Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன்

Featured Replies

புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன்
 
 
புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன்
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறு நாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறு ப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
வவுனியாவில் இன்று தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே சும ந்திரன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை குறிப்பிட்டார்.
 
புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுந்திரன், அரசியல் யாப்பு தயாரிப்புப் பணிகள் தொடர்பில் ஒரு சில விடயங்களை இங்கு தெளிவுபடுத்தினார்.
 
தந்தை செல்வா அரசியலமைப்பு சபையில் உரையாற்றும்போது, நாங்கள் எவ்வளவு தான் எத்தனித்தோம். ஒவ்வொரு தீர்மானமாக தர்மலிங்கம் 6 தீர்மானங்களை முன்வைத்தார். இறுதியாக முன்வைத்த தீர்மானம் சமஸ்டியாக கூட கிடையாது. இறுதியாக கச்சேரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்ற அமைப்புகளாக மாற்றுங்கள் என்பது தான் அந்த பிரேரணை.
 
அதைக்கூட 86 க்கு 14 என்று நீங்கள் தோற்கடித்துவிட்டீர்களே. இனிமேல் நாங்கள் இதில் பங்குபெறுவதில் அர்த்தமில்லை. ஆனால் இதை ஒரு பெரிய நாடகமாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று காட்டாமல் இருப்பதற்காக நான் இப்போது வெளிநடப்பு செய்யவில்லை. நாளையிலிருந்து நாங்கள் வரமாட்டோம் என்று சொன்னார்.
 
அது தான் அவருடைய பேச்சு. அற்கு இன்றும் மதிப்பிருக்கின்றது. அவ்வாறு பேசினார் என்ப தற்கு மதிப்பிருக்கின்றது. ஆகவே எங்களுடைய செயற்பாட்டிலே நாங்கள் ஆரவாரத்துக்காக அல்லாமல் சர்வதேச அங்கீகாரத்திற்காக நாங்கள் செய்யவேண்டி ஏற்பட்டால் நாங்கள் செய்வோம்.
 
ஆனால் மக்களுடைய அபிலாசைகளை அடையக்கூடியதாக ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவதற்கு1சதவீதமேனும் வாய்ப்பு இருக்கும்வரை நாங்கள் அதைக் கைவிடோம்ஏனெ னில் எங்களுடைய மக்களுக்கு மிகவும் தேவையானதொன்று. ஆனால் வெளியிலே பலர் கொக்கரிக்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் அதனை விட்டுவிட்டு ஓடிவரப்போவதில்லை. மக்கள் வேறு எந்தக் கட்சியிடமும் இந்தப் பொறுப்பைக் கையளிக்கவில்லை. வெவ்வேறு கருத்துக்கள் தேர்தல் காலங்களில் தெரிவிக்கப்பட்டன.
 
எனினும் அவை பொது மக்கள் மத்தியில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எதை அடைவோம் என்று நாங்கள் சொன்னோமோ அவ்வாறான பாரிய பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
 
ஆகவே அதை நிறைவேற்றும்வரை அதாவது அது முடியாவிட்டால் சொல்லுவோம். அதை நிறைவேற்றக்கூடிய சிறிய சந்தர்ப்பம் இருக்கும் வரை நாங்கள் அதற்காக பாடுபடு வோம். ஏனெனில் எமது மக்கள் இனியும் ஒரு அழிவைச் சந்திக்க முடியாது.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம் ஏனைய நாடாளுமன்ற உறு ப்பினர்கள் கேட்டார்கள் நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் அவ்வாறு நிறைவேற்ற முடியா விட்டால் எல்லோரும் சேர்ந்தா இராஜினாமா செய்வதென்று.
 
அதற்கு அவர் சொன்னார் இந்த சந்தர்ப்பத்திலே இது நடக்க வேண்டுமாக இருந்தால் இது நடக்கும். அவ்வாறு தவறினால் அது நடக்காது. ஆகவே அதனை நடக்க வைக்கவேண்டும். நடக்க வைக்க வேண்டுமானால் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும். எனவே அவருடன் இணைந்து நாங்கள் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.
 

http://onlineuthayan.com/news/19036

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் யாப்புச் சபை ஒரு கண்துடைப்பே. நாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் ரணில் எப்போதோ சொல்லிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

http://onlineuthayan.com/news/19036

அதுதானே பார்த்தேன் அரசியல் யாப்புச்சபையிலிருந்து வெளியேறுவோம் என்கிறார். நான் நினைத்தேன் அனைத்து எம்பிக்களும் தங்கள் பதவியைத் திறந்து புதிய தீர்மானத்தை தமிழ்மக்கள் முன் வைப்பார்கள் என்று.(தந்தை செல்வா வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை முன்மொழிந்தது போல)நீங்கள் அரசியல் யாப்புச்சபையிலிருந்து வெளியேறினால் அவங்கள் பயந்திடுவாங்களா? போங்கய்யா காமடி பண்ணமா! இது வடிவேலு என்ர தெருவுக்கு வாடா பார்ப்போம் என்ற நகைச்சுவை மாதிரி இருக்கிறது.

