Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர்

Featured Replies

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர்

தாக்குதல் நடந்த மார்க்கெட் பகுதி
 
 தாக்குதல் நடந்த மார்க்கெட் பகுதி

பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி  தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி

தாக்குதலுக்கு காரணமான லாரியை ஓட்டியவர் என்று சந்தேகிக்கப்படும் நபர், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட குடியேறி என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கு தாற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது. சிறு குற்றங்கள் செய்தவர் என்ற வகையில் போலீசாரால் அவர் ஏற்கெனவே அறியப்பட்டவர்.

அதே நேரத்தில், இது தீவிரவாதத் தாக்குதலாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பயணி ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்த வேளையில், அதற்கு அருகில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது,

கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் சந்தை

நகரின் மேற்கே பிரதான வர்த்தகப் பகுதியான குர்ஃப்ரெஸ்தென்டம் அருகே பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதியில் இந்த சந்தை உள்ளது.

உள்துறை அமைச்சரோடும், பெர்லின் நகர மேயரோடும் ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்க்கல் தொடர்பில் இருந்து வருவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் ஸய்பர்ட் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-38375737

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழியில்லை. இஸ்லாம் மதத்தை தழுவியவர்களை பார ஊர்தி மற்றும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் ஒரு சமூகமாக முன்வந்து இத்தகைய தீவிரவாத செயல்களை எதிர்க்க ஆரம்பித்தால் மறுபரிசீலனை செய்யலாம். இது இனபேதம் பார்க்கும் செயலாகுமா? ஆம். ஆனால் வேறு வழியில்லை. :unsure:

இவ்வளவுக்கும் இந்த ஜேர்மன் காரன் பாவமய்யா.. உலகப் போர் தோல்விக்குப் பிறகு சோலி சுரட்டில்லாமல் இருக்கிறான். மத்திய கிழக்கில் அமெரிக்கா செய்யும் அநியாயத்துக்கும் துணை போறதில்லை. ஆனால் இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜெர்மனியை தாக்குகிறார்கள். இதற்கு அமெரிக்காவின் கரங்களும் பின்னால் இருக்கலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இசைக்கலைஞன் said:

இசை, 

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை. :rolleyes:

இந்த பாகிஸ்தானியர், அந்த போலந்து தேச லொறியினுள் புகுந்து, லாரி ட்ரைவரை கொலை செய்தே, லொறியை ஓட்டிக் கொண்டு போயே இந்த கொடுமையினை செய்துள்ளார். லொறியினுள்,   ட்ரைவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  :unsure:

  • தொடங்கியவர்
32 minutes ago, இசைக்கலைஞன் said:

8 minutes ago, Nathamuni said:

இசை, 

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை. :rolleyes:

இந்த பாகிஸ்தானியர், அந்த போலந்து தேச லொறியினுள் புகுந்து, லாரி ட்ரைவரை கொலை செய்தே, லொறியை ஓட்டிக் கொண்டு போயே இந்த கொடுமையினை செய்துள்ளார். லொறியினுள்,   ட்ரைவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  :unsure:

பெர்லின் போலீஸ் கைது செய்த பாகிஸ்தானியர் இதை செய்யவில்லை என்று போலீஸ் சொல்லிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

பெர்லின் போலீஸ் கைது செய்த பாகிஸ்தானியர் இதை செய்யவில்லை என்று போலீஸ் சொல்லிவிட்டது.

http://www.bbc.co.uk/news/world-europe-38379157

Where did the lorry come from?

Police say a Polish man, believed to be the original driver, was found shot dead on the passenger seat. No gun was found. 

Ariel Zurawski, the Polish owner of the lorry, confirmed his driver had been missing since 16:00 (15:00 GMT) on Monday.

The lorry was registered in Poland but it is unclear whether it was traveling from Poland or returning from Italy, as some reports suggest.

  • தொடங்கியவர்

பெர்லின் தாக்குதலின் பின்னணி என்ன?
--------------------------------------------------------------------

பெர்லின் கிறிஸ்துமஸ் கடைத்தெருவில் நேற்றிரவு நடந்த தாக்குதலைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் ஜெர்மன் அரச தலைவி ஆங்கெலா மெர்க்கெல் கூறியுள்ளார்.

