கிறார்கள்.

இதைத்தான் புலம் பெயர் தமிழரிடம் உள்ள இந்துகோயில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் எங்களது மக்களூக்கு உதவி செய்யும்படி கேட்கிறோம். அவர்கள் தங்களது வங்கிக்கணக்கை நிரப்புகிறார்கள்.

புலத்தில் உள்ள மத நிறுவனங்கள் எங்களது மக்களுக்கு உதவி செய்ய வெளிக்கிட்டால் தமிழர்புனர்வாழ்வுக்கழகமே தேவை இல்லாமல் போய்விடும். அந்தளவுக்கு பணம் சேர்கின்றது

நாங்கள் 100,200 எண்டு உண்டியல்லை போடுவம்.இல்லாட்டி ஐய்யருக்கு 5,10 தட்சணை போடுவோமே தவிர அதுவும் ரிசீட் இல்லாமல் தெரியுமே.ஆனால் எங்கடை சனத்துக்கு இந்த களகங்கள் மூலமாய் காசு குடுக்கிறதெண்டாலால் கட்டாயம் ரிசீட் வேணும் தெரியுமோ.

அன்னை திரேசாவும். பாபாவும் ஒன்றுதான் இருவரும் மதத்தின் பெயரால் வந்த பணத்தை நல்ல மக்கள் பயனுள்ள உதவிகளை செய்தார்கள் அல்லது செய்கிறார்கள்.

இதைத்தான் புலம் பெயர் தமிழரிடம் உள்ள இந்துகோயில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் எங்களது மக்களூக்கு உதவி செய்யும்படி கேட்கிறோம். அவர்கள் தங்களது வங்கிக்கணக்கை நிரப்புகிறார்கள்.புலத்தில் உள்ள மத நிறுவனங்கள் எங்களது மக்களுக்கு உதவி செய்ய வெளிக்கிட்டால் தமிழர்புனர்வாழ்வுக்கழகமே தேவை இல்லாமல் போய்விடும். அந்தளவுக்கு பணம் சேர்கின்றது

அதை விட மோசம் போட்டி கோயில் கட்டுதல் வழக்குக்கு 200,000 அவுஸ்திரேலிய டொலர் செலவழித்தது மெல்பேனில் இருக்குமொரு கோயில் நிர்வாகம் ஆக கோயிலானது தமது கவுரவத்தை நிலைநாட்டவே பயன்படுத்துகின்ரனர்

புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாடுகளிலும் கோயில்களில் முடக்கப்படும் பணங்களை போராட்டத்திற்கு அனுப்பினால் எத்தனையை சாதிக்கலாம். பெரும்பான்மையான மக்கள் போராட்டத்திற்கு கொடுப்பதை விட அதிகம் கோயில் விடையங்களில் செலவிடுகிறார்கள். அதிகம் என்றால் பல மடங்கில் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். இறுதியில் இவற்றுக் எல்லாம் என்ன அர்த்தம் என்று யோசிக்கிறார்களா?

கோயிலை வியாபாரமாக்கி தனிமனிதர்கள் சுருட்டுகிறார்கள். சனம் விவேக்கின்ரை நகச்சுவை ஒன்றில வந்த மாதிரி மையில் கல் ஒன்றி கொஞ்சம் சிவப்பாகவும் (காயத்தாலை வந்த இரத்தத்தை குங்குமம் என்று நினைத்து)பூவும் இருந்தவுடன் கோயில் என்று சுத்தி நின்று கும்பிட்ட மந்தைகள் மாதிரி திரியுது. கேட்டா தாங்கள் வெளிநாட்டில புடுங்கி அடுக்கிறம் என்று இஸ் புஸ் எண்டு வேற்று மொழியில வேறு வெழுத்து வாங்குவினம்.

அன்னை தெரசாவும் பாபாவும் ஒன்றல்ல.

