Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்
 

இதுவே உங்கள் கடைசி ஆட்டம்: மிரட்டிய கம்பீர்; அசத்திய வீரர்கள்!

 

 
gambhir89

 

ஞாயிறு அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

131 ரன்கள் என்பது மோசமான ஸ்கோர் அல்ல. ஆனால் கொல்கத்தா கேப்டன் கம்பீரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்தார் தெரியுமா? இதுகுறித்து ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதாவது:

கடந்த 7 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் உள்ளேன். ஆனால் அன்றைய தினம் நான் சீற்றத்தில் இருந்தேன். குஜராத் அணிக்கு எதிரான தோல்வி இன்னமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இடைவேளையில் நான் எப்போதும் பதூரி மீன் என்கிற உணவை எடுத்துக்கொள்வேன். ஆனால் அன்று அதற்குப் பதிலாக குளியலறையில் ஷவர் முன்பு 4 நிமிடங்கள் நின்றேன், என் கொதிப்பு அடங்கும் என்று. ஆனால் அடங்கவில்லை. என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஆனால் அதிலும் தோல்வியடைந்தேன். 

இடைவேளை முடிகிற சமயம் அணி வீரர்களை ஒன்று திரட்டினேன். வெளியே 60,000 பேர் ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஓய்வறை நிசப்தமாக இருந்தது. வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுகூட கேட்கும் அளவுக்கு.

நான் பேசத் தொடங்கினேன். எல்லாவற்றையும் கொட்டினேன். வீரர்கள் முனைப்புடன் விளையாடவேண்டும் என்றெண்ணினேன். அவர்கள் போராடவேண்டும், வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினேன். உறுதியாக சொன்னேன் - முனைப்புடன் விளையாடாதவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிற கடைசிப் போட்டி இதுவாக இருக்கும். குறைந்தபட்சம் என் தலைமையில். 

நான் இப்படிப் பேசியதைப் பார்த்து வீரர்கள் பலர் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெரும்பாலும் கொல்கத்தா அணி வீரர்களுடன் சகஜமாகவே நான் பழகுவேன். குறும்புகளும் செய்வேன். ஆனால் அன்றைய தினத்தின் மோசமான பேட்டிங் என்னைப் பாதித்தது. அதனால் அப்படிப் பேசவேண்டியதாயிற்று. ஆனால் அணி வீரர்கள் என் பேச்சுக்கு சரியான பதில் அளித்தார்கள். தங்கள் வாழ்க்கையில் முக்கியமான போட்டி என்பதாக விளையாடினார்கள். அதனால்தான் நாங்கள் வெற்றி கண்டோம். ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களிடம் நான் மோசமாக நடந்துகொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினேன் என்று கம்பீர் எழுதியுள்ளார்.

ஞாயிறு அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

http://www.dinamani.com/

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?
 
புனே சூப்பர் ஜெயன்ட் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (பெங்களூரு, ஐதராபாத், மும்பைக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றியை ருசித்ததும் அடங்கும்.

சரியான நேரத்தில் விக்கெட் கீப்பர் டோனி, ரஹானே பார்முக்கு திரும்பியிருப்பதும், தொடக்க ஆட்டக்காரர் திரிபாதியின் நேர்த்தியான பேட்டிங்கும் புனே அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் ஸ்டீவன் சுமித் படையினர் முனைப்பு காட்டுகிறார்கள்.

201704260943199491_Kolkata-Knight-Riders

முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை சேகரித்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் 131 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி அதை வைத்து கொண்டு பெங்களூருவை 49 ரன்களுக்குள் மடக்கிஅனைவரையும் மூக்கு மீது விரலை வைக்க வைத்துவிட்டது.

“கடைசி வரை நம்பிக்கையையும், உத்வேகத்தையும் இழக்காமல் களத்தில் அதி தீவிரமாக செயல்படவேண்டும். சற்று தளர்ந்தாலும் அணியில் இடத்தை இழக்க நேரிடும்” என்று கம்பீர் சக வீரர்களை எச்சரித்ததன் பலனே அந்த சூப்பர் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே அணிக்கும் ‘வேட்டு’ வைக்க கங்கணம் கட்டி நிற்கும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/26094310/1081992/Kolkata-Knight-Riders-vs-Pune-Supergiant--match-on.vpf

  • தொடங்கியவர்

கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

 
 
கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே
 
புனே:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி புனே மகாராஷ்டிரா அசோஷியேன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களான அஜய் ரகானே, ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. திரிபாதி 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரகானே உடன் கேப்டன் சுமித் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர்.
201704262211342177_Cri2._L_styvpf.gif
ரகானே 46(41) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேனியல் கிறிஸ்டியன் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுமித் 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.
201704262211342177_Copy%20of%20Cri._L_st
இதனையடுத்து 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகின்றது. கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/26221123/1082163/RPS-set-target-183-to-Kolkata-Knight-Riders.vpf