ஜெர்மன் தலைநகரின் மையப்பகுதியில் கூட்டத்திற்குள் லாரி ஏற்றப்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

இது பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கருதப்படும் நபரை காவல்துறை கைது
செய்துள்ளது. ஆனால் தனக்கு இதில் தொடர்பில்லையென அவர் மறுத்துள்ளார்.

BBC

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நவீனன் said:

இதைத்தான் சொல்லுறது, வேலில போன ஓணானைத் தூக்கி சடடையில போடுறது என்று.

சிரியக்காரர் வந்தது சரி, பாக்கிஸ்தான், பங்களாதேஷிகளை ஏன் விட வேணும்?

  • தொடங்கியவர்
12 minutes ago, Nathamuni said:

http://www.bbc.co.uk/news/world-europe-38379157

Where did the lorry come from?

Police say a Polish man, believed to be the original driver, was found shot dead on the passenger seat. No gun was found. 

Ariel Zurawski, the Polish owner of the lorry, confirmed his driver had been missing since 16:00 (15:00 GMT) on Monday.

The lorry was registered in Poland but it is unclear whether it was traveling from Poland or returning from Italy, as some reports suggest.

இது எல்லாம் பழைய செய்தி.இன்று மதியம் பெர்லின் போலீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சொல்லி உள்ளார்கள்.  பாகிஸ்தான் பிரசைக்கு இதில் தொடர்பு இல்லை என்று. தாங்கள் தாக்குதல் நடத்தியவரை தொடர்ந்து தேடுவதாக.

Die Berliner Polizei hat nach dem Attentat auf den Weihnachtsmarkt nach verschiedenen Berichten möglicherweise einen falschen Tatverdächtigen gefasst. "Wir haben den falschen Mann", zitierte am Dienstag zunächst die "Welt" eine Quelle aus der Berliner Polizei

http://www.t-online.de/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

இது எல்லாம் பழைய செய்தி.இன்று மதியம் பெர்லின் போலீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சொல்லி உள்ளார்கள்.  பாகிஸ்தான் பிரசைக்கு இதில் தொடர்பு இல்லை என்று. தாங்கள் தாக்குதல் நடத்தியவரை தொடர்ந்து தேடுவதாக.

Die Berliner Polizei hat nach dem Attentat auf den Weihnachtsmarkt nach verschiedenen Berichten möglicherweise einen falschen Tatverdächtigen gefasst. "Wir haben den falschen Mann", zitierte am Dienstag zunächst die "Welt" eine Quelle aus der Berliner Polizei

http://www.bbc.co.uk/news

இல்லையே...

BBC லிங்கை கிளிக் பண்ணினால் முதலாவது செய்தியே இது தானே. 

அங்கே தான் நான் தந்த பதிவும் உள்ளது.

சிலவேளை, குறூப் ஆக குழப்பி இருக்கலாம். வேறு இடத்திலும் தாக்குதல் நடக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஆயுத உற்பத்தி கொம்பனிகளின் (ஸ்டாக்) பங்குகள் சந்தையில் ஏறிக்கொண்டே போகிறது 
டிரம்ப் தேர்தலில் வென்றதில் இருந்து இது மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறது.

எதோ ஒரு பெரிய விற்பனையையும் லாபத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
9/11 தாக்குதல் எப்படி ஏன் நடந்தது என்று ஓரளவுக்கு தெரியும்.

முஸ்லீம் அகதிகளுக்கு இப்போ அடைக்கலம் கொடுத்த அரசு ஜெர்மனி ஒன்றுதான் 
அதன் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது கொஞ்சம் கேள்விக்கு உட்பட்ட்து. 

