Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: குஜராத்திற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்; கெய்ல், ஹெட் சேர்ப்பு

ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்ல், டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்ரி நீக்கப்பட்டுள்ளார்.

 
ஐ.பி.எல்.: குஜராத்திற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்; கெய்ல், ஹெட் சேர்ப்பு
 
ஐ.பி.எல். தொடரின் 20-வது லீக் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான இந்த போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் காயம் காரணமாக டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சாமுவேல் பத்ரி நீக்கப்பட்டு டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் ராய் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் முனாப் பட்டேல், பிரவீண் குமார் நீக்கப்பட்டு ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

1. கிறிஸ் கெய்ல், 2. விராட் கோலி, 3. வாட்சன், 4. மந்தீப் சிங், 5. டிராவிஸ் ஹெட், 6. கேதர் ஜாதவ், 7. ஸ்டூவர்ட் பின்னி, 8. பவன் நெஹி, 9. மில்னே, 10. அரவிந்த், 11. சாஹல்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/18195225/1080606/IPL-RCB-bat-first-against-gujarat-lions-gayle-head.vpf

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: குஜராத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி

ஐ.பி.எல் 20 லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: குஜராத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி
 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் - விராட் கோலி களமிறங்கினர். இருவருமே அதிரடி காட்டி விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்திருந்த போது கெய்ல், பாசில் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் சேர்த்தார். மேலும் டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து கெய்ல் புதிய சாதனையும் படைத்திருந்தார்.
201704182347472085_rcb1._L_styvpf.gif
இதையடுத்து கேப்டன் கோலி 50 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ரன்களும், ஹெட் 30 (16) ரன்களும், ஜாதவ் 38 (16) ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்தது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஸ்மித் 1 ரன்னில் வெளியேறினார். மறுபுறத்தில் மிக்கல்லம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரெய்னா 8 பந்துகளில் 2 புண்டரி, 2 சிக்சர் என 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, பின்ச் 19 (15), டி கார்த்திக் 1 (4), ஜடேஜா 23 (22) ரன்களும் எடுத்து வெளியேற குஜராத் அணி தடுமாறியது.

எனினும் அந்த அணியின் கிஷான் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெங்களூரு சார்பில் சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றி வாய்ப்பை இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/18234737/1080627/IPL-RCB-won-against-GL-by-21-runs.vpf

  • தொடங்கியவர்

டெல்லியுடன் இன்று மோதல்: ஐதராபாத் அணி 4-வது வெற்றியை பெறுமா?

ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் சொந்த மண்ணில் ஆடுவதால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

 
 
டெல்லியுடன் இன்று மோதல்: ஐதராபாத் அணி 4-வது வெற்றியை பெறுமா?
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் (35 ரன்), குஜராத் (9 விக்கெட்), பஞ்சாப் (5 ரன்) அணிகளை வென்றது. மும்பை (4 விக்கெட்), கொல்கத்தாவிடம் (17 ரன்) தோற்றது.

ஐதராபாத் அணி சொந்த மண்ணில் மூன்று வெற்றியை பெற்று இருந்தது. இன்றைய ஆட்டத்திலும் சொந்த மண்ணில் ஆடுவதால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் வார்னர், யுவராஜ்சிங், தவான், ஹென்ரிக்ஸ், ரஷீத்கான், புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு இன்றைய ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி புனேயை 97 ரன் வித்தியாசத்திலும், பஞ்சாப்பை 51 ரன் வித்தியாசத்திலும் வென்றது. பெங்களூர் அணியிடம் 15 ரன்னிலும், கொல்கத்தாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

201704191056095022_ra9rau8k._L_styvpf.gi

டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2 ஆட்டத்தில் போராடியே தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எல்லா வகையிலும் டெல்லி அணி சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியில் ரிஷப் பண்ட், பிராத் வெயிட், சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ், கும்மின்ஸ், கேப்டன் ஜாகீர்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் மோதி இருந்த ஆட்டத்தில் ஐதராபாத் 5 போட்டியிலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/19105558/1080675/IPL-2017-Delhi-vs-Hyderabad-clash-today.vpf

  • தொடங்கியவர்

மெக்கலமின் தொப்பி செய்தவேளையால் கெய்ல் அரைசதம் கடந்தார் (வீடியோ இணைப்பு)

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரன்டன் மெக்கல்லம் அணிந்திருந்த தொப்பியால் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் வீரரான கிறிஸ் கெய்ல் ஆட்டம் இழக்காமல் தப்பிய சம்பவம் நேற்றைய போட்டியின் போது இடம்பெற்றது.

இம்முறை நடைப்பெற்று கொண்டிருக்கும் 10 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் 8 அணிகள் இடையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு இடம்பெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டவீரர் கிறிஸ் கெய்ல் 38 ஓட்டங்களுடன் களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை சிக்சர் நோக்கி அடித்தார்.

