Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தைத் தேடி நீங்கள் போக வேண்டும் என்றால் ஆன்மீகத்தை நாடுங்கள். சொர்க்கம் உங்களைத்தேடி வரவேண்டும் என்றால் காதலை நாடுங்கள் அந்தக் காதல் பூமியில் ஏற்றுக் கொள்ளப்படுகிற போது வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கின்றது.

மனித உரிமையில் முதல் உரிமை காதலிக்கும் உரிமையாக; பாவத்தின் சம்பளம் மரணம் புண்ணியத்தின் சம்பளம் காதலாக மலர்கின்றது.

காதலை நேசிக்க மறந்தவர்களை, ஒரு போதும் நேசிப்பதும் இல்லை; காதலிப்பது வலிமையைக் கொடுக்கிறது. காதலிக்கப்படுவது தைரியம் தருகிறது ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போதுதான் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசைகள் வெளிவரத் தொடங்கும்.

அப்போதுதான் உலகத்தின் முதல் பரிசுப்பொருளாய் அமைந்ததும் பூக்கள்தான். பரிமாறிக்கொண்டவர்களும் காதலர்கள்தான்

காதலர் தினத்தில் மட்டுமில்லை ஒவ்வொருநாளும் காதலர் தினமாய் மனதில் காதல் தீபம் ஏற்றி கொண்டாடுவோம்.

அன்பே சிவம் காதலே சக்தி.

காதலர் தினம் கொண்டாடுவது சரி என்பதே என் அபிப்பிராயம்.

கருத்துக்கள் முன் வைத்த அனைவருக்கும் நன்றிகள்.

கறுப்பி அக்கா பிரித்தானியாவில் மட்டும் 21 மில்லியன் றோஸ்களும் இன்னும் பல மில்லியன் சொக்கிலேட் பார்களும் பல மில்லியன் பெறுமதியான நகைகளும் விற்றுத்தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்கள் ரெம்பவே வழிஞ்சு வழிஞ்சு வாங்கிக் கொடுக்க பெண்கள் நல்லா வாங்கி அனுபவிக்கிறாங்க என்று பிபிசி கவலைப்பட்டிச்சு. இப்படி பிசினஸ் பெருக வேணும் என்றால் காதல் சொர்க்கத்தைக் காட்டும் என்று பரப்புரை செய்யத்தான் வேணும். நீங்கள் செய்யுங்கோ.

தனிமனித ஆளுமையைக் காதல் தட்டி வளர்க்கும் என்பதிலும் ஒரு பெண் மீது அல்லது ஆண் மீது ஏற்படும் ஈர்ப்பே அவனின் அல்லது அவளின் ஆளுமையில் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக காதல் சொர்க்கத்தைக் காட்டும் என்பதும் காதலர் தினம் கொண்டாடுவது சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும் என்பதும் சுத்த முட்டாள் தனமாகவே எமக்கு தென்படுகிறது. காதல் வாழ்வின் குறித்த ஒரு பருவத்தில் தொடங்கி முடிவுவரை ஒருவரோடு மட்டும் நிலைப்பின் மட்டுமே அது மகிழ்வானது. காதல் என்ற பெயரில் மாப்பிள்ளை தேர்வு அல்லது பெம்பிளை தேர்வு நடத்துவது காதலுக்கு அர்த்தம் புரியாத மனித எண்ணங்களின் வெளிப்பாடு. :P <_<

  • Replies 54
  • Views 12.1k
  • Created
  • Last Reply
post-3028-1171457940_thumb.jpg

post-3028-1171457940_thumb.jpg

ஓ அப்படியா அது சரி உங்கள் காதலர் உங்களுக்கு என்ன வாங்கிதந்தவர் :P

ஓ அப்படியா அது சரி உங்கள் காதலர் உங்களுக்கு என்ன வாங்கிதந்தவர் :P

இதுகள நம்பி எப்படி வாங்குறது? வழிய வழிய வாங்கி தந்து போட்டு, பிறகு அங்கால போய் சொல்ரது, என் பேஸை காலி செய்து விட்டார்கள் என்று...உந்த வேலையே எங்களுக்கு வேண்டாமப்பா...விருப்பமெண்டால

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்பாட பணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீனம். யாழில தட்ட ஏலுற கை ஏன் உழைக்க மாட்டுதோ..?! அல்லது அம்மாட்ட அவாட சொந்த உழைப்பில இருந்து வாங்கிக்கிறது. அப்பா என்ன அடிமாடா. உழைச்சுப் போட்டிட்டே இருக்க...! அம்மாவும் பிள்ளைகளும் இரை மீட்க. அப்புறம் இங்க வந்து ஆண்கள் மீது ஏறி விழ.

