Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு

Featured Replies

புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு

விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன.

நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. ..................................

http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html

மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். மாசி, பங்குனி மாதங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கும் மகிந்தருக்கும் ஆபத்தான காலம் என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்கள்.

ஜோதிடப்படி ஆபத்தான, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் புலிகளின் பெரும் தாக்குதல்கள் ஏதாவது நடந்து, மகிந்தரின் ஆட்சி கட்டில் ஆட்டம் கண்டு விடக்கூடாது, என்ற பயத்தினால் பின்னப்பட்ட வலை தான் இந்த சமாதான நாடகம்.

இந்த நாடகத்தின் நோக்கம் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பது தான். இந்த கிரகநிலை மாற்றத்தின் முன்னே செய்து விட வேண்டும் என்பதற்காக தான், கட்சி தாவல் கோமாளித்தனம், மொத்தம் 100 பேருக்கும் அதிகமான அமைச்சரவை என்று எல்லா அவசர தெருக்கூத்தும் ஆடி இருக்கிறார் மகிந்தர்.

தானாகவே இறங்கி வந்து சமாதானம் பேசுவது போன்ற தோற்றம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, காத்திருந்து காலியில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் சர்வதேசத்தின் அழுத்தத்தின் நிமித்தம், சமாதான பேச்சுக்கான முயற்சியில் தான் ஈடுபடுவதை போன்ற ஒரு காட்சியை மகிந்தர் அரங்கேற்றியிருக்கிறார்.

ஜோதிடத்தின் பேரில் அரங்கேற்றி இருக்கும் இந்த நாடகத்தில், நோர்வேயையும் இழுத்து விட்டு இந்தியாவிற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும், சமாதான முன்னெடுப்பு என்று அல்வா கொடுக்கவும் ஒரு சின்ன முயற்சி. அவ்வளவு தான்.

மகிந்தரின் ஜாதகத்தில் கிரகநிலை பாதகமாக உள்ளது என்று எழுதியதற்காக, அண்மையில் ஒரு சிங்கள ஜோதிட இதழின் நிருபரை கைது செய்து அடித்து உதைத்த ஒரு அரசிடம் இது போன்ற முற்போக்கு சிந்தனைகளை தானே எதிர்பார்க்க முடியும்.

ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக தங்க கட்டிலில் படுத்து உறங்கிய பிரேமதாசவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்திருந்தும் மகிந்தர் ஜோதிடர்களை நம்பி ஆட்சி செய்வது தான் ஆச்சரியம்.

ஏனென்றால் மகிந்தரின் சேர்க்கை அப்படி. குட்டிச்சாத்தான் ஏவலிலும், மந்திர வித்தைகளிலும், பேய் விரட்டலிலும் நம்பிக்கை கொண்ட பிக்குகளின் கட்சியான "ஹெல உருமய" போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்யும் ஒரு ஜனாதிபதியிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்ப்பது?!

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா!

இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் புரட்டு உலகமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

ஜநா விதிப்படி 5 வருடம் 22 ஆம் திகதி போய் இப்போ மகிந்தவிற்கு கெட்டகாலம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அப்ப புலி பாயப்போகுது அடுத்த 2-3 மாதங்களில்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு.

மிஸ்டர் குறுக்ஸ்.......

பாயப் போகுது, பாயப் போகுது , .... என்றே நெடுக விட்டுக் கொண்டு வாறியள்!!!! ம்ம்ம்ம்ம்ம் ......... கனகாலமாச்சு, ஒண்டையும் காணோம்!!!! "மணி பக் கரண்டி" இந்த வருடத்தோடு எக்ஸ்பயேட் ஆகப்போகுது!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

  • கருத்துக்கள உறவுகள்

ஜநா விதிப்படி 5 வருடம் 22 ஆம் திகதி போய் இப்போ மகிந்தவிற்கு கெட்டகாலம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அப்ப புலி பாயப்போகுது அடுத்த 2-3 மாதங்களில்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு.