யாரும் ஓர் இருவரின் கோபத்தின் உச்சியாக ...நடந்த ஒரு தற்கொலை முடிவாகவும் 
இருக்கலாம் 

ஸ்பெயின் மாட்ரிட் ரயில் குண்டு வெடிப்பு மாதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இசை, 

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை. :rolleyes:

இந்த பாகிஸ்தானியர், அந்த போலந்து தேச லொறியினுள் புகுந்து, லாரி ட்ரைவரை கொலை செய்தே, லொறியை ஓட்டிக் கொண்டு போயே இந்த கொடுமையினை செய்துள்ளார். லொறியினுள்,   ட்ரைவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  :unsure:

நாதம்.. இதற்கு முன்னரும் ஒரு நாட்டில் பார ஊர்தியால் இடித்து மக்களை கொன்றவர்கள்தானே.. இடம் மறந்துவிட்டது.

Edited by இசைக்கலைஞன்

9 minutes ago, இசைக்கலைஞன் said:

நாதம்.. இதற்கு முன்னரும் ஒரு நாட்டில் பார ஊர்தியால் இடித்து மக்களை கொன்றவர்கள்தானே.. இடம் மறந்துவிட்டது.

பிரான்ஸ் சில நீஸ் (Nice) எனும் இடத்தில். இங்கு தான் சாத்திரியும் இருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இசைக்கலைஞன் said:

நாதம்.. இதற்கு முன்னரும் ஒரு நாட்டில் பார் ஊர்தியால் இடித்து மக்களை கொன்றவர்கள்தானே.. இடம் மறந்துவிட்டது.

நான் சொல்ல வந்தது, நிலவுக்கு ஒளிந்து பரதேசம் போகமுடியாது.

முதலாவது ஆயிரம் ஆண்டுகளின் இறுதி அரைப் பகுதியில், cruecifix என்னும் சிலுவை யுத்தத்தில், கிறிஸ்தவர்களின் புனித ஜெருசலேமின் கட்டுபாட்டுக்காக இஸ்லாமிய துருக்கிய ஒட்டோமன் பேரரசுடன் நீண்ட நெடிய யுத்தம் நடந்தது.

இப்போது ஜெருசலேம் யூதர்கள் ஊடாக கிறித்தவர்கள் கையில்.

ஆகவே, நடப்பது மத சண்டையின் தொடர் விளைவு.

Edited by Nathamuni

2 hours ago, Nathamuni said:

http://www.bbc.co.uk/news

இல்லையே...

BBC லிங்கை கிளிக் பண்ணினால் முதலாவது செய்தியே இது தானே. 

அங்கே தான் நான் தந்த பதிவும் உள்ளது.

சிலவேளை, குறூப் ஆக குழப்பி இருக்கலாம். வேறு இடத்திலும் தாக்குதல் நடக்கலாம். 

http://www.bbc.com/news/world-europe-38385961

அவரை விடுதலை செய்து விட்டார்கள் நாதம்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் சொல்ல வந்தது, நிலவுக்கு ஒளிந்து பரதேசம் போகமுடியாது.

முதலாவது ஆயிரம் ஆண்டுகளின் இறுதி அரைப் பகுதியில், cruecifix என்னும் சிலுவை யுத்தத்தில், கிறிஸ்தவர்களின் புனித ஜெருசலேமின் கட்டுபாட்டுக்காக இஸ்லாமிய துருக்கிய ஒட்டோமன் பேரரசுடன் நீண்ட நெடிய யுத்தம் நடந்தது.

இப்போது ஜெருசலேம் யூதர்கள் ஊடாக கிறித்தவர்கள் கையில்.

ஆகவே, நடப்பது மத சண்டையின் தொடர் விளைவு.

அது சரிதான்.. ஆனால் ஜேர்மனிக்கு தனது குடிமக்களைக் காப்பாற்ற வேறு என்ன வழி உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

http://www.bbc.com/news/world-europe-38385961

அவரை விடுதலை செய்து விட்டார்கள் நாதம்ஸ்

தெரியும், ஏனெனில் அவர்கள் இறப்பதட்காகவே வருகிறார்கள். அவர் உயிரைக் காக்க ஓடியர் போல உள்ளது. 

நம்மூரில் என்றால், பிடித்தது தான் பிடித்தோம். வேற யாரும் மாட்ட்டாவிடில்  இவர் தான் அவர் என்று முடித்து விடுவார்கள்.

