Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை நம்புவது? எம்மைத்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரை நம்புவது? எம்மைத்தான் - சூரியனுக்காக புனிதன் (அவுஸ்திரேலியா)

"..செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.."

செய்திகள் இணையத் தளங்களில் தினசரி வருகின்றன. பத்திரிகைச் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும், நேர்காணல்களையும் தாங்கியபடி அவை வீட்டில் உள்ள கணணி மூலம் வருகின்றன.எந்தெந்த இணையத் தளங்களைப் பார்க்கலாம்? யார் யாரின் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் வாசிக்கலாம்? எந்த நேர்காணல்களையும், ஒலிமூலம் வருகின்ற செய்திகளையும் கேட்கலாம்? என்று ஒருவாறு தெரிவு செய்து முடித்தாலும், தேர்ந்தவையை மட்டும் உள்வாங்கினாலும், தேர்ந்தவை ஏதோ ஒரு விதத்தில் நாம் எதிர்பார்த்ததை வெளிக்கொணரும் காரணத்தினால் மட்டுமே எம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவை என்ற உளவியல் உண்மை மறுக்க முடியாததாகிறது. தவிர்க்க முடியாததும் ஆகிறது.

அப்படி உள்வாங்கும் அனைத்தையும் நம்புகிறோம். ஒரு நெற்றிச் சுளிப்புக் கூட இல்லாமல் எம் மனதால் அங்கீகாரம் வழங்கப்பட்ட அந்த இணையத் தளங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் சிறப்புச் சான்றிதழ்களை நாமே வழங்கி அவற்றுக்கோ, அவர்களுக்கோ விளம்பரம் கூடச் செய்கிறோம். இதில் தவறு எதுவும் இல்லை. இது மனித இயற்கை. மனிதத் தனம் என்று கூடச் சொல்லலாம். நாங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது அனைத்தும் உண்மையா? ஆய்வுக் கட்டுரைகளின் முடிபுகளும் ஊகங்களும் சரியானவை தானா? விடை தெரியவில்லை.

அண்மையில் கொழும்புத் துறைமுகத்தில் என்னவோ நடந்ததாக ஒரு செய்தி. முதலில் இலங்கை அரசின் செய்தியாக - விடுதலைப் புலிகளின் படகுகள் தாக்கி அழிக்கப் பட்டதாக – வந்தது. பின்னர் இக்பால் அத்தாஸின் செய்தி ஆய்வுக் கட்டுரை “கள நிலவர அறிக்கை (Situation Report)” வெளிவந்தது. அது அரசின் செய்திக்குப் பலமூட்டியது. பின்னர் மீனவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் தமது வள்ளங்களே இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன என்று தெரிவித்த செய்தி வந்தது. இது பற்றி விடுதலைப் புலிகள் எதுவும் சொன்னதாக நினைவில்லை. இன்னும் சில நாட்களில் கொழும்புத் துறைமுகத்தில் வீரமரணம் எய்திய மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளிவந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இது ஒரு நிகழ்வு மட்டுமே. இவ்வாறான நிகழ்வுகள் இலங்கைச் செய்திகளுக்கு மட்டும் என்று ஒதுக்கிவிட முடியாது. இவ்வாறான நிகழ்வுகள் இன்றைய உலக ஊடகச் செய்திகளின் வரைவிலக்கணம் ஆகிவிட்டது.

80களில், தமிழீழச் செய்தி ஆய்வுகளுக்கு The Hindu பத்திரிகையும், D.B.S ஜெயராஜின் கட்டுரைகளும், BBC தமிழோசையும் நம்பக் கூடியவையாக அமைந்திருந்தன. இவை குட்டிக்கரணம் அடிக்க, மாமனிதர் சிவராம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவை நம்பக் கூடியவையாக அமைந்திருந்தன. அவர் குட்டிக்கரணம் அடிக்கவில்லை. அவர் சுடப்பட்டு மரணமான பின் நம்பக் கூடியவை கானல் நீரானன.

