Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள்

Featured Replies

யாழில் மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள்
 
 
யாழில்   மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள்
இந்தியத் துணைத்தூதரகம்  மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினர் அனுசரணையுடன் மகா கவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி யளவில் நல்லூர்  துர்க்காதேவி மனிமண்டபத்தில்  நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்னிந்திய பேச்சாளர் இலக்கிய பேரரசு நெல்லை கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும்  உள்ளூர் இசைக் கலைஞர்களின் மெல்லிசைக் கச்சேரி போன்றனவும் இடம்பெற்றது.
15401420_816806251791792_394014988_n.jpg
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினர்களான முருகேசுசந்திரகுமார்,சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட க்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், விந்தன் கனகரத்தினம், கஜதீபன், யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத் தூதர் நடராஜன், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
15417031_816806271791790_792240791_n.jpg
 
15401435_816806245125126_570684871_n.jpg

http://www.onlineuthayan.com/news/21245

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே கையில் இருக்கும் பெருமைகளைப்பற்றி பேசாமல் மற்றவர்களை பற்றி பெருமை படுபவர்களே ஈழத்தமிழர்கள் ..... அதற்க்கு என்னும் குறைவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழரசு said:

எப்பவுமே கையில் இருக்கும் பெருமைகளைப்பற்றி பேசாமல் மற்றவர்களை பற்றி பெருமை படுபவர்களே ஈழத்தமிழர்கள் ..... அதற்க்கு என்னும் குறைவில்லை 

தமிழரசு,

திருவள்ளுவர் போல், பாரதியார், தமிழுக்கு பெருமைதானே?

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

தமிழரசு,

திருவள்ளுவர் போல், பாரதியார், தமிழுக்கு பெருமைதானே?

 

உண்மை, அதில் என்ன சந்தேகம் ?
இவ்வாறே ஈழத்தில் உள்ள மதிப்புக்குரியவைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழரசு said:

எப்பவுமே கையில் இருக்கும் பெருமைகளைப்பற்றி பேசாமல் மற்றவர்களை பற்றி பெருமை படுபவர்களே ஈழத்தமிழர்கள் ..... அதற்க்கு என்னும் குறைவில்லை 

முற்றிலும் உண்மை தமிழரசு tw_thumbsup:

இதன் பின்னணியில் தமிழனப் படுகொலைகளுக்கு பெரும்துணை போய்க்கொண்டிருக்கும் இந்திய போர்க்குற்றவாளிகள் உள்ளனர்!

அதற்காக நாம் சுப்ரமணிய பாரதியாரை வெறுக்க வேண்டியதில்லை.

ஆனால் தமிழின விரோதிகளை எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் வைத்திருக்க தவறக்கூடாது!

இது போன்ற விழாக்களில் சமூக, மத, அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவே தமிழினப் படுகொலையாளர்களை, அவர்களின் பயங்கரவாதத்தை விமர்சிக்க, கண்டிக்க பழக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.