  • தொடங்கியவர்

உத்தப்பா, காம்பீர் அதிரடியால் புனேவை வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஐ.பி.எல். தொடரில் உத்தப்பா, காம்பீர் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரைசிங் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 
உத்தப்பா, காம்பீர் அதிரடியால் புனேவை வீழ்த்தியது கொல்கத்தா அணி
 
புனே:

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நரேன் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் காம்பீர் உடன் உத்தப்பா இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.
201704262351043818_IPL222._L_styvpf.gif
புனே வீரர்களின் பந்துவீச்சுகளை உத்தப்பா பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். அவருக்கு கேப்டன் காம்பீரும் உறுதுணையாக ரன்களை சேர்த்தார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

அதிரடியாக விளையாடிய உத்தப்பா 47 பந்துகளில் 87 ரன்களில் எடுத்திருந்த போது அவுட்டானார். அவரை தொடர்ந்து கேப்டன் காம்பீரும் 62 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவா(6), மணிஷ் பாண்டே(0) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற புனே அணி தனது 4வது தோல்வியை சந்தித்துள்ளது.

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய உத்தப்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/26235101/1082167/Kolkata-Knight-Riders-won-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்
 
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது) 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான விராட்கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த சீசனில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாததால் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பலம் வாய்ந்த பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடக்க இருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு அணி 49 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது.

எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையுடன் பெங்களூரு அணி களம் காணுகிறது. முந்தைய மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்.

201704271005358384_ipl-gueh._L_styvpf.gi

குஜராத் லயன்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். வெய்ன் பிராவோ விலகியதால் அவருக்கு பதிலாக இர்பான் பதான் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சொதப்பிய அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

புனே மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்திய குஜராத் அணியின் பந்து வீச்சு பலவீனமாகவே இருந்து வருகிறது. பிரவீன்குமார் பந்து வீச்சு எடுபடவில்லை. அத்துடன் பேட்ஸ்மேன்களும் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரு அணிகள் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் குஜராத் அணி சொந்த மண்ணில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் எடுபட்டால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/27100532/1082213/ipl-Gujarat-Lions-team-vs-Bangalore-Royal-Challengers.vpf

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் லயன்ஸ் அணியுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 
 
படம்.| ஐபிஎல் டி20
படம்.| ஐபிஎல் டி20
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் அந்த அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளேப் ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இந்த 6 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெறும்.

இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, ரன்ரேட் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு அணியின் தலைவிதி நிர்ணயம் செய்யப்படும். இதனால் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இருந்தே பெங்களூரு அணியின் வாழ்வா? சாவா போராட்டம் தொடங்குகிறது.

ஏற்கெனவே தள்ளாடிய நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் சுருண்டது, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது ஆகியவை பெங்களூரு அணிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள் ளது. அணியின் பிக் 3 என வர்ணிக் கப்படும் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர்.

ஒட்டுமொத்த அணியின் பேட்டிங்கும் இவர்கள் 3 பேரை மட்டுமே நம்பியிருப்பதே பெரிய பலவீனமாக உள்ளது. ஆல்ரவுண்டர்களான வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் விக்கெட் கீப்பரான கேதார் ஜாதவ் ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இதனால் பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற்றால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்ற சூழல் உள்ளது. அதேவேளையில் பந்து வீச்சில் அணி பலமாகவே உள்ளது. யுவேந்திர சாஹல், சாமுவேல் பத்ரி, பவன் நெகி ஆகியோர் சுழலில் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இந்த கூட்டணி குஜராத் அணிக்கு நெருக்கடி தரக்கூடும்.

குஜராத் அணியும் இந்த சீசனில் மந்தமாகவே விளையாடி வருகிறது. அந்த அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் பந்து வீச்சு பலமற்ற நிலையில் காணப்படுகிறது.

இதுவரை இந்த தொடரில் அந்த அணி பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 26 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளனர். முக்கிய பந்து வீச்சாளராக கருதப்படும் ஜடேஜா இதுவரை சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. பிரவீன் குமாரின் பந்து வீச்சும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆறுதல் விஷயமாக கேரளாவை சேர்ந்த பாசில் தம்பி மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்து வீசி வருகிறார். யார்க்கர்கள் வீசும் அவரது திறன் எதிரணியின் ரன்குவிப்பை சிறிது கட்டுப்படுத்துவதாக உள்ளது.

டிவைன் பிராவோக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இர்பான் பதான் இன்று களமிறங்கு கிறார். மேலும் ஹாட்ரிக் உட்பட 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ஆன்ட்ரூ டையும் உடல் தகுதியை பெற்றுள்ளதால் பந்து வீச்சு பலம் பெறக்கூடும் என கருதப்படுகிறது.

கொல்கத்தாவுக்கு எதிராக 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னாவிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இந்த தொடரில் அவர் இதுவரை 275 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 264 ரன்கள் சேர்த்துள்ள பிரண்டன் மெக்கலமும் பேட்டிங்கில் மிரட்ட தயாராக உள்ளார்.