நிர்மலராஜனின் பின் BBCக்கு தமிழீழ ஊடக இயலாளர் பஞ்சம் ஏற்பட்டு சிங்கள Dumeetha Luthra விடம் BBC தஞ்சம் அடைந்தது. ஊரில் என்ன நடக்கிறது? எப்போது எம் மண் விடுதலையாகும்? எப்போது அந்த மண்ணின் வாசனையுடன் எம் கடைசி மூச்சுக் கலக்கும்? என்று நாம் அந்த மண்ணை மேம்படுத்துவது? - என்ற சிந்தனையுடன் இணையத் தளங்களைத் தினசரி வலம் வரும் அனைவருமே வஞ்சிக்கப் படுகிறார்கள்.

இந்த வஞ்சனை புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கு மட்டும் தானா? இல்லையே. A9, A15 நெடுஞ்சாலைப் போக்கு வரவுத் தடையால் தபாலில் கூட செய்திகள் வெளியேற முடியாது. தொலைத் தொடர்பு அறுக்கப் பட்ட நிலையில் தமிழீழச் செய்திகள் கொழும்பைக் கூடச் சென்றடையாதே!

பத்திரிகை அச்சடிக்கும் தாள்களும் மையும் தடை பட்டபின் தமிழீழத்தில் உள்ளவர்கள் கூட பேந்தப் பேந்த விழிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது கூட இன ஒழிப்பின் ஒரு பக்கமே. போக்கு வரத்துத் தடை, பொருளாதாரத் தடை, மருந்துப் பொருட்களின் தடை, ஊடகத் தடை அனைத்தும் இன ஒழிப்பின் மற்றைய பக்கங்கள்.

மஹிந்தவோ, கெஹலியவோ, அன்றி பிரஸாத் சமரசிங்கவோ “வெற்றி முரசு” கொட்டும் வரை வாகரை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விலகியது சிங்களவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. இதேபோல, இலங்கைக் கடற்படையின் தென் பிராந்தியத் தளபதிக்கு Court Martial நடத்தப்படும் வரை காலித் துறைமுகத் தாக்குதலில் ஏற்பட்ட அழிவின் அளவைக் காலி மக்களே ஊகித்திருப்பாரோ தெரியாது.

தமக்குச் சாதகமானதைச் சொல்வது பிரசாரம். தமக்குப் பாதகமானதைச் சொல்லாமல் விடுவது தணிக்கை. இந்தப் பிரசாரத் தணிக்கைக்கு ஒரு புதிய சொல் வேண்டும்.

இதே போன்ற ஒரு கலங்கிய நிலை, காலியில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தின் செய்திகளிலும் காணமுடிந்தது. இன்றைய முக்கிய செய்திகள் இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாடு, கொழும்பு அரசியல் நிலை இரண்டையும் பற்றியவையாகவே உள்ளன. இந்த இரண்டுக்கும் இத்தனை முக்கியத்துவம் தேவையா? இந்த இரண்டாலும் தமிழீழ விடுதலைக்கோ அல்லது தமிழீழ மக்களின் அவலங்களுக்கோ ஏதாவது விமோசனம் அல்லது தாக்கம் உண்டா? இந்த இலங்கையினதும் சர்வதேசத்தினதும் அரசியல் திருவிளையாடல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவையும், தமிழீழ மக்களின் அவலங்களின் விடிவையும் அடையும் நாளைத் தூரத் தள்ளுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இலங்கை அரசியலால் முடிவு வரும்- சர்வதேச நகர்வுகளால் விடிவு வரும் என்று நம்புவது கூடப் பகற் கனவே.