வேண்டிக் கொடுத்தா வாங்கிக்குவினம். வேண்டிக் கொடுக்க யாரும் இல்லைப் போல. 50 பவுணுக்கு வேண்டினா 5 பவுணை நீட்டிறதுதான் பெண்களின் புத்தி..! இதுக்குள்ள தலைக்கணம் வேற. காசுக்கு மட்டும் அப்பா வேணும் மற்றும் படி அவர் ஆண்..! :rolleyes::rolleyes:

ஏன் அப்பாட பணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீனம். யாழில தட்ட ஏலுற கை ஏன் உழைக்க மாட்டுதோ..?! அல்லது அம்மாட்ட அவாட சொந்த உழைப்பில இருந்து வாங்கிக்கிறது. அப்பா என்ன அடிமாடா. உழைச்சுப் போட்டிட்டே இருக்க...! அம்மாவும் பிள்ளைகளும் இரை மீட்க. அப்புறம் இங்க வந்து ஆண்கள் மீது ஏறி விழ.

அப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு சமச்சு தந்தால் அம்மா வேலைக்கு போய் உழைத்து தருவா தானே..அப்பாக்கு சமைக்க தெரியாதபடியால், அவர் சம்பாதிக்க வேண்டி இருக்கு :P ...வீட்டில் யார் காசு சம்பாதிகிறார்களோ, அவர்களிடம் சுரண்டும் முழு உரிமையும் பிள்ளைகளுக்கு உண்டு :D ...

எனக்கு உழைக்க வேண்டிய நேரத்தில் உழைப்பேன்...இப்போ படிக்கும் நேரம், படிக்கிறேன்... :rolleyes:

வேண்டிக் கொடுத்தா வாங்கிக்குவினம். வேண்டிக் கொடுக்க யாரும் இல்லைப் போல. 50 பவுணுக்கு வேண்டினா 5 பவுணை நீட்டிறதுதான் பெண்களின் புத்தி..! இதுக்குள்ள தலைக்கணம் வேற. காசுக்கு மட்டும் அப்பா வேணும் மற்றும் படி அவர் ஆண்..! :D:lol:

இப்பவெல்லாம், ஈசியாவும் ஓசியாவும் கிடைக்கிற ஒரே ஒரு சாமான் இந்த போய்பிரண்ட், கேர்ள்பிரண்ட் தானே...இதெல்லாம் ஒரு பிரச்சனையா? ..எங்களுக்கு என்று சில கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் இருக்கு...அதன் படி தான் எங்களது ஒவ்வொரு அடியும் இருக்கும்.. :rolleyes: :P

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் சுரண்டினால் அது பெரிய பிரச்சனையே அல்ல. ஆண்கள் எப்பவும் காசு விசயத்தில் டோன் கெயர் தான். அம்மாமார் வேலைக்குப் போகாத போதும் அப்பாட சம்பளத்தை கையில கண்ட உடன பண்ணுற அதிகாரம் இருக்கே அதுவே ஓவர். இதுக்குள்ள அவர்களா உழைக்கேக்க எத்தனை மடங்கு இருக்கும். பாங் காட்டை கண்ணிலும் காட்டார்கள். பல சுய திட்டங்களைத் தீட்டிட்டு மெளனமா இருப்பார்கள். கணவன் ஏதாச்சும் கேட்டால் போதும் உடன உங்கட உழைப்பையா தாறீங்க என்று பதில் கேள்வி சூடா வரும். ஆனால் அப்பா என்ற ஆண் பாவம். அது எப்படித்தான் உழைச்சாலும் தனக்கென்று வைச்சிருக்க முதல் மனிசிட கையிலதான் கொடுக்கும்.

ஏதோ ஊரையும் உங்களையும் ஏமாற்றாத கொள்கைகளை வகுத்துக் கொள்ளுங்க. பல பிள்ளைகள் வகுத்திருக்கிற கொள்கைகள் ஊரையும் ஏமாற்றி பெற்றோரையும் ஏமாற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றுவதாகத்தான் அதிகம் இருக்கிறது. :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

//இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.//

அப்படி சொல்லி சொல்லி, நீங்களே மறுபடி மறுபடி பதில் எழுதுவதை தான் என்னால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

//இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.//

அப்படி சொல்லி சொல்லி, நீங்களே மறுபடி மறுபடி பதில் எழுதுவதை தான் என்னால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை..