இடம்: பெங்களூரு 
நேரம்: இரவு 8 
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/குஜராத்-லயன்ஸ்-அணியுடன்-இன்று-மோதல்-வெற்றி-நெருக்கடியில்-ராயல்-சேலஞ்சர்ஸ்-பெங்களூரு/article9666075.ece

  • தொடங்கியவர்

சுனில் நரைன் பந்து வீச்சை தோனி அடிக்க தயங்குவது ஏன்? - ஆகாஷ் சோப்ரா, பிராட் ஹாக் அலசல்

 

 
 
தோனி. | படம்.| பிடிஐ.
தோனி. | படம்.| பிடிஐ.
 
 

இன்று புனே அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் ஒரு வெற்றிகரமான பினிஷிங்கை செய்து கொடுத்த தோனிக்கும் சுனில் நரைனுக்கும் ஒரு சுவையான பலப்பரீட்சை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சுனில் நரைன் பவுலிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியாவிட்டாலும் பேட்டிங்கில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார், ஆனால் பேட்டிங்கில் வெளுத்துக் கட்ட வேண்டிய தோனி இப்போதுதான் ஃபார்முக்கு வருவது போல் தெரிகிறது.

சுனில் நரைனை இதுவரை 54 பந்துகள் ஆடியுள்ள தோனி வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், இது மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும். இது எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் தோனியின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் என்பது குறிப்பிடத்தக்கது. நரைன் ஒருமுறை தோனியை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கிரிக் இன்போ இணையதளத்தில் ஆகாஷ் சோப்ரா, பிராட் ஹாகிடம் தோனி vs நரைன் போட்டி பற்றி கேட்ட போது,

ஆகாஷ் சோப்ரா, ‘நரைன் போதுமான விக்கெட்டுகளை எடுக்கவில்லை, ஆனால் சிக்கனம் காட்டி வருகிறார், தோனி ஒரு அசாதாரண இன்னிங்ஸை ஆடி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக புனேவுக்கு வெற்றி தேடித் தந்தார். இந்நிலையில் புள்ளி விவரங்கள் நரைனுக்குச் சாதகமாக இருக்கின்றன. எனவே இன்று தோனி களமிறங்கும் போது சுனில் நரைனை பந்து வீச கம்பீர் அழைத்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

மேலும் தோனியிடம் அதிக ஸ்ட்ரோக்குகள் இல்லை, ஸ்வீப் ஆடுவதில்லை, ரிவர்ஸ் ஸ்வீப் மிக அரிதாக ஆடுகிறார், மேலேறி வந்து ஆடும் ஷாட்களையும் அதிகம் பார்க்க முடியவில்லை. அவர் நின்ற இடத்தில் இருந்து கொண்டு லெந்த் பந்தை ஒரே தூக்குத் தூக்க முயற்சி செய்கிறார் இது எப்போதும் கைகொடுக்காது” என்றார்.

பிராட் ஹாக் கூறும்போது, “சுனில் நரைனுக்கு எதிராக தோனி மேலேறி வந்து ஆடத் தயங்குகிறார் காரணம் சுனில் நரைன் புதிரான பந்துகளை வீசக்கூடியவர், நிறைய பந்து வீச்சு முறையை மாற்றி கொண்டேயிருப்பார், இதனால் மேலேறி வந்து ஆடாமல் இருக்கலாம். சுனில் நரைனும் இவ்வாறு பல பேட்ஸ்மென்களை பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளார். எனவே இன்று தோனி அடிக்க ஆரம்பித்தால் சுனில் நரைனைக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது, என்றார்.

http://tamil.thehindu.com/sports/சுனில்-நரைன்-பந்து-வீச்சை-தோனி-அடிக்க-தயங்குவது-ஏன்-ஆகாஷ்-சோப்ரா-பிராட்-ஹாக்-அலசல்/article9664909.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

டெல்லி அணியில் குயின்டான் டி காக்கிற்குப் பதிலாக மார்லோன் சாமுவேல்ஸ் சேர்ப்பு

 

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் குயின்டா டி காக் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தற்போது சாமுவேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
டெல்லி அணியில் குயின்டான் டி காக்கிற்குப் பதிலாக மார்லோன் சாமுவேல்ஸ் சேர்ப்பு
 
ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 6 போட்டிகளுக்கு மேல் விளையாடி முடித்துள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது.

டெல்லி அணியில் தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன குயின்டான் டி காக் இடம்பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக ஐ.பி.எல். தொடர் முழுவதையும் நிராகரித்தார்.

அவருக்குப் பதிலாக புதிய வீரரை இதுவரை டெல்லி அணி தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்லோன் சாமுவேல்ஸ்-ஐ தற்போது தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர்.

