Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

Featured Replies

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு
 
 
ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன் நடத்துவதா, இல்லையா என்ற முடிவை எதிர்வ ரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி மணிலால் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
 
ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேர் மீதான   வழக்கு விசாரணைகளை அறங்கூறுநர் சபை முன் நடத்துமாறு கடந்த மாதம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்த னர்.
 
இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இவர்களில் கருணா அணியை சேர்ந்த மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணி த்து வருகின்றனர்.
 
இவர்கள் மூன்று பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்ட னைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறங்கூறுநர் சபையை கோர முடியாது.
 
எனினும் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அறங்கூறுநர் சபையை கோர முடியும்.
 
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட தரப்பினர், அறங்கூறுநர் சபை முன் விசாரணை நடத்த அனு மதிக்க கூடாது என்று கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

http://onlineuthayan.com/news/19205

1 hour ago, நவீனன் said:

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?

அறங்கூறுனர் சபை

இது என்ன - யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

Jury ???

  • தொடங்கியவர்
10 minutes ago, ஜீவன் சிவா said:

அறங்கூறுனர் சபை

இது என்ன - யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ.

ஜீரி சபை

4 hours ago, நவீனன் said:

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

கொலைகாரர்களை வழமை போலவே தப்பவிடுவதா? இல்லையா? என்று 27ம் திகதி முடிவு செய்யப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

அறங்கூறுனர் சபை

இது என்ன - யாரவது தெரிந்தால் சொல்லுங்கோ.

இணக்க சபை என்று ஒன்று ஒரு காலத்தில் இருந்தது தெரியுமா, ஜீவன்?

அதுவாக இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21.10.2016 at 0:06 AM, புங்கையூரன் said:

இணக்க சபை என்று ஒன்று ஒரு காலத்தில் இருந்தது தெரியுமா, ஜீவன்?

அதுவாக இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்!

இணக்க சபை  எண்டால்..... 
தாலி கட்டிட்டு ஓடினவனுக்கும்....
வரம்பு பிரச்சனைக்கும்...
கள்ள மாங்காய் புடுங்கினவனுக்கும்...
கதியால் பிரச்சனைக்கும்...
பனங்காய் பிரச்சனைக்கும்...
மற்றவன் காணியிலை மாடு புல்லு மேய்ஞ்சதுக்கும்...
வாற வழக்குக்கு தீர்ப்பு சொல்லுற ஈழத்து ஐ.நா சபையெல்லோ எங்கடை இணக்க சபை ?!  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.