அப்போது 'லாங்-ஆப்' திசையில் களத்தடுப்பில் நின்ற குஜராத்  அணி வீரரான பிரன்டன் மெக்கலம் பாய்ந்து ஒற்றைக்கையால் பந்தை பிடியெடுத்தார்.

குறித்த பிடியெடுப்பில் நடுவருக்கு சந்தேகம் எழ, 3 ஆவது நடுவரின் உதவியை நாடினார்.

மீள்ஒளிபரப்பு முறையில்  மெக்கல்லம் பந்தை பிடித்து உருண்ட போது, அவர் அணிந்திருந்த வட்டவடிவிலான தொப்பி லேசாக எல்லைக்கோட்டில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த பிடியெடுப்பு சிக்சராக மாற்றப்பட்டதோடு, கெய்ல் தொடர்ந்து ஆடி அரைசதமும் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: டில்லி அணி தோல்வி
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி

 

ஐ.பி.எல் சீசன் 10-ன் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 21வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் - தவான் களமிறங்கினர். 7பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் மோரிஸ் வேகத்தில் வார்னர் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் கேன் வில்லியம்சன். இருவரும் டெல்லி பந்துவீச்சை சிதறடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயரத் தொடங்கியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 191 ரன்களை குவித்தது. அந்த அணியில் தவான் 70 (50) ரன்களும், வில்லியம்சன் 89 (51) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

201704192350476270_srh3._L_styvpf.gif

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிங்கிய சஞ்சு சாம்சன் - சாம் பில்லிங்ஸ் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சாம் பில்லிங்ஸ் 13 (9) ரன்களில் வெளியேறனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடி காட்ட அணியின் ரன்வேகம் அதிகரித்தது.

சஞ்சு சாம்சன் 42 (33) ரன்னிலும், நாயர் 33 (23) ரன்னிலும் வெளியேற, பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் - மேத்யூஸ் ஜோடி அதிரடி காட்டத் தொடங்கியது. எனினும் கடைசி ஓவருக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சித்தார்த் கவுல் மேத்யூஸ் 31(23) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

201704192350476270_srh2._L_styvpf.gif

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 (31) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19235035/1080807/IPL-SRH-won-against-DD-by-15-runs.vpf

  • தொடங்கியவர்

இந்தூரில் இன்று மோதல்: மும்பை ஆதிக்கத்தை பஞ்சாப் சமாளிக்குமா?

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை அதிரடியை பஞ்சாப் சமாளிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்தூரில் இன்று மோதல்: மும்பை ஆதிக்கத்தை பஞ்சாப் சமாளிக்குமா?
 
இந்தூர்:

ஐ.பி.எல். போட்டியின் 22-வது ‘லீக்’ ஆட்டம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி முதல் இரண்டு ஆட்டங்களில் (புனே, பெங்களூர்) வென்றது. அதை தொடர்ந்து 3 போட்டிகளில் (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத்) தோற்றது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் பஞ்சாப் உள்ளது. அந்த அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், மனன் வோரா, மில்லர், ஹசிம் அம்லா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

மும்பை அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் 7 விக்கெட்டில் தோற்றது.

அதை தொடர்ந்து கொல்கத்தா (4 விக்கெட்), மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (4 விக்கெட்) குஜராத் (6 விக்கெட்) அணிகளை வென்று இருந்தது. பஞ்சாப்பை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

201704201054586893_VRP__3720._L_styvpf.g

கேப்டன் ரோகித் சர்மா, நித்திஷ் ரானா, ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அதிரடியை சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலானதே. அதே நேரத்தில் சொந்த மண்ணான இந்தூரில் 2 வெற்றி பெற்று இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் உள்ளது.

இரு அணிகள் மோதிய போட்டியில் மும்பை 9 ஆட்டத்திலும், பஞ்சாப் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20105445/1080860/IPL-2017-Mumbai-vs-Punjab-collide-today.vpf

  • தொடங்கியவர்

கிறிஸ் மோரிசை பின்னுக்குத் தள்ளும் டெல்லி டேர் டெவில்ஸ்

 

 
கிறிஸ் மோரிஸ்.| படம்.|ஏ.பி.
கிறிஸ் மோரிஸ்.| படம்.|ஏ.பி.
 
 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி இலக்கைத் துரத்தும் போது டவுன் ஆர்டரில் தவறு செய்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்ஸ் நிதானமாகத் தொடங்கி பிறகு அதிரடி முறையில் ஆடி, 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்தார், ஷிகர் தவண் 70 ரன்கள் விளாச 20 ஓவர்களில் 191 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 105/3 என்று 13-வது ஓவர் முடிவில் இருந்தது. 7 ஓவர்களில் 87 ரன்கள் என்பது மிகக்கடினமானதுதான்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கிறார், அப்போது கிறிஸ் மோரிஸை அனுப்பியிருக்க வேண்டும், காரணம் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 238.7.

