Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவின் முகாம்கள் சில விசேட அதிரடிப்படையால் அடித்து மூடபட்டது - உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி.

Featured Replies

தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருபபவதற்காகவே இந்த கண்துடைப்பு நாடகம் மேற்கொள்ளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:

http://nitharsanam.com/?art=22049

Edited by Norwegian

பச்சைமட்டையால் செல்லமாக அடித்தார்களாக்கும்.

ஐயோ பாவம்! பாதகர்கள் பச்சைக் குழந்தைகளை பச்சை மட்டையால் அடித்தார்களா?

நிதர்சனம் இணையம் சொன்னால் மிகத்துல்லியமான தகவலாகத்தான் இது இருக்கும்! :P

நேற்றுத்தான் இவர்களும் தமிழர்களா? நக்கிப்பிழைப்பவர்கள்

என கேள்வி எழுப்பியிருந்தேன். நாம்தான் துரத்திவிட்டாலும்

சிங்களவனும் அடே தெமிள பள்ளோ. என்று அடித்துத் துரத்து

கிறான். கேடுகெட்ட ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இராணுவம் தமிழ் குழுக்களை வளர்த்து. அது புலிகளை ஒடுக்க வேணும் எண்ட எண்ணத்தில் மட்டும் அல்ல. தமிழீழ இராணுவத்தை அமைக்க உதவிகளும், கனகரக ஆயுதங்களையும் வளங்கியது. இண்றய திகதிவரை அவர்களை இந்திய துணைப்படையாக வரைந்தும் வைத்து இருக்கிறது. அதுக்கு முக்கிய காரணம் இந்த குழு தங்களுடைய தென்னாசிய நலன்களுக்காய் இலங்கை நடவடிக்கைகளுக்கு உதவும் எண்ற வகையில், அது தமிழீழம் அமைந்தால் கூட தங்களின் ஆதரவு அமைப்பு அங்கு பலமாக இருக்க வேணும் எனும் ஒரு எண்ணத்தில்.

ஆனால் கருணா குழு அப்பிடி இல்லை. வெறும் புலிகளை ஒடுக்க உதவும் கூலி ஊடுருவலாளர்கள் எனும் ரீதியில் பயன் படுத்த படுகிறது. இந்த குழு தங்களையும் மீறி பலமாகி விடக்கூடாது என்கிற கவலை இலங்கை இராணுவத்துக்கோ அரசாங்கத்துக்கோ இருக்கும். JVP மாதிரி இன்னும் ஒரு தலையிடியாக இந்த குழு ஆயுத ரீதியிலையும் படை பலத்திலும் வளர்வதை அரசாங்கம் விரும்பும் எண்டு இந்த குழு நினைத்தால் சரியா வருமா.?

Edited by ஆறுமுகம்

கருணா குழுவினர் நையயப்புடைக்கப்பட்டனர்

நீலவாணன் - மட்டு - 10 மாசி 2007

நேற்று முன்தினம் கருணாகுழு உறுப்பினர்கள் சிலர் வாகரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டனர். விசேட அதிரடிப்படையினருடன் வாகரையில்; தங்கியிருந்த கருணா குழுவினரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். வாகரையில் இறால் பிடித்து விட்டு திரும்பிய கருணா குழுவினரை விசேட அதிரடிப்படையினர் விசாரித்ததாகவும் “யாருடைய அனுமதி பெற்று இறால் பிடிக்க சென்றீர்கள்” என வினவியதாகவும் இதனை அடுத்து ஆத்திறமுற்ற கருணா குழு உறுப்பினர்கள் விசேட அதிரடிப்படையினருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர். தம்மை எதிர்த்து பேசியமைக்கும், தம்மிடம் அனுமதி பெறாது இறால் பிடித்தததையும் சுட்டிக்காட்டிய விசேட அதிரடிப்படையினர் கருணா குழு உறுப்பினர்களை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து ஆத்திரமுற்ற சில கருணா குழு உறுப்பினர்கள் தமது அலுவலகங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து கருணா குழுவின் கல்முனை அலுவலகத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியுள்ளனர். இதைக் கேள்வியுற்ற கழவாஞ்சிக்குடி கருணா குழு அலுவலகத்திலிருந்த ஆறு பேரும் வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவருமே கருணா குழுவில் இருந்தும் விட்டு வெளியேறியுள்ளனர்.

சிறீ லங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் பல கருணா குழு உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தம்முடன் மிண்டும் வந்து இணையுமாறு திரு கருணா அவர்கள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. விசேட அதிரடிப்படையின் இந்த நடவடிக்கை பற்றி தான் உடனடியாக சிறீ லங்கா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இப்படியான நிலைமைகள் நடை பெறாது என்று திரு கருணா அவர்கள் கூறிய போதும் கருணா குழுவில் இருந்து பலர் தொடர்ந்தும் வெளியேறி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.thaakam.com/

கிழக்கில் சில கருணா கூலியின் முகாம்கள் மூடுவிழா நடைபெற்றுள்ளது தானாம்! இன்று இதனை எனது கல்முனை நண்பன் ஒருவர் உறுதி செய்தார்!! அண்மையில் அம்பாரையில் சிங்கள அதிரடிப்படை மீது ஒரு பாரிய தாக்குதல் நடைபெற்றது நினைவிருக்கலாம்!! எதோ பாரதூரமான சம்பவம் நடைபெற்று விட்டதுதானாம்!!

