Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு

Featured Replies

மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு

 

 
தீபா | படங்கள்: எல்.சீனிவாசன்
தீபா | படங்கள்: எல்.சீனிவாசன்
 
 

மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும்.

நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருக்கிற அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் உணர முடிகிறது.

அரசியலுக்கு வருவது என் ஆசையல்ல. அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியலுக்கு வர விருப்பம் உள்ளது. அதை கூர்ந்து கவனித்து வருகிறேன். மக்கள் விரும்பினால் இந்த அரசியல் பணியை செய்ய நான் தயங்க மாட்டேன்'' என்றார் தீபா.

செய்தியாளர் சந்திப்பால் தீபாவின் இல்லம் அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அதன் புகைப்படப் பதிவுகள்

deepa_1_3114771a.jpg

deepa_2_3114772a.jpg

deepa_3_3114773a.jpg

deepa_4_3114774a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/மக்கள்-பணியாற்ற-காத்திருக்கிறேன்-ஜெ-அண்ணன்-மகள்-தீபா-பேச்சு/article9466113.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மாவின் நிறம், குலம் இவற்றை வைத்து பார்க்கும்போது நிறைய அடிமைகள் கிடைப்பார்கள்.. இது உறுதி.. tw_blush:

tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்தம்மாவின் நிறம், குலம் இவற்றை வைத்து பார்க்கும்போது நிறைய அடிமைகள் கிடைப்பார்கள்.. இது உறுதி.. tw_blush:

tw_dizzy:

என்ன ராசா  கட்சி மாறியாச்சா

சொல்லிப்போட்டு மாறினா எங்களுக்கும் வசதியாக இருக்குமில்லே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

என்ன ராசா  கட்சி மாறியாச்சா

சொல்லிப்போட்டு மாறினா எங்களுக்கும் வசதியாக இருக்குமில்லே...:grin:

நிலைமைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறோம்..! :D:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இசைக்கலைஞன் said:

நிலைமைகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறோம்..! :D:

காத்துக்கொண்டிருக்கின்றோம்

இப்பொழுதே பயிற்சிகளை ஆரம்பிக்கலாமா??

குனி

கும்பிடு

ஓடு.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

காத்துக்கொண்டிருக்கின்றோம்

இப்பொழுதே பயிற்சிகளை ஆரம்பிக்கலாமா??

குனி

கும்பிடு

ஓடு.....:grin:

முதலில் நடிப்பு பயிற்சி.. tw_blush:

Byv4GiNCUAA4wSy.jpg

இசை, குட்டி சின்னம்மாவின் இரண்டு கைகளும் ஏன் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன? அவர் கையில் ஏதும் முறிவு ஏற்பட்டதா அல்லது இதன் பின்னால ஏதும் அரசியல் சூத்திரம் உள்ளதோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கலைஞன் said:

இசை, குட்டி சின்னம்மாவின் இரண்டு கைகளும் ஏன் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன? அவர் கையில் ஏதும் முறிவு ஏற்பட்டதா அல்லது இதன் பின்னால ஏதும் அரசியல் சூத்திரம் உள்ளதோ? :rolleyes:

deepa_4_3114774a.jpg

இவருக்கு எல்லாத்தையும் கண்டாத்தான் நம்புவார்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டியம்மா ...
நேரம் பார்த்து இறங்கி இருக்காவா ?
இறக்கி இருக்கிறாங்களா எண்ணு புரியல்ல ......

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தீபா முடிவு அறிவிப்பு
 
 
 

சசிகலாவிற்கு எதிராக, ஜெயலலிதா மருமகள் தீபா, அரசியலில் குதிக்க தயாராகி விட்டார். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான, ஜன., 17ல், தன் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார்.

 

Tamil_News_large_168596520170107233550_318_219.jpg

தினமும், தீபாவை சந்திக்க, வெளி மாவட்டங்க ளில் இருந்து, ஏராளமானோர் வருகின்றனர். நேற்று வந்த தொண்டர்கள், 'நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். பணம் குறித்து கவலைப்பட வேண்டாம்; நாங்கள் தருகிறோம்' என, கோஷமிட்டனர்.
 

