Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த சனிக்கிழமை மீனவர்களின் படகுகள் மீதே கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் தாக்குதல்! கடற்றொழில் சங்கப் பிரதிநிதி தகவல்.

Featured Replies

கடந்த சனிக்கிழமை மீனவர்களின் படகுகள் மீதே கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் தாக்குதல்! கடற்றொழில் சங்கப் பிரதிநிதி தகவல்.

கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் படகுகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் என நீர்கொழும்பு மீனவர் சங்கப் பிரதிநிதியான ரொட்னி பெர்னாண்டோ என்பவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் நுழைந்த புலிகளின் மூன்று படகுகளில் ஒன்றை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்தனர் என்றும் அவ்வாறு படகுகளில் வந்தோரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இதனை மறுத்துள்ள மீனவர் சங்கப் பிரதிநிதி ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமது மீனவர்களின் படகுகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் எனவும், அப்போது தாக்குதலிலிருந்து தப்புவதற்காக கடலில் குதித்த மூன்று மீனவர்களையும் பின்னர் கடற்படையினர் கைதுசெய்தனர் என்றும் அவர் கூறினார்.

கடற்படையினரின் தாக்குதலில் மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் மற்றைய இரு படகுகளை கடற்படையினர் எடுத்துச் சென்றனர் என்றும் அவர் மேலும் சொன்னார்.

-Tamilwin-

Union: Navy destroyed fishing boats, not Tiger craft

[TamilNet, Wednesday, 31 January 2007, 11:36 GMT]

On Saturday Sri Lanka’s military said it had foiled a Tamil Tiger attack on the Colombo port and that three Sea Tiger boats had been destroyed. The navy said nine people had been arrested in connection with the attack. However, the All Ceylon Fisheries Union (ACFU) Tuesday contradicted the military and said the Navy had fired on fishing boats and arrested fishermen. An alleged black out on news had censored details of an attack said to have destroyed four Sri Lankan vessels in Colombo Harbour last Saturday. A flotilla of five attack boats and four explosions were registered by eyewitnesses.

On Saturday the Sri Lankan Defence Minsitry said naval craft blew up one boat Saturday after the three were spotted near a restricted zone, before chasing and sinking the other two.

"The navy successfully foiled the (LTTE) attempt," the ministry said.

Six people, including three who jumped out of one of the suspected LTTE craft, were arrested, military officials were quoted as saying.

A foreign container vessel, Pelaponesian Pride, flying under a Panamanian flag, was damaged by the explosion of the second rebel boat hit by the navy, Navy Rear Admiral B.A.G.G. Peiris told reporters, adding: "a container burst open and came off its original position as a result of the shockwaves."

However the All Ceylon Fisheries Union (ACFU) contradicted the defence ministry’s version of events, saying naval craft fired on Sinhala fishing craft and arrested innocent fishermen.

President of the Gampaha branch of the ACFU, Aruna Roshantha, spoke to the BBC Sinhala service Tuesday.

Fishermen had witnessed fishing boats being attacked by the Navy, he said.

"The boats caught up fire and blew up. Nine crew members from the blown up boats were detained. Three are still in custody", he said.

Roshantha said one of the boats destroyed by the Navy was bearing no. OFRPA 1666MBO.

Twenty one fishermen are among those arrested in connection with the alleged attack on the Colombo Port, he said.

"Our boats were fishing about 20 miles from Colombo in the deep sea when the Navy Dvora gunships sorrounded them", Roshantha said.

Meanwhile the Sunday Times said that the alleged attack came just half an hour before the Navy, with the support of elements of the Army and Police, were to carry out a rehearsal of the Colombo Harbour Action Plan.

Police stations and port authorities were among those informed that the rehearsal was scheduled to begin at 6 am, the paper said.

The LTTE has not commented on the attack.

செய்திக்கு நன்றி.

இதைத்தான் சொல்லுறது போல மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்யெண்டு.