சர்வதேச நிலைப்பாடு பற்றி ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தமிழீழம் பற்றிக் கடிதம் எழுதிய செய்தி வந்திருந்தது. இதன் விளைவுகள் என்ன? தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவது அல்லது நிறுத்துவது. இதில் அந்தக் கடிதம் வெற்றி கண்டிருக்கிறது. இக் கடிதம் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுக்கும் குழுவரை (Foreign policy planning committee) சென்றதா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இக் கடிதத்தால் இலங்கை அரசியலில் ஏதாவது பாதிப்பு அல்லது தாக்கம் ஏற்பட்டதா? இல்லை என்று சொல்ல யோசிக்கவே தேவையில்லை. இக் கடிதத்தால் ஈழத் தமிழ் மக்களின் அவலநிலைக்கு ஏதாவது விடிவு ஏற்பட்டதா? இல்லையே. எனவே, ஈழத் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுதராத செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடமை தமிழீழ ஊடகங்களுக்கு இல்லை என்பது தெளிவு. ஆனால் இந்திய – தமிழ்நாட்டு அரசியல் களத்தை விட்டு வெளியேறி அந்நாட்டு மக்கள் ஆதரவைத் தேடவேண்டிய, திரட்ட வேண்டிய கடமை தமிழீழ ஊடகங்களுக்கு உண்டு. தமிழ்நாட்டுத் திரைப் படத்துறையினரால் ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிதி சேகரிப்பது போன்ற செய்திகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அதில் பங்கு பற்றும் அனைவரும் வேறுபாடுகளின்றி தமிழீழ ஆதரவு ஊடகங்களால் பாராட்டப் படல் வேண்டும்.

வல்லரசுகளின் ஈழம் பற்றிய நிலைப்பாடு பலரால் அண்மையில் அலசப் படுகிறது. வல்லரசுகளின் தேவை வர்த்தகம், இராணுவ முக்கியத்துவம், தம் சார்பான அரசு. தமிழீழம் என்ற நாடு உதித்தபின் அந்நாடு யார் பக்கம் சாயும் என்பதில் உள்ள சந்தேகம் கூட வல்லரசுகளின் இன்றைய நிலைப்பாட்டிற்கும் செயற்பாடிற்கும் காரணங்களாக உள்ளன. ஆயுதப் போராட்டத்தால் புதிய நாடுகள் உருவாதல் என்பது வல்லரசுகளின் சிந்தனையில் என்றுமே விரும்பப்படாத ஒன்று. திருமலைத் துறைமுகமும், புல்மோடை Ilmenite (Titanium என்ற விலை மதிப்பற்ற உலோகத்தின் மூலப்பொருள்) உம் இருக்கின்ற வரை, தமிழீழத்தின் பின் வல்லரசுகளின் வலம் எதிர்பார்க்கப் படவேண்டியது. மன்னாரில் எண்ணை வளம் இருக்கிறதோ? இல்லையோ? எவ்வளவு உண்டு? என்பன ஆய்வுக் கிணறின்றித் (well testing ) தீர்மானிக்க முடியாத ஒன்று. எண்ணை வளம் உண்டு என்ற சந்தேகம் இருந்திருந்தால் இதுவரை இந்தியா ஆய்வுக் கிணறு தோண்டியிருக்கும் - சேது சமுத்திரத் திட்டமும் ஒரு மூலைக்குள் போடப் பட்டிருக்கும். எனவே, வல்லரசுகளின் ஈழம் பற்றிய நிலைப்பாடு, இன்றைய ஈழத் தமிழ் மக்களின் அவலநிலைக்கு உடனடி விடிவுதராது. இச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடமை தமிழீழ ஊடகங்களுக்கு இல்லை. ஆனால் அவலங்களை வல்லரசுகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை தமிழீழ ஊடகங்களுக்கு உண்டு.

தமிழீழம் பற்றிய சர்வதேச நிலைப்பாடுகள் பற்றிய செய்திகள், அவற்றைப் படிப்பவர்களுக்கு, சர்வதேசம் எதையோ செய்யப் போகிறது என்ற அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பதும், சர்வதேசம் எதையும் செய்யப் போவதில்லை என்பதும் உண்மை.

கொழும்பு அரசியல் நிலை அடுத்து முக்கியத்துவம் பெறும் செய்தி. ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு என்றுமே ஈழத்தமிழரின் உரிமைகளுக்கு இடமளிக்காது என்பதுதான் தமிழீழக் கோரிக்கைக்கும், ஆயுத விடுதலைப் போராட்டத்துக்கும் வழிவகுத்தது. கொழும்பு அரசியல் நிலை பலமாக இருந்தால் விடுதலை கிடைப்பது பிந்தும். கொழும்பு அரசியல் நிலை பலவீனமாக இருந்தால் விடுதலை கிடைப்பது இலகுவாகும். இன்றும் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு ஸ்ரீலங்காவை நம்பித்தான் வன்னி நிலம் வாழ்கிறது. நாடு ஸ்ரீலங்காவின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் எம் பொருளாதார விடுதலை. விவசாய விடுதலையை ஓரளவு நேரில் காணமுடிந்தது. ஸ்ரீலங்கா படைத்துறையையும் விட கூடுதலான தொலைத் தொடர்புசேவை விடுதலைப் புலிகளிடம் உள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது.