ஆனால் இவருக்குப் பதிலாக ஆஞ்சேலோ மேத்யூஸ் களமிறக்கப்பட்டார். ஆனால் அவரோ 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்து 20-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரிஸுக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. மேலும் அதிரடி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். அவருக்கும் கடைசி 5 ஓவர்களில் 12 பந்துகளே ஸ்ட்ரைக் கிடைத்தது.

இதனால் 176 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வி தழுவியது. ஒருவேளை கிறிஸ் மோரிசை இறக்கியிருந்தால் டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/கிறிஸ்-மோரிசை-பின்னுக்குத்-தள்ளும்-டெல்லி-டேர்-டெவில்ஸ்/article9652402.ece?homepage=true

  • தொடங்கியவர்

கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன்: ஜாகீர்கான்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன் என்று டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தெரிவித்தார்.

 
 
 
 
கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன்: ஜாகீர்கான்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. வில்லியம்சன் 51 பந்தில் 89 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), தவான் 50 பந்தில் 70 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் 15 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 33 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கருண் நாயர் 23 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், கவுல், யுவராஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் சன்ரைசஸ் ஐதராபாத் 2-வது இடத்துக்கு முன்னேறியது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-

201704201116081275_CI1I2935._L_styvpf.gi

எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் அபாராமாக இருந்தது. வில்லியம்சன் முதல் ஆட்டத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். அவரும், தவானும் இணைந்து அணி நல்ல ஸ்கோர் அமைய காரணமாக திகழ்ந்தனர்.

எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஜாகீர்கான் கூறியதாவது:-

201704201116081275_PB1D0460._L_styvpf.gi

180 ரன் என்பது எடுக்கக் கூடிய இலக்கு. 192 ரன் என்பது கடினமானதே. நான் வீசிய கடைசி ஓவரில் ரன்களை வாரி கொடுத்து விட்டேன்.

ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் இலக்கை நோக்கி சிறப்பாகவே ஆடினார்கள். துரதிருஷ்டவசமாக ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது.

புவனேஸ்குமார் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி ஐதராபாத் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார். கருண் நாயரின் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றி விட்டது. ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். குறைந்த அளவு ரன்னில்தான் தோற்றுள்ளோம்.

இவ்வாறு ஜாகீர்கான் கூறியுள்ளார்.

ஐதராபாத் அணி 7-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்டை 22-ந் தேதியும், டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை அதே தினத்திலும் சந்திக்க உள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20111555/1080867/I-give-the-more-runs-in-last-over-against-hyderbath.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
 
ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு
 
ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இந்தூரில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணியில் மில்லர், மோர்கன், கரியப்பா நீக்கப்பட்டுள்ளனர். உடல்நலம் சரியில்லாததால் வோராவும் இடம்பெறவில்லை. மும்பை அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் விளையாடுகிறது.

பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்:

1. அம்லா, 2. ஷேன் மார்ஷ், 3. மேக்ஸ்வெல், 4. ஸ்டாய்னிஸ், 5. சகா, 6. அக்சார் பட்டேல், 7. குர்கீரத் சிங், 8. ஸ்வாப்னில் சிங், 9. மோகித் சர்மா, 10. சந்தீப் சர்மா, 11. இசாந்த் சர்மா.

மும்பை அணி:-

1. பார்த்தீவ் பட்டேல், 2. பட்லர், 3. ராணா, 4. ரோகித் சர்மா, 5. பொல்லார்டு, 6. ஹர்திக் பாண்டியா, 7. குருணால் பாண்டியா, 8. ஹர்பஜன் சிங், 9. மெக்கிளெனகன், 10. மலிங்கா, பும்ப்ரா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20195919/1080989/IPL-Mumbai-indians-won-toss-select-fielding-against.vpf

Kings XI Punjab 61/1 (8.4/20 ov)

  • தொடங்கியவர்

அம்லா அதிரடி சதத்தால் மும்பை வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஹசிம் அம்லாவின் அதிரடி சதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். மேக்ஸ்வெல் 18 பந்தில் 40 ரன்கள் குவித்தார்.

 
அம்லா அதிரடி சதத்தால் மும்பை வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இந்தூரில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி அம்லா, ஷேன் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்ஷ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஹா 11 ரன்கள் எடுத்த நிலையிலும் குருணால் பாண்டியா பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேக்ஸ்வெல் 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார்.