உண்மைகள் சற்றுத் தாமதமாகத்தான் வெளிவரும். இன்னுமிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சீ.. இருக்காது. இக்பால் அத்தாஸ் பக்கத்தில் இருந்து பார்த்து போனவாரம் பத்தி எழுதினவர். அது ஜேன்ஸ் பாதுகாப்பு மையத்திற்கும் போயிருக்கும்..

மீனவப் படகுகளை தாட்டவருக்கு பதிவு உயர்வும் வெகுமதியும் அளிக்கப்பட்டது என்று வேறை எழுதினவர். வாழ்க Jane's Defence.

அது சரி தாக்கப்பட்டது மீனக படகு அப்ப புலிகள் அப்பாஉதிக்கே வரவில்லை அப்ப என்னெண்டு எங்கட ஊடகங்கள் தாக்குதல் இழப்பு மூடி மறைக்கப்பட்டதாகவும் 4 கடற்கலங்கள் மூழ்க்டிக்கப்பட்டதாகவும் அறிவித்தனவே அப்ப என்ன அவ்நடவடிக்கையை எங்கட தமிழ் ஊடகங்கள் செய்த கூட்டு கடல் நடவடிக்கையா

வாழ்க எம் ஊடகங்கள் வளர்க இன்னும்

ஆரம்பத்தில் கூறியிருந்தேன்.காலியில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஜனாதிபதி பயங்கரவாதத்தைப் பற்றிப்பேசுவதற்காக அப்பாவிமீனவர்கள் மீது தாக்குதலா?பலே கில்லாடியப்பா நீ! நீயும் உன் அரசும், புத்தர் சொன்னாரா யாரைக்கேட்பது.இப்படித்தான் கொஞ்ச வருசத்திற்க்கு முன்பு பழைய பாராழுமன்றத்தில் இருந்து சிறீமாவோ அம்மையாரை தூக்கிவந்து காலிமுகத்திடலில் வைத்து துகிலுரிந்தவர்கள்.யார் தெரியுமோ? அதே சிங்களவர்தான்.அப்போ அதை தடுத்து அவவை மானமுள்ள மங்கையாக வீட்டுக்கு கொண்டுபோய் வ்ட்டது யார் தெரியுமோ? அப்போதிருந்த தமிழ் எம்பீக்கள் தான்.அப்ப அந்த அம்மா சொன்னவவாம் இதை வாழ்க்கையில் மறக்கமாட்டேன் என்று... ஆனால் அந்த பரம்பரையே மறந்துவிட்டது மறத்தமிழன் எதையுமே மறக்கமாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தாக்கப்பட்டது மீனவர் படகே -? மீனவர் சங்கம்

கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு அண்மைய கடலில் தாக்கியழிக்கப்பட்ட படகு தென்னிலங்கை மீனவர்களுடையது என அகிலஇலங்கை மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் கொழும்புத்துறைமுகத்தின் மீது நடத்தமுயன்ற பாரியதாக்குதலை தாம்முறியடித்து மூன்று புலிகளின் படகுகளை தாங்கள் தாக்கியழித்ததாக சிறீலங்காகடற்படை பரபரப்பான செய்தியொன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.

pathvu.com

அது சரி தாக்கப்பட்டது மீனக படகு அப்ப புலிகள் அப்பாஉதிக்கே வரவில்லை அப்ப என்னெண்டு எங்கட ஊடகங்கள் தாக்குதல் இழப்பு மூடி மறைக்கப்பட்டதாகவும் 4 கடற்கலங்கள் மூழ்க்டிக்கப்பட்டதாகவும் அறிவித்தனவே அப்ப என்ன அவ்நடவடிக்கையை எங்கட தமிழ் ஊடகங்கள் செய்த கூட்டு கடல் நடவடிக்கையா

