Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலிரவைத் தேடி.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிரவைத் தேடி.....

காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன. முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும். நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன. கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன. மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.

காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)

என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.

மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இவ்வளவு காலமும் அவர்களுக்கு முதலிரவு காரணமாக, ஒரே நோய் நொடியும், பிள்ளை பெறாமலும் தான் இருந்தவர்கள். இப்போது இவர் சொன்னதைக் கேட்டு, எல்லோருக்கும் நோய் நொடியற்ற நீடிய வாழ்வு கிடைத்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துயவன் !

நீர் எப்போதும் அறிவுசார் கருத்துக்களை வைப்பதில்லை விதண்டாவாதம் கதைப்பதுதான் உமது தொழில். நான் கூறியதை எந்த மருத்துவராவது மறுக்கட்டும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

துயவன் !

நீர் எப்போதும் அறிவுசார் கருத்துக்களை வைப்பதில்லை விதண்டாவாதம் கதைப்பதுதான் உமது தொழில். நான் கூறியதை எந்த மருத்துவராவது மறுக்கட்டும் பார்க்கலாம்.

நான் மறுக்கிறன் ஏனென்றால் நான் மாற்றுக் கருத்து மருத்துவன்

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரவு வேறு முதலுறவு வேறு பாருங்கோ. முதலுறவு முதலிரவிலதான் நடக்குமெண்டுமி;ல்லை, முதலிரவு முதலுறவுலதான் எண்டுமில்ல. எங்கெங்கெயோவெல்லாம் மேய்ஞ்சிபோட்டு வந்து முதலிரவில சந்திக்கிற ஆண்களுமிருக்கிறாங்க. முதலுறவு புதிதாகத் தெரியாத பெண்களுமிருக்கிறாங்க. திருமணபந்தத்தில இந்த இரவுக்கும் உறவுக்கும் முக்கியத்துவம் அதில பங்கு பற்றும் ஆண் பெண்களின் தனிப்பட்ட வாழக்கைப் பின்னணியிலதான் தங்கியிருக்குது. சுகாதாரம் அது இது எண்டு பெரிசாக ஆராய்ச்சி பண்ணி முதலிரவில முதலுறவு நல்லதா கெட்டதா எண்டு முடிவெடுக்கிறதுக்கு மற்றாக்களுக்கு ஒரு தேவையுமில்லை. பங்க பற்றுற ஆட்கள்தான் அந்த முடிவுகள எடுக்கவேணும். அவையளுக்கு உடலும் உணர்வும் ஒத்துழைச்சால் வெளியில நிண்டு நாம வேணாம் வேணாமெண்டால் நடக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்

நீர் என்ன வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். ஆனால் இதில் அறிவுசார்விடயம் எழுதியது போன்றும், மற்றவர்கள் மடையர்கள் போலவும் கருதுகின்றீர் பாரும். அங்கே தான் இடிக்குது. இந்தக் கட்டுரையில் என்ன அறிவுசார் எழுதிப் போட்டீர்கள் என்று பெருமிதமாக என்னைப் பார்த்து கேள்வி கேட்கின்றீர்கள். புகை, என்பது மாசு எண்டது குழந்தைக்கு கேட்டால் கூடத் தெரியும். அது போல களைப்பு என்பது சோர்வைத் தரும் என்பதையும் அனைவரும் அறிவார். அதைப் போய் அறிவுசார்....... :icon_idea:

புகையோ, களைப்போ திருமண நிகழ்ச்சியால் மட்டும் ஏற்படுவதில்லை. வாழ்க்கையில் அது ஒரு அங்கமாகி விட்டது. சிலருக்கு 10 நிமிடம் தான் உடலுறவு கொள்ள முடியும் என்றால் அதற்கு வேண்டுமானால் மருத்துவரிடம் போய்வாறது நல்லது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் புத்தா! போய் அரசமரத்தடியில் உட்காரும் உமக்கும் இதற்கும் வெகு தூரம் :P :P :P :P

முதலிரவைத் தேடி.....ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன. கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன. மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது. மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