201704271652186919_dekock-s._L_styvpf.gi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 71 டெஸ்ட், 187 ஒருநாள் மற்றும் 55 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாமுவேல்ஸ், ஐ.பி.எல். 10 சீசனுக்காக வீரர்கள் ஏலத்தில், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கப்படவில்லை. அவருக்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சாமுவேல்ஸ் இதற்குமுன் 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியவர். 2012-ல் 8 போட்டிகளில் விளையாடி சாமுவேல்ஸ் 124 ரன்களும், 8 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/27165214/1082339/Delhi-Daredevils-name-Marlon-Samuels-as-replacement.vpf

  • தொடங்கியவர்

பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி
 
பெங்களூர்:

ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக நெகி (32), ஜாதர் யாதவ் (31) ரன்கள் எடுத்தனர்.

அதிரடி ஆட்டக்காரர்களான கேப்டன் விராட் கோலி, கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணியில் டையி 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
201704272350253185_IPL221._L_styvpf.gif
இதனையடுத்து 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும் கேப்டன் ரெய்னா மற்றும் பிஞ்ச் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். ரெய்னா நிதானமாக ஆட பிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பிஞ்ச் 34 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 6 சிக்ஸர்களை விளாசினார். பின்னர் ரெய்னா பவுண்டரிகளாக விளாசி வெற்றியை உறுதி செய்தார். ரெய்னா 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி 1.5 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த டையி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் 7-வது 6 வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/27235021/1082387/Gujarat-Lions-beats-Bangalore-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல் ரன் வேட்டையில் முதல் இடத்தில் ரெய்னா!

 
 

சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. இன்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரூ ராயல் சேலஞ்சர் அணியை குஜராத் லைன்ஸ் வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா  30 பந்துகளில் 34 ரன்களைக் குவித்தார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகியிருக்கிறார் ரெய்னா. 8 போட்டிகளில் விளையாடி 309 ரன்களைக் குவித்திருக்கிறார். இவருக்கு அடுத்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கம்பீர் 8 போட்டிகளில் விளையாடி 305 ரன்கள் எடுத்திருக்கிறார். 

http://www.vikatan.com/news/sports/87771-raina-become-the-highest-ran-getter-in-ipl.html

  • தொடங்கியவர்

ஈடன்கார்டனில் இன்று மோதல்: கொல்கத்தா வெற்றிக்கு தடைபோடுமா டெல்லி

 

 
 
வோக்ஸ், கம்பீர். | படம்.| பிடிஐ.
வோக்ஸ், கம்பீர். | படம்.| பிடிஐ.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு முறை சாம்பியனான கொல்கத்தா அணி இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் +1.153 ஆக உள்ளது. மற்ற எந்த அணிகளும் இந்த அளவுக்கு அதிகமான நெட் ரன் ரேட்டை பெறவில்லை. கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக மும்பை அணி +0.514 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது.

தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா செயல்பட்டு வருகிறது. பெங்களூரு அணியை 49 ரன்களில் சுருட்டிய நிலையில் கடைசியாக புனே அணிக்கு எதிராக 183 ரன்கள் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் ராபின் உத்தப்பா, கவுதம் காம்பீர், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகிய அனைவரும் நல்ல பார்மில் இருப்பது எவ்வளவு பெரிய இலக்கையும் அடையக்கூடிய திறனை அணிக்கு கொடுத்துள்ளது. பந்து வீச்சும் பலமாக இருப்பதால் எதிரணிக்கு அனைத்து வகையிலும் கொல்கத்தா அணி சவால் கொடுத்து வருகிறது.

இளம் இந்திய வீரர்கள் பலரை உள்ளடக்கிய டெல்லி அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அந்த அணி புத்துணர்ச்சி யுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

இரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 11 ஆட்டங்களிலும், டெல்லி 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சு உயர்ந்த தரம் வாய்ந்ததாக உள்ளது. கம்மின்ஸ், கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கடும் நெருக்கடி கொடுத்தது.

இவர்களுடன் ஜாகீர்கான், முகமது சமி ஆகியோரின் அனுபவமும் பலம் சேர்ப்பதாக உள்ளது. பேட்டிங்கில் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், ரிஷப் பந்த் ஆகியோர் சீராக ரன் குவிக்காதது பலவீனமாக உள்ளது.

கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர்கள் ஒட்டுமொத்தமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

24 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த இந்த ஆட்டத்தில் கிறிஸ் மோரிஸ், ரபாடா ஆகியோரின் போராட்டத்தாலேயே 128 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படக்கூடும்.

கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான கிறிஸ்லின் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார். இதனால் அவர் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் சுனில் நரேனின் பேட்டிங் வரிசை மாற்றப்படலாம். இந்த தொடரில் நரேனின் ஸ்டிரைக் ரேட் 182.66 ஆகவும், கிறிஸ் லினின் ஸ்டிரைக் ரேட் 192.30 ஆகவும் உள்ளது.

அணிகள் விவரம்:

டெல்லி டேர்டேவில்ஸ்:

ஜாகீர்கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத்வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ்மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத்அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட்கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

இடம்: கொல்கத்தா

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/ஈடன்கார்டனில்-இன்று-மோதல்-கொல்கத்தா-வெற்றிக்கு-தடைபோடுமா-டெல்லி/article9669601.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதுகிறது.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?
 
