Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை! - சுவாமிநாதன்

Featured Replies

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகளால் இந்துமதத்துக்கு சிக்கல்கள் ஏற்படாவிட்டால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் அனைத்து மத மக்களினதும் வழிபாட்டுத் தலங்கள் இருக்கையில் வடக்கில் புத்த விகாரைகள் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு காங்கேசன்துறைப்ப  பிரதேசத்திற்குட்பட்ட குமாரகோவில் ஆலய வளாகத்தில் விகாரை கட்டப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் புத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 97ஆயிரம் பேர் தமக்கு வீடு அமைத்துக் கொடுக்குமாறு கோரியிருந்தபோதிலும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கட்டை விதித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

அரசியல் சுயலாபங்களுக்காகவும் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும், அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தடுத்து வருவதாகவும் அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

http://thuliyam.com/?p=49035

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ், இந்து சமயத்தை சார்ந்த அமைச்சர் பேசும் பேச்சா இது.
விபரம் பத்தாவிடில்... இப்படியானவர்கள்  வாயை மூடிக் கொண்டு இருப்பதே.... நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தென்கட்சி சுவாமி நாதன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஓணான் தன் பங்குக்கு தொடங்கி விட்டுது. பதவிக்காக எல்லாத்தையும் இழந்து பேசுங்கள். சுய மரியாதை இல்லாததுகளைத் தான் சிங்களவன் பதவி கொடுத்து எங்களை ஏய்க்கிறான். மேய்க்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை புத்தரோடு இல்லை!

அவரைப் பிரதிஸ்டை செய்யும் காடைகளைப் பற்றித்தான் என்பதை இவர் என்றைக்குப் புரிந்து கொள்ளப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒரு தமிழ், இந்து சமயத்தை சார்ந்த அமைச்சர் பேசும் பேச்சா இது.
விபரம் பத்தாவிடில்... இப்படியானவர்கள்  வாயை மூடிக் கொண்டு இருப்பதே.... நல்லது.

இதுக்கு, இப்படி கதைப்பதற்குத்தான் பதவியும், பணமும் குடுத்து வைத்திருக்கிறான் சிங்களவன். உப்பிடி எத்தினை கோடரிக்காம்புகள் முளைக்கப்போகுதுகள் இருந்து பாருங்கோ. இதுக்கு சைவமும், தமிழும் ஒரு கேடே. பணம் எண்டால் வாயைப் பிளந்து கொண்டு  வால் பிடிக்குதுகள். இதுவும் ஒருவகை திருட்டுத்தான். சுமந்திரனுக்கு அடுத்தது.

9 hours ago, புங்கையூரன் said:

பிரச்சனை புத்தரோடு இல்லை!

அவரைப் பிரதிஸ்டை செய்யும் காடைகளைப் பற்றித்தான் என்பதை இவர் என்றைக்குப் புரிந்து கொள்ளப்போகிறார்?

முன்பு உரிமைககாக தமது உயிர்களை தியாகம் செய்து தோல்வியடைந்த தமிழ் மககள் தம்மால் தெரிவு செய்யபபட்ட அரசியல்வாதிகளின் நல்வாழ்விற்காக தமது சுயமரியாதை, உரிமைகளை தியாகம் செய்தால் எனன?  அந்த தியாகத்திற்காக அவர்களாக பார்தது கொடுப்பதை வாங்கி  வாழலாமே. 

Edited by tulpen

On 22/11/2016 at 10:20 PM, Athavan CH said:

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகளால் இந்துமதத்துக்கு சிக்கல்கள் ஏற்படாவிட்டால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் அனைத்து மத மக்களினதும் வழிபாட்டுத் தலங்கள் இருக்கையில் வடக்கில் புத்த விகாரைகள் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் நூலகத்தை எரித்த, இனக்கலவரங்களை அரங்கேற்றிய, தமிழர் சொத்துக்களைக் கொள்ளையடித்த, தமிழினப் படுகொலைகளை செய்துவரும்  சிங்களப் படுகொலைகாரக் கும்பல்களின் நீண்டகால ஏஜென்ட் சுவாமிநாதன் போன்ற எட்டப்பர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!

அப்படி இல்லை அலட்டத் தான் போறம் என்றால் அலட்டி போட்டு இருங்கோ.

இப்படிக்கு
சுவாமிநாதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.