கிருமிப்பிரச்சனையென்றால் ஆணும், பெண்ணும் உடம்பைத் தேய்த்து நல்ல சவர்(குளியல்) எடுத்துவிட்டு படுக்கையில் விழ வேண்டியதுதானே? உதுக்கேன் போய் அருமந்த தேனிலவைத் தள்ளிப்போடச் சொல்லுறீர்? வேணுமென்றா கிருமிகளைக் கொல்ல கட்டிலில் எக்ஸ்ராவா கொஞ்ச டெட்டோலை அடிச்சுவிட்டா போச்சு. உந்த முக்கியமான விசயங்களைத் தள்ளிப்போடக்கூடாது இளங்கோ கண்டீரோ? நீர் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வாய் பார்த்துக்கொண்டு இருக்க காக்காய் வந்து கொத்திக்கொண்டு போகப் போகுது கவனம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்ன சொல்ல வந்தனான் என்றால் கலியாணம் முடித்த அன்றைய இரவே சோர்வுடனும் அழுக்குடனும் ஈடுபடாமல் அடுத்த நாள் அல்லது அதற்கடுத்த நாள் குளித்து முழுகி சோர்வுகளையம் நீக்கியபின் ஈடுபடலாமே. காதலித்து திருமணம் செய்பவர்கள் திருமணத்திற்கு முன்பே பேசிப் பழகியிருப்பார்கள் ஆனால் நிச்சயிக்கப் படும் திருமணங்களில் இது குறைவு. எனவே முதலிரவே உடலுறவு போன்றவற்றில் ஈடுபடாமல் மனம்விட்டுப் பேசி மனநெருக்கத்தை அதிகப் படுத்தி அதற்கு அடுத்தடுத்த நாள்களில் உடல் இன்பங்களில் ஈடுபடுவது நல்லதல்லவா. உள நெருக்கத்தோடு உடல் நெருக்கமும் சேருவதுதானே சிறந்தது.

பகுத்தறிவுக்கு முரணான மரபுகளை உதறித்தள்ளுவதும் ஒத்துவரக் கூடிய மரபுகளில் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களைக் கொண்டுவந்து அவற்றை புதுப்பிப்பதும் நல்ல விடயம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

வோவ்வ் அருமையான தலைப்பு, கருத்து, கருத்தாளர்கள், மோதல்கள், அன்பர்களே,உங்களிடம் இருந்து நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். காணாது கருத்தின் வேகம், எதற்கும் நெடுக்/குறுக்சை இழுத்துவிட்டால் கூத்து பர்க்கலாம் போல தோன்றுது. :lol:

ஆ மேல சண்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம், சரக்கில (கருத்தில) கிக்( பொருள்) தூக்கல் இல்லாமல் இருக்குப்போல. பார்த்து டங்குவார் கிழிஞ்சிடும்.. :angry:

கிருமிப்பிரச்சனையென்றால் ஆணும், பெண்ணும் உடம்பைத் தேய்த்து நல்ல சவர்(குளியல்) எடுத்துவிட்டு படுக்கையில் விழ வேண்டியதுதானே? உதுக்கேன் போய் அருமந்த தேனிலவைத் தள்ளிப்போடச் சொல்லுறீர்? வேணுமென்றா கிருமிகளைக் கொல்ல கட்டிலில் எக்ஸ்ராவா கொஞ்ச டெட்டோலை அடிச்சுவிட்டா போச்சு. உந்த முக்கியமான விசயங்களைத் தள்ளிப்போடக்கூடாது இளங்கோ கண்டீரோ? நீர் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வாய் பார்த்துக்கொண்டு இருக்க காக்காய் வந்து கொத்திக்கொண்டு போகப் போகுது கவனம்!

மாப்புக்கு அவசரம் :P :lol: :P :lol: :P :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானாக்கும் ஐரோப்பா தேசத்தில் கலியாணத்துக்கு முந்தியே முதலிரவு நடக்குதாக்கும்

அருமையான தலைப்பு பல பக்கங்களைத்தாண்ட என் இனிய வாழ்த்துக்கள்...

;)

  • கருத்துக்கள உறவுகள்

வோவ்வ் அருமையான தலைப்பு, கருத்து, கருத்தாளர்கள், மோதல்கள், அன்பர்களே,உங்களிடம் இருந்து நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். காணாது கருத்தின் வேகம், எதற்கும் நெடுக்/குறுக்சை இழுத்துவிட்டால் கூத்து பர்க்கலாம் போல தோன்றுது. :lol:

ஆ மேல சண்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம், சரக்கில (கருத்தில) கிக்( பொருள்) தூக்கல் இல்லாமல் இருக்குப்போல. பார்த்து டங்குவார் கிழிஞ்சிடும்.. :angry:

நாலு சுவத்துக்க நடுக்கிற விசயத்தை பப்ளிக்கில பேசுறது புரட்சி. முற்போக்குத்தனம். அப்படி என்று தமிழர்களுக்குள் இருக்கும் பாலியல் அறிவற்ற ஜென்மங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

பாலியல் ஆய்வுக்குரிய உயிரியல் மருத்துவக் கல்வியாக காலங்காலமாக படிக்கப்பட்டு வருவது என்னவோ அந்த ஜென்மங்களுக்கு இப்போதாவது தெரிவது தேறக் கூடிய ஒன்று.