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுக்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரிந்துரை

 

இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு உப குழுக்களும் அர்த்தமுள்ள விதத்திலே அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு முகமாக பரிந்துரைத்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் சேர்ந்தர்வகள் ஒருங்கிணைந்த கூட்டம்
 

ஆயினும் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முடிவுகளை எட்டுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக அதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படவில்லை.

எனவே, இது விடயத்தில் தமிழ் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் என்ன நடக்கின்றது, அசாங்கத்துடன் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என பலரும் வினா எழுப்பி வருகின்றனர்.

விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

  தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் சேர்ந்தர்வகள் ஒருங்கிணைந்த கூட்டம்

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டு நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசியல் பேரவையாக மாற்றப்பட்டிருக்கின்றது.

அதன் கீழ் வழிநடத்தல் குழுவொன்றும், அதன் கீழ் ஏழு உபகுழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய அறிக்கைகளை இந்த உபகுழுக்கள் வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றன.

அந்த அறிக்கைகளைப் பார்த்தால், முற்று முழுதாக அர்த்தமுள்ள வகையிலே அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்கின்ற சிபாரிசுடனேயே அந்த அறிக்கைகள் வந்திருக்கின்றன.

இந்த அறிக்கைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவைகள் விரைவில் வெளியிடப்படும் என்றார் சுமந்திரன்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு இதுவரையில் 31 தடவைகள் சந்தித்து ஒரு புதிய தேர்தல் முறை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான) அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகார முறை ஆகிய மூன்று விடயங்கள் குறித்து இந்தச்சந்திப்புக்களில் பேசப்பட்டிருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் சேர்ந்தர்வகள் ஒருங்கிணைந்த கூட்டம்  

பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றன. இன்னும் இணப்பாடு எட்டப்பட வேண்டிய விடயங்களும் இருக்கி;ன்றன.

இந்த நிலையில் இணக்கர் காணப்பட்ட விடயங்கள் பற்றியோ அல்லது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்கள் பற்றியோ எதுவும் பேசுவதில்லை என நாங்கள் அனைவரும் தீர்மானித்திருக்கின்றோம் என்றார் சுமந்திரன்.

இந்த விடயங்கள் பற்றி முடிவு எட்டப்படாத நிலையில் தகவல்களை வெளியிட்டால், அது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களிலும் இணக்கப்பாடு எட்டப்படுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இன்னும் இரண்டு மாதங்களில் இதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படும். அதுவரையில் மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் அராசங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவது உசிதமல்ல. பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டியது அவசியம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

http://www.bbc.com/tamil/sri-lanka-37673880?ocid=socialflow_facebook

5 hours ago, நவீனன் said:

புதிய அரசியல் யாப்பில் தமிழரின் அபிலாசைகள் தீர்க்கப்படாதுவிடின் அதிலிருந்து வெளியேறுவோம் -சுமந்திரன்

எப்ப 2016 டிசம்பர்லையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.10.2016 at 9:25 PM, நவீனன் said:

இன்னும் இரண்டு மாதங்களில் இதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படும். அதுவரையில் மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் அராசங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவது உசிதமல்ல. பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டியது அவசியம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

சனத்தை பேக்காட்டுறதுக்கு உப்புடியான மனத்தைரியம் எல்லாருக்கும் வராது கண்டியளோ...:cool:

31 minutes ago, குமாரசாமி said:

சனத்தை பேக்காட்டுறதுக்கு உப்புடியான மனத்தைரியம் எல்லாருக்கும் வராது கண்டியளோ...:cool:

வடிவேல் சொன்னது போல் மாவையும் யோசிப்பார் " இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிகிட்டு இருக்கு"

 

3.35 இல் இருந்து 3.50 வரை கவனிக்கவும், இதில் பதில் கூட @ இது அவங்கட விதி எனறு கூறிய பதிலும் பொருத்தமாக இருக்கு.

Edited by Dash

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17.10.2016 at 0:57 AM, Dash said:

வடிவேல் சொன்னது போல் மாவையும் யோசிப்பார் " இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிகிட்டு இருக்கு"

சிங்களவன் கதைக்கிறதை கேட்டால்.....கல்லு ரோட்டிலை மாட்டுவண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு  மேடையிலை நையாண்டி பேசியே  சனத்தை உசுப்பேத்தின கூட்டம்.

