Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளகுமா அந்த கல் நெஞ்சு

Featured Replies

இளகுமா அந்த கல் நெஞ்சு?

சுதந்திரமாய் திரிந்த எனக்கு

எங்கிருந்து தான் வந்ததோ இந்த காதல்!

உன்னை பார்த்தவுடன் வரவில்லை

நிச்சயமாக பழகிய பின்பே வந்தது

வயது தான் நமக்கு பிரச்சனையோ?

அன்புக்கு வயது ஏது தடை - இல்லை

உன் அன்னை தான் நமக்கு எதிரியோ?

அன்னையிடம் என்னை பற்றி சொல்லவில்லையா

அன்பே! உன் கொள்கை தான் முட்டுக்கட்டையோ?

நாம் உருவக்கியது தானே இந்த கொள்கை - விட்டு விடு

இல்லை இந்த சமூகம் தான் உன் கவலையோ? - வா

நாம் வேறோர் உலகத்துக்கு போவோம்

அன்புக்கு இலக்கனமாய் இருந்தாய்

நட்புக்கு உதாரணமாய் இருந்தாய்

தொழிழுக்கு நாணயமாய் இருந்தாய்

காதலுக்கு மட்டும் ஏன் எதிரியானாய்?

உன்னை காதலித்ததுக்கு பதிலாக

மரணத்தை காதலித்திருக்கலாம்

அது நம்பிக்கை தவறுவதில்லை - இல்லை

தனிமையை தான் காதலித்திருக்கலாம்

பிரிவுத் துயராவது இல்லாமல் இருந்திருக்கும்

உன் கோபமும் எனக்கு இன்பம்தான்

எனக்கு தெரியும் அது நீ நெருப்பால்

எழுதும் காதல் கடிதம் என்று

என்னை நீ காதலிக்கவில்லை என்கிறாய்

என் நட்பை மறந்து விட்டதாக சொல்கிறாய்

பிறகு ஏன் உன் கண்களில் நீர்?

என்னை கண்டதும் தலை குனிகிறாய்

புரிகிறது நீ உன் குற்றத்தை ஒப்புக்கொள்ள்கிறாய் என்று

உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

காதல் தான் - என் விருப்பமோ

இடைவெளி இனியும் வேண்டாம்

வா திருமணம் செய்யலாம்

என் கதையை சொன்னேன்

ஒவ்வொருவரும் தன் கதை என்கிறார்கள் - இப்பொது

உன்னை அல்ல, பிரிவை விரும்புகிறேன்

அது எப்போதும் பிரியாதல்லவா!

நீ பிரிந்து சென்ற பின் எனக்கு

எந்த இரவும் விடியவில்லை

உன்னை மறப்பத்ன்று முடிவெடுத்த பிறகு

நீ அதிகமாக ஞபகம் வருகிறாய்!

உனக்கு பயந்து நான் கனவுகளில்

தலைமறைவாய் திரிகிறேன்

நான் போகுமிடமெல்லாம் நீ வருகிரய்

அதற்கு நான் என்ன செய்வது?

நீ நெருப்பு! உன்னை ஏற்றி விட்டு - நான்

கரைந்து போனேன், தீக்குச்சியைப் போல

நான் உன் மூச்சு! இப்பொழுது நீ விட்டாலும்

பின்பு வங்கித்தான் ஆக வேண்டும்

நீ என்னுடன் இல்லா விட்டாலும்

உன் மேல் கொண்ட காதல்

இன்னும் என்னிடம் உள்ளது

என் ஒவ்வொரு இதய துடிப்பும் நீ

என் கதவை தட்டும் ஒலியாய் கேட்கிறது

ஆயுள் முலுவதும் உனக்காக காத்திருக்க தயார்

மரணம் போல் நிச்சயம் நீ வருவாயெனில்

இது நான் அன்று உனக்கு எழுதிய காதல் மடல்

இறுதிவரை உன்னிடம் வந்து சேரவில்லை

இன்று நிலமையோ வேறு - நீ

உன் வாழ்க்கை பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கையில்

நானும் என் வாழ்க்கையின் பாதையை தேடிவிட்டேன்

ஆனால் இந்த ஜென்மத்தில் உன்மேல் நான்

கொண்ட காதலை மறக்க் முடியாது - எனெனில்

அதுவே எனக்கு முதல் காதல்!

