Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம்பாந்தோட்டையில் 52 பேர் கைது

Featured Replies


ஹம்பாந்தோட்டையில் பதற்றம்
 

article_1483767718-7A.jpgஹம்பாந்தோட்டையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற மோதலை கலைப்பதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது பொலிஸார் தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

 

- See more at: http://www.tamilmirror.lk/189337/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-பதற-றம-#sthash.hxILSyqm.dpuf

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டையில் பதற்றம் ; கல்வீச்சு, கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

 

 

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இலங்கை - சீன தொழிற்சாலை அபிவிருத்தி கேந்திரத்துக்கு அருகில் இடம்பெற்றுவருகின்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

15894755_10211848318466106_8915765241646

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கழுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

 

இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15189

  • தொடங்கியவர்

சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு – பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

 

சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு – பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம்
 

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நடைபெற்ற இலங்கை சீன கைத்தொழில் செயற்றிட்ட அங்குராற்பண நிகழ்வில் இரு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த முறுகல் நிலை பின்னர் கைக்கலப்பாக வலுவடைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் நீர்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்படுள்ளது.

இதன்போது சிலர் யமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை முறுகல் நிலைக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வை ஆரம்பித்து வைத்ததாக எமது செய்தியார் குறிப்பிட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/01/சீன-முதலீட்டுக்கு-எதிர்ப/

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டையில் பதற்றம் ; கல்வீச்சு, கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு ( படங்கள், காணொளி இணைப்பு )

 

 

அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இலங்கை - சீன தொழிற்சாலை அபிவிருத்தி கேந்திரத்துக்கு அருகில் இடம்பெற்றுவருகின்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

15894755_10211848318466106_8915765241646

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கழுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

 

இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15826235_10211848313265976_4389347331404

15909687_10206464935656901_2076139287_n.

15909864_10206464935856906_1113456586_n.

15910169_10206464935496897_1085739929_n.

15934335_10206464935536898_51248555_n.jp

15941567_10206464935576899_1583694989_n.

15941160_1918025358428882_67722331622252

15941622_1253811604657287_339387233_n.jp

http://www.virakesari.lk/article/15189

  • தொடங்கியவர்
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்: 21 பேர் காயம்
 
 

article_1483780001-1.jpgஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட முறுகல் நிலையால், 21 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/189366/ஹம-ப-ந-த-ட-ட-ஆர-ப-ப-ட-டம-ப-ர-க-யம-#sthash.uS5YbI9X.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்...

 

 

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்...

 

 
ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுகிறது.

இதனையடுத்து ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்று காலை ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அந்த வலயத்திற்கு எதிப்பாளர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2339&mode=head

  • தொடங்கியவர்

 

சீன முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஹம்பாந்தோட்டையில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்தோரின் எண்ணிக்கை 21 பேராக அதிகரித்துள்ளது.

தற்போது இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர் உட்பட ஏனையவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர்களே அதிகமானவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது பதற்ற நிலை உருவாகியுள்ளதுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, பிக்குகள் மற்றும் பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 3 பொலிஸார் உட்பட்ட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போது 21பேர் காணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/130865?ref=home

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டை மோதல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து

 

 

ஹம்பாந்தோட்டை மோதல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து
 

ஹம்பாந்தோட்டையில் இன்று ஏற்பட்ட மோதல் நிலவரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஹங்குரன்கெதவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது,

நான் இங்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். வடமராட்சி, கிளிநொச்சி பகுதிகளை விட அங்கு அதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாகக் கூறினர். வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏன் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்? தமது காணிகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாலேயே அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். விவசாயத்தையே நாம் இல்லாது செய்கின்றோம். நானே இதனை ஆரம்பித்ததாகத் தற்போது கூறுகின்றனர். ஆம். 750 ஏக்கரில் தொழில் பேட்டையொன்றை நாம் ஆரம்பித்தோம். என்னிடம் 1000 ஏக்கரைக் கோரினர். தொழில்பேட்டையை 1000 ஏக்கரில் அமைக்க வேண்டியதில்லை, 750 ஏக்கரில் அமைத்தால் போதும் என நான் கூறினேன்.

 

Share This

http://newsfirst.lk/tamil/2017/01/ஹம்பாந்தோட்டை-கலவரம்-தொட/

இலங்கையை கடுமையாக சாடியுள்ள வெளிநாட்டு ஊடகங்கள்!

இலங்கை - சீனா கைத்தொழில் செயற்றிட்ட அங்குரார்ப்பன நிகழ்வின்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் அரச ஆதரவாளர்கள் பிக்குகளையும் கிராமவாசிகளையும் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று சில மணிநேரங்களே ஆன நிலையில் வெளிநாட்டு இணையங்களில் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கிவிட்டன.

இலங்கை - சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்.

இந்த பகுதியினை சீனாவுக்கு கையளிக்கக்கூடாது என்று கோரி பிக்குக்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் கல் வீச்சிலும் ஈடுபட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன்காரணமாகவே கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்களில் இலங்கை அரச ஆதரவாளர்கள் பிக்குகளையும் அந்த கிராமவாசிகளையும் கடுமையாக தாக்கியது என செய்திகள் வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இந்த இடத்தில் ஆர்ப்பாட்டங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தக் கூடாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த தாக்குதலின் போது 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/130859?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் 1000 ற்கும் 750 ற்கும் ரெம்பத்தூரம்

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:

 

 

 

வடமராட்சி, கிளிநொச்சி பகுதிகளை விட அங்கு அதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாகக் கூறினர்.