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏற்றம் இறக்கமின்றி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

கேப்டன் கவுதம் கம்பீர் (3 அரை சதத்துடன் 305 ரன்), ராபின் உத்தப்பா (3 அரைசதத்துடன் 272 ரன்), மனிஷ் பாண்டே (260 ரன்), யூசுப்பதான் ஆகியோர் பேட்டிங்கிலும், சுனில் நரின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், கிறிஸ்வோக்ஸ் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் அந்த அணிக்கு கைகொடுக்கிறார்கள். நேற்று முன்தினம் புனே சூப்பர் ஜெயன்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கூட 183 ரன்கள் இலக்கை எளிதாக சேசிங் செய்து விட்டார்கள். சொந்த ஊரில் ஆடுவதால் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்த அதிகம் வாய்ப்புள்ளது.

201704281000309346_Kolkata-vs-Delhi._L_s

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியது. நெருங்கி வந்து கடைசி கட்டத்தில் சறுக்கி விடும் டெல்லி அணி, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், தோல்விப்பாதையில் இருந்து மீளலாம்.

ஏற்கனவே தங்களது ஊரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/28100026/1082418/ipl-cricket-Kolkata-Knight-Riders-team-vs-Delhi-Daredevils.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியூர் தோல்விக்கு முடிவு கட்டுமா ஐதராபாத்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியூர் தோல்விக்கு முடிவு கட்டுமா ஐதராபாத்?
 
நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வி என்று 9 புள்ளிகளை சேர்த்துள்ளது. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணிக்கு 4 வெற்றிகளும் சொந்த ஊரில் (ஐதராபாத்) கிடைத்தவை தான்.


அதே சமயம் வெளியூரில் தடுமாறும் ஐதராபாத் அணி, அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் தயாராகி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

201704281044153725_Punjab-vs-Hyderabad._

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அடி வாங்கிய பஞ்சாப் அணிக்கு குஜராத்துக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். ஏற்கனவே 5 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோற்றுள்ள பஞ்சாப் அணி, அதற்கு பழிதீர்க்க தீவிரம் காட்டும்.

காயத்தால் ஒதுங்கி இருந்த ஆல்-ரவுண்டர் டேரன் சேமி பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காண வாய்ப்புள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/28104410/1082427/ipl-cricket-Kings-XI-Punjab-vs-Hyderabad-Sunrisers.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கெதிராக கொல்கத்தா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

 

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கெதிராக கொல்கத்தா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
 
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியில் நாதன் கவுல்டர்-நைல், ஷெல்டன் ஜாக்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் அங்கித் பவ்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணி:-

1. சஞ்சு சாம்சன், 2. ஷ்ரோயஸ் அய்யர், 3. ரிஷப் பந்த், 4. அங்கித் பவ்னே, 5. கோரி ஆண்டர்சன், 6. கிறிஸ் மோரிஸ், 7. ரபாடா, 8. பேட் கம்மின்ஸ், 9. அமித் மிஸ்ரா, 10. ஜாகீர் கான். 11. கருண் நாயர்.

கொல்கத்தா அணி:-

1. சுனில் நரைன், 2. கவுதம் காம்பீர், 3. உத்தப்பா, 4. மணீஷ் பாண்டே, 5. யூசுப் பதான், 6. ஜாக்சன், 7. டி கிராண்ட்ஹோம், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கவுல்டர்-நைல், 10. உமேஷ் யாதவ், 11. குல்தீப் யாதவ்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/28154739/1082520/IPL-Kolkata-Knight-Riders-won-the-toss-and-elected.vpf

  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் நாங்கள் சிங்கம்: டெல்லியை வீழ்த்தி மீண்டும் நிரூபித்தது கொல்கத்தா

 

 
 

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

 
 
 
 
சொந்த மண்ணில் நாங்கள் சிங்கம்: டெல்லியை வீழ்த்தி மீண்டும் நிரூபித்தது கொல்கத்தா
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டெல்லி அணியின் ஸ்கோர் 4.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது கருண் நாயர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து சஞ்சு சாம்சன் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடித்த சாம்சன் 38 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது டெல்லி அணி 14 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த பந்த் 6 ரன்னிலும், அய்யர் 47 ரன்னிலும் வெளியேற டெல்லி அணியின் ஸ்கோர் உயர்வில் மந்தநிலை ஏற்பட்டது.

கிறிஸ் மோரிஸ் 11 ரன்னும், கோரி ஆண்டர்சன் 2 ரன்னும், அங்கித் பவ்னி அவுட்டாகாமல் 12 ரன்னும் எடுக்க டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. கடைசி 36 பந்தில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சுனில் நரைன், காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து உத்தப்பா களம் இறங்கினார்.