அரைசதம் அடித்த அம்லா அரை சதமாக மாற்றினார். அவர் அவுட்டாகாமல் 60 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் 104 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 58 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20214354/1081001/IPL-2017-amla-century-punjab-199-runs-target-to-mumbai.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல் 10வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
 
இந்தூர்:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 22வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஹாசிம் அம்லா சதம் விளாசினார். தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மார்ஷ் 26 (21), சாஹா 11 (15), மேக்ஸ்வெல் 40 (18) ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை தரப்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
201704202319578195_MI3._L_styvpf.gif
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் - ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்களை குவித்திருந்த போது ஸ்டோனிஸ் பந்துவீச்சில் பார்த்திவ் படேல் 37 (18) கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, பட்லருடன் இணைந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
201704202319578195_MI2._L_styvpf.gif
இந்நிலையில் ஆட்டத்தின் 13 ஓவரை மோகித் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த பட்லர் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 77 ரன்களை குவித்தார்.

இறுதியில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராணா 7 சிக்சர்களுடன் 62 (34) ரன்னும், பாண்டியா 15 (4) ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தன

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/20231943/1081007/IPL-MI-Whooping-win-against-KXIP-by-8-wickets.vpf

  • தொடங்கியவர்

ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா குஜராத்

 

 
பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மணீஷ் பாண்டே | படம்: ரமேஷ் பாபு
பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மணீஷ் பாண்டே | படம்: ரமேஷ் பாபு
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள் ளது. சொந்த மைதானத்தில் இரு வெற்றிகளையும், வெளி மைதானங் களில் இரு வெற்றியும் கண்டுள்ளது. அதேவேளையில் கடந்த சீசனில் அறிமுக அணியாக 3-வது இடத்தை பிடித்த குஜராத் அணி இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது.

5 ஆட்டத்தில் அந்த அணி 4 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டி யலில் கடைசி இடம் வகிக்கிறது. வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியாமல் குஜராத் அணி நெருக்கடியை சந்தித்துள்ளது.

பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்து வீச்சு படுமோசமாக அமைந் துள்ளது. அதிலும் சுழற்பந்து வீச்சு அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜடேஜா வருகைக்கு பின்னரும் அணியின் பந்து வீச்சில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 57 ரன்கள் தாரை வார்த்தார்.

கொல்கத்தா அணியில் தனிப்பட்ட வீரர் என்று யாரும் இல்லாமல் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒவ்வொரு வீரர் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர். இதுவே அணி எந்விதமான தடை களையும் உடைத்தெறிந்து வெற்றி களை குவிக்க காரணமாக அமைந்துள்ளது.

அதிரடி வீரரான கிறிஸ்லின் காயம் காரணமாக விளையாடாத நிலையில் டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 21 ரண்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்த போதிலும் மணீஷ் பாண்டே (47 பந்துகளில் 69 ரன்கள்), யூசுப் பதான் (36 பந்துகளில் 59 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்து மிரட்டியது.

இந்த ஆட்டத்தில் எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடிய மணீஷ் பாண்டே, அமித் மிஸ்ரா வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். 3 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் கொல்கத்தா அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட வாய்ப் புள்ளது. அவர் 3 ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக வங்க தேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்-ஹசன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் 6-ம் நிலை வீரராக களமிறங்கி வரும் சூர்ய குமார் யாதவ், இந்த சீசனில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் அவரும் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும் என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், யூசுப் பதான் கூட்டணி நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இந்த மூவர் கூட்டணி, ஈடன் கார்டனில் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக 9 ஓவர்கள் வீசி 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. மேலும் வார்னர், ஷிகர் தவண், தீபக் ஹூடா ஆகிய முன்னணி வீரர்களையும் ஆட்டமிழக்க செய்திருந்தனர். மூவர் கூட்டணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

குஜராத் அணியில் இன்றைய ஆட்டத்தில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும். டுவைன் ஸ்மித், ஆரோன் பின்ச் ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்க தவறினர். இதனால் இவர்களுக்கு பதிலாக ஜேசன் ராய், ஜேம்ஸ் பாக்னர் ஆகியோர் இடம் பெறக்கூடும். தொடக்க வீரராக பிரண்டன் மெக்கலத்துடன் இளம் வீரரான ஜார்க்கண்டை சேர்ந்த இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிராக இஷான் கிஷன் கடைசி கட்டத்தில் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா முக்கியமான கட்டத்தில் மந்தமாக விளையாடி நெருக்கடியை அதிகரித்தார்.

22 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த அவரது மந்தமான ஆட்டமும் தோல்விக்கான முக்கிய காரணி களுள் ஒன்றாக அமைந்தது. இதனால் இந்த விஷயத்தில் குஜராத் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். வேகப் பந்து வீச்சில் கேரளாவை சேர்ந்த பாசில் தம்பி சற்று நம்பிக்கை அளிப்பவராக உள்ளார்.

