Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வாளர் குறித்து கவலை கொள்ளும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் குறித்து சிந்திக்காதது ஏன்?கேட்கிறார் சுமந்திரன்

Featured Replies

புலனாய்வாளர் குறித்து கவலை கொள்ளும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் குறித்து சிந்திக்காதது ஏன்?கேட்கிறார் சுமந்திரன்
 
 
புலனாய்வாளர் குறித்து கவலை கொள்ளும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள்  குறித்து  சிந்திக்காதது ஏன்?கேட்கிறார் சுமந்திரன்
பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்..
 
இது தொடர்பில் கருத்து  தெரிவித்த அவர், நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாகும். இராணுவத்தி ற்கும்,  பொதுமக்களுக்கும் என சட்டங்களை வேறுபடுத்தி நோக்க முடியாது.
 
இராணுவ புலனாய்வாளர்கள் 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கவலை வெளியிட்டு வருகிறார். அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இல்லையேல் அவர்கள் நிரபராதியாயின் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுவே அனைவருக்கும் பொதுவான சட்டம்.
 
ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 16 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக இன்னும் வழக்கே தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் குறித்து ஜனாதிபதியும் சிந்திப்பதாக தெரியவில்லை.
 
அவர்களை கடந்த நவம்பர் மாதம் விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவ்உறுதி இதுவரை பூரணமாக நிறைவேற்ற ப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://onlineuthayan.com/news/18912

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கனுக்கு கோபம் வந்திட்டு போலகிடக்கு.....இனி சிங்களவன் அழிச்சான்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி பாராளுமன்றம் அதிரப்போகுது......:cool:

இனி சிங்களவனை அந்த கடவுளாலையும் காப்பாத்தேலாது :grin:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தேரர்களுக்கு இச்செய்தி எட்டியதாக தெரியவில்லை.tw_yum:

நல்லாட்சி என்ற பெயரில் உலகை ஏமாற்றும் மைத்திரி-ரணில் தான் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தற்போதைய இணைத் தலைவர்கள் என்பதை சுமந்திரன் உணர இன்னும் எவ்வளவு காலம் தேவையோ?  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.