6-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை உத்தப்பா லெக் சைடு தூக்கி அடித்தார். பந்து எட்ஜ் ஆகி வானத்தை நோக்கி பறந்தது. மிஸ்ரா மற்றும் சஞ்சு சாம்சன் பந்தை பிடிக்க ஓடினார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சைகை காட்டி ஒடி வந்தனர். பந்து அருகில் வரும்போது இருவரும் பிடிக்காமல் அப்படியே நின்று விட்டனர். இதனால் 10 பந்துகளில் 8 ரன்னோடு வெளியேற வேண்டிய உத்தப்பா கண்டத்தில் இருந்து தப்பினார்.

அப்போது கொல்கத்தா அணி 5.3 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தனக்கு கண்டம் தப்பியதையடுத்து உத்தப்பா ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய அவர், 8-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி பறக்க விட்டார். கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார்.

அத்துடன் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய உத்தப்பா, 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். கேட்சில் இருந்து தப்பிய உத்தப்பா, 25 பந்தில் 47 ரன்கள் குவித்துவிட்டார்.

201704281938435263_uthappa-s._L_styvpf.g

உத்தப்பா அவுட்டை தொடர்ந்து மணீஷ் பாண்டே களம் இறங்கினார். மறுமுனையில் காம்பீர் 39 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது மணீஷ் பாண்டே ஆட்டம் இழந்தார். 4-வது விககெட்டுக்கு காம்பீர் உடன் ஜாக்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கொல்கத்தா அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பீர் 71 ரன்னுடனும், ஜாக்சன் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 9 போட்டியில் 7 வெற்றிகளை ருசித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/28193838/1082565/IPL-KKR-Beats-delhi-by-7-wickets-moved-1st-place-in.vpf

  • தொடங்கியவர்

வார்னர், தவான், வில்லியம்சன் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

 

வார்னர், தவான் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் அரைசதத்தால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

 
 
வார்னர், தவான், வில்லியம்சன் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
 
ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் அணியின் வார்னர், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. வார்னர் 25 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர் உடன் அரைசதம் அடித்தார். அதனைத்தொடர்ந்து தவான் 31 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

சரியாக 10 ஓவரில் ஸ்கோர் 107 ரன்னாக இருக்கும்போது வார்னர் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். தவான் 48 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

201704282206419843_warner-s._L_styvpf.gi

கேன் வில்லியம்சன் 27 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் இசாந்த் சர்மா, கரியப்பா தலா நான்கு ஓவர்கள் வீசி முறையே 41, 42 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/28220637/1082581/Sun-raisers-hyderabad-208-runs-target-to-KingsXI-punjab.vpf

Sunrisers Hyderabad 207/3 (20/20 ov)
Kings XI Punjab 86/3 (10.4/20 ov)
Kings XI Punjab require another 122 runs with 7 wickets and 56 balls remaining
  • தொடங்கியவர்

பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5-வது வெற்றி

 

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 
பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5-வது வெற்றி
 
மொகாலி:

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தவாண்(77), வில்லியம்சன்(54), வார்னர்(51) ஆகியோர் அரைசதம் விளாசினர்.

பின்னர் 208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் 3 ரன்களுக்கு வோக்ரா ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய குப்டில் 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மேக்ஸ்வெல் சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
201704290004241043_IPLs._L_styvpf.gif

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் ஷான் மார்ஸ் மட்டும் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். ஆனால் அவருக்கு எந்தவீரரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மோர்கன் மட்டும் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்ஸ் ஆட்டமிழந்ததும் அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் நெக்ரா மற்றும் கவுல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
201704290004241043_IPLsss._L_styvpf.gif

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் தனது 5-வது தோல்வியை அடைந்தது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/29000419/1082588/Sunrisers-Hyderabad-beats-Kings-XI-Punjab-by-26-runs.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - புனே அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் புனே சூப்பர் ஜெயன்ட் அணி மோதுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - புனே அணிகள் இன்று மோதல்
 
அதிரடி சூரர்களை உள்ளடக்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏனோ இந்த முறை உதைமேல் உதை வாங்கிக் கொண்டிருக்கிறது. 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.

வீரர்கள் பொறுப்புடன், முழு உத்வேகத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கேப்டன் கோலி அறிவுறுத்தியுள்ளார். எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். இது வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதால் பெங்களூரு அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

201704290943259256_Bangalore-vs-Pune-tea

புனே சூப்பர் ஜெயன்ட் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றி கண்டு ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது. ஒரு நாளில் மெச்சும்படி ஆடுகிறார்கள். இன்னொரு நாளில் சாதாரணமாக விளையாடுகிறார்கள். இது தான் புனே அணிக்கு உள்ள பிரச்சினை. இந்த குறையை களைய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே பெங்களூருவை 27 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த புனே சூப்பர் ஜெயன்ட் அணி சொந்த ஊரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/29094323/1082620/ipl-cricket-Bangalore-vs-Pune-teams-clash-today.vpf

  • தொடங்கியவர்

மும்பையுடன் இன்று பலப்பரீட்சை: பதிலடி கொடுக்குமா குஜராத்

 

