Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ்

Featured Replies

'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ்

"திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை முற்றாக அழித்துவிடுவதன் மூலம் 20 வருட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் நம்புகின்றது.

சிறிலங்காவின் அரச தலைவரும் அவரின் படையினரும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடுகின்றார்கள். அதன் மூலம் 1983 ஆம் ஆண்டிலிருந்து 67,000 பொதுமக்களும் கடந்த ஆண்டு 4,000 மக்களும் கொல்லப்பட்ட கொடூரமான போருக்குள் அரசு ஆழமாக இறங்கப் போகிறது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இது ஒரு சக்கரம் அவர்கள் (அரசு) நினைக்கலாம் தாம் வெற்றியடைந்து விடலாம் என்று. அவர்கள் ஏதோ ஒன்றை முயற்சித்து பார்க்கப் போகின்றார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் போர் தொடரப் போகிறது என்றே, ஏனெனில் இரு தரப்புக்கும் அதனை நிறுத்தும் எண்ணம் கிடையாது. மறுபக்கம் பார்த்தால் அரசும் அதன் சிந்தனைகளும் மேலும் போரை நோக்கியே செல்கின்றன. அதற்கான காரணம் தாங்கள் வெற்றியடைந்து கொண்டு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே தாங்கள் எங்கும் தாக்குதலை நடத்தலாம் என அரசு எண்ணுகின்றது. இதனை நிறுத்த விடுதலைப் புலிகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும்" என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பகுதி காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி அழிப்பதிலும், புதிதாக கைப்பற்றப்பட்ட கிழக்கின் கரையோரப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்துவதிலும் அரச படையினர் காட்டிவரும் உற்சாகம் அவர்களின் ஆதிக்கம் தற்போது மேலோங்கி உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் பிறிதொரு சமருக்காக விடுதலைப் புலிகள் தற்போது பின்வாங்கியுள்ளார்கள், அவர்களின் சமரிடும் பலம் தக்கவைக்கப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இராணுவம் விடுதலைப் புலிகளினது இராணுவத் தளங்களை தேடி அழிக்கப் போவதாகவும் அதில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகாளால் நிர்வகிக்கப்படும் வடபகுதியும் அடங்கும்" எனவும் அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார இதழின் ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவிக்கையில்:

"இது ஒரு தெளிவான அறிவித்தல். அதாவது அரசு, விடுதலைப் புலிகள் மீதான போரை முழுமையாக மேற்கொள்ளப் போகின்றது. விடுதலைப் புலிகளால் அரச படைகள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் உண்டு.

எனவே எதிர்வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் மிகப்பொரும் சமர்கள் ஆரம்பமாகலாம். விடுதலைப் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் அல்லது அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலே அமைதிப் பேச்சுக்கள் சாத்தியமாகலாம்.

விடுதலைப் புலிகளின் பலமான கடற்புலிகளின் பலம் குறைந்து விடவில்லை அவர்கள் தற்போதும் தமது போரிடும் திறனை தக்கவைத்துள்ளனர். அதாவது அவர்கள் முழு அளவிலான மோதல்களுக்கு முகம் கொடுத்து தமது படைகளை இழக்காது பின்வாங்கியுள்ளனர். எனவே தற்போதும் பலமான எதிரியாகவே அவர்கள் விளங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் வாகரையை கைப்பற்றியது அரசபடைகள் போரில் மேலோங்கி உள்ளதையே காட்டுகின்றது. ஆனால் அதன் மூலம் புலிகளின் இராணுவ வலிமை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமில்லை.

கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக விடுதலைப் புலிகளை வெளியேற்றுவது இராணுவத்தின் மிகப்பெரிய நடவடிக்கை. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போது விடுதலைப் புலிகள் புதிய களமுனைகளை திறக்கமாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

போரை நிறுத்தும்படியும், படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் அனைத்துலக நாடுகளினாலும் அமைப்புக்களினாலும் விடுக்கப்படும் அறிவித்தல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது.

கடந்த காலங்களிலும் மற்றும் அண்மையிலும் இடம்பெற்று வரும் மோதல்களால் இடம்பொயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு தரமான தங்கும் இடங்கள் கூட அற்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே மோதல்கள் உக்கிரமடைந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என பொதுமக்களும், அவதானிகளும் கவலை தெரிவித்தள்ளனர்.

நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தகவல் தெரிவிக்கையில்:

"கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதுலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது மோதல்கள் எல்லா இடங்களுக்கும் பரவுவதற்கே வழிவகுக்கும். இரு தரப்பினரும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் இது போர்நிறுத்த உடன்பாட்டின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30631

ஆனால் பிறிதொரு சமருக்காக விடுதலைப் புலிகள் தற்போது பின்வாங்கியுள்ளார்கள், அவர்களின் சமரிடும் பலம் தக்கவைக்கப்பட்டுள்ளது

இந்த உண்மைய ஏன் யாழ்கள புகழ் அக்பால் அதாஸிகள் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை.

Edited by mathuka

  • தொடங்கியவர்

இக்பால்அத்தாஸ் புரிந்துகொண்டால் இலங்கைஅரசுக்குப்

புரியாமல் போகுமா? அதைப்புரிந்து கொள்ளுதல் அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

அரூஸ் தமிழ்நாதத்தில் புதுக்கட்டுரை எழுதியிருக்கின்றார்.. வாசித்து புத்துணர்வு பெறவும்..

http://www.tamilnaatham.com/articles/2007/jan/arush/27.htm

  • தொடங்கியவர்

அருஸ் அவர்களின் கட்டுரையும் பார்த்தேன். நமக்குத்தேவை

யாழ் இணைய நண்பர்களின் கருத்தே. அத்தாஸின் கருத்து

விடுதலைப் புலிகள் புதிய களங்களைத் திறப்பார்களென்பதே

அருஸின் கூற்றும் அதுதான். அது நடைபெற வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு. நாம் மட்டுமல்ல

உலகநாடுகளும் கூட இதைத்தான் எதிர்பார்க்கின்றன போல்

தெரிகிறது. அப்படியிருக்க இலங்கை அரசுக்கு ஏன் புரியவில்லை.

எனவே கிழக்கின் மீதான புலிகளின் பெரும் படை நடவடிக்கைகளுக்கு வடக்குடன் இணைந்த உறுதியான பின்தளம் தேவை என்பது உணரப்பட்ட கள யதார்த்தம். அதை உருவாக்க முடியாது என்றும் வாதிட முடியாது. புலியணிகள் மணலாற்றின் இராணுவ வேலியை உடைத்து திருமலையை ஊடறுக்கும் போது இது சாத்தியமாகும். ஆனால் இந்த படை நடவடிக்கைக்கு தேவையான மனித மற்றும் ஆயுத வலுக்கள் வடக்கில் இருந்தே நகர்த்தப்படும்.

அதற்கு முன்னேற்பாடாக வடக்கில் உள்ள சிங்கள இராணுவ வலு முற்றாக அழிக்கப்பட வேண்டும். வடக்கில் சிங்கள இராணுவ ஆதிக்கம் முடிவுக்கு வரும்போது புலிகளின் பெருமளவான பலம் எங்கு நோக்கி திருப்பப்படும் என உங்களுக்கு புரியும். மொத்தத்தில் வடக்கில் இருந்து புலியணிகள் கிழக்கு நோக்கி நகர்த்தப்படும் போது கிழக்கில் உள்ள படையணிகளுக்கு மரபுவழிச் சமராட அதிக சிரமங்கள் இருக்கப்போவதில்லை. அதுவரை வடக்கில் மரபுவழிச் சமர்களும் கிழக்கில் கெரில்லா யுத்த மூலோபாய தந்திரத்துடன் கூடிய பெரும் சமர்களும் தான் நடைபெறும்.

இதுவே மிகச் சரியான கள யதார்த்தம்.

வாகரை மீதான அரசின் அவசரமான ஆக்கிரமிப்பானது முழுக்க முழுக்க குறுகிய கால அரசியல் நோக்கம் கொண்டது. அதாவது ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ், கெல உறுமய போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிக்க முற்படும் போது அரசு ஒரு இராணுவ வெற்றியை அடைந்துவிட்டது போன்றதொரு தோற்றப்பட்டை ஏற்படுத்தினால் அரசுக்கான ஆதரவுகள் அதிகரிக்கலாம். இதை வேறுவிதமாகச் சொல்வதானால் 16 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் 20 ஆக அதிகரிக்காலம். இதுதான் மகிந்தவின் சிறுபிள்ளைக் கணக்கு.