அதாவது வேற்று நாட்டில் நாம் வைத்திருப்பது போல

எங்களுக்கு வேண்டாம்.....

சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் போராட்டம், மோதல்

லங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்காக, ஆயிரக்கணக்கான கிராம மக்களை வெளியேற்றும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மோதல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

 
ரணில் - சிறிசேனரணில் - சிறிசேன

அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் உரையாற்றவிருந்த நேரத்துக்கு சற்று முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்த பிக்குகளையும் கிராம மக்களையும் அரசு ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தை சீனக் காலனியாக மாற்ற தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அம்பாந்தோட்டை  

சீனாவுக்கு 99 ஆண்டு கால ஒப்பந்தத்தில் துறைமுகப் பகுதியை குத்தகைக்கு விட ஒப்பந்தத்தை தயாரித்து வரும் அரசு, புதிய நிலம் வழங்கப்படும் என்று கூறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அதற்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளுக்கும் கடல் வழி பட்டுப்பாதை அமைக்கும் மாபெரும் இலக்கின் ஒரு பகுதியாக சீனா இங்கு முதலீடு செய்வதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, துறைமுகத் திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகே அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அரச காணிகள் மட்டுமே பயன்படுத்தப்படும்: ரணில்

பலத்த பாதுகாப்புக்கு மத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலிட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். அம்பாந்தட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இந்த முதலீட்டு வலையம் அமைக்கப்படுகிறது.

இலங்கைக்காக சீன துதுவர் உற்பட அமைச்சர்கள், அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக தென் மாகாணத்தில் 1235 ஏக்கர் நிலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச காணிகள் மட்டுமே இந்த திட்டத்துக்காக பயன்படுத்தப்படுமென்று கூறிய பிரதமர், மக்களின் வீடுகள் மற்றும் புத்த விஹாரைகள் உடைக்கப்பட மாட்டாதென்று கூறினார்.

இந்த திட்டத்தின் முலம் ஐந்து பில்லியன் டாலர் சீன முதலீடுகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38541320

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் தெற்கின் வசந்தம் ஆரம்பமோ????

5 minutes ago, விசுகு said:

மகிந்தவின் தெற்கின் வசந்தம் ஆரம்பமோ????

மகிந்தவும் வரப்போறதில்லை சிங்களவனும் வாழப்போறதில்லை மூனாதான் அடுத்து வரும் 10 வருட காலங்களில் இலங்கையின் அதிகூடிய சனத்தொகை எமக்கு செய்த பாவத்துக்கு புத்தனின் பிள்ளைகளின் தலை அறுபடும் இதே மூனக்களால்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, TNT said:

மகிந்தவும் வரப்போறதில்லை சிங்களவனும் வாழப்போறதில்லை மூனாதான் அடுத்து வரும் 10 வருட காலங்களில் இலங்கையின் அதிகூடிய சனத்தொகை எமக்கு செய்த பாவத்துக்கு புத்தனின் பிள்ளைகளின் தலை அறுபடும் இதே மூனக்களால்

போற போக்கைப்பார்த்தால்

அதையும் சீனாக்காறன் முந்துவான் போல கிடக்கு

  • தொடங்கியவர்
ஹம்பாந்தோட்டையில் 52 பேர் கைது
 

21647arrested.jpgஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறியமை பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் பலரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21647#sthash.NZv0NOCB.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் மண்டலத் திட்ட ஆரம்ப நிகழ்வில் மோதல்: 28 பேர் காயம், 21 பேர் கைது

 

 

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் மண்டலத் திட்ட ஆரம்ப நிகழ்வில் மோதல்: 28 பேர் காயம், 21 பேர் கைது
 

இலங்கையும் சீனாவும் இணைந்து முன்னெடுக்கும் ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இலங்கை – சீன கைத்தொழில் மண்டலத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வருகை தந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது பாதுகாப்புப் பிரிவின் 11 உறுப்பினர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைத்தொழில் மண்டலத் திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வைபவம் நடைபெறும் பகுதிக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்தனர்.

எனினும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சிலர், கற்களால் தாக்கியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அமைதியின்மை ஏற்பட்ட இடத்திற்கு பிக்குகள் சிலரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமற்போனதால் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டது.

இதனையடுத்து, பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினரால் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இலங்கை – சீன கைத்தொழில் மண்டலத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர், இலங்கைக்கான சீனத் தூதுவர் இசியங் லியென், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

Share This

http://newsfirst.lk/tamil/2017/01/ஹம்பாந்தோட்டை-கைத்தொழில/

  • தொடங்கியவர்
சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் வன்முறை (கா...
சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் வன்முறை (காணொளி)

இலங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்காக, ஆயிரக்கணக்கான கிராம மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மோதல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுகுறித்த காணொளி தொகுப்பு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் வன்முறை

அது சரி ஏற்கனவே அம்பாந்தோட்டையிலை செல்ல சீனாவின்ரை உதவியாலை துறைமுகமும் கட்டியிருக்கிறாங்கள்....விமான நிலையமும் கட்டியிருக்கிறாங்கள்.
அப்ப சத்தம் போடாதவங்கள் இப்ப என்னத்துக்கு விழுந்துகிடந்து மாரடிக்கிறாங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.