இந்த சீசனில் கொல்கத்தா - குஜராத் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருந்தது. இந்த ஆட்டத்தில் தான் கிறிஸ்லின், காம்பீர் ஜோடி 184 ரன்கள் இலக்கை அசாத்தியமாக விக்கெட் இழப்பின்றி துரத்தி சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்:

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/ஈடன்கார்டன்-மைதானத்தில்-இன்று-மோதல்-கொல்கத்தாவை-சமாளிக்குமா-குஜராத்/article9655106.ece

  • தொடங்கியவர்

ஆம்லாவின் அபார சதம் வீண்; அதிகபட்ச ஐபிஎல் இலக்கை முதல் முறையாக வெற்றிகரமாக விரட்டிய மும்பை

 

  • சதம் அடித்த ஆம்லா. | படம்.| ஏ.எஃப்.பி.
    சதம் அடித்த ஆம்லா. | படம்.| ஏ.எஃப்.பி.
  • பந்தை விளாசும் பட்லர். | படம்.| ஏ.எஃப்.பி.
    பந்தை விளாசும் பட்லர். | படம்.| ஏ.எஃப்.பி.
 

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசிய ஆம்லாவின் சதம் வீணாக மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக அதிகபட்ச இலக்கை ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக துரத்தியது.

ஆம்லா சாதனைத் துளிகள்:

டி20 கிரிக்கெட்டில் ஆம்லாவின் முதல் சதமாகும் இது, இதற்கு முன்னர் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ரன்களாகும்.

நேற்று ஒரே ஆட்டத்தில் லஷித் மலிங்காவை மட்டும் 16 பந்துகளில் 51 ரன்களை விளாசினார் ஹஷிம் ஆம்லா, இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை விராட் கோலியிடம் ஒருநாள் போட்டியில் மலிங்கா வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு அதிகபட்ச ரன்களை அவர் ஒரே வீரருக்கு எதிராக விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவ்வுக்கு எதிராக ஒரு போட்டியில் விராட் கோலி 17 பந்துகளில் 52 ரன்களை எடுத்ததே அதிகம், இது டெல்லி அணிக்கு எதிராக ஆர்சிபி 2013 ஐபிஎல் போட்டியில் விராட் செய்த சாதனையாகும்.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் விளாச, தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 15.3 ஓவர்களில் 199 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அங்கு மலிங்கா 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தது போல் இங்கு இசாந்த் சர்மா 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். கிங்ஸ் லெவன் பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 அல்லது அதற்கும் கூடுதலான ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

மும்பை விரட்டலில் பார்த்திவ் படேல் அனாயசமாக ஆடி 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்களை விளாச ஜோஸ் பட்லர் 7 பவுண்டரிக்ள் 5 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 77 ரன்களையும், ரானா 7 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். ஹர்திக் பாண்டியா 4 பந்துகளில் 15 ரன்கள் வெளுத்தார். 199 ரன்கள் இலக்கு 16 ஓவர்களுக்குத் தாங்கவில்லை.

கிங்ஸ் லெவன் இன்னிங்ஸில் சஹா போராடினார் முடியவில்லை, மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

கிங்ஸ் லெவன் இன்னிங்ஸில் 2 ஓவர்கள் ஆட்டத்தை மாற்றியது, 15 மற்றும் 16-வது ஓவர்களில் ஆம்லா, மேக்ஸ்வெல் 50 ரன்களை விளாசித்தள்ளினர்.

இன்னொரு திருப்பு முனை அதிரடி வீரர் ஜோஸ் பட்லருக்கு 3-வது ஓவரில் டேவிட் மில்லர் கேட்ச் விட்டார், அதனால் அவர் 37 பந்துகளில் 77 ரன்களை விளாசி இலக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/ஆம்லாவின்-அபார-சதம்-வீண்-அதிகபட்ச-ஐபிஎல்-இலக்கை-முதல்-முறையாக-வெற்றிகரமாக-விரட்டிய-மும்பை/article9655945.ece?homepage=true

  • தொடங்கியவர்

முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் 6 நாட்கள் ஓய்வில் துபாய் சென்றுள்ளார் ஸ்மித்

 

ஐ.பி.எல். போட்டிகளை சந்திக்கும் நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 6 நாட்கள் ஓய்வாக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் 6 நாட்கள் ஓய்வில் துபாய் சென்றுள்ளார் ஸ்மித்
 
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு வெற்றி, மூன்று தோல்விகள் மூலம் நான்கு புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

கடந்த 17-ந்தேதி நடைபெற்ற பெங்களூருவிற்கு எதிராக போட்டியில் புனே அணி வெற்றிபெற்றது. 17-ந்தேதிக்குப்பின் ரைசிங் புனே அணி 22-ந்தேதி (நாளை) ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 24-ந்தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அந்த அணியின் கேப்டனான ஸ்மித் குடும்பத்துடன் ஒரு வாரம் ஓய்விற்காக துபாய் சென்றுள்ளார். இதனால் அவர் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26-ந்தேதி கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் கலந்து கொள்கிறார்.