பாலியல் என்றால் அசிங்கம் என்று பேச மறுப்பதும் தவறு. பாலியல் என்பது ஒரு ஒழுக்கம் சார்ந்தது. மனித நடத்தையியல் ஒழுக்கம் அவசியமானது என்பது உணரப்படவும் உணர்த்தப்பட்டவும் வேண்டிய அதேவேளை அதன் நன்மை தீமைகள் கட்டுப்பாட்டு எல்லைகள் என்பன வரையறுக்கப்பட்டவையாக அமைய வேண்டியது கட்டாயம். அது சொல்லப்படவும் பேசப்படவும் வேண்டும்.

ஆனா ஒரு விசயம். மிஸ்டர் இளங்கோ சொன்னது போல பாலுறவு என்பது 15 நிமிச விடயமும் அல்ல முதலிரவு என்பது திருமணமான அன்றே நடக்கும் நிகழ்வும் அல்ல. அது ஆண் பெண் மன நிலைகளின் இயைவில் ஒத்துசைவில் அமைய வேண்டியது என்பதே பாலியல் ஆய்வுகளின் தரவுத் தகவல்.

பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஓகசம் (பாலியல் உச்சம்) உள்ளவர்கள். பெண்கள் மல்ரிபிள் ஓகசம் ( பாலியல் உச்சம் ) உள்ளவர்கள். ஆக பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்துசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும் மனிதர்களைப் பொறுத்தவரை. பாலுறவு 10-15 நிமிடத்தில் முடிகிற நிகழ்வல்ல. மாறாக அது வாழ்வின் முடிவு வரை தொடர்வது. மனித இருப்பின் நிலையை உணர்த்துவது. அதை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். ஆண்கள் தீர்மானிக்கலாம் 10 - 15 நிமிடம் என்று. ஆனால் அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது. அவசியம் என்றால் பாலியல் உடற்தொழிற்பாடு பற்றிய மருத்துவ உயிரியல் ஆய்வுகளை நோக்குங்கள்.

வெறும் பிள்ளை பெற்றுக்க என்றால் பேசாமல் ரியுப் பேபி பெத்துக்குங்க. வெறும் உணர்ச்சி வழி தேடல் என்றால் அதற்கும் பல வழிகள் இருக்கிறது. வயது வந்தோர் சாதனக் கடைகள் பெருகிவிட்ட உலகிது. அதையும் தாண்டி பாலுறவு என்பது உணர்வு தாண்டி மனநிலையின் ஒருங்கு நிலை சார்ந்ததிருப்பின் மட்டுமே உடலநிலை ஒத்திசைவும் உடல்நலமும் மன நலமுமானது. அதற்காக பாலுறவு என்பதே வாழ்வைத் தீர்மானிக்கும் அம்சம் என்பதும் தவறு. பாலுறவு கொள்ளாவிட்டால் எந்த மனிதனும் உயிரிழக்க மாட்டான் அல்லது மாட்டாள்.

பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல. அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும். :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே, முதலில் இளங்கோ, 8-10 நிமிடங்கள் வரை தான் உறவு கொள்ள முடியும் என்று கருத்தெழுதியதைப் பார்த்தாக நினைவு. ஆனால் எவ்வித திருத்த எச்சரிக்கையும் இன்று கருத்து மாற்றப்பட்டிருக்கின்றது. என்னாச்சு?

ச்சே..Adults Only என்று பகுதியை ஆரம்பித்துவிட்டு உங்கள் இம்சைகளை தொடருங்கள்! :icon_idea: நாடு கிடக்கிறகிடைக்கு நரி ஞாயிற்றுகிழமை லீவு கேட்குதாம்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் பெருமையுடன் வழங்கும் வாத்தியாரின்..??? காமசூத்திரம் படியுங்கள்.