வம்புக்கு நிக்கிற மூக்கிக்கு மூக்கறுக்காட்டா முழு ம்ட்டாள் ஆக்கிடுவாங்க மொத்த ஆண்களையும். :P :D

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

வம்புக்கு நிக்கிற மூக்கிக்கு மூக்கறுக்காட்டா முழு ம்ட்டாள் ஆக்கிடுவாங்க மொத்த ஆண்களையும். :P :D

அறுப்பிங்க, அறுப்பிங்க! அது மட்டும் எஙகட கை என்ன புழியங்காவா பறிக்கும்? :D சீவிடுவோம்..ஜாக்கிரதை! :P வேறென்ன பகல் கனவெல்லாம் வைச்சிருக்கீங்க? :o:o

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

மருத்துவர் நமக்கல்ல உங்கள் தோழி மூக்கிக்குத்தான் அவசியம். :D:D

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

இவர் ஏற்கனவே ஒரு மனநல மருத்தவரின் கண்காணிப்பின் கீழ் தான் உள்ளார்..இருந்தாலும், அந்த மருத்துவர், இவரை எனி கடவுள் தான் காப்பாத்தவேன்டும் என்டு சொல்லீற்றார்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏற்கனவே ஒரு மனநல மருத்தவரின் கண்காணிப்பின் கீழ் தான் உள்ளார்..இருந்தாலும், அந்த மருத்துவர், இவரை எனி கடவுள் தான் காப்பாத்தவேன்டும் என்டு சொல்லீற்றார்! :lol:

ஏன் அதே டாக்டர் உங்களுக்கும் அதையேதான் சொல்லிட்டாரோ. இல்ல எங்களுக்கு சொன்னது எப்படி உங்களுக்கு....... :icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோட எல்லாம் மனநல கேஸ்ஸா?

நான் தப்பிச்சன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சதே அப்படி ஒன்றுதானே கதுப்பி அக்கா. எப்படி நீங்க தப்பிக்க முடியும்..??! ஒரு மனநோயாளி தப்பிக்க மற்றதுகள் விட்டுடுங்களா என்ன..??! :lol::icon_idea:

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொடர்கிறது இந்த வினா????????????????

காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்

1.

'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட ஒரு சக மனிதனாய் இருக்கவே என்றும் விரும்புவேன்.

இது என் நேசம் என்னும் பெருங்கடலின் சிறுதுளிதான். முழுச் சமுத்திரத்தையும் காட்ட எனக்கு இப்பிறப்பின் பின்பான மரணமும் கூடப் போதாது. உன்னிலிருக்கும் நேசத்தை எத்தனையோ நாட்களாய் எழுதவிரும்பி இன்றாவது சாத்தியமாகியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. அதற்காய் இந்த காதலர் தினத்துக்கு நன்றி. நமக்கான நேசமான நாட்கள் 365 நாட்களும் எமக்காய் இருக்கின்றன என்பதை உனக்கு நினைவுபடுத்தத் தேவையும் இல்லைதானே பிரிய தோழி?'

(தோழரொருவரின் மடலொன்றிலிருந்து..)

மாயையும் மிகைபுனைவும்

காதல் - இவ்வொற்றை வார்த்தையைப்பற்றி காலங்காலமாகக் கவிஞர்களும், இன்னும் பலரும் எவ்வளவோ எழுதிக் குவித்துவிட்ட பின்னர், நானும் சொல்வதற்கு இனியும் என்னிடம் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. இரு மனங்களிடையேயான பிணைப்பை - அவ்வுறவு என்ன பெயரால் அடையாளப்படுத்தப்பட்டாலும் (தாய்-சேய், நட்பு, கணவன்-மனைவி.. இன்னபிற) - காதலென்று அழைக்கலாமென்றே நினைக்கிறேன்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், மாமன் தினம், மச்சான் தினம்... என்பவற்றின் வரிசையில் தவிர்க்க முடியாத இடம் வகிக்கும் இக்காதலர் தினத்தின் பின்னணியென எங்கேயோ கேள்விப்பட்டது:

ரோமாபுரிப் பேரரசில் அரசை விஸ்தரிப்பதற்கான மாபெரும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாம் அது. இளைஞர்கள் எவருக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாதென அரசர் பாதிரிமார்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம். அனைவரது கவனமும் யுத்தம்.. யுத்தம்.. யுத்தத்தின் மீது மட்டுமேயிருக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்திருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் 'வலண்டைன்' என்ற பாதிரியார் இளைஞர் பலருக்கு இரகசியமாகத் திருமணம் செய்துவந்தமை தெரியவர, அரசர் அவரைத் தூக்கிலிட்டு விட்டாராம். அப்பாதிரியார் தூக்கிலிடப்பட்ட தினமே இன்று காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

கதை ஒருபுறம் கிடக்கட்டும். இவ்வாறு 'தினங்கள்' கொண்டாடுவதன் பின்னணியை எடுத்து நோக்குவோமாயின், மேற்கத்தைய உலகின் - பல்தேசியக் கம்பனிகளின் - வியாபார உத்திகளில் ஒன்றே இதுவுமென்பதை சொல்லத் தேவையில்லை. இத்தினங்களின் பெயரால் அதிகம் பேறு பெறுவது - பரிசுப்பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியால் - இவை மட்டுமே. வரவிருக்கும் 'பெண்கள் தினம்' குறித்தும் விமர்சனங்கள் பலவுண்டு. இதைக் கொண்டாடுவதன் சரி, பிழைகளை விடுத்துப் பார்த்தாலும்.. இன்றைய பொழுதில் இதன் தேவையென்ன என்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பெண்ணிய அமைப்புகள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதும், கோஷமிடுவதும்.. வருடத்தில் ஒரேயொருநாள் பெண்களை கடவுளராகத் தூக்கிப் பிடிப்பதும், பிறகு தூர வீசியெறிவதும்.. பெண்களுக்காவது ஒரு நாளிருக்கிறது, எமக்கென்று என்னதான் இருக்கு.. என சில ஆண் தோழர்கள் விஷமத்தனமாகக் கேட்கும்போது, மிச்சம் 364 நாளையும் கைப்பற்றிக் கொண்டிருப்பது யாராமென்று பதிலளிப்பதுபோல.. எல்லாக் கேள்விகளுக்கும் இலகுவில் மறுமொழிகளைக் கண்டடைந்துவிட முடிவதில்லை.

2.

ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல

என்னிடத்தில் ஒரேயொரு நினைவு மட்டும்.

அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை.

அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.

எனக்குத் தோன்றுகிறது, என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு

அது தெளிவாகத் தெரியுமென்று -

சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரைவிட

அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.

எனக்குத் தெரியும், கடவுளர் மனிதரைக் கல்லாக மாற்றியுள்ளனர்,

மனங்களை மட்டும் அப்படியே விட்டுவைத்து.

அந்த அற்புதமான சோகங்கள் இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று

என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

- அன்னா அக்மதோவா

மகிழ்வும் மனக்கிளர்வும்

(இப்படித்தான் மலர்ந்தது ஒரு தினம்...)

கடந்திருந்த ஆண்டுகளில் எத்தனையோ காதலர் தினங்களைக் கடந்துவிட்டிருக்கிறேன்.., எந்தச் சிலிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளுமில்லாமல். பெப்ரவரி 14 என்றாலே பதட்டமடையச் செய்வது அன்றைய தினத்தில் அணியப் போகும் ஆடைதான். குறிப்பாக எதையும் உணர்த்தாத வர்ணங்களில் உடைகளைத் தேடிப்பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெள்ளை தூய்மையைக் குறிக்குமென்ற நினைப்பில் அணிந்துகொண்டு போனால், தெருவில் எவனாவது சொல்லிவிட்டுப் போவான்.. "அட, vacancy இருக்கிறது போல.." பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் கைக்குட்டை கொண்டு போனால்கூட தொலைந்தோம். நகர வாழ்க்கை அப்படி.. தொல்லைகளின்றி வாழ்வதென்பது சற்றுச் சிரமம்தான்.