அவர்களின் இலக்குகளும் திட்டங்களும் தெளிவானவை, மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள். எனவே அரசு விரிக்கும் வலைகளில் அவர்களின் திட்டங்கள் சிக்கப் போவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தமிழீழம் தனது இறுதிப்போருக்கு தயாராகின்றது அதற்கு முன்னால் வாகரை வெறும் சலசலப்புத்தான்.
வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

மேலே சொன்னது யாழ்க்களத்தில் முன்னர் யாரோ எழுதியது, அருஸ் யாழ்களம் வாசிக்கிறார் போல.இந்தக் கட்டுரையில் புலிகள் பற்றிய வீணான கற்பனைகள் இல்லை என்பதையும் கவனிக்கவும்.

அருஸ் அவர்களின் கட்டுரையும் பார்த்தேன். நமக்குத்தேவை

யாழ் இணைய நண்பர்களின் கருத்தே. அத்தாஸின் கருத்து

விடுதலைப் புலிகள் புதிய களங்களைத் திறப்பார்களென்பதே

அருஸின் கூற்றும் அதுதான். அது நடைபெற வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு. நாம் மட்டுமல்ல

உலகநாடுகளும் கூட இதைத்தான் எதிர்பார்க்கின்றன போல்

தெரிகிறது. அப்படியிருக்க இலங்கை அரசுக்கு ஏன் புரியவில்லை.

வாகரை மீதான அரசின் அவசரமான ஆக்கிரமிப்பானது முழுக்க முழுக்க குறுகிய கால அரசியல் நோக்கம் கொண்டது. அதாவது ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ், கெல உறுமய போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிக்க முற்படும் போது அரசு ஒரு இராணுவ வெற்றியை அடைந்துவிட்டது போன்றதொரு தோற்றப்பட்டை ஏற்படுத்தினால் அரசுக்கான ஆதரவுகள் அதிகரிக்கலாம். இதை வேறுவிதமாகச் சொல்வதானால் 16 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் 20 ஆக அதிகரிக்காலம். இதுதான் மகிந்தவின் சிறுபிள்ளைக் கணக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கார்டியனில் நல்ல கட்டுரைகள் வந்துள்ளன. தமிழர்களுக்கு முன்னுள்ள தெரிவுகள் இரண்டுதான்.

1. சிங்கள இனவாத அரசின் (சர்வதேச வல்லமை நாடுகளின் ஆசிர்வாதத்தோடு நடைபெறும்) இராணுவ அடக்குமுறைகளுக்கும், அவலங்களுக்கும் முகம் கொடுத்து தமிழீழத்தை யதார்த்தமாக்குவது.

2. அடிபணிந்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பெளத்த நாடாக மாற உதவுவது.

முதலாவது தெரிவு எப்போதோ எடுத்தாயிற்று. பிறழாமல் இருக்க உதவுவதுதான் எல்லோருடைய கடைமை..

என் கிட்டுவின் தலைமையில் யாழ் பொலீஸ் உட்பட....மாங்கு....வரையான அனுபவங்களின் அடிப்படையில் உற்று நோக்கும் போது. 100 என்ன 10000 என்ன சரியான வழிகாட்டுதல்ல்கள் இருந்தால் புலிகளால் எதுவுமே சாதிக்கமுடியும். புலிகள் சத்தம் இல்லை என்றால் எதிரணியை பரவ விட்டு குர்த்துஅறுத்து பாயபோகிறார்கள். அவர்களின் ப வடிவம் என்னும் பரினாமம் பெற்று 3 ப களாக உருமாறினால்...ஆமி போப்கோனாக மாறுவது தவிர்க்கமுடியாது. ஒரு நாடுமே நிப்பாட்டு என்று சொல்லாமல் நகரும் இந்த படை நடவடிக்கை என் அனுபவத்தின் படி மிக மோசமானதாக இருக்கப்போகிறது.

புலிகளின் பலம் 30 வருடங்களாக மீண்டும் மீண்டும் எத்தனை தடவை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் அது நிரூபிக்கப்படும். சூரியன் உதிக்கும். கிழக்கு வெளுக்கும்.

May not understand, what you believe

but believe you may understand.

  • தொடங்கியவர்

தகவல்களுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.