4 minutes ago, இசைக்கலைஞன் said:

அது சரிதான்.. ஆனால் ஜேர்மனிக்கு தனது குடிமக்களைக் காப்பாற்ற வேறு என்ன வழி உள்ளது?

ஏத்தி அனுப்ப வேண்டியது தான் என்று சொல்ல தொடங்கி விட்டார்களே.

  • தொடங்கியவர்

Berlin attack: So-called Islamic State claims responsibility

Lorry
 
So-called Islamic State (IS) has said one of its militants carried out the lorry attack on a Berlin Christmas market, which left 12 people dead.

The identity of the attacker has not been established and there was no immediate way of verifying the claim.

German prosecutors have freed the only suspect, citing insufficient evidence. He was identified by media only as Pakistani national Naved B.

Officials suggested that a perpetrator or perpetrators might be on the run.

IS said through its news agency that one of its "soldiers" had carried out the attack, in which 49 people were also injured, "in response to calls to target nationals of the coalition countries".

German Interior Minister Thomas De Maiziere reacted cautiously to the claim, saying "several lines of investigation" were being pursued.

Before the suspect was released late on Tuesday, German officials said they could not be be sure if he was involved in the attack.

"We have to entertain the theory that the detainee might possibly not have been the perpetrator," federal prosecutor Peter Frank told reporters.

The style of attack and the target suggested Islamic extremism, he said.

The man, 23, was captured in a park after reportedly fleeing the scene.

He is believed to have been known to police for minor crimes, but had no links to militant organisations.

He arrived in Germany on 31 December last year and his asylum application was still in progress.

The usual driver of the lorry, Polish citizen Lukasz Urban, was found dead on the passenger seat of the lorry, reportedly with gunshot and stab wounds to his body. No gun was recovered.

German Chancellor Angela Merkel has vowed to punish those responsible for the attack "as harshly as the law requires".

Her open-door policy on migration, which saw 890,000 asylum seekers arrive in Germany last year, has divided the country, with critics calling it a security threat.

http://www.bbc.com/news/world-europe-38385961

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நிழலி said:

http://www.bbc.com/news/world-europe-38385961

அவரை விடுதலை செய்து விட்டார்கள் நாதம்ஸ்

ஜேர்மன் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்.....:grin:

large_1399925453.jpg

அவரின்  கண்ணுக்கு தெரியாத, மிக நீளமான கயிறால்...   கட்டி விட்டு, 
ஆளின்  முழு நடமாட்டத்தையும், கண் காணித்துக்  கொண்டு இருப்பார்கள்.
இவ்வளவிற்கும்,  அவரின் வீட்டுக்கு உள்ளேயே...  "கமெரா"  பொருத்தி இருப்பார்கள். :)

  • தொடங்கியவர்

பெர்லின் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள். | படம்: கெட்டி இமேஜஸ்
பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள். | படம்: கெட்டி இமேஜஸ்
 
பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரி ஏற்றி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கைசர் வில்ஹெம் நினைவு சர்ச் அருகே மிகப் பெரிய கிறிஸ்துமஸ் சந்தை அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திங்கட்கிழமையன்று இந்த சந்தை விழாக்கோலம் பூண்டிருந்தது.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சந்தையை உற்சாகமாக கண்டுகளித்து பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதற்காக கூடியிருந்தனர்.

அப்போது ஸ்டீல் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று சந்தைக்குள் தாறுமாறாக ஓடியதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவந்த நிலையில், தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை ஐஎஸ் இயக்கத்தின் அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,"பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாக்குதலை ஏற்படுத்தி, லாரியிலிருந்து தப்பிச் சென்ற நபர் எங்களது படை வீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த நவெத் (23) என்பவரை ஜெர்மன் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கடந்த வருடம்தான் பாகிஸ்தானிலிருந்து ஜெர்மனிக்கு வந்திருக்கிறார் என ஜெர்மன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/பெர்லின்-தாக்குதலுக்கு-ஐஎஸ்-பொறுப்பேற்பு/article9438023.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.