 
 
ரெய்னா.
ரெய்னா.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிராக 30 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்த ரெய்னா பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியையும் பொறுத்துக்கொண்டே அவர் பேட் செய்தார். இந்த தொடரில் 309 ரன்கள் குவித்துள்ள அவர் இக்கட்டான நேரத்தில் வெளியே அமர விரும்பமாட்டார் என்று கருதப்படுகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவார். பிராவோவின் காயத்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணி தேர்வு வெற்றியை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

பந்து வீச்சில் பாக்னர், ஆன்ட்ரூடை கூட்டணி பலம் சேர்த்துள்ளது. இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பாசில் தம்பியும் யார்க்கர்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துபவராக உள்ளார். பேட்டிங்கில் டி20 புகழ் வீரர்களான மெக்கலம், ஆரோன் பின்ச் அதிரடியால் மிரட்டி வருகின்றனர். பெங்களூருக்கு எதிராக 34 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய ஆரான் பின்ச் மீண்டும் விளாச தயாராக உள்ளார்.

அனைத்து துறையிலும் பலமாக உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி அணி இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் தோல்வியடைந்துள்ளது. இந்த இரு தோல்விகளும் புனே அணிக்கு எதிரானவையே ஆகும். 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி மேலும் இரு வெற்றிகளை பெறும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும்.

தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுக்கின்றனர். ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்க தவறினர்.

இவர்களிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். எந்த கட்டத்திலும் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்ட பொலார்டும் அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் மிட்செல் ஜான்சன், மெக்லீனகன் ஆகியோர் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.

இரு அணிகளும் இந்த தொடரில் 2-வது முறையாக மோத உள்ளன. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு குஜராத் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

 

இடம்: ராஜ்கோட் நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/மும்பையுடன்-இன்று-பலப்பரீட்சை-பதிலடி-கொடுக்குமா-குஜராத்/article9672959.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

கட்டாய வெற்றியில் பெங்களூரு: புனே அணியுடன் இன்று மோதல்- தோல்வியடைந்தால் லீக் சுற்றுடன் வெளியேறும்

 

 
 
 
விராட் கோலி
விராட் கோலி
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் 2 வெற்றி 6 தோல்விகளை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட பெங்களூரு அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சி உள்ளது.

இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் 15 புள்ளிகளே பெறும். இந்த நிலையை அந்த அணி எட்டினாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகக்கூடும். இதனால் பெங்களூரு அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு மங்கிய நிலையிலேயே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவினால் நிச்சயம் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

டி20 என்பது எந்த விஷயத்தையும் விரைவாக மாற்றுவதற்கான வடிவிலான ஆட்டமாகும். மேலும் பெங்களூரு அணி உலகத் தரம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதால் அந்த அணி தனக்கான வாய்ப்பை எளிதில் இழந்து விடாது என்றே கருதப்படுகிறது. விராட் கோலி, கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் எந்தவிதமான பந்து வீச்சையும் சிதைத்து, தாக்குதல் ஆட்டத்தால் ரன்குவிக்கும் திறன் கொண்டவர்கள். இதனால் இவர்கள் முடிந்தவரை வெற்றிக்காக போராடக்கூடும்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணி, பெங்களூருவை விட சற்று மேலான நிலையில் உள்ளது. அந்த அணி 8 ஆட்டங்களில் தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு சில ஆட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடும் புனே அணி திடீரென மிகச்சாதாரணமாக விளையாடி தோல்வியை தழுவுகிறது.

தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணியின் பின்னடைவாக உள்ளது. தொடக்க வீரரான ராகுல் திரிபாதி சீராக ரன் சேர்த்து வருகிறார். இவர் 6 ஆட்டத்தில் 216 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 154.28 ஆக உள்ளது. 24 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் விளாசி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இதேபோல் 275 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ஸ்மித்தும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவராக உள்ளார். ரஹானேவுக்கு இந்த தொடர் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. ஒரு ஆட்டத்தில் மட்டும் அரை சதம் அடித்துள்ளார். கடந்த சில ஆட்டங்களாக அதிரடியாக விளையாடி வரும் தோனி மீண்டும் விளாசக்கூடும்.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பலம் சேர்க்கிறார். மும்பை அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் அற்புதமாக பந்துவீசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். ஆனால் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் எதிர்பார்த்தளவுக்கு பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

8 ஆட்டத்தில் அவர் 127 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் இம்ரம் தகிர், ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தடுமாறி வரும் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித்தரக்கூடும்.