ஆனால் குறைந்த அளவிலாவது மக்கள் தொடர்பு சுயாதீனச் சேவையாக உண்டா? என்பதில் இன்னும் சந்தேகம் உண்டு. மின்சார உற்பத்தியும் அப்படியே.

இப்படி ஸ்ரீலங்காவிடம் தங்கியிருக்க வேண்டிய அடிப்படை சேவைகள் இருக்கும்வரை, அந்தச் சேவைகளைத் துண்டித்து, தடைவிதித்து தமிழீழ மக்களை அடிபணியவைக்கும் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். நாடு இராணுவ வெற்றியைப் பெற்றாலும் முழுமையான விடுதலையைப் பெற முடியாது. எமது தமிழீழத் தேசியத் தலைவரும் தலைமையும் இவற்றுக்கான வழிகளை வகுத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. என்றாலும் எமக்கும் எம் ஊடகங்களுக்கும் இதன்பால் உள்ள தார்மீகக் கடமை துடைத்தெறிய முடியாதது. நாளை தமிழீழம் மலர்ந்தால் எத்தனை தமிழீழ நகரங்கள் அடுத்த கணமே நடைமுறை நகரங்களாகும்? முழுநகரங்களாக எத்தனை ஆண்டுகள் செல்லும்? இவை கூட இன்றே வகுக்கப்பட வேண்டிய திட்டங்கள்.

செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.

- சூரியன்

தமிழ் தேசிய ஊடக கட்டுப்பாட்டுச் சபை விரைந்து நிறுவப்பட வேண்டியது அவசியம்!

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இலங்கையினதும் சர்வதேசத்தினதும் அரசியல் திருவிளையாடல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவையும்இ தமிழீழ மக்களின் அவலங்களின் விடிவையும் அடையும் நாளைத் தூரத் தள்ளுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இலங்கை அரசியலால் முடிவு வரும்- சர்வதேச நகர்வுகளால் விடிவு வரும் என்று நம்புவது கூடப் பகற் கனவே.

இதை எவ்வாறு திரு.சூரியன் அவர்களால் அடித்து கூற முடிகிறது? ஏனைய ஊடகங்களை குற்றம் சுமத்தி நிற்குமிவர். தனது கருத்தை ஆணித்தரமாக கூறுவதில் சற்றேனும் தயக்கம் காட்டவில்லை. இதை இவர் கடந்த கால அனுபவத்தை வைத்தே கூறுகிறார் என்பது எனது கணிப்பு. அப்படித்தான் ஏனைய ஊடகங்களும் செய்கின்றன. ஆனால் சில நேரங்களில் காமிருக்க பனங்காய் விழுந்துவிடுகிறது அவ்வளவுதான். தமிழிலே தமிழர்களுக்காக வெளியிடப்படும் ஊடகங்கள் சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதில் என்ன லாபமிருக்கிறது? தமிழரை தவிர்த்து யார் அதை வாசிக்கபோகிறார்கள்??? ஊடகத்துறைக்கு மக்கள் தற்காலிக தோல்விகளால் மனமுடைந்து போகாது எதிரி எதிர்பார்த்த கிடங்கில் விழாது காப்பாற்ற வேண்டிய கடமை மிக முக்கியமானது. அதையே சில தமிழ் ஊடகங்கள் செய்கின்றன. சிலர் ஏதோ தாம் பெரிய புத்திசாலிகள் பிழைகளை கண்டுபிடிக்துவிட்டோம் என்று பினாத்துகின்றனர்.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையரின் துப்பாக்கிக்கு பயந்து ஓடி திரிந்த மக்களையும் இளைஞர்களையும் ஓரு அணியில் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நம்பிக்கையை வளர்த்து பயந்த நிலையை ஒழிக்க பாரதி பாடினான்........