வயிற்று வலி காரணமாக ஏற்கனவே ஏப்ரல் 11-ந்தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக போட்டியில் ஸ்மித் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

புனே அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளன. இதில் 7-ல் கட்டாயம் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/21170155/1081166/Steve-Smith-takes-six-day-break-from-Rising-Pune-Supergiant.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: கோல்கட்டாவை வீழ்த்தியது குஜராத்
 
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: ரெய்னாவின் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

 

ஐ.பி.எல். 10-வது சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: ரெய்னாவின் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்
 
கொல்கத்தா:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா சார்பில் உத்தப்பா 72 (48) ரன்களும், நரேன் 42 (17), காம்பீர் 33 (28), மணீஷ் பாண்டே 24 (21) ரன்கள் எடுத்தனர்.

201704220006079888_PB1D1319._L_styvpf.gi

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் - மெக்கல்லம் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய பிஞ்ச் 31 ரன்கள் எடுத்திருந்த போது கோல்டர்-நைல் பந்தில் மணீஷ் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சர் விளாசிய மெக்கல்லம் 31 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் வோக்சிங் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரெய்னா 86 (46) ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து குஜராத் லயன்ஸ் 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மேலும் கொல்கத்தாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/22000551/1081219/IPL-GL-won-against-KKR-by-4-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா டெல்லி?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று ‘ராஜநடை’ போட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி அணி இன்று மோதுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா டெல்லி?
 
தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோல்வி கண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம் தான். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று ‘ராஜநடை’ போட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த பயணத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாக உள்ளது. சொந்த ஊரில் (மும்பை வான்கடே மைதானம்) ஆடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.

மும்பை அணியில், பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாவிட்டாலும், பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கிறார்கள். நிதிஷ் ராணா (3 அரைசதத்துடன் 255 ரன்) ஜோஸ் பட்லர், கேப்டன் ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா உள்ளிட்டோர் அதிரடியில் அட்டகாசப்படுத்துகிறார்கள்.

201704221018464303_Delhi-Daredevils-vs-M

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த அணி 5 ஆட்டங்களிலும் ‘சேசிங்’ செய்தே வெற்றி பெற்றிருக்கிறது. மும்பை மைதானமும் 2-வது பேட்டிங்குக்கே உகந்தது என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை கொடுக்கும்.

ஜாகீர்கான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி 2-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று இதுவரை 4 புள்ளிகளை சேர்த்துள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை தோல்வி கண்ட ஆட்டங்களிலும்கூட கடுமையாக போராடித்தான் பணிந்திருக்கிறது. அதனால் மும்பையின் ஆதிக்கத்துக்கு அணைபோடுவதற்கு எல்லா வகையிலும் கடுமையாக முயற்சிப்பார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/22101846/1081252/Delhi-Daredevils-vs-Mumbai-Indians-match-on-today.vpf

  • தொடங்கியவர்

ஹைதராபாத்துக்கு எதிராக எழுச்சி பெறுவாரா?: தோனி ஃபார்ம் மீது குவியும் கவனம்

 

 
ஷேன் வாட்சன் பந்தில் பவுல்டு ஆன தோனி. | படம்.| கே.முரளிகுமார்.
ஷேன் வாட்சன் பந்தில் பவுல்டு ஆன தோனி. | படம்.| கே.முரளிகுமார்.
 
 

நாளை (சனிக்கிழமை) வலுவான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக மோதும் புனே அணி தோனி ஃபார்ம் மீட்சியை கடுமையாக எதிர்பார்க்கிறது.

5 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள புனே அணி 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 7-ம் இடத்தில் உள்ளது.

ஆனால் கடைசியாக ஆர்சிபி-யை வீழ்த்தியதால் உத்வேகம் புனே அணியிடம் உள்ளது.

புனே அணி தோனியின் ஃபார்ம் மீட்சியை கடுமையாக எதிர்நோக்குகிறது. 12 நாட் அவுட், 5,11,5 28 இதுதான் தோனியின் இந்த ஐபிஎல் ஸ்கோர்கள் ஆகும்,, இவரை விட அனுபவம் குறைந்தவர்களெல்லாம் வெளுத்து வாங்கும் போது அவருக்கு ஏதோ மனத்தடை ஏற்பட்டுள்ளது.