வாழ்க எம் ஊடகங்கள் வளர்க இன்னும்

<_<:lol::(

அது சரி தாக்கப்பட்டது மீனக படகு அப்ப புலிகள் அப்பாஉதிக்கே வரவில்லை அப்ப என்னெண்டு எங்கட ஊடகங்கள் தாக்குதல் இழப்பு மூடி மறைக்கப்பட்டதாகவும் 4 கடற்கலங்கள் மூழ்க்டிக்கப்பட்டதாகவும் அறிவித்தனவே அப்ப என்ன அவ்நடவடிக்கையை எங்கட தமிழ் ஊடகங்கள் செய்த கூட்டு கடல் நடவடிக்கையா

உண்மையைத் தானேயப்பா எழுதியிருக்கினம். தாக்குதல் இழப்பு மூடி மறைக்கபட்டதாக, அதாவது மீனவர்களுடைள படகு தாக்கப்டதை மூடி மறைச்சு தாங்கள் ஏதோ கண்ணில எண்ணெய் விட்டுக் காவல் காத்ததால தான் புலிகள் படகுகள் தாக்கப்பட்டதாகவும் புறுடா விட்டிருக்கினம். இதில ஏன் எங்கட ஊடகத் துறையை சாடுகிறீர்கள்?

ஈழத்திலிருந்து

ஜானா :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு

-குடாப்பாடு மீனவர் சங்கத் தலைவர் விபரிப்பு

கொழும்பு துறைமுகத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 20 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயமே கடற்படையினர் தமது மீன்பிடிப் படகினை தாக்கியழித்ததாக நீர்கொழும்பு, குடாப்பாடு மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மீனவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீர்கொழும்பு, குடாப்பாடு மீனவர் சங்கத் தலைவர் ரொட்னி பெர்னாண்டோ கூறுகையில்;

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அவர்களனைவருமே அப்பாவி மீனவர்கள். புலிகளிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மீனவர்கள் உதவி செய்ததாக கூறப்படுவதில் எத்தகைய உண்மையுமில்லை.

கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து 20 கடல் மைல்களுக்கு அப்பால் 3 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அங்கு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவாறு வந்த கடற்படையினர் படகிலிருந்த மூவரை கடலில் குதிக்குமாறு கூறிவிட்டு அப்படகை தாக்கியழித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியிலிருந்த மேலும் 2 படகுகளையும் கடலில் குதித்த 3 மீனவர்களையும் கடற்படையினர் அழைத்துக் கொண்டு துறைமுகம் நோக்கிச் சென்றுள்ளனர். அவ்விரண்டு படகுகளிலும் 6 மீனவர்கள் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, 9 மீனவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுவிட்டு தாக்கியழிக்கப்பட்ட படகிலிருந்த 3 பேரை மாத்திரம்

தொடர்ந்து தடுத்துவைத்துள்ளதுடன், ஏனைய 2 படகுகளிலிருந்தவர்களான 6 மீனவர்களையும் சம்பவம் நடைபெற்ற மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடுதலை செய்துள்ளனர்.

முதலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் ஆழ்கடலில் சம்பவம் நடைபெற்ற அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 2 படகுகளிலிருந்த மீனவர்கள் 6 பேரை நீர்கொழும்பு குடாப்பாட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

தற்போது மொத்தமாக 9 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகளான இவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்திடம் நாம் முன்வைக்கும் கோரிக்கையாகும்.

இது குறித்து ஜனாதிபதிக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம். உண்மையில் அம்மீனவர்கள் பாதுகாப்பு உயர் வலயத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கவில்லை. எனவே அவர்களை உடன் விடுதலை செய்யுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்விடயங்கள் குறித்து பிரதியமைச்சர் சரத் குணரட்ண, நீர்கொழும்பு மேயர் நிமல் லான்சா ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

போலியான செய்திகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் எம்மீது ஊடகங்கள் கூறாது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

-தினக்குரல்

2002 ஆம் ஆண்டே நோத்கொரியா வினை அடிப்படையாக கொண்டு நீர்மூழ்கிபோல தாயாரித்திருந்தா...அவனை மேல பார்க்க வைத்து கீழாழ தான் எனி எல்லா விளயாட்டோ யாருக்குத்தெரியும்? :rolleyes:

உண்மையைத் தானேயப்பா எழுதியிருக்கினம். தாக்குதல் இழப்பு மூடி மறைக்கபட்டதாக, அதாவது மீனவர்களுடைள படகு தாக்கப்டதை மூடி மறைச்சு தாங்கள் ஏதோ கண்ணில எண்ணெய் விட்டுக் காவல் காத்ததால தான் புலிகள் படகுகள் தாக்கப்பட்டதாகவும் புறுடா விட்டிருக்கினம். இதில ஏன் எங்கட ஊடகத் துறையை சாடுகிறீர்கள்?

ஈழத்திலிருந்து

ஜானா :P

நான் சொன்னது கீழ் வரும் செய்தியை ஜனா இச் செய்தியை எல்லா தமிழ் இணையங்களும் பிரசுரித்தன புலிகள் மேற்கொள்ளாத தாக்குதலை இப்படி எழுதி சிங்களவனின் நோக்கத்தை நிறைவு செய்கின்றனர் நாம்மட தமிழ் இணையங்களின் கடற் படையினர் :P

கொழும்பு துறைமுகத் தாக்குதல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா?

[ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 04:49 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது அரசினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தாக்குதலில் தாக்குதலாளிகளால் 4 கடற்கலங்கள் அழிக்கப்பட்டதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், சிறிலங்கா கடற்படையினர் தாம் சந்தேகத்திற்கு இடமான 3 படகுகளை அழித்ததாக நேற்று காலை தெரிவித்திருந்தனர்.

பின்னர் துறைமுகப்பகுதியிலிருந்து தப்பியோடிய சந்தேகத்திற்கு இடமான 9 பேரை கைது செய்திருப்பதாக நேற்று கடற்படையினர் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர் சுமார் இரண்டரை மணிநேரம் துறைமுகம் மூடப்பட்டதுடன் ஊடகவியலாளர்களும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக உள்ள உட்துறைமுகப்பகுதிக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று காலை நான்கு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களை கொழும்பின் கடற் கரையோரமாக தாம் கேட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

http://www.eelampage.com/?cn=30641

ஆக புலிகள் தாக்குதல் மேற்கொள்ள வரவே இல்லை வந்த தாகுதல்தாரிகள் யார்???? 4 கடற்படை கலங்களை அழித்தது யார் தமிழ் இனையங்களின் சிறப்பு கடற்படை பிரிவினரான புதினம் நீரடி நீச்சல் பிரிவு,பதிவு கரும்புலி தாக்குதல் படை,சங்கதி ஈருடோக படையணிம்,தினக்குரல் விசேட கடல் நடவடிக்கை அணி போன்றவையா தாக்குதல் நடத்தியது பொறுப்பாக செய்தியை வெளியிட வேணாம்??? இப்ப வெளி நாட்டில இருகிற நம்மவரை குசி படுத்த எத்திசையிலும் வெடிச்சத்தம் கேட்டாலும்

கொழும்புத் துறைமுகத்துக்குள் கடற்புலிகள்.பெற்றோல் நிரப்பிவிட்டு பாதுகாப்பாக தளம்திரும்பினர்..

200 படையினர் பலியா? தாக்குதல் இருட்டடிப்பா????

பருத்துதுறை கடற்பரப்பில் தரையிறக்கம் .கடற்கரையில் மதிய உணவை அருந்திவிட்டு பாதுகாப்பாக்க் தளம் திரும்பினர் புலிகள்

இப்படியான செய்திகளை ஆர்வகோளாறால் போட்டு தம்மை தாமே இழிவு படுத்துகின்றனர்.தம் மீதான நாம்பகத்தன்மையை தாமே கெடுத்துக்கொள்கின்றனர்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலில் ஜோர்தான்(?) கப்பல் ஒன்றுக்குச் சேதம் என்றார்களே எப்படியாம்? அதிபலம் வாய்ந்த சிறிலங்கா கடற்படையின் இலக்குத் தவறாத தாக்குதலாலா? :D:D

அதிசக்திவாய்ந்த கடற்கலங்களை வைத்துக்கொண்டு

ஜோர்தான் கப்பலை மீட்க முடியாமல் திண்டாடுகினம்.