வாழ்வின் அதியுன்னதமான தருணமெதுவென்று உங்களைக் கேட்டால் என்னவென்று சொல்வீர்களாயிருக்கும்..? சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கேட்டிருந்தால்.. நட்ட நடுவிரவில் பௌர்ணமி நிலவொளியில் கடற்கரை மணலில் கால்புதைய மனதுக்குப் பிடித்த ஒருவருடன் நடப்பது, நிலவு ஒளிந்துகொண்ட கும்மிரவொன்றில் நட்சத்திரக் கூட்டங்களை எண்ணியபடி பசும்புற்றரையில் படுத்துக்கிடப்பது, 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியைப்போல புயல்வீசுமோர் நாளில் தனித்து படகோட்டிச் செல்வது, ரஷ்ய ஸ்தெப்பி வெளியிலும், கஸாக்கியக் கிராமங்களினூடும் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிவது, நைல் நதியின் லயத்திற்கேற்ப விரல்களால் தாளமிட்டபடி ஆபிரிக்கக் கண்டத்தின் குறுக்குநெடுக்கே அலைவதென... இப்படியே நீண்டிருக்கும் என் பட்டியல். இன்றோ, கட்டிலில் மல்லாந்து படுத்தபடி.. திறந்திருக்கும் சாளரத்தினூடாகத் தவழ்ந்து வரும் தென்றலை ஆழ உள்ளிழுத்து, மாமரத்து இலைகளின் சலசலப்பையும், அவற்றின் கிளைகளினூடே துண்டுதுண்டாகத் தெரியும் இரவு வானத்தையும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் இரசித்தபடியிருக்கும் நடுநிசிப் பொழுதொன்றில் மனதிற்குப் பிரியமான ஒருவர் எனக்காகத் தானெழுதிய கவிதையொன்றை வாசிக்கக் கேட்பதுதான் என்பேன். அந்தத் தினம் எவ்வளவு வனப்புமிக்கதாயிருந்திருக்க

Edited by இளைஞன்

இயந்திரமயமாகும் உலகில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என வர்த்தக மயமாக்கப்படும் காதல்.........வேறொன்றுமில்லை. வர்த்தகம், அதனூடான பணம்.இதனை முன்னிலைப்படுத்தும் அதைக் கொண்டாடவும் வேண்டுமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகம் பெருகத்தானே வேணும் நல்லாக் கொண்டாடுங்கோ. ஆனால் ரோசாப் பூக்களை மட்டும் கொய்யாதேங்கோ. ஆக்களின்ர மனங்களை கொய்து கொய்து வீசிட்டே தினமொரு காதல் செய்யுங்கோ..! :wub::D

ஓகே ஓகே இறுதியாக என்ன சொல்ல வாறீங்க காதலர்தினம் கொண்டாடுவது அவசியம் தானா? இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் ஒகே,ஆனால் அதை எப்படி கொண்டாடுறது :lol:

காதலர்தினம் தனிய கொண்டாடுவதா இல்லை குழுவாக கொண்டாடுவதா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே ஓகே இறுதியாக என்ன சொல்ல வாறீங்க காதலர்தினம் கொண்டாடுவது அவசியம் தானா? இல்லையா?

என்னைப் பொறுத்தவரை நாளும் அன்பா நாலு வார்த்தையைப் பரிசளிக்கிற பணியைச் செய்தாலே போதும். சிலருக்கு ஆக்களோட கதைக்கப் பேசக் கூடத் தெரியாது.. இல்ல நேரம் கிடைக்காது. அப்படிப்பட்டதுகளுக்கு இந்த நாள் அவசியம் தான். அன்றாவது அன்பாக் கதைச்சு அன்பாப் பேசி.. அன்பாப் பரிமாறி.. அன்பை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படலாம் எல்லோ. ஆனால் அது நடக்கிறதில்ல.. அவனவன் வைன் போத்தலும்.. ஒரு ரோசாப் பூச்செண்டும் கொண்டு ஓடிறான்.. ஏனென்றால்.. காதலர் தினமாம்.. காதலியோட கப்பியா இருக்கனுமாம் என்று..! இதுகள் எப்ப அன்பைப் புரிஞ்சு.. எப்ப.. உதுகளை உணர்ந்து கொண்டாடப் போகுதுகள். நடக்காத காரியம்..!

சிலது காதலிக்கிறது முதல் எரிஞ்சு விழுகிறதையே செய்யுதுகள். ஆணும் பெண்ணும். உதுகளுக்கெல்லாம் எதற்கு காதல்..! :lol:

யப்பா இவ்வளத்தையும் வாசிக்க எனக்கு தலை சுத்துது

கொண்டாட விருப்பமான ஆக்கள் கொண்டாடுங்கோ விருப்பமில்லாத ஆக்கள் விடுங்கோ.

பரிசு என்பது காசு செலவழிச்சுத்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

உண்மையான அன்பை பாசத்தை வெளிப்படுத்துங்கோ அந்தப் பரிசுக்கு

நீங்கள் எவ்வளவு காசு கொடுத்தாலும் ஈடாகாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.