6 minutes ago, குமாரசாமி said:

சிங்களவன் கதைக்கிறதை கேட்டால்.....கல்லு ரோட்டிலை மாட்டுவண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு  மேடையிலை நையாண்டி பேசியே  சனத்தை உசுப்பேத்தின கூட்டம்.

உந்த லட்சணத்துல  உரிமை பற்றி கதைத்தால்  முள்ளிவாய்க்காலை வைத்து படம் காட்டல் வேறு !!!

  • தொடங்கியவர்



‘கூட்டமைப்பு இடமளியாது’
 

article_1476676307-aaaaaaaaa.jpg“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைபைக் காணாமலேயே, அதன் தன்மை தொடர்பாகக் கேள்விப்பட்டவுடன், அறிக்கை விட்டிருந்தேன். அதன் பின்னரே, அந்த வரைபை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதனை இரு மேற்பார்வைக் குழுக்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், அதனை நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு, மஹிந்த ராஜபக்ஷவை  அரியாசனத்தில் ஏற்றும் வேலையைச் செய்யமாட்டோம்” என, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில், பல்வேறான கேள்விகள், மக்கள் மத்தியில் இருந்து எழுப்பப்பட்டன. இவற்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

அவரது பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது,  

“அரசியலமைப்புப் பேரவையில் நாமும் உள்ளோம். வழிகாட்டல் குழுவில் நாங்களும் இருக்கின்றோம். எங்களுடைய சம்பந்தம் இல்லாமல், ஒரு தீர்வு திட்டம் முன்வைக்க முடியாது. காணாமல் போனோர் தொடர்பான முதலாவது வரைவு வந்தபோது, நாங்கள் அதனை குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றே சொன்னோம். அது சரிவராது என்று கூறினோம். அதனை முற்றாக மாற்றி அமைத்தோம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவைக் காணாமலேயே, அதன் தன்மை தொடர்பாக கேள்விப்பட்டவுடன், அறிக்கை விட்டிருந்தேன். அதன் பின்னரே, அந்த வரைவை, நாடாளுமன்றததில் சமர்ப்பிப்பதற்கும் அதனை மேற்பார்வை குழுக்கள் இரண்டுக்கும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அதனை நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், சில சில நடவடிக்கைகளை வைத்து, நம்பிக்கை வரவேண்டும். சில சில அடிப்படை விடயங்களில், நாங்கள் தகர்ந்து போகமாட்டோம். முதலாவது வரைவை அப்படிச் செய்துவிட்டார்கள் என்பதற்காக, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை அரியாசனத்தில் ஏற்றும் வேலையைச் செய்யமாட்டோம்.

அரசியல் கைதிகள் தொடர்பாக, கடந்த நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்பாக முடிவு கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அது அரசியல் கைதிகளுக்கும் சொல்லப்பட்டு, உண்ணாவிரதம் கைவிடப்பட்டமை, எல்லோருக்கும் தெரியும். அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் படி நடக்கவில்லை.

இது தொடர்பாக, அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டதாக, நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். அப்போது பலர் கேட்டார்கள், ஏன் அப்படிப் பேசுகின்றீர்கள், என்று. ஆனால் நான், உண்மையைச’ சொல்கின்றேன் எனத் தெரிவித்தேன்.

217 பேராக இருந்தவர்கள், இன்றைக்கு 96 பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளுடன் கதைத்து, அவர்களின் தீர்மானத்தின் அடிப்படையில் தான், புனர்வாழ்வு கோரப்பட்டது. தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு தயார் என, 99 பேர் கையொப்பமிட்டு கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். அப்போது நான், இது சட்டவிரோதமான செயற்பாடு என்று கூறியது மட்டுமல்லாது, அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளேன். தற்போது, பலருடன் கலந்துரையாடி, மீண்டும் புனர்வாழ்வுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்” என்று, சுமந்திரன் எம்.பி, மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/184093/-க-ட-டம-ப-ப-இடமள-ய-த-

நான் துரோகியெனில் என்னைச் சுட்டுக்கொல்லுங்கள்!

நான் துரோகியெனில் என்னைச் சுட்டுக்கொல்லுங்கள்!

நான் துரோகியெனில் என்னைச் சுட்டுக்கொல்லுங்கள். அமுதலிங்கம் மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோரை துரோகிகள் எனக் கூறி சுட்டுக்கொன்றுள்ளீர்கள். அப்படியெனில் தற்போது என்னையும் துரோகியென்றே அழைக்கிறீர்கள் ஆகையால் என்னையும் சுட்டுக்கொன்றுவிட்டு இறுதியில் என்ன செய்யப்போகின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://thuliyam.com/?p=44948

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.