அவர்களிடம், தீபா பேசியதாவது:


ஜெயலலிதாவை இழந்த மீளாத் துயரில் இருக்கிறோம். எனவே, சிறிது காலம் பொறுமை காக்கவும். தற்போதைய நிலையில், பொறுமை யுடன் காத்திருப்பது மிக அவசியம். எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை, அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்று அவரது நல்லாசியுடன், அனைவரும் செயல்படுவோம்.'மண் குடிசை வாசல்

என்றால், தென்றல் வர மறுத்திடுமா; மாலை நிலா ஏழை என்றால், வெளிச்சம் தர மறுத்திடுமா' என பாடிய, எம்.ஜி.ஆர்., வழியில் செயல்படுவோம்.

ஜெயலலிதாவின் தியாகம் ஒப்பில்லாதது. அவரது பெயரையும், புகழையும், நாம் நிலைநாட்ட வேண்டும்.உரிய காலக்கட்டத்தில், நல்ல முடிவை, உங்களுக்காக அறிவிப்பேன். நாளைய சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, என் முடிவு இருக்கும். உங்களுக்காக நான் பணி யாற்ற காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
 

பின்,நிருபர்களிடம் கூறியதாவது:


மக்கள் விருப்பப்படி, அரசியலுக்கு வர உள்ளேன். அரசியல் பிரவேசம் கண்டிப்பாக இருக்கும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும், என்னிடம் பேசவில்லை.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், நல்ல செய்தியை கூறுகிறேன். மக்களின் கருத்துக்களை கேட்க, அவர்களுடன் கலந்துரையாட உள்ளேன். மக்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவுடன் சந்திப்பு!


சசிகலா மீது அதிருப்தியில் உள்ள, 'மாஜி' சபாநாய கர், 'மாஜி' அமைச்சர், 'மாஜி' எம்.பி., ஆகியோர், தீபாவை சந்தித்து பேசி உள்ளனர்.

'சின்னம்மா' பட்டத்துடன் தீபாவுக்கு போஸ்டர்
 

 

சின்னாளபட்டி:மறைந்த முதல்வர் ஜெ.,வுக்குப் பின், 'சின்னம்மா' பட்டத்தை 'தீபா'வுக்கு வழங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவி ஏற்ற சசிகலாவுக்கு நிர்வாகிகள் ஆதரவு மட்டுமே உள்ளது.

பெரும்பாலான தொண்டர்கள் செய்வதறியாமல் உள்ளனர். அவர்களில் பலர் ஜெ., அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.அதற்காக மாநிலம் முழுவதும் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதேசமயம் சசிகலா ஆதரவு போஸ்டரை சேதப்படுத்துவதும் தொடர்கிறது.

ஜெ.தீபாவுக்குரிய ஆதரவு போஸ்டரில் அடைமொழியாக 'சின்னத்தாய்', 'தீபா அம்மா', 'மக்களின் சின்னம்மா', 'அம்மா', 'தாயின் மருமகள் தீபா' என்றெல்லாம் விளித்து அச்சிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஒன்றியத்தில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் 'சின்னம்மா' என்றே ஒட்டிஉள்ளனர்.

பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வித்தியாசமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சமீபகாலமாக, சசிகலாவை மட்டுமே 'சின்னம்மா' என அழைத்து வந்தனர். ஆனால், இந்த போஸ்டரில், தீபாவை சின்னம்மா என அழைத்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளது அ.தி.மு.க.,நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1685965

3 hours ago, விசுகு said:

deepa_4_3114774a.jpg

இவருக்கு எல்லாத்தையும் கண்டாத்தான் நம்புவார்..:grin:

மேலே உள்ள காணொலியை பார்க்க இல்லையா? அதில் கைகள் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவே. :rolleyes:

5 hours ago, இசைக்கலைஞன் said:

இந்தம்மாவின் நிறம், குலம் இவற்றை வைத்து பார்க்கும்போது நிறைய அடிமைகள் கிடைப்பார்கள்.. இது உறுதி.. tw_blush:

tw_dizzy:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு அரசியலை கூர்ந்து புகுந்து  கவனிச்சு பாத்தால் தீபா மட்டுமில்லை எங்கடை நித்தியானந்தாவும் முதல்வராய் வரலாம் தானே..:cool:

C1emXwbUQAEW9yb.jpg

மந்திரம் தந்திரத்தாலை வித்தை காட்டக்கூடியவர்.