""""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே......

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்று"""""""

அந்த காலத்தில் நெடுக்காலபோவான் குறுக்காலபோவான் போன்றவர்கள் இருந்திருந்தால் உடனே அறிவுசார் கேள்வியை முன்வைத்திருப்பார்கள்.

உச்சிமீது வான் இடிந்து விPழும்போது மனிதனால் அச்சப்படாமல் இருக்க முடியுமா என்று?

ஓரு கவிஞனின் உள்நோக்கம் புரிய முடியாதவர்கள். ஓரு ஆக்கத்தை பற்றி குறை கூற எந்த பரிந்துணர்வோடு வருகிறார்கள்????? ஒரு ஊடகத்தை நடத்துபவனுக்கே அதன் கஸ்டங்களும் கடின உழைப்பின் பழுவும் தெரியும். இங்கே திண்ட உணவு செமி;க்க உலாவருபவர்கள்.

புதினம் இணையத்தளம் பற்றியும் எழுதிதள்ளினார்கள். அதை எங்கிருந்து எவளவு கஸ்டங்களுக்கு மத்தியில் எமது மக்களுக்காக அதை நடத்துகிறார்கள் என்பதை இவர்கள் அறிவார்களா???

ஆகா மருதங்கேணி என்னத்தை அடித்துக் கூறுகிறீரீ?

புலம்பெயர்ந்த "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்" எழுதுற உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றதைப் படிச்சுப் போட்டுத்தான் தாயகத்தில போர்க்களத்திற்கு போகினம் என்றோ? தாயகத்தில இருக்கிறவை இணையத்தில பத்து பதினைந்து இணைய domains இல காப்புரிமைக்கு மதிப்புக் குடுக்காமல் வெட்டி ஒட்டினதை வாசிச்சுத்தான் செய்திகள் அறிகினம் எண்டோ?

புலம்பெயர்ந்த ஊடகங்கள் சேவை செய்யும் சமூகம் யார்? புலம்பெயர்ந்த ஊடகங்கள் யாரை நோக்கி இயங்க வேண்டும்?

புலம்பெயர்ந்த ஊடகங்கள் யாரை நோக்கி இயங்குகிறார்களோ அவர்களது கடமை என்ன?

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் சர்வதேசத்திற்கு எழுதவில்லை அதை தமிழர் தான் வாசிக்கிறார்கள் என்றீரோ? ஆனால் அவற்றை வாசிக்கும் தமிழர்கள் தமிழீழத்தின் பிரதிநிதியாக சர்வதேசத்தில் தான் பரந்து இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய தொலைக் காட்சியின் விவரணத்தின் வரிகள் "அந்தந்த நாடுகளில் அரசியல் முனைப்புகளாக, இராஜதந்திர முனைப்புகளாக பொருளாதார முனைப்புகளாக புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர் இயங்க வேண்டும்" என்கிறார்கள். இதை எப்படி வெள்ளைகாரனின் துப்பாக்கிக்கு பயந்து ஓடினவர்களிற்கு படிச்ச உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எண்ட மாதிரி கற்பனையில் எழுதி செய்யிறது என்று ஒருக்கால் விளங்கப்படுத்தவும்.

திண்ட உணவு செமிக்க உலாவருபவர்களிற்கு என்னத்திற்கு "ஊக்குவிப்பு கற்பனைகள்"? அவர்கள் பொருளாதார நெருக்கடியில் பசியால், மருந்துத் தட்டுப்பாட்டால் இராணுவ நெருக்கடிகளில் நம்பிக்கையிழந்து ஒடிந்து கொண்டிருப்பவர்களா? யார் இணையத்தில் பார்க்கிறார்கள்? யார் ஏனைய புலபெயர்ந்த சமூக ஊடகங்களை பார்க்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I am the author of that article. It was published on www.sooriyan.com. I do not know how to use the Tamil fonts in Yarl.com. Therefore, it has become a necessity to respond in English. I hope that Mr Maruthankerny understands my plight. With due respect to all media concerned, I have not accused any media, but I highlighted the pathetic situation of the entire media, leaving the entire readership in an state of confusion. The essence of my article "Yaaraiththan Nambuvathu? Emmaiththan" was, not to highlight the opinion of the Super Powers, Indian trickles about Sri Lanka but to highlight the necessity of the planning for the future of Thamileelam and be totally independent in every aspect of economy and infrastructure. I prefer to write in Tamil for the Tamils. I am not beyond criticism. But it is always better to criticise the contents, rather than the person.