அவரை அடக்குவதற்கு நீண்டநாட்களாகவே பவுலர்கள் கடைபிடித்து வரும் உத்திகளுக்கு எதிராக தனது ஆட்டத்தை தோனி மாற்றியமைத்துக் கொள்ளவில்லை, அவரிடம் ஸ்ட்ரோக்குகளும் குறைவுதான், அவர் தனது பாணியை மாற்றிக் கொள்வதை விட இன்னும் ஆக்ரோஷமாக பலவிதமான ஸ்ட்ரோக்குகளை ஆடி, பவுலர்களின் மனநிலையில் புகுந்து விளையாடினால் இன்னமும் கூட அவர் ஒரு அபாயகரமான வீரர்தான்.

குறைந்த ஸ்கோர்களில் ஆட்டமிழக்கும் போது நம்பிக்கை இழக்கக் கூடாது, சச்சின் டெண்டுல்கர் 2 ஆட்டங்களில் தொடர்ந்து குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தால் அப்போதுதான் எதிரணி அவரைக்கண்டு அதிகம் பயப்படும். சச்சின் அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை எதிரணி பவுலர்கள் மனதில் ஏற்படுத்தினார், தோனியும் அவ்வாறான அச்சத்தை எதிரணியினரிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

அவரது உத்வேகம் குறைந்து காணப்படுகிறது, அவரை எழுச்சிபெறச் செய்ய தொடக்க வீரராகக் களமிறக்கி ஓரிரண்டு போட்டிகளில் ‘பிஞ்ச் ஹிட்டர்’ மாதிரி இறக்கி பவர் பிளேயில் கவலைப்படாமல் அடித்து நொறுக்குமாறு சுதந்திரம் அளிக்க வேண்டும், பிறகு அவரை பழைய பினிஷிங் ரோலுக்குக் கொண்டு வர முடியும்.

ஏனெனில் தோனி சிறப்பாக ஆடிய போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011-ல் தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஸ்மித், ரஹானே ஆகியோர்தான் ஆடி வருகின்றனர், அதிக விலை கொடுத்து வாங்கிய பென் ஸ்டோக்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக அரைசதம் எடுத்தார், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவரும் கலக்கவில்லை.

பவுலிங்கில் புனே அணியின் சொத்து என்றால் அது இம்ரான் தாஹிர்தான். 8 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். ஆனால் பந்து வீச்சில் தாக்கம் இல்லை.

கலக்கும் ஹைதராபாத்:

மாறாக கடந்த ஐபிஎல் சாம்பியன் ஹைதராபாத் 6 போட்டிகளில் 4-ல் வென்று 3-ம் இடத்தில் உள்ளது. அருமையாகத் தொடங்கிய சன் ரைசர்ஸ் பிறகு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தோல்வு தழுவியது. ஆனால் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி அணிக்கு எதிராக அருமையாக வெற்றி பெற்றனர். புவனேஷ் குமார் அங்கு ஒரு சக்தியாக எழுச்சி பெற்றுள்ளார்.

வார்னர், தவண் ஜோடி நல்ல தொடக்கங்களை கொடுத்து வருகிறது. இருவரும் இணைந்து 200 ரன்களுக்கும் மேல் இந்த ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளனர்.

பவுலிங்கில் புவனேஷ், ஆப்கன் புதிர் பவுலர் ரஷித் கான் உள்ளனர், இருவரும் முறையே அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முறையே முதலிடம் மற்றும் 3-ம் இடம் பிடித்துள்ளனர். புவனேஷ் 15 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

எனவே தோனியின் ஃபார்ம், புனேயின் உத்வேகம் ஆகியவற்றை பொறுத்து நாளைய போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படும்.

http://tamil.thehindu.com/sports/ஹைதராபாத்துக்கு-எதிராக-எழுச்சி-பெறுவாரா-தோனி-பார்ம்-மீது-குவியும்-கவனம்/article9656033.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தும் திறமை டெல்லி அணியிடம் உள்ளது: மேத்யூஸ் சொல்கிறார்

தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை குவித்து முதல் இடம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீ்ழ்த்தும் திறமை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் உள்ளது என்று மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

 
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தும் திறமை டெல்லி அணியிடம் உள்ளது: மேத்யூஸ் சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் அதிக வெற்றிகளை குவித்துள்ளன. குறிப்பாக மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் தோற்றபின், தொடர்ந்து ஐந்து வெற்றிகளை குவித்துள்ளது. நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 199 ரன் சேஸிங்கை 15.3 ஓவரிலேயே முடித்தது. இதனால் மற்ற அணிகள் அஞ்சுகின்றன.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தும் திறன் தங்களிடம் உள்ளதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் 199 ரன்களை 15.3 ஓவரில் எட்டியது. ஆனால், உறுதியாக அவர்களை வெல்ல முடியும். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

நாங்கள் தோற்ற போட்டிகளில் எல்லாம் நெருங்கி வந்துதான் தோற்றோம். அடுத்த முறை இதுபோன்று சூழ்நிலை வந்தால், போட்டியை திறமையாக முடிப்போம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/22170804/1081375/Delhi-Daredevils-Have-the-Skill-To-Beat-Mumbai-Indians.vpf