உடலுறவு என்பது பிள்ளை பெற என புலம் பெயர் நாடுகளில் இன்னும் கணிசமானோர் நினைப்பது உண்மையில் வருத்தத்துக்குரியது. இதனாலேயே இங்கு விவாகரத்துக்களும் பெருகி விட்டன. இலண்டன் வாழ்க்கையில் இது பலருக்கு இன்னும் சவாலகவே இருக்கு.

ஆண்கள் தாம்பத்தியத்திற்காக உடலையும் மனதையும் மிகக் குறுகிய நேரத்தினுள் தயார்படுத்திக் கொள்ளும்படியாக அவர்களது உடல் இசைவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இது நேரெதிர்.(சில விதிவிலக்குகள் தவிர்த்து). இந்த அடிப்படையை புரிந்து கொண்டாலே அனேகருக்கு வாழ்க்கை இனிக்கும்.

இவ் விவாதத்தை பலருக்கும் பயன்படும் வகையில் யாழ் கள அறிஞர் பெருமக்கள் முன்னெடுத்தால் இன்னும் பலருக்கு உதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சே..Adults Only என்று பகுதியை ஆரம்பித்துவிட்டு உங்கள் இம்சைகளை தொடருங்கள்! :icon_idea: நாடு கிடக்கிறகிடைக்கு நரி ஞாயிற்றுகிழமை லீவு கேட்குதாம்! :lol:

இதில் என்ன தவறு! இதுவும் ஒரு வகைக் கல்விதானே. அதாவது கலவியும் ஒரு கல்விதான். இவைகள் இல்லை என்றால் நானும் இல்லை நீங்களும் இல்லை.

உடலுறவு என்பது பிள்ளை பெற என புலம் பெயர் நாடுகளில் இன்னும் கணிசமானோர் நினைப்பது உண்மையில் வருத்தத்துக்குரியது. இதனாலேயே இங்கு விவாகரத்துக்களும் பெருகி விட்டன. இலண்டன் வாழ்க்கையில் இது பலருக்கு இன்னும் சவாலகவே இருக்கு.

ஆண்கள் தாம்பத்தியத்திற்காக உடலையும் மனதையும் மிகக் குறுகிய நேரத்தினுள் தயார்படுத்திக் கொள்ளும்படியாக அவர்களது உடல் இசைவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இது நேரெதிர்.(சில விதிவிலக்குகள் தவிர்த்து). இந்த அடிப்படையை புரிந்து கொண்டாலே அனேகருக்கு வாழ்க்கை இனிக்கும்.

இவ் விவாதத்தை பலருக்கும் பயன்படும் வகையில் யாழ் கள அறிஞர் பெருமக்கள் முன்னெடுத்தால் இன்னும் பலருக்கு உதவும்.

ஓய் வாத்தி நீர் பொதுவா சொல்லுறீர் 10 தலைக்கு அடிப்படை அறிவு இல்லை வந்தா கொத்துத்தான் உமக்கு

:P :P

ச்சே..Adults Only என்று பகுதியை ஆரம்பித்துவிட்டு உங்கள் இம்சைகளை தொடருங்கள்! <_< நாடு கிடக்கிறகிடைக்கு நரி ஞாயிற்றுகிழமை லீவு கேட்குதாம்! :lol:

இது நல்லா இருக்கே அது சரி நரி யார் நாடு எது ??

;)

  • கருத்துக்கள உறவுகள்

நரி எண்றது நீங்க சின்னப்பு

நாடு என்பது உங்க அழகான அமைதியான அல்ப் மலைதவழும் சுவிற்சலாந்து

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது ஒரு கல்வி என்பது இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக உணர்த்தப்பட்டு வந்துள்ளது. தற்போதெல்லாம் வயது 10 இலேயே பாலியல் தொடர்பான அறிவியல் புகுத்தப்படுகிறது. அது வரவேற்கப்பட வேண்டியதுடன் ஆண்களும் பெண்களும் பாலியல் தொடர்பானதும் அதன் உளவியல் உடலியல் தொடர்பானதுமான விஞ்ஞான உண்மைகளை அறியவும் தெரியவும் பயன்படுத்தவும் வேண்டும்.