C1K4o-pXAAAI6Ln.jpg

அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்.

C1dniXuVIAE6yvY.jpg

 மக்களோடு மக்களாக இருந்து பகிர்ந்து உண்ணக்கூடியவர்..

C1TXL14XAAEytxf.jpg

மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்...

nityananda1.jpg

எல்லாவற்றையும் விட சிறை சென்று களி உண்ட பெருமை இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்... :cool:

இந்தியாவிலை சிறை போனால் நூறு பொயின்ஸ் எக்ஸ்ரா..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கலைஞன் said:

இசை, குட்டி சின்னம்மாவின் இரண்டு கைகளும் ஏன் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன? அவர் கையில் ஏதும் முறிவு ஏற்பட்டதா அல்லது இதன் பின்னால ஏதும் அரசியல் சூத்திரம் உள்ளதோ? :rolleyes:

"குட்டி சின்னம்மா.." ஆகா.. கேட்கவே.. தேன் வந்து பாயுதே காதினிலே..  :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. யாருகிட்ட.. tw_blush: பாருங்கய்யா.. நம்ம தலைவிக்கு நல்ல ஆதரவு இருக்குங்கிறேன்.. :D:

 

54 minutes ago, இசைக்கலைஞன் said:

ம்ம்ம்.. யாருகிட்ட.. tw_blush: பாருங்கய்யா.. நம்ம தலைவிக்கு நல்ல ஆதரவு இருக்குங்கிறேன்.. :D:

 

இதை பார்த்தால் சனக்கூட்டம் ஒன்றும் இல்லை, வெறும் சவுண்டும், வீடியோ எடிட்டிங்கும் போல உள்ளதே.  கமெராவை திருப்பி ஏன் ஆட்களை காண்பிக்க இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கலைஞன் said:

இதை பார்த்தால் சனக்கூட்டம் ஒன்றும் இல்லை, வெறும் சவுண்டும், வீடியோ எடிட்டிங்கும் போல உள்ளதே.  கமெராவை திருப்பி ஏன் ஆட்களை காண்பிக்க இல்லை?

இது போனவாரம்.. :unsure:

 

large_whatsapp-image-2016-12-22-at-11375

15726889_1390365920995981_12950082407640

 

tw_dizzy:

31 minutes ago, இசைக்கலைஞன் said:

இது போனவாரம்.. :unsure:

 

large_whatsapp-image-2016-12-22-at-11375

15726889_1390365920995981_12950082407640

 

tw_dizzy:

இசை நானும் வீடியோ எடிட் செய்வதால் எனது அனுபவத்தை  வைத்து சொல்கின்றேன்; இங்கே நீங்கள் இணைத்துள்ள காணொலிகள் குட்டி சின்னம்மாவின் பிரசன்னத்தின்போது அதிக சனக்கூட்டம் திரள்கின்றது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களாக எனக்கு தெரியவில்லை. யாரோ குட்டி சின்னம்மாவை முன்னிலைப்படுத்துவற்காக பிரயத்தனம் செய்கின்றார்கள் என்பது மட்டுமே புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கலைஞன் said:

இசை நானும் வீடியோ எடிட் செய்வதால் எனது அனுபவத்தை  வைத்து சொல்கின்றேன்; இங்கே நீங்கள் இணைத்துள்ள காணொலிகள் குட்டி சின்னம்மாவின் பிரசன்னத்தின்போது அதிக சனக்கூட்டம் திரள்கின்றது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களாக எனக்கு தெரியவில்லை. யாரோ குட்டி சின்னம்மாவை முன்னிலைப்படுத்துவற்காக பிரயத்தனம் செய்கின்றார்கள் என்பது மட்டுமே புரிகின்றது.

இருக்கலாம் கலைஞன்.. ஆனால் சசிகலா எதிர்ப்பாளர்களில் பலர் இந்தம்மாவின் பக்கம் போவதாக சில தகவல்கள் சொல்கின்றன.. ஏதோ.. திமுக, அதிமுக அழிந்து குட்டிச்சுவர் ஆனால் சரி.. :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.