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாய் திரிந்த எனக்கு

எங்கிருந்து தான் வந்ததோ இந்த காதல்!

உன்னை பார்த்தவுடன் வரவில்லை

நிச்சயமாக பழகிய பின்பே வந்தது

கண்டதும் காதல் எண்டு சொல்வாங்க அதை பொய்யாக்கிட்டிங்க.

உங்கள் கவிதை அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியாரே யாரைப்பார்த்து வளையங்கட்டுறீங்கோ? <_<

உமக்கு காண்டம் மணி :P சொன்னமாதிரி 2 காதல் தோல்வி ஆகிட்டு அடுத்தது வெல்லும் :P பயப்பிடாமல் போட்டுதாக்கும் இவ்வளவு காலமும் பழ்கி இருகிறம் கவிதை எல்லாம் எழுதுவீர் என தெரியாமல் போச்சு எல்லாம் காதல் செய்யிற கோலம் <_<:lol::(

ஐயா தூயவன்,

உங்கள் உள்ளக்குமுறல் எனக்கு தெரிகின்றது. இந்தப் பெண்களே இப்படித்தான்! இவ்வாறு நான் சொல்ல மாட்டேன். இந்தக் காதலே இப்படித்தான்! என்று தான் சொல்வேன். பெண்களைக் காதலிக்கு முன் நாம் எம்மை எமது ஆன்மாவைக் காதலிக்க வேண்டும். நாம் எமது ஆன்மாவுடன் எப்பொழுதும் ஒன்றாகவிருந்தால் உலகத்தில் நாம்படும் எமாற்றங்கள், துன்பங்கள் எம்மை ஒன்றும் செய்துவிடாது. அதற்காக நீங்கள் சாமியாராகப் போகத்தேவையில்லை. சாதாரண மனிதனாக இருந்து கொண்டு உங்களை ஆழ முடியும். உங்கள் தமிழ்ப் புலமையை பெண்களின் பக்கத்தில் இருந்து திசைதிருப்பி தாயகத்தை நோக்கிச் செல்லவிட்டால் ஆகக்குறந்தது தாயக உறவுகளிற்கு உதவிசெய்தோம் என்ற மனநிறைவாவது ஏற்படும்!

காதல் வந்தால் காமமில்லை

காமம் வந்தால் காவலில்லை

காவல் வந்தால் காட்சியில்லை

காட்சி வந்தால் காலமில்லை

காலம் வந்தால் காசுமில்லை

காசு வந்தால் காரணமில்லை

காரணமிருந்தால் காரிகையில்லை

காரிகை வந்தாள் காலன் விடவில்லை

..............................

<_<

அடெங்கப்பா உம்பிட்டு விஷயமிருக்கா இதிலை.

பிளேடு போட்டதுக்கு கள நண்பர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா தூயவன்,

உங்கள் உள்ளக்குமுறல் எனக்கு தெரிகின்றது. இந்தப் பெண்களே இப்படித்தான்! இவ்வாறு நான் சொல்ல மாட்டேன். இந்தக் காதலே இப்படித்தான்! என்று தான் சொல்வேன். பெண்களைக் காதலிக்கு முன் நாம் எம்மை எமது ஆன்மாவைக் காதலிக்க வேண்டும். நாம் எமது ஆன்மாவுடன் எப்பொழுதும் ஒன்றாகவிருந்தால் உலகத்தில் நாம்படும் எமாற்றங்கள், துன்பங்கள் எம்மை ஒன்றும் செய்துவிடாது. அதற்காக நீங்கள் சாமியாராகப் போகத்தேவையில்லை. சாதாரண மனிதனாக இருந்து கொண்டு உங்களை ஆழ முடியும். உங்கள் தமிழ்ப் புலமையை பெண்களின் பக்கத்தில் இருந்து திசைதிருப்பி தாயகத்தை நோக்கிச் செல்லவிட்டால் ஆகக்குறந்தது தாயக உறவுகளிற்கு உதவிசெய்தோம் என்ற மனநிறைவாவது ஏற்படும்!

நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத்தானாம் நொண்டும், அது போல என்ன எழுதினாலும் இஞ்ச கொஞ்ச பேர் தாயகத்துக்கு போயிடுவினம். தெரியாமல் தான் கேக்கிறன் தாயகத்தில இருக்கிறவை காதலிக்கல்லையா? கலியாணம் தான் செய்யல்லையா?

காதல் உங்களுக்கு தெரியாமல் உங்களுக்குள் ஊடுருவும் ஒரு சக்தி அதை எந்த விதத்தில் எடுத்து கொள்வது என்பது உங்கள் மனங்களை பொறுத்ததே, காதலித்தவர்கள் காதலை செய்ய மாட்டார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

காதல் வந்தால் காமமில்லை

காமம் வந்தால் காவலில்லை

காவல் வந்தால் காட்சியில்லை

காட்சி வந்தால் காலமில்லை

காலம் வந்தால் காசுமில்லை

காசு வந்தால் காரணமில்லை

காரணமிருந்தால் காரிகையில்லை

காரிகை வந்தாள் காலன் விடவில்லை

..............................

:rolleyes:

அடெங்கப்பா உம்பிட்டு விஷயமிருக்கா இதிலை.

பிளேடு போட்டதுக்கு கள நண்பர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

மன்னிப்புக் கேட்டதால மன்னிச்சிட்டன் ராசா கண்ணில படாம இருந்துக்கோப்பா.... :angry:

இதை எங்கு தொட்டு எங்கு முடிப்பது?

காதல் பித்தமாகி பேதமை செய்கிறதா?

ஈ.தூயவன் காதல் நெருப்பில் தீய்ந்தவர்களிடம் ஆதி அட்டகாசம் பண்ணுவதில்லை.

'கிட்டாதாயின் வெட்டென மற"

நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத்தானாம் நொண்டும், அது போல என்ன எழுதினாலும் இஞ்ச கொஞ்ச பேர் தாயகத்துக்கு போயிடுவினம். தெரியாமல் தான் கேக்கிறன் தாயகத்தில இருக்கிறவை காதலிக்கல்லையா? கலியாணம் தான் செய்யல்லையா?

காதல் உங்களுக்கு தெரியாமல் உங்களுக்குள் ஊடுருவும் ஒரு சக்தி அதை எந்த விதத்தில் எடுத்து கொள்வது என்பது உங்கள் மனங்களை பொறுத்ததே, காதலித்தவர்கள் காதலை செய்ய மாட்டார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

யோவ் பறவைகள்,

ஒமக்கு ரொம்பத்தான் கோவம் வருகிது. தாங்கள் பறவைகள்! பறந்து பறந்து காதலிக்கலாம்! கவிதை எழுதலாம்! பல கலியாணங்களும் செய்து கொள்ளலாம்! தடை ஏதும் இல்லை.

ஆனால் இங்கு தூயவனுக்கு நான் கூறிய கருத்து அவரை எனது சொந்தத் தம்பியாக நினைத்துக் கூறியது. என்னைப் பொறுத்தவரை காதல் என்று சொல்லி கண்ணீர் விட்டு காலத்தை விரயம் செய்வது மனிதனுக்கு வெட்கக்கேடு. எமது மாபெரும் ஆற்றல்களை காதல் எனும் சிறு டப்பாவில் போட்டு அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிடக்கூடாது.

இப்படி காதல், காதல் என்று அலைகின்றீர்களே, உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்களில் எத்தனைபேர் உங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை நினைந்து உருகி கவிதை வடித்து இருப்பீர்கள்? எத்தனைபேர் உங்களது காதலிக்கு ஈடாக உங்கள் பெற்றோரை மதிக்கின்றீர்கள்? உங்களைப் போன்றவர்களுக்கு தாயகத்தின் பெருமைகள் எல்லாம் சொல்லி விளங்காது தான்!