For eg. I did not like the discussion about Muslims of Jaffna, and their mistakes couple of weeks ago. My opinion remains that until they speak Tamil (or its dilect) at home, they are Islamic Tamils. The fora about this was of a very bad taste.

Mr. Mruthankerni, could you please tell me how to respond to Yarl in Tamil.

Punithan.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்கு நேரடியாக வந்து பதில் தந்த திரு; புனிதனுக்கு எனது நன்றிகள்!

நான் உங்கள் கருக்தை சாடவில்லை. உங்களின் கட்டுரையின் நோக்கம் (Main Idea or topic) வேறாக இருந்த போதும்

நான் ஓரு குறிப்பிட்ட பகுதியை ( just a supporting deatails) மட்டுமே குறிப்பிட்டு எழுதியிருந்தேன். உங்களின் கட்டுரையின் நோக்கத்திலும் உட் கருத்திலும் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை மாறாக நான் உங்களின் கருத்து சரியெனவே கூறுகிறேன்.

ஆனாலும் பலர் தமிழ் ஊடகங்களை சாடிக்கொண்டிரக்கின்றார்கள் தமக்கு வாய்கு வந்த மாதிரி எல்லாம் எழுதி தள்ளுகிறார்கள் அதை குறிப்பிட்டு எழுதவே உங்களினுடைய கட்டுரையின் ஓரு பகுதியை பயன்படத்தினேன். அதனுடன் உங்கள் கருத்தை எந்த விதத்தில் எந்த நம்பிக்கையில் வைக்கின்றீர்கள் எனவும் வினாவினேன். அதற்கான பதிலை நானே எழுதியிருந்தேன். "கடந்த கால அனுபவங்கள் பாடங்களை வைத்தே நீங்கள் எழுதியாக"

அதுவே உண்மையென இப்போதும் நம்புகிறேன். ஊடகதுறையின் வளர்ச்சி போதாது. சர்வதேச சமுகத்துக்கு எமது பிரச்சனைகள் எட்டுவதில்லை என்பதை எப்படி நான் மறுக்க முடியும்? அதற்காக ஏன் தற்போதைய ஊடகங்களை சாடுகிறார்கள் என்பதே எனது கேள்வி??? அவர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள் அவர்களுக் நாம் ஆதாரவு கொடுத்தால்தானே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அதை விடுத்த ஒரு மொழியில் தொடங்கு முன்பு உலக மொழு ழிகளிலேயும் எழுத வேண்டும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?? உலகிலேயே அதிக ஆயுத அச்சுறுத்தல்களையும் தமது அலுவலகத்துக்குள்ளேயே குண்டு மழையையும் வெடி ஓசையையும் கேட்ட ஊடகங்களின் முன்னிலையில் உதயன் பத்திரிகையும் அல்ஜசீரா தொலைகாட்சி செய்தி நிறுவனமும்தான் நிற்கின்றன. அவர்களின் கடின உழைப்பை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? எவ்வளவு தியாக உணர்வோடும் அட்பணிப்போடும் செயற்படகின்றார்கள். எனது கருத்தை ஒரு வரியில் சொல்வதென்றால். சர்வதேசத்தை நோக்கி எமது செய்திகளை சொல்வதென்பது புலம்பெயர்ந்து வாழும் எம் எல்லோரினதும் கடமை. அதற்காக நாம் யாவரும் உழைக்க சேண்டும். ஒருவiரை சாடிவிட்டு உட்கார்ந்திரப்பதில் அர்தமுமில்லை லாபமுமில்லை என்பதே.

எனது கருத்தை புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மருதங்கேணி என்னத்தை அடித்துக் கூறுகிறீரீ?

