Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?- பதற்றம் தணிக்க ரிசர்வ் வங்கியின் 20 வழிகாட்டுதல்கள்

Featured Replies

கோப்புப் படம்: நாகர கோபால்.
கோப்புப் படம்: நாகர கோபால்.

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழைய நோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாக எவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான் ஏன் எனது அனைத்து பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெற முடியாது?

இப்பொதைக்கு மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

4. எனக்கு ரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிற எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம்.

5. என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கான அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம் ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்ட கணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

7. பரிமாற்றத்திற்கு நான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்த ஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம். 

ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் கொண்டு செல்லவும்.

9. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்த ஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாள அட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக் நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம். 

11. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை.. ஆனால் என் நண்பர் அல்லது உறவினர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான் பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக் கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான் நேரில் செல்ல வேண்டுமா, அல்லது பிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாக செல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதிய அனுமதி கடிதம் அவசியம். அவரது அடையாள அட்டையும் அவசியம். 

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்க முடியுமா?

18 நவம்பர் 2016 வரை நீங்கள் ரூ.2,000 வரை நாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன் பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன் வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும். 

14. காசோலை மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம் 24ம் தேதி வரை வித்ட்ராயல் ஸ்லிப் அல்லது காசோலை மூலம் ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம் ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும் (இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத் தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும். 

15. ஏ.டி.எம். மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏ.டி.எம் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 

16.நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?

என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான் தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல் கடிதம் அளித்து அவரது அடையாள அட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். 

18. நான் ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையை என் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப் பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்து ரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டி நோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். 

20. செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் யாவை?

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான் கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ள அடையாள அட்டை ஆகியவை.

http://tamil.thehindu.com/india/பழைய-ரூ500-ரூ1000-நோட்டுகளை-மாற்றுவது-எப்படி-பதற்றம்-தணிக்க-ரிசர்வ்-வங்கியின்-20-வழிகாட்டுதல்கள்/article9324989.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்சம் வச்சிருக்கிறன் இங்க. அதை எங்க கொண்டே மாத்திறது ???

 

  • தொடங்கியவர்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கொஞ்சம் வச்சிருக்கிறன் இங்க. அதை எங்க கொண்டே மாத்திறது ???

 

லண்டனில் உள்ள வங்கிகளில் நிச்சயம் மாற்றலாம் என நினைக்கிறேன், கொடுத்து பவுண்சாக மாற்றிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கொஞ்சம் வச்சிருக்கிறன் இங்க. அதை எங்க கொண்டே மாத்திறது ???

Cw0Zs60UsAAhdOm.jpg

இப்படி ஒரு பாக்கில் போட்டு வீட்டு வாசலில் வைக்கவும்.........முனிசிப்பல் வந்து கிளியர் பண்ணும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Athavan CH said:

லண்டனில் உள்ள வங்கிகளில் நிச்சயம் மாற்றலாம் என நினைக்கிறேன், கொடுத்து பவுண்சாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி ஆதவன். இங்கு மாற்றலாம் என்று எனக்குத் தெரியாமற் போய்விட்டது.

 

20 hours ago, குமாரசாமி said:

Cw0Zs60UsAAhdOm.jpg

இப்படி ஒரு பாக்கில் போட்டு வீட்டு வாசலில் வைக்கவும்.........முனிசிப்பல் வந்து கிளியர் பண்ணும்.:grin:

Image result for angry emotions

  • கருத்துக்கள உறவுகள்

என் எம் பெரகரா நிதியமைச்சராக இருந்த போது இப்படி ஒருக்கா விளையாட்டு விட்டு பல பேரைக் கஸ்டப்படுத்தியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளில் அல்லது ஈழத்தில் எப்படி என்று நமக்கு தெரியாது ..! சாதாரண நாட்களிலெயே வங்கி ஊழியர்கள் எந்த வேலை என்று வந்தாலும் வள் வள் என்று குரைக்கிறார்கள்..! இன்று நான் பார்த்த நேரடி அனுபவம் எப்பா சாமி !!

வங்கி அலுவலர் : ஏண்டா காசை தூக்கி கொண்டு நேரா வந்துடூறீங்க .. நாங்க பாக்கற கூடுதல் வேலைக்கு மோடியா காசு கொடுக்க போறாரு ..?

டிஸ்கி :


டிசம்பர் 30 வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாதாம் .. ஏற்னவே அவுங்களுக்கு பிரசர்.. இனி இதான் நடக்கும்..


கவுண்டமணி : டேய் ஓடாத நில்லு..


செந்தில் : ம்கும்.. அண்ணே கிட்ட வராதிங்க கடித்து போடுவன்

டிஸ்கிக்கு டிஸ்கி :

அதை விட பியூட்டி !! இன்று சிக் மங்களூரில் புதிய 2000 ரூபாய் கள்ளபணம் பிடிபட்டுள்ளதாம் அரெ பகவான் ஜி!! இது என்ன மோடிஜிக்கு வந்த சோதனை !!

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, nunavilan said:

 

ஜேர்மனியில் பெரிய பணக்காரர்களுக்கு அதியுச்ச வரி வசூலிப்பதற்கு ஒரு கட்சி யோசித்துக்கொண்டிருக்கின்றதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சி குத்தடி சைலக்கா.. ரங்கராஜி பாண்டே ஆச்சாரியா .. நீங்க பதவிசுஆக கேள்வி கேட்கிறீர்கள் .. நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த சி.பா. வின் கொள்கைளின் செங்கல்லை ஒவ்வொன்றாக தந்தி ரீவி மூலமாக பிடுக்குறான் ...

நன்றி தந்தி ரீவி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

பல நாடுகளில் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருக்கும் நிலையிலும் கூட, மிக மிக மோசமான முன்னேற்பாடுகளுடன், பல குறைபாடுகளுடன், சரியான திட்டமிடலின்றி  அரைவேக்காட்டுத் தனமான அதிரடி நடவடிக்கையில் இறங்கியதன் மூலம், ஹிந்திய உயர் அதிகாரிகளும் ஹிந்திய மத்திய அரசும் அறிவற்ற மூடர்களின் கைகளில் தான் இன்னமும் உள்ளது என்பது மிகவும் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது.

உதாரணமாக ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா 1980 களில் மிகவும் சிறப்பான முறையில் புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தி கறுப்புப் பணத்தை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது.

முன்னர் இலங்கை இனப்பிரச்சினையிலும் மிகவும் அரைவேக்காட்டுத் தனமான 13வது திருத்தச் சட்டத்தையும் மிகவும் அரைவேக்காட்டுத் தனமான இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் தயாரித்ததத்தன் மூலம் ஹிந்திய உயர் அதிகாரிகளும் ஹிந்திய மத்திய அரசும் அறிவற்ற மூடர்களின் கைகளில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

15078590_774622492691238_2191211667836362048_n.jpg?oh=2292194071e536aff901fc54187d939e&oe=58D3674F

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.