நேற்றுக் கூட பெரிய பிரித்தானிய ஆய்வறிக்கையில் இங்கிலாந்தில் மட்டும் கடந்த மாதத்தில் 5990 கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்தன. அறிவியல் வளர்ந்துவிட்ட நாட்டில் கூட உடலுறவின் பின் பெண் மேலும் கீழும் துள்ளிக் குதித்துவிட்டால் கரு உண்டாகாது என்று சுமார் 40% மக்கள் இன்றும் நம்புகின்றனராம். அது தவறு என்று அறிவுறுத்துகின்றனர். கிட்டத்டட்ட 6000 சிசுக் கொலைகள் சத்தப்படமால் முடிக்கப்பட்டது பெரியவிடயமல்ல. ஆனால் போர்க்களத்தில் 600 சிறுவர்கள் நின்றுவிட்டால் அது பெரிய குற்றம்.

முதலில் மக்களுக்கு சரியான பாலியல் அறிவிருந்தால் குறிப்பாக வயது வந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் தகுந்த மனவடக்கம் இருப்பின் இந்த சிசுக் கொலைகள் தவிர்க்கப்படக் கூடியது. அதற்காக எவரும் பிரச்சாரமோ குரலோ கொடுப்பதில்லை. அப்பட்டமாக மனித உரிமைகள் கருவில் மீறப்படும் போது அமுசட்டக்கமாக இருக்கும் உலகம் கௌப்பையை விட்டு வந்ததும் மனித உரிமைகள் என்று பிற்றிக் கொள்வது வேடிக்கையானது விணோதமானது சுத்த ஏமாற்றுத்தனமானது. பெண்கள் ஆண்கள் செய்யும் தவறுகளை அவர்களின் பாலியல் பலவீனங்களை அறிவீங்களை களைய முற்படாத உலகம் இன்னும் அக்ருக்கலைப்புக்கு சான்றிதழ் வழங்கி மனிதப்படுகொலைகளை அங்கீகரிக்கிறது. ஒரு வயதான ஆணும் பெண்ணும் தங்கள் தவரால் செய்யும் குற்றங்களுக்கு எப்படி ஒரு சிசுவைப் பழியிட முடியும்...??!

ஊனர்ச்சிக்கு உடல் தேவைக்கு கூடும் ஆண்களும் பெண்களுமே உலகில் அதிகம். பாலுறவு என்பது அதற்கும் அப்பால் மனித பிணைப்புக்கும் இருப்புக்கும் மகிழ்வுக்கும் நலனுக்குமான ஒரு கருவி. அதை அறிந்து அளவோடு ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லைக்குள் அந்த ஒருத்தியின் ஒருவனின் மன்நிலைகள் ஒருங்க நிகழ வேண்டிய ஒன்று. அதைக் கதைப்பதும் புளூ பிலிம் காட்டுவதும் ஒன்றல்ல. விஞ்ஞான பாடத்தில் இனப்பெருக்கத் தொகுதி மற்றும் அதன் கல்வி ஏன் சேர்க்கப்படுகிறது. புளூ பிலிம் காட்டவா..??! முதலில் பெண்கள் தங்கள் சிந்தனைகளை சரியான திசையில் எடுத்து வரும் போது இது கூட அடல்ஸ் ஓன்லி கருத்தாக அன்றி அவசியமான கருத்தாக அமையும்.

அதற்காக இளங்கோவின் தலைப்பு பாலியல் கல்வி புகட்ட முனைகிறது என்பது தவறு. அது முதலிரவு என்பதற்குள் பாலியலை அடக்க நினைக்கிறது. அது தவறானது. ப்லியல் என்பது தனிநபர்களின் மனநிலைகளோடு ஒருங்க வேண்டிய செயற்பாடு. ஆனால் பாலியலின் விளைவுகளை விளக்க வேண்டியது விஞ்ஞானத்தின் கடமை. காரணம் மனிதத் தவறுகள் பாலியல் மூலம் மனித அழிவுகளுக்கு இட்டுச் செல்லக் கூடாது என்பதால்..! :P <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிரவைத் தேடி.....

காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)

என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.

மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

கோதாரி விழுந்தது இந்தவிசயம் எனக்கு இவ்வளவுகாலமும் தெரியாமல் போட்டுது.ஒரு நாசமறுப்பாரும் எனக்கு சொல்லேலை.

<_< :P கு.சாமி நீர் ஓரு வீணாப் போன ஆளையா. :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :P கு.சாமி நீர் ஓரு வீணாப் போன ஆளையா. :D

ஓமோம் வாத்தியள் சொன்னால் சரியாய்த்தானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.