புலம்பெயர்ந்த "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்" எழுதுற உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றதைப் படிச்சுப் போட்டுத்தான் தாயகத்தில போர்க்களத்திற்கு போகினம் என்றோ? தாயகத்தில இருக்கிறவை இணையத்தில பத்து பதினைந்து இணைய domains இல காப்புரிமைக்கு மதிப்புக் குடுக்காமல் வெட்டி ஒட்டினதை வாசிச்சுத்தான் செய்திகள் அறிகினம் எண்டோ?

புலம்பெயர்ந்த ஊடகங்கள் சேவை செய்யும் சமூகம் யார்? புலம்பெயர்ந்த ஊடகங்கள் யாரை நோக்கி இயங்க வேண்டும்?

புலம்பெயர்ந்த ஊடகங்கள் யாரை நோக்கி இயங்குகிறார்களோ அவர்களது கடமை என்ன?

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் சர்வதேசத்திற்கு எழுதவில்லை அதை தமிழர் தான் வாசிக்கிறார்கள் என்றீரோ? ஆனால் அவற்றை வாசிக்கும் தமிழர்கள் தமிழீழத்தின் பிரதிநிதியாக சர்வதேசத்தில் தான் பரந்து இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய தொலைக் காட்சியின் விவரணத்தின் வரிகள் "அந்தந்த நாடுகளில் அரசியல் முனைப்புகளாக, இராஜதந்திர முனைப்புகளாக பொருளாதார முனைப்புகளாக புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர் இயங்க வேண்டும்" என்கிறார்கள். இதை எப்படி வெள்ளைகாரனின் துப்பாக்கிக்கு பயந்து ஓடினவர்களிற்கு படிச்ச உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எண்ட மாதிரி கற்பனையில் எழுதி செய்யிறது என்று ஒருக்கால் விளங்கப்படுத்தவும்.

திண்ட உணவு செமிக்க உலாவருபவர்களிற்கு என்னத்திற்கு "ஊக்குவிப்பு கற்பனைகள்"? அவர்கள் பொருளாதார நெருக்கடியில் பசியால், மருந்துத் தட்டுப்பாட்டால் இராணுவ நெருக்கடிகளில் நம்பிக்கையிழந்து ஒடிந்து கொண்டிருப்பவர்களா? யார் இணையத்தில் பார்க்கிறார்கள்? யார் ஏனைய புலபெயர்ந்த சமூக ஊடகங்களை பார்க்கிறார்கள்?

திரு; குறுக்காலபோவான்!

உங்களுடைய கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஒரு வேளை நீங்கள் அவசரத்தில் வாசித்து விட்டு எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டு எதையோ கேட்க நினைக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நேரம் கிடைப்பின் மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்து விட்டு என்னை தெளிவாக கேட்டால் உங்களுக்க என்னால் பதில் கூற முடியும்.

ஒருவேளை எனது தமிழ் விளக்க குறைவுதான் காரணமோ தெரியவில்லை அப்படியாயின் பதில் தராததிற்கு மன்னிக்கவும்!

எனது கருத்தின் நோக்கம் ஊடகதுறையை வளர்ப்பதில் எமக்கும் பங்குண்டு என்பதே.

இதை நீங்கள் மறுக்கின்றீர்களா? அது தவிர்த்து பாரதியின் கவிதை வெறும் உதாரணமே. அது எனது கருத்திற்கு தேவையே இல்லை சுட்டிகாட்டவே எழுதினேன்.

திரு; குறுக்காலபோவான்!

உங்களுடைய கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஒரு வேளை நீங்கள் அவசரத்தில் வாசித்து விட்டு எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டு எதையோ கேட்க நினைக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நேரம் கிடைப்பின் மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்து விட்டு என்னை தெளிவாக கேட்டால் உங்களுக்க என்னால் பதில் கூற முடியும்.

ஒருவேளை எனது தமிழ் விளக்க குறைவுதான் காரணமோ தெரியவில்லை அப்படியாயின் பதில் தராததிற்கு மன்னிக்கவும்!

எனது கருத்தின் நோக்கம் ஊடகதுறையை வளர்ப்பதில் எமக்கும் பங்குண்டு என்பதே.