  • தொடங்கியவர்

#IPL10: புனேவுக்கு 177 ரன்கள் டார்கெட்

 

இன்று ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியில் ஹைதராபாத் அணியும் புனே அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

srh

20க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் அதன் பரபரப்பை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் புனே-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 55 ரன்கள் குவித்தார். டேவிட் வார்னர் 43 ரன்களும்  ஷிகர் தவான் 30 ரன்களும் குவித்தனர். புனே தரப்பில் உனத்கட், இம்ரான் தாஹிர், கிரிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  இன்று புனே அணியில் களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது புனே அணி.

Photo Courtesy: IPLT20 

  • தொடங்கியவர்
தோனி அரை சதம்: புனே அணி 'திரில்' வெற்றி
  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்த 17 வயது தமிழக வீரர்!

 

 
Washington_Sundar3

 

17 வயது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஹைதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் புணே அணி சார்பாக விளையாடுகிறார்.

புணேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

புணே அணியில் இடம்பெற்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார். காயத்தால் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2016-ல் நடைபெற்ற U-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக சுந்தர் விளையாடினார்.

ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புணே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புணே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

ஐபிஎல்-லில் விளையாடிய இளம் வீரர்கள்:

17 வயது 177 நாள்கள்: சர்ஃபராஸ் கான் 
17 வயது 179 நாள்கள்: சங்வான் 
17 வயது 199 நாள்கள்: வாஷ்ங்டன் சுந்தர்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சிக்ஸ், பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள்: 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்த சுனில் நரைன்

சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள் குவித்து 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்துள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன்.

 
சிக்ஸ், பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள்: 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்த சுனில் நரைன்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் சுனில் நரைன். 6 பந்துகளையும் வித்தியாசமாக வீசும் திறமை படைத்த இவரது பந்தை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறுவார்கள்.

பந்து வீச்சில் ஜாம்பவனாக விளங்கும் இவருக்குள் பேட்டிங் திறமையும் உள்ளது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் வெளிப்பட்டு வருகிறது. மூன்று போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன், இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று குஜராத் அணிக்கெதிராக தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். பால்க்னெர் வீசிய அடுத்த ஓவரில் நான்கு பவுண்டரிகள் பறக்க விட்டார்.

பாசில் தம்பி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். ரெய்னா வீசிய அடுத்த ஓவரில் அவுட் ஆனார். 15 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர், 17 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் மூலம் 42 ரன்கள் குவித்தார். இந்த 42 ரன்களும் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலம் வந்தது.

ஐ.பி.எல். தொடக்க சீசன் 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சனத் ஜெயசூர்யா சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக 36 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது 10 வருடம் கழித்து இந்த சாதனையை சுனில் நரைன் முறியடித்துள்ளார்.
 
  • தொடங்கியவர்

#RPSvSRH 'தோனி இஸ் பேக்': ஹைதராபாத் அணியை சாய்த்தது புனே!

ஐபிஎல் போட்டியில், இன்று முதலில் புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் புனே-ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

Dhoni

சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 55 ரன்கள் குவித்தார். டேவிட் வார்னர் 43 ரன்களும்  ஷிகர் தவான் 30 ரன்களும் குவித்தனர். புனே தரப்பில் உனத்கட், இம்ரான் தாஹிர், கிரிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  குறிப்பாக, புனே அணியில் களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார்.


இதையடுத்து, களமிறங்கிய புனே அணி , இன்னிங்ஸை மெதுவாக துவங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ராகுல் திருப்பதி 59 ரன்கள் அடித்தார். ரஹானே 2, கேப்டன் ஸ்மித் 27, ஸ்டோக்ஸ் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆரம்பத்தில் அவர் பொறுமையாக ஆடவே, சமூகவலைதளங்களில், தோனியை ட்ரோல் செய்து ஸ்டேட்டஸ் தட்டினர்.


பின், ஒரு கட்டத்தில் தோனி விஷ்வரூபம் எடுத்தார். பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு, பழைய பன்னீர்செல்வமாக மாறி அரை சதம் அடித்தார். குறிப்பாக கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட போது, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி வின்னிங் ஷாட் அடித்தார் தோனி. 
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில், புனே அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்து அசத்தினார்.


ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணிக்கு இது இரண்டாவது வெற்றி. ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணிக்கு இது மூன்றாவது தோல்வி. இதைத் தொடர்ந்து இன்று நடக்கவுள்ள மற்றொரு போட்டியில், டெல்லி, மும்பை அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

http://www.vikatan.com/news/sports/87273-dhonis-half-century-helps-pune-to-beat-hyderabad.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.