Edited by மாப்பிளை

அட வேற தூயவனோ? நான் நினைத்தேன் நம்ம ஜெயம் ரவி தூயவன் அண்ணாவாகும் என்டு..அவர் தான் தனக்கு கலியாணம் ஆகவில்லை என்டு கவலையில் இருகிறார்..அவருக்கும் இப்படி ஏதாவது பிரச்சனையோ?

உங்களையும் விட்டு வைக்கலையா??

ம்ம் நல்லா எழுதி இருக்கிறியள். தொடர்ந்து கவிதை எழுத வாழ்த்துக்கள்

கவலையை விடுங்க தூயவன் ஒரு வேளை நீங்க சேர்ந்திருந்தா காதலியைப்பற்றி கவிதை எழுதியிறுப்பிங்களோ தெரியாது, இப்ப பாருங்கோ கவிஞன் ஆகிட்டிங்களே, பிரிவு சுகமான சோகம் அதை அனுபவிச்சால் தான் புரியும், அந் நினைவுகளை மீட்டி பார்ப்பதே ஒரு சுகம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவா உங்களுக்கு கவிதையும் எழுத வருமா

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--- காதல் என்பது தானாக வருவது. தேடி போவதல்ல! ---

தூயவன் அண்ணாவுக்கு அனுபவம் பேசுது போல. நீங்கள் உன்மையகவே காதலித்தவரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது காதல் என்று தெரியாத பலருக்காக! என் உடன்பிறவாத்தம்பி எழுதிய ஒரு கவிதையை முன் வைக்கின்றேன்.

இனிது இனிது காதல் இனிது - ராகவன் (எ) சரவணன் , பெங்களூர்

=========================

உன் உருவப்படத்தை

முன்னிருத்தி எனக்கான

பொழுது ஆரம்பிக்கவில்லை!

என் பெயரைச் சுப்ரபாதமாய்ச்

சிணுங்கி நீ பல்துலக்கவில்லை!

உடலுக்காக ஒரு உடை ,

உணர்வுகளுக்காக ஒரு உடை

என்று நம் உடைகளுக்குள்

ஒரு கார்கில் போர் மூளவே இல்லை!

கோபத்தில் ஒரு விழுக்காடு ,

கொரிக்கும் பருக்கையில் காட்டாது

வயிற்றுக்கு வஞ்சகமின்றி

அன்றைய பொழுதின் ஆகாரத்திற்காய்

அகமகிழ்ந்து உண்கிறோம்!

வீட்டிலிருந்து கிளம்பி

கல்லூரிக்கோ , அலுவலகத்திற்கோ

செல்லும் வழியில் , ஏற்கெனவே

கைதியான கையடக்கத்

தொலைபேசியைக் கசக்கிப்பிழிந்து

காற்றைக் கற்பழிக்கவுமில்லை!

கலந்துரையாடல்களைக் கலைக்கும்

வண்ணம் கற்பனைச் சிறகுகளைக்

கட்டுக்கடங்காமல் சுற்றிவர விடவில்லை!

உரையாடல்களுக்கு நடுவே

மும்முரமாகத் தோள்களைத் தட்டி

எந்த உலகத்தில் இருக்கிறாய் என்று

எதிராளி கேட்குமளவுக்கு

இயல்புநிலை இழக்கவுமில்லை!

இருக்கின்ற இயற்கைச் செல்வங்களை

ஒற்றுமை வேற்றுமை பார்த்து

ஓவியமாகக் கவிபுனைந்து அவற்றை

வம்புக்கு இழுக்கவுமில்லை!

நனவில் நர்த்தனமாடிய பெயரே

உறக்கத்தில் உளறப்படக்கூடாதே

என்று உறைபோடவுமில்லை!

காலை எழுந்ததிலிருந்து

இரவு தூங்கும் வரை

நான் நானாகவேயும்

நீ நீயாகவேயும்

நிம்மதியாக இருக்கிறோம்!

உனதான செயல்கள் எதனிலும்

என் எண்ணங்கள்

நுழைக்கப்படவில்லை..