இதை நீங்கள் மறுக்கின்றீர்களா? அது தவிர்த்து பாரதியின் கவிதை வெறும் உதாரணமே. அது எனது கருத்திற்கு தேவையே இல்லை சுட்டிகாட்டவே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

I am the author of that article. It was published on www.sooriyan.com. I do not know how to use the Tamil fonts in Yarl.com. Therefore, it has become a necessity to respond in English. I hope that Mr Maruthankerny understands my plight. With due respect to all media concerned, I have not accused any media, but I highlighted the pathetic situation of the entire media, leaving the entire readership in an state of confusion. The essence of my article "Yaaraiththan Nambuvathu? Emmaiththan" was, not to highlight the opinion of the Super Powers, Indian trickles about Sri Lanka but to highlight the necessity of the planning for the future of Thamileelam and be totally independent in every aspect of economy and infrastructure. I prefer to write in Tamil for the Tamils. I am not beyond criticism. But it is always better to criticise the contents, rather than the person.

For eg. I did not like the discussion about Muslims of Jaffna, and their mistakes couple of weeks ago. My opinion remains that until they speak Tamil (or its dilect) at home, they are Islamic Tamils. The fora about this was of a very bad taste.

Mr. Mruthankerni, could you please tell me how to respond to Yarl in Tamil.

Punithan.

to write in tamil. there is another way in yarl. im sorry i culdnt find the info about that.

jus try here. http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

திரு குருக்கால போவான்,

புலம் பெயர்ந்த ஊடகர்களினதும், ஆய்வாளர்களினது கருத்துக்கள் என்பது அவர்கள் கருத்துக்கள் மட்டுமல்ல இனத்தின் கருத்துமாகும். அவ்வகையில் அனைவரது பங்களிப்பும் அவரவர் தகுதிக்கும் வசதியையும் பொருத்து நமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை தேச தேரை கட்டியிழுக்கும் தளபதிகளுக்கும், போரளிகளுக்கும் தார்மீக பலத்தை தரும் என்றால் மிகையல்ல. எனவே ஊடகர்களினதும், ஆய்வாளர்களினது பங்களிப்பு தேவையானது மட்டுமல்ல இன்றியமையாதது. மேலும் வெட்டி ஒட்டுவதை பற்றியும் கருத்து தெரிவித்தீர்கள்.எம்மை போன்றோருக்கு அவ்வாரேனும் கருத்து முழு வீச்சில் சென்றடையாதா என்ற ஆதங்கமே உள்ளது. தமிழ் ஊடகங்களின் கருத்துக்களை தமிழ் அறிந்த அனைவரும் அறியலாம். அவர்கள் அந்த கருத்துக்களை தாங்கள் வசிக்கும் நாட்டிலும் பரப்பலம் எனவே யாருக்காக எழுதுகிறோம் என்ற கேள்வி எழ இடமில்லை? இது ஏன் தாங்களுக்கு விளங்கவில்லை?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்பதை எவ்வாறு புலம் பெயர்ந்தவர்களுக்கு கூறுவது என்றும் கேட்டிருந்தீர்கள். நாம் தொடர்ந்து முயற்ச்சிக்கிறோம் எனவே முன்னேறுவோம் அகவே

"அஞ்சுவது யாதொன்றுமில்லை

அஞ்ச வருவதும் யாதொன்றுமில்லை"

எனவே அனைவரும் இனப்பகையை அழிக்க அவரவரர் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப்ப அரசியல், பொருளாதர முன்னெடுப்புகளை தொடர்ந்து முன்னெடுங்கள் என்று கூறுவதை ஆச்சரியபடுவதற்க்கு என்ன இருக்கிறது. நீங்கள் ஏன் தொடர்ந்தும் வெற்று கூச்சல் போடுகிறீர்கள்?

கதைக்குதவாத கருத்துக்களையும், தவரான எண்ணங்களையும் பரப்ப முட்டாள்களின் கூட்டம் ஒன்று எப்போதும் முன்னுக்கு நிற்க்கும் என்பதையும் நாங்கள் அறியாதவர்கள் அல்ல.

நன்றி

சிவராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புனிதன்,

உங்கள் கட்