Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு

Featured Replies

கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு

 

 

unnamed.jpg

கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு  நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.

unnamed__4_.jpg

இச்சம்பவத்தின் போது 5 பவுண்  தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த  ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

unnamed__3_.jpg

மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமாா் 10 ஆயிரம் வரை பணம் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும் ஆலய நிா்வாகம் சந்தேகிக்கிறது.

unnamed__2_.jpg

இது தொடா்பில் கிளிநொச்சி பொலிஸாா் சம்பவ இடதிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

unnamed__1_.jpg

http://www.virakesari.lk/article/13184

  • கருத்துக்கள உறவுகள்

பக்த கோடிகளுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம்! கடவுளுக்கே சோதனை வந்தால்..... !1:(:(

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

பக்த கோடிகளுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம்! கடவுளுக்கே சோதனை வந்தால்..... !1:(:(

மனிதர்களுக்கு வீடில்லை

சாப்பிட வழீயில்லை

கடவுளுக்கு எல்லாம் இருந்தால்......??

இது எதிர்பார்க்கக்கூடியதே...

தொடர வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மனிதர்களுக்கு வீடில்லை

சாப்பிட வழீயில்லை

கடவுளுக்கு எல்லாம் இருந்தால்......??

இது எதிர்பார்க்கக்கூடியதே...

தொடர வாய்ப்புள்ளது.

GetAttachmentThumbnail?id=AQMkADAwATE0YjIwLWIyZjMtNDFkMi0wMAItMDAKAEYAAAPMPSJ5GOsETbNCujrA3wX1BwB2WGj8terNQZ1ons5CRdkgAAACAQwAAAB2WGj8terNQZ1ons5CRdkgAAAA9AZMTgAAAAESABAA%2FLbOX9j%2F9U6HulJiySVowQ%3D%3D&thumbnailType=2&X-OWA-CANARY=dEl_tx1wZEmPBxQrxmKXuVDSOW2ZBdQYmPMCU1xfVZHG0QqAPiOLxbwI_T-1_HxKMGlVmTld2S0.&token=6c116a78-a81c-44b5-a2f5-fbfff5a6913e&owa=outlook.live.com&isc=1

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்திடம் திருடி .....
அம்மனுக்கு போடுவதும்  திருட்டுதான்.

இந்தசமய நெறியின்படி இது மஹா பாவம்.
சமூகத்தில் இருந்து உனக்கு தேவை இல்லாததில் மனம் கொள்வதே 
(ஆசை கொள்வதே) மா பாவம்.

வெறும் கையுடன் வந்த உனது கையில் எப்படி சங்கிலி வந்து ?

இன்று உன்னுடையது ....
நாளை இன்னொருவருடையது .


இதை திருட்டு என்று அநியாயத்திட்கு பழி சுமத்துகிறார்கள். 

நீங்கள் ஆற்றிய புண்ணியங்களை யாரவது திருடினால் மட்டுமே அது திருட்டு 
அப்போது அதை இறைவனிடம் முறையிட உங்களுக்கு இடம் உண்டு.
எவ்வளவுதான் முயன்றாலும் இன்னொருவரால் திருடாத முறையில்தான் 
உங்கள் புண்ணியங்கள் பாதுகாப்பாக இருக்கிறது 
அதுவே கிருஷ்ண பரமாத்மாவின் வடிவமைப்பு. 

கிளிநொச்சி  (சைவ)பக்தர்களுக்கு அம்மன் கிடைத்தே ஒரு  மகா திருட்டு.
நீங்கள் அம்மனையே திருடும்போது ..........
ஒருவன் நகையை திருட கூடாதா ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில்  திருட்டுக்கள் இன்று நேற்றல்ல....

அன்று தொடக்கமே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு சில அனாவசிய செயல்களால் சைவசமயம் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாக இருந்தாலும் அதன் கொள்கைகளும் நெறி முறைகளும் வாழ்க்கைக்கு மிக உதவித்தன்மையாகவே இருக்கின்றது.

ஒரு சிலர் அல்லது பலர் தங்கள் சுய லாபத்திற்காக மதத்தை துர்ஷ்பிரயோகம் செய்வதை வைத்து சைவசமயத்தையே சமுதாய கேடாக நினைப்பது ஒரு அறியான்மையின் வெளிப்பாடே என தோன்றுகின்றது.

நாட்டில் இதர மதங்கள் தான் தோன்றித்தனமாக மூலைமுடுக்கெல்லாம் முளைத்து வெளிவரும் காலத்தில்........


ஒரு கேவலத்தை மறைக்க வேறொரு அவலத்திற்கு தூபமிடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜான் வயிறு ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசி வந்திட பத்தும் பறந்திடும் என்பார்கள்.
ஆனால்..இன்று.
மதத்திற்காகவும் அதன் கொள்கைக்காகவும் மறைமுகமாக மூன்றாம் உலக யுத்தமே நடக்கின்றது.

ரஷ்ய அமெரிக்க ஐரோப்பிய மத வரலாறுகள் தெரிந்தவர்களுக்கு உள்ள உண்மையான விடயங்கள் தெரியும்.

நாமள் முருகன் கோவில் உண்டியலிலும் ஐயரின் புக்கை மோதகத்திலும் கண்ணும் கருத்துமாயிருப்பம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.