 

இடம்: புனே, நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/கட்டாய-வெற்றியில்-பெங்களூரு-புனே-அணியுடன்-இன்று-மோதல்-தோல்வியடைந்தால்-லீக்-சுற்றுடன்-வெளியேறும்/article9672956.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஒரே நாளில் பல சாதனை படைத்த கம்பீர்

 

கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஒரே நாளில் பல சாதனை படைத்த கம்பீர்
 
கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (141 ஆட்டத்தில் 4,010 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா (4,407 ரன்), பெங்களூரு கேப்டன் விராட் கோலி (4,274 ரன்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டிய 13-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்புக்கும் கம்பீர் சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் 229 ஆட்டங்களில் விளையாடி 6,023 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

201704291011355463_ipl-cricket-Gambhir._

ஐ.பி.எல்.-ல் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் டோனி (3,270 ரன்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டினர். இதன் மூலம் இலக்கை துரத்திப்பிடிக்கையில் (சேசிங்) அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் (4-வது முறை) கொடுத்த ஜோடி என்ற மகிமையும் இவர்களுக்கு கிடைத்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/29101133/1082626/ipl-cricket-Gambhir-record-number-of-overnight.vpf

  • தொடங்கியவர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பு இருக்கிறது: எப்படி?

 

ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பு உள்ள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பு இருக்கிறது: எப்படி?
 
ஐ.பி.எல். 10-வது சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு காரணம் அந்த அணியில் கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்.சி.பி. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.சி.பி. 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்னும் ஐந்து போட்டிகள் மட்டுமே உள்ளதால் ஆர்.சி.பி. அணியால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்று ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இன்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொள்கிறது. இதில் தோற்றால் கூட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

அது எப்படி என்று பார்ப்போம்:-

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் உள்ளது. ஐந்திலும் வெற்றி பெற்றால் 15 புள்ளிகள் பெறும்.

2. கொல்கத்தா நைட் ரைடரர்ஸ் அணி தற்போது 9 போட்டியில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் உள்ள ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் இறுதியில் 20 புள்ளிகள் பெறும்.

3. மும்பை இந்தியன்ஸ் தற்போது 8 போட்டியில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள 6-ல் மூன்றில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெறும்.

201704291502586843_Kohli01-s._L_styvpf.g

4. சன்ரைசர்ஸ் அணி மீதமுள்ள ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடிக்கும்.

5. ரைசிங் புனே எஞ்சியுள்ள 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்தால் 10 புள்ளிகள் பெறும்

6. குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற வேண்டும்.

7. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மீதமுள்ள போட்டியில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

இப்படி நடந்தால் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடிக்கும்.

குஜராத் அணி 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும் பெறும், ரைசிங் புனே, கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் 10 புள்ளிகள் பெற்று முறையே 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்தை பிடிக்கும்.

இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பெங்களூரு அணிக்கு ரன்ரேட் ஏதும் பார்க்காமலேயே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/29150256/1082707/How-RCB-can-still-qualify-for-the-playoffs.vpf

  • தொடங்கியவர்

#IPL10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படுதோல்வி!

 

இன்று, ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியில், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு படுதோல்வி அடைந்துள்ளது.

vk

34-வது ஐபிஎல் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. புனே- பெங்களூர் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து விளையாடிய புனே அணி, 20 ஓவர்களின் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. புனே அணியில் அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 45 ரன்களும், மனோஜ் திவாரி 44 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களே குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக, கோலி 47 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களே குவித்தனர். புனே அணியின் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளும் உனத்கட், கிரிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ். தற்போது, புனே அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது. இதனிடையே தகுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழக்கும் நிலை, பெங்களூருக்கு ஏற்பட்டுள்ளது. 

இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Photo Courtesy : IPLT20

http://www.vikatan.com/news/sports/87979-royal-challengers-banglore-loss-the-match-by-61-runs.html

  • தொடங்கியவர்

மீண்டும் சொதப்பல்: 96 ரன்கள் மட்டுமே எடுத்து புனே அணியிடம் பணிந்தது ராயல் சேலஞ்சர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சொதப்பியது. புனே அணிக்கெதிராக 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

 
மீண்டும் சொதப்பல்: 96 ரன்கள் மட்டுமே எடுத்து புனே அணியிடம் பணிந்தது ராயல் சேலஞ்சர்ஸ்
 
ஐ.பி.எல். தொடரில் இன்றைய முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டிராவிட் ஹெட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். ஹெட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் வழக்கம்போல் சொதப்ப ஆரம்பித்தனர். விராட் கோலி ஒருபக்கம் நிலையாக நிற்க, மறுபுறத்தில் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் இரட்டை இலக்க பந்துகளை சந்திக்கவில்லை. ஜாதவ் 12 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

டி வில்லியர்ஸ் (3), சச்சின் பேபி (2), ஸ்டூவர்ட் பின்னி (1), நெஹி (3), மில்னே (5), பத்ரி (2) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, விராட் கோலி 48 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அரவிந்த் (8), சாஹரல் (4) அவுட்டாகாமல் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றிற்கு செல்ல முடியும் என்ற நிலையில், பெங்களூரு அணி மீண்டும் சொதப்பி, வாய்ப்பை இழந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/29202008/1082768/IPL-pune-beats-RCB-by-96-Runs.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: 'சூப்பர் ஓவரில்' மும்பை வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.