விரைவில் இச்செய்தி தமிழநெற் போன்றவற்றில் வரத்தான் போகிறது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் இப்ப ஆவது தாங்ஙள் கறி வேப்பிலைதான் என்பது புரிந்து இருக்குமா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழும் குழந்தையைத் தேற்றுவதற்காக "ஆய் ஆய்" என்று கதிரை மேசைக்கும் சிலசமயம் அடுத்தவருக்கும் அடிப்பது போல நடிப்போமல்லவா?

அது போலத்தான் இதுவும் ஐநா வைத் தேற்றுவதற்கான ஒரு நாடகம்.

ஆனால் இங்கு அடிப்பது போல நடிக்காமல் உண்மையாகவே பச்சை மட்டையால் அடிக்கிறார்கள், ஏனென்றால் ஒட்டுக்குழுக்களும் அதன் தலைவனும் எப்படியும் திரும்பி வந்து தானே ஆக வேண்டும் (வயிறு காயும் போது திரும்பி வந்து தானே ஆகவேண்டும்?!.)

கருணாவோடு சேர்ந்து 1 மாதத்திற்கு மேலாக கஸ்டப்பட்டு பிடிச்ச கிழக்கை இனி கருணா குழுவோடும் பிரச்சனை எண்டா ஒரு நாளும் தேவையில்லை திருப்பிப் பிடிக்க. 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு. கொஞ்சம் பொறுங்கோ.

ஆனா ஒண்டு உயரத்திலை நிணடு குண்டு போடக் கூடாது. வீரம் இருந்தா எங்களிட்டை தாராளம் இருக்கிறதின்ரை றேஞ்சுக்குள்ள இறங்கி நிண்டு பாரம்பரிய முறைப்படி அடிபட வேணும். அப்படி எண்டா நீ வீரன்.

சோமாலியாவில F16 விழுத்தினவங்கள் எண்டா உதுகள் எல்லாம் சின்ன விசயம்.

ஆமா உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் படதில ஒரு சீன். அது புனிதமான் புத்தர் கோவில் நீ அடிச்சா நான் திருப்பிஅடிக்கக்கூடாது என்ற புத்தரின் வாக்குக்கமைய நான் அடிக்கேல்ல. இப்ப அண்ணாச்சி எல்லாற்ற கோவணமும் கிழிஞ்சு காற்றில ஆடுது. சமாதானம் எல்லாம் ஒரு பயந்தவனை இருத்தி எழுப்ப பாவிக்கும் ஒரு காகித குப்பை எண்டு மட்டும் உலகத்தமிழர் எல்லோரும் விளங்கிக்கொண்டீனம். எனி அடிக்கோணும் எண்டு எல்லாரும் கனவிலேயும் உலட்ட வெளிக்கிட்டீனம் எண்டு கன பெஞ்சாதிமார் கொம்பிளேனாம் எண்டு சிலரை போய் கோலில படுக்க விட்டாச்சம் எண்டு பகிட்டிக்கு கதக்காம சீரிய சா சனம் பேத்டே பாட்டிகலில புருஸன் மார் நொந்துகிறீனம். ஆக வெளிநாடு உள்நாடு எல்லோரும் இழவு காத்த கிளிபோல குறுக்கால போன நல்ல மனுசன் சொன்ன மாதிரி 22 ம் திகதியை பார்த்தபடி இருக்கிறீனம்.காகம் இருக்க பனம் பழம் விளுந்தது போல கருணாவும் ஆமிக்கு அடிபோட வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டுடுவார். இந்தியன் ஆமியை கலைக்க சிங்களவனோட கூட்டுச் சேருரது சரி எண்டா. சரி எம்மட மக்கள் ஏதோ பிளை விட்டுத் திருந்திரதில்லையா.... இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து உவையை உதைத்தா எப்படி இருக்கும். :rolleyes::D

  • தொடங்கியவர்

ஐயா நினைத்ததை முடிப்பவரே, முதலில் நீங்க நினைத்ததை மற்றவருக்கும் விளங்கும்படியா எழுதினா என்ன?

தமிழென்னு தெரியுது ஆனால் எனக்கு புரியிறமாதிரியில்லை. என்னிலைதான் பிழையோ தெரியலை,

சரி நண்பர்களையாவது கேட்போம் உங்களுக்குப் புரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவோடு சேர்ந்து 1 மாதத்திற்கு மேலாக கஸ்டப்பட்டு பிடிச்ச கிழக்கை இனி கருணா குழுவோடும் பிரச்சனை எண்டா ஒரு நாளும் தேவையில்லை திருப்பிப் பிடிக்க. 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு. கொஞ்சம் பொறுங்கோ.

ஆனா ஒண்டு உயரத்திலை நிணடு குண்டு போடக் கூடாது. வீரம் இருந்தா எங்களிட்டை தாராளம் இருக்கிறதின்ரை றேஞ்சுக்குள்ள இறங்கி நிண்டு பாரம்பரிய முறைப்படி அடிபட வேணும். அப்படி எண்டா நீ வீரன்.

சோமாலியாவில F16 விழுத்தினவங்கள் எண்டா உதுகள் எல்லாம் சின்ன விசயம்.

:rolleyes::D:D

கருணாவிற்கு 100 கோடியாம் அறுவது வாகனங்களாம்! - ஆதாரம் தாகம் இணையத்தளம்

www.thaakam.com

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவை விசேட அதிரப்படை அடித்துக் கலைப்பதையிட்டு ஏன் சந்தோஷப்படவேண்டும்? தென் தமிழீழ மக்கள் அவர்களை விரட்டும் காலம் வந்தால்தான் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் விடிவு வரும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.