இப்படி ஏதாவது புருடாச் செய்திகளை விடுறது

எதுக்கெண்டா கப்பலைப் பற்றிய செய்திகளைத்

தாங்கள் அறிந்துகொள்ளத்தான். ஜேர்தானுக்கு

அதை இந்த அரசு திரும்பப் பெற்றுக் கொடுக்க

முயற்சிக்காது. தனக்கு ஏதாவது பிரசாரத்திற்கான

செய்தியைத் தேடுறாங்கள். கப்பலுங் கிடைக்காது.

செய்தியும் கிடைக்காது.

நாம் அச்சத்துடன் வாழ்கிறோம் - கொழும்பு வடக்குப்பகுதி மீனவர்கள்.

கடந்த சனிக்கிழமை சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது நடாத்திய தாக்குதலை அடுத்து சிறீலங்காவின் தலைநகரான கொழும்பின் வடக்குப் பகுதியில் வாழும் மீனவர்கள் தாம் பெரும் ஆபத்தான சூழ்நிலைகளில் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் கொழும்புத் துறைமுகத்தின் மீது தாக்குதலை நடாத்தியாதக கூறிய கடற்படையினர் கடந்த சனிக்கிழமை இந்த மீனவர்களின் ஒரு படகை தாக்கி மூழ்கடித்ததுடன் மேலும் இரு படகுகளையும் கைப்பற்றி இருந்தனர். இதன் போது 9 அப்பாவி மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீர்கொழும்பில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள முன்னக்கரை பல இனங்கள் சேர்ந்து வாழும் ஒரு கிராமமாகும். இங்கு 5,000 மக்கள் வாழ்கிறார்கள். கடந்த ஜனவரி 27 ஆம் நாள் சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் வைத்து முன்னக்கரை மக்களின் படகு ஒன்றை கைப்பற்றியதாக அந்தப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப்படகில் இருந்த 3 மீனவர்களையும் அச்சுறுத்திய படையினர் அவர்களை கடலில் குதிக்குமாறு பணித்ததுடன் படகையும் தாக்கி அழித்துள்ளனர். மேலும் கடலில் குதித்த 3 மீனவர்களையும் ஏனைய இரு படகுகளில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்ததுடன் விசாரணைகளுக்காக அந்த இரு படகுகளையும் கரைக்கு கட்டியிழுத்து வந்துள்ளனர்.

ஒரு தமிழ் மீனவர் உட்பட கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையின் புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன். சனிக்கிழமை காலை கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இந்த மீனவர்கள் துணைபுரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் கொழும்புத் துறைமுகத்தை சுற்றி காவல் கடமையில் ஈடுபட்டுள்ள கடற்படைக் கப்பல்களை தாக்குவதற்கு கடற்புலிகளுக்கு முன்னக்கரை மீனவர்கள் உதவிபுரிந்ததாகவும் அதற்காக ஒரு மில்லியன் ரூபாய்களை அவர்கள் பெற்றதாகவும் உள்ளுர் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.

அந்தப்பகுதி சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களின் ஆதரவுடன் கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 6 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் வந்த சிறீலங்கா படைகளின் புலனாய்வுப் பிரிவினர் முன்னக்கரை கிராமத்தில் இருந்து ஒரு தமிழ் மீனவர் உட்பட மேலும் 6 மீனவர்களை விசாரணைகளுக்காக கைது செய்துள்ளனர்.

முன்னக்கரை மக்கள் தாங்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், சில ஊடகங்களின் ஆதரவுடன் தாம் தாக்கப்படலாம் என்ற பயத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.