Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 17 ஆயுதக்குழுக்களாம்

Featured Replies

யாழில் 17 ஆயுதக்குழுக்களாம்
 
 
யாழில் 17 ஆயுதக்குழுக்களாம்
யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
யாழில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன.
 
கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.
 
கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்துதல்,கப்பம் பெறுதல்,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுதல் உட்பட பல குற்றச் செயல்களில் இந்த குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த குழுக்களில் ஆவா குழு மற்றும் டினோ குழு ஆகியன முக்கிய குழுக்கள் எனவும் அவற்றில் 18 முதல் 20 வயது க்குட்பட்ட இளைஞர்களே உறுப்பினர்களாக இருப்பதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.
 
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இப்படியான ஆயுத குழு ஒன்றின் உறுப்பினர்களை பல கூரிய ஆயுதங்களுடன் பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
 
யாழ், குடா நாட்டில் இயங்கும் இப்படியான பல குழுக்கள் பற்றிய தகவல்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதுடன் அவற்றின் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில வருடங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வன்முறை குழுக்களை சேர்ந்த 221 பேர் கைது செய்யப்ப ட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

http://www.onlineuthayan.com/news/23503

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புலனாய்வுப் பிரிவினரா????

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எத்தனை குழுக்கள் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன?

3 hours ago, MEERA said:

யாழில் புலனாய்வுப் பிரிவினரா????

அப்படி கேட்க்க கூடாது .....................................அது தப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

யாழில் புலனாய்வுப் பிரிவினரா????

மரத்தை வெட்டுவது மரத்தினால் ஆனா கோடாலி யே :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு அனுசரணை.. சொறீலங்கா சிங்களப் படைத்துறை.. தமிழ் ஒட்டுக்குழு மீதிகள்..  முஸ்லீம் காவாலிகள்.. சொறீலங்கா காவல்துறை.:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.