எனக்கான இயல்புகள் எதிலும்

உன் நினைவுகள் என்னை

உபத்திரவம் செய்வதில்லை..

இது என்ன வித்தியாசமாய் ?

இப்படியும் ஒரு காதல் செய்வோம்!

நினைவுகளைச் சங்கடப்படுத்தாது

சங்கமிக்க விடுவோம்!

அவரவர் கடமைகளை

அல்லல் படுத்தாது

அழகாய்ச் செய்வோம்!

பிறகெப்படி காதல் வளருமாம் ?

நல்ல கேள்வி தோழி!

அட்டைப்பெட்டிக்குள் வைத்து

அடுக்கித் திணிக்கும்

அலங்காரப்பொருளா காதல் ?

எல்லா வேலைகளிலும் ,

எல்லா வேளைகளிலும் ,

இடையறாது நினைக்கிறேன் என்று

காதலை மட்டும் நினைத்துக்கொண்டு

கடமைகளைக் கோட்டை விடுவதா

கற்புள்ள காதல் ?

பெற்றவர்க்கும் , உற்றவர்க்கும் ,

மற்றவர்க்கும் எதிலும்

பங்கம் விளைவிக்காத

பவித்ரமான ஒரு அங்கமே

வாழ்வில் காதல்!

காதலின் பெயரால்

காதலுக்குக் களங்கம்

கற்பித்த நிலையை மாற்றிக்

காதலைக் கெளரவிப்போம்!

அகத்துள் பூத்த

ஆழமான காதல்

அதற்கான நேரத்தை

அற்புதமாய் ஒதுக்கிக்கொள்ளும்! !

இதுதான் காதலுக்கு மரியாதை!.

இளகுமா அந்த கல் நெஞ்சு?

அன்புக்கு இலக்கனமாய் இருந்தாய்

நட்புக்கு உதாரணமாய் இருந்தாய்

தொழிழுக்கு நாணயமாய் இருந்தாய்

காதலுக்கு மட்டும் ஏன் எதிரியானாய்?

உன்னை காதலித்ததுக்கு பதிலாக

மரணத்தை காதலித்திருக்கலாம்

அது நம்பிக்கை தவறுவதில்லை - இல்லை

தனிமையை தான் காதலித்திருக்கலாம்

பிரிவுத் துயராவது இல்லாமல் இருந்திருக்கும்

என் கதையை சொன்னேன்

ஒவ்வொருவரும் தன் கதை என்கிறார்கள் - இப்பொது

உன்னை அல்ல, பிரிவை விரும்புகிறேன்

அது எப்போதும் பிரியாதல்லவா!

நீ என்னுடன் இல்லா விட்டாலும்

உன் மேல் கொண்ட காதல்

இன்னும் என்னிடம் உள்ளது

இன்று நிலமையோ வேறு - நீ

உன் வாழ்க்கை பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கையில்

நானும் என் வாழ்க்கையின் பாதையை தேடிவிட்டேன்

அருமை...அருமை வாழ்த்துக்கள்

அன்புடன் இனியவள்

Edited by இனியவள்

ராமின் கவியும் நன்றாக இருக்கு....

தமிழ் தங்கை போட்ட கவியும் நன்றாக இருக்கு....

..............

காதலை பற்றி வசனங்கள் எப்படியும் பேச நன்றாக தான் இருக்கும்.

பேசும் போது மட்டும்!!! :o

அதுசரி இது தூயவனா?? :o

  • தொடங்கியவர்

அதுசரி இது தூயவனா?? :lol:

நான் தூயவன் என்ற பெயரை மாற்றிவிட்டேன். ஆந்த பெயரில் வேறு ஒருவர் இருந்ததால் அதை மாற்றி விட்டேன்.

நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை.

வாழ்த்துக்கள் ராம்

இங்க என்னங்கப்பா நடக்குது.... உள்ள வரவே பயமாயிருக்கு.... ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சவர் போல கதைக்கிறீங்கள்... அப்புறம் சண்டை போடுற மாதிரி இருக்கே........ :lol:

ராம் உங்க கவிதை நல்லாயிருக்கு .... :)

Edited by அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.