அன்னை தெரசா பாபாவைப் போன்று மோடிமஸ்தான் வேலைகளில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

சிவபெருமான் தோன்றி எனக்கு 100 கோடி கொடுத்து பூணுல் அணிவித்தால், நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.

புராணங்கள் சொல்கிற சிவபெருமானையும், சிவபெருமானைச் சொல்கிற புராணங்களையும் ஏற்றுக்கொண்டு அதைப்போன்று மகிழ்ச்சியா வாழ்வேன்.

ஒரே ஒரு பிரச்சனைதான். நான் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக நடப்பதாக தமிழர்கள் என்னை தூற்றுவார்கள்.

Edited by சபேசன்

தி.க தோன்றி நாத்திகம் பேச என்று ஆரம்பித்தார்களோ அன்று பிடித்தது தமிழ்நாட்டுக்கு சனி. கடவுள் பயம் ஒன்று எல்லோரிடமும் இருந்தது என்று ஈ வே.ரா பெரியார் ராமர் சிலைக்கு செருப்பால் அடித்து காட்டினாரோ அன்றிலிருந்து மக்களுக்கு பயம் போய்விட்டது. கடவுளாவது ஒன்றாவது எனநினைக்கஆரம்பித்தார்கள் அதன் பின்தான்தமிழ்நாட்டில் ஆரம்பித்தது கொலை கொள்ளை வழிப்பறி பதுக்கல் கலப்படம் பித்தலாட்டம் மற்றும் அனைத்தும். ஆன்மீகம் கண்டிப்பாக மக்களுக்கு தேவை
:D:)

:D

பெரியாரே முன்னுக்குப் பின் முரணாக தான் சொன்னதைத் தானே பின்பற்றாதவர். அப்படி இருக்க வாரிசுகள்.

தூயவன் சொன்ன ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். சாயி பாபா இந்து மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவரல்ல என்பது சரியானதே. அவர்கள் தங்களைத் தாங்களே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள். இந்து மதம் மனிதர்களைக் கடவுள் என்று சொல்லவில்லை. அன்பைத்தான் கடவுள் எங்கிறது. எம்மை இயக்கும் சக்தியைத்தான் கடவுள் எங்கிறது.

சாயி பாபா போல சிவபெருமான் கருணாநிதி முன் தோன்றி 100 கோடி கொடுத்து பூணூலும் அணிவித்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..

கருணாநிதி இப்படித்தான் பேசுவார்..

சிவபெருமான் ஒரு மக்கள் தொண்டன். நான் தமிழ் நாட்டின் தொண்டன். இதைப் பூணூல் என்று பார்ப்பவர்கள் அப்படியே பார்க்கட்டும். நான் பூணூலாய் பாப்பவர்களுக்கு பூணூலாயும் வெறும் நூலாய் பார்ப்பவர்களுக்கு நூலாயும் தெரியவே இதை அணிந்துள்ளேன். இதை அறுத்தெறியச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பூணூல் அணிந்ததால் என்னை ஆத்திகன் என்று பிராமணர்கள் பார்த்துப் பெருமைப்படலாம். நாத்திகர்கள் சிறுமைப்படலாம். நான் இருவருக்கும் தொண்டன் தமிழ்நாட்டில் என்பதையே நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் நாத்திகனாக இருப்பதும் ஆத்திகனாக இருப்பதும் சிவபெருமானிடம் 100 கோடி வாங்கியதாலோ பூணூல் போடுவதாலோ அல்ல என்பதை என்னைப் பழிப்பவர்கள் உணர வேண்டும். சிவபெருமானை வணங்குபவர்களும் எனக்குத் தொண்டன் பெரியாரை வாழ்த்துபவர்களும் எனக்குத் தொண்டன். இதுவே என் பகுத்தறிவின் விளைவு. --- மொத்தத்தில் இதைத்தான் சொல்வது இரண்டும் கெட்டான் நிலை என்று. :D:D

:D:D :P :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.