2-3 மாத்தல புலி பயுதோ எலி பாயுதோ, அதால மகிந்தருக்கும் சிங்கள நாட்டிற்கும் நித்திரை வருதோ இல்லையோ, உமக்கும் நெடுக்ஸுக்கும் நித்திரை வராது நிம்மதியும் வராது என்பது மட்டும் உறுதி. :D

கொக்கரக்கோ கும்மாங்கோ :P :P

  • தொடங்கியவர்

இரணுவநடவடிக்கை அச்சம் அதிகளவான மக்கள் வெளியேற்றம்.

[வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007, 18:24 ஈழம்] [அ.அருணாசலம்]

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பின் மேற்கு மற்றும் வடமேற்குப்பகுதிகளில் இருந்து 3,000 மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த சில தினங்களில் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவை மேலும் தெரிவித்ததாவது:

கடந்த சில தினங்களாக சிறீலங்காபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணை வீச்சுக்களினாலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி இராணுவநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் பலர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பின் கிரான், செங்கலடி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 7,500 மக்கள் கடந்தவாரம் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

செங்கலடிக்கு அண்மையில் உள்ள சிறீலங்கா படையினரின் நடவடிக்கைகள் அவர்கள் கிரான், புலிபாய்ந்தகல், பதுளை வீதி ஊடாக ஒரு இராணுவநடவடிக்கையை ஆரம்பிப்பதற்குரிய தயார்படுத்தலில் ஈடுபடுவதைக் காட்டுவதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கரடியனாறு, தொப்பிகல ஆகிய பகுதிகளை நோக்கி கடந்த 3 மாதங்களாக சிறீலங்கா படையினர் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்ப இது என்ன சொல்லுது மஹிந்தவுக்கு தானே சாத்திரம் இராணுவத்துக்கு இல்லைய

  • கருத்துக்கள உறவுகள்

சோழன்.. மணி பக் கரண்டியை நம்பிக் கொண்டா இருக்கிறீங்கள். மணி பக்கானா பார்த்துக்கோங்கோ. கரண்டி எல்லாம் கிடையாதுங்கோ..! :D:D

[வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2007, 18:24 ஈழம்] [அ.அருணாசலம்] விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பின் மேற்கு மற்றும் வடமேற்குப்பகுதிகளில் இருந்து 3,000 மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த சில தினங்களில் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

cyfj;ij Vkw;wp epjp Ntz;Ltjw;fhd *io Ntiy nra;AJ

மிஸ்டர் குறுக்ஸ்.......

பாயப் போகுது, பாயப் போகுது , .... என்றே நெடுக விட்டுக் கொண்டு வாறியள்!!!! ம்ம்ம்ம்ம்ம் ......... கனகாலமாச்சு, ஒண்டையும் காணோம்!!!! "மணி பக் கரண்டி" இந்த வருடத்தோடு எக்ஸ்பயேட் ஆகப்போகுது!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

யோ புhசாரி, பாயப் போகுது பாயப்போகுது எண்டு விட்டது நானில்லை. அப்பிடி எதிர்வு கூறினவவையிட்டை கேளுங்கோ என்ன காலமாக ஒண்டையும் காணம் எண்டு. அவையும் விளக்கம் தருவினம் போராட்டத்தின் பால் மக்களை கவர விட்டனாங்கள் எண்டு, அது "நேற்று". "இன்று" குழந்தைக்கு அம்புலி காட்டி சாப்பாடு தீத்திறமாதி ஒரு கண்டு பிடிப்பு, மகிந்த அரசியல்வாதி பிரபாகரன் ஒரு போராளி. ஏன் என்றால் புலிகளில் மக்கள் கொஞ்சம் விசனமாக இருக்கிறார்களாம் அதுக்கு விளக்கம் எழுதுகினமாம். இனி "நாளை" எப்படியோ?

மனிபக்கரண்டி எக்ஸ்பயேட் ஆனா என்ன பழய டிவிடிகள் கசட்டுகள் இருக்குத்தானே அதுகளை எடுத்துப்பாத்துக் கொண்டு வாற ஆய்வுகளையும் வாசிக்க பொழுது போறதே தெரியாது. ஜெயசுக்குரி மாதிரி... ஓயதா அலைகள் மாதிரி... ஆனையிறவு மாதிரி... தராக்கி சொன்ன மாதிரி... A9 மாதிரி... எண்டதுகளுக்கு பழய டிவிடிகள் கசட்டுகள் அந்தமாதிரி பொருந்தி திருப்த்தியைத் தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியும் பேச்சு என்டு போனா நான் தனியா ஒரு இயக்கம் தொடங்கப் போறன். சேர விரும்பிறவங்க அங்கத்தவர் சந்தாவா மாசத்துக்கு 100 டொலர் கட்டனும்.

என்னை வருசத்தில ஒருக்கா தான் கணலாம். மற்றும்படி நான் தலைமறைவா இருப்பன்.

விரும்பினவங்க தொடர்புகொள்ளவும்:

டபுள்சீறோ ற்றிபுள் சீறோ பூச்சியம் பூச்சியம் சைவர் என்ற தொலைபேசி முலம் தொடர்புகொள்ளவும்.

இனியும் பேச்சு என்டு போனா நான் தனியா ஒரு இயக்கம் தொடங்கப் போறன். சேர விரும்பிறவங்க அங்கத்தவர் சந்தாவா மாசத்துக்கு 100 டொலர் கட்டனும்.

என்னை வருசத்தில ஒருக்கா தான் கணலாம். மற்றும்படி நான் தலைமறைவா இருப்பன்.

விரும்பினவங்க தொடர்புகொள்ளவும்:

டபுள்சீறோ ற்றிபுள் சீறோ பூச்சியம் பூச்சியம் சைவர் என்ற தொலைபேசி முலம் தொடர்புகொள்ளவும்.

ஆயுதபயிற்சி இருக்குதோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேல் சாப், என்ன அந்த பெண்ணோட சீ போனோட தொடர்புகொண்டால், இந்த தொலைபேசி எண் காசு கட்டாததினால் சேவையில் இல்லை என்று சொல்கிறதே??

மூக்கி அக்காள், ஆயுதபயிற்சியை தவிர சகல பயிற்சிகளும் உண்டாம், இதை உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன..:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வடிவேலினின் இயக்கத்தில் சேருவதாக இல்லை. வாய்ச்சவால், வம்புக்கிழுத்தல் என்ற இன்னாரென்ன சிறப்புப் பயிற்சிகள் நாங்கள் பெற்றனாங்கள். இராணுவப் பயிற்சி மட்டும் தான் பெறவில்லை. :D:D

இராணுவப் பயிற்சி எல்லாம் தேவையில்லை.

சிறுவர் கடத்துவது, நக்குவது போன்றவற்றிற்கு பயிற்சி அளிப்பதானால் நான் சேரத் தயார்.

சோமபானம் முக்கியம்.

ஆனால் ஒரு விடயம் மட்டும் இடிக்கிறது, மாதாமாதம் 100 டொலரை நீங்கள் எனக்குத் தரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இயக்கத்தில் தியாக மனப்பான்மை உள்ளவர்கள் விரும்பப்படுகிறார்கள். உடல் உயிர் ஆவி அனைத்தையும் அற்பணிப்பவர்கள் தேவை. மற்றும் எனக்கு பெர்சனல் செக்கரிட்டி (அதுவும் பெண்ணாக இருத்தல) வேண்டும்.

நிச்சயமாக ஆயுதபயிற்சி உன்டு. சமையல் அறையில் ரொட்டி தோசை சுடுவது போன்ற பல "சுடு" வேலைகள் உள்ளன. இதற்காக அமெரிக்காவிலும் பாக்கியிடமும் இருந்து இதிநவீன ஆயுதங்கள் எமக்கு கிடைத்துள்ளன. எதிரிகளை நோட்டம் விடுவதற்கு வெளிநாட்டிலிருந்து நோங்காணிப்புக்குழு ஒன்று அமைக்கவுள்ளோம். மற்றும் எமது புறட்சிகற இயக்கம் கருநாய்,தெருநாய்,சொறிநாய் போன்ற உழவாளிகளையும் வேவு வீரர்களையும் கொண்டதாக அமையும்.

  • தொடங்கியவர்

பேச்சுப் பற்றிய சலசலப்பு

`

சம்பூர், வாகரை, முகமாலை என்று தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசங்களைக் கைப்பற்றி, ஆக்கிரமித்துத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முழு முனைப்பில் இலங்கைப் பாதுகாப்புப் படைகளும் ஆட்சித் தலைமையும் உள்ளன.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக வடக்கிலும், கிழக் கிலும் நிழல் யுத்தமாகப் புகைந்துகொண்டிருந்த இனமோதல்கள் கடந்த ஓகஸ்டில் பிரகடனப்படுத் தப்படாத முழு யுத்தமாக வெடித்து, கொழுந்து விட்டெரியத் தொடங்கிய பின்னர் அமைதி முயற்சிகள் சமாதானப் பேச்சுகள் பற்றிய எதிர் பார்ப்பு "கிணற்றில் போட்ட கல்லாக' அமுங் கிப் போயின. இப்போது மீண்டும் சாடைமாடையாக பேச்சுப்பற்றிப் பேசப்படுகின்றது. முணுமுணுக்கப் படுகின்றது.

""இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயல்ல; பேச்சு மூலமான சமரச முயற்சியே ஒரே ஒரு வழி; ஒரே மார்க்கம்'' என்று இவ்வார முற்பகுதியில் காலியில் நடந்த இலங்கை அபி விருத்திக் குழுவின் மாநாட்டில் அமெரிக்கத்தூது வர் பகிரங்கமாக அறிவித்ததுடன் தற்போதைய பேச்சுச் சலசலப்பு மீண்டும் ஆரம்பமாகியிருக் கின்றது.

ஊதிப் பெருத்த புதிய அமைச்சரவையில் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற கை யோடு புதுடில்லிக்குப் பறந்த றோஹித போகொல்லா கம அங்கு வைத்து புலிகளைப் பேச்சுக்கு வரும் அழைப்பை பெயருக்கேனும் விடுத்தார்.

இந்தியாவும் பதிலுக்கு, ""எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிக அதிகாரங்களு டன் கூடிய அதிகாரப்பகிர்வுத்திட்டமே இலங்கை யில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரே வழி. அதை சமர்ப்பிப்பதற்குப் பொருத்தமான உகந்த தருணமும், சந்தர்ப்பமும் இதுவே. எனவே, தாம திக்காமல் அதனை சமர்ப்பித்து பேச்சை ஆரம்பி யுங்கள்!'' என்று இலங்கை வெளிவிவகார அமைச் சருக்கு ஆலோசனை தெரிவித்து அனுப்பி வைத் தது என்று தகவல்.

தவிரவும், அண்மைக்காலமாகப் புலிகளின் அரசியல் தலைமையின் செயலகம் அமைந்துள்ள கிளிநொச்சிக்கு கண்காணிப்புக் குழுவினர், சர்வதேசப் பிரதிநிதிகள் போன்றோர் செல்வதற்கு ஹெலிக்கொப்டர் வசதிகளை வழங்க மறுத்துவந்த இலங்கை அரசு, திடீரென இவ்வாரத்தில் தனது போக்கை மாற்றிக்கொண்டு இறங்கி வந்தது.

கடந்த புதனன்று இலங்கைக் கண்காணிப் புக் குழுத் தலைவரும், அடுத்த நாள் கொழும்புக் கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும் கிளிநொச்சி செல்வதற்கு ஹெலிக்கொப்டர் வச திகளை அரசுத் தலைமை வழங்கியமையும், இவர்கள் இருவரும் அடுத்தடுத்து கிளிநொச்சிக்குப் பறந்தமையும் அமைதி முயற்சிகளுக்கு புத்துயிர்ப்பு புது உத்வேகம் ஊட்டப்படுகின்றதோ என்ற எதிர்பார்ப்பைப் பலரின் மனதிலும் எழுப்ப வைத் துள்ளன.

ஆனால் உள்ளகத் தகவல்களின்படி அமைதி முயற்சிகளில் புதிய முன்னேற்றங்களோ, புது நகர்வுகளோ இல்லை. அதற்கான நிலைமாற்றங் கள் ஏதும் தரப்புகளின் பக்கங்களில் ஏற்படவேயில்லை என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

வாகரை வெற்றியை பெரிய விவகாரமாகக் கொண்டாடும் அரசுத்தரப்பு, அந்த வெற்றி கார ணமாக இராணுவச் சமவலு நிலையில் தனது கை ஓங்கியிருப்பதாகக் கருதுகிறது.

இராணுவ மேலாதிக்க நிலையில் தான் உயர்ந் திருப்பதாக அரசுத்தரப்புக் கருதும் சூழலில் அந்தப் பின்னணியில் அமைதி முயற்சிகளுக் குப் புலிகள் இறங்கி வருவார்கள் என எதிர்பார்ப் பது அர்த்தமற்றது; நடக்கமுடியாதது.

யுத்தநிறுத்த உடன்பாட்டை அரசுத்தரப்பு செம்மையாக நடைமுறைப்படுத்திக் கடைப்பிடிக்குமானால் பேச்சை நாளையே தொடங்கு வதில் தடை ஏதும் இல்லை என்றே புலிகள் தரப்பு மேற்குலகுக்கும் அனுசரணையாளர்களுக் கும் தொடர்ந்து கோடிகாட்டி வந்திருக்கிறது. இப் போதும் புலிகளின் பதில் அதுவே என்கின்றன விட யமறிந்த வட்டாரங்கள்.

ஆனால், யுத்த நிறுத்த உடன்பாட்டை செம் மையாக நடைமுறைப்படுத்த இணங்குவது என்ற அந்த விவகாரம்தான் இங்கு இடிக்கின்ற அம்சமாக உள்ளது.

அதற்கு அரசுத்தரப்பு இணங்குவது என்பது அரசைப் பொறுத்தவரை இலேசான விவகாரம் அல்ல.

யுத்தநிறுத்த உடன்பாட்டை செம்மையாக நடைமுறைப்படுத்த சம்மதிப்பதானால்

* அந்த உடன்பாட்டின் கீழ் வரையறை செய்யப்பட்ட பிரதேசங்களின் அடிப்படையில் அண்மைக்காலத்தில் தான் புதிதாக ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு அரசுப் படைகள் வெளியேறவேண்டியிருக்கும்.

* அந்த உடன்பாட்டில் கறுப்பு, வெள்ளை யில் எழுதப்பட்டபடி "ஏ 9 'கண்டி வீதி ஊடான பாதையைக் கட்டுப்பாடு ஏதுமின்றி பயணப் போக்குவரத்துக்குத் திறந்துவிடவேண்டும்.

* தமிழர் தாயகப் பிரதேசங்களில் தான் மேற்கொண்டுவரும் தமிழர் விரோதக் கெடுபிடிப் போக்குகளை வாபஸ் பெற்று, இயல்பு நிலையை ஏற்படுத்தச் செய்யவேண்டும்.

*அவசரகாலச்சட்ட ஒழுங்குகளின் கீழ் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரிலான அத்து மீறல் மற்றும் மனித உரிமைமீறல் விதிகளை வாபஸ் பெற்று, அத்தகைய நடவடிக்கைகளை உடன் நிறுத்தவேண்டும்.

இப்படிப் பலவற்றை அரசுத்தரப்புச் செய்ய முன்வராத பட்சத்தில் பேச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும்

அவ்வாறு அரசுத்தரப்பு இறங்கி வருவதற் கான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்பதும் தெளிவு.

ஆகவே பேச்சென்ற பேச்சே, பேச்சோடு போய் விடும் என்ற நினைப்பில் நிலையில் மாற்றம் ஏதுமில்லை என்பதே உண்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நடந்தாலும் நடக்கலாம்.. நோர்வேக் காரரும், கண்காணிப்புக் குழுக்காரரும் போய் குசுகுசுத்துவிட்டு வந்திருக்கினம், ஆனால் மூச்சே விடவில்லை. இன்று மகிந்த வேறு வாகரையில் வைத்து பேச்சுக்கு வரவேண்டும், இல்லாவிடில் அடிதான் என்று சொல்லியுள்ளார்.. அடிவாங்குவதைவிட பேசிச் சமாளிக்க முயற்சிக்கலாம் என்று சமாதானம் வேறு முழங்குகின்றார்.. பாயவில்லை என்ற கவலை வேறு பலருக்கு.. நாட்டு நடப்பு இப்படியாய் போச்சே..

இந்த நேரம் பார்த்து விறுவிறுப்பான படங்கள் வேறு வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது

பேச்சு நடந்தாலும் நடக்கலாம்.. நோர்வேக் காரரும், கண்காணிப்புக் குழுக்காரரும் போய் குசுகுசுத்துவிட்டு வந்திருக்கினம், ஆனால் மூச்சே விடவில்லை. இன்று மகிந்த வேறு வாகரையில் வைத்து பேச்சுக்கு வரவேண்டும், இல்லாவிடில் அடிதான் என்று சொல்லியுள்ளார்.. அடிவாங்குவதைவிட பேசிச் சமாளிக்க முயற்சிக்கலாம் என்று சமாதானம் வேறு முழங்குகின்றார்.. பாயவில்லை என்ற கவலை வேறு பலருக்கு.. நாட்டு நடப்பு இப்படியாய் போச்சே..இந்த நேரம் பார்த்து விறுவிறுப்பான படங்கள் வேறு வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது

இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற நிலைமையில பேச்சுக்கு போறது தான் பெட்டர் போல...

எனக்கு முறுக்கெடுக்கிறது இங்கிருந்து போயிடுங்கோ... என்று ஒரு படம் வந்திருக்காம்.

அதைப் பாத்துட்டு யாரும் ஆய்வு எழுதினாலும் ஆச்சரியம் இல்லை. அகலக் கால் வைக்காது இங்கிருந்து போயிடுங்கோ எனகுள்ள பெருமாள் புகுந்து ஆய்வு செய்யச் சொன்னவர். சாதகத்தின்படி கூடாத காலம் வருகுதாம். எல்லா வளத்தையும் ஒன்று குவித்து அடித்தா தூள் தூள் ஆகிடுவியள் என்று.

எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக எல்லாம் எழுதலாம் என்று நினைத்து நினைத்தபடி எழுதும் வீணானவர்க்கு அன்பின் அன்பன் எழுதும் அன்பு வார்த்தைகள் சில

தயவு செய்து கொஞ்சம் விமர்சிப்பதை விட்டு விட்டு உங்கள் வாய்சாடலையும் விட்டு விட்டு உங்களால் நன்மை செய்யாது விட்டாலும் விதண்டாவாதம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி கதைக்க எழுத கற்றுக்கொள்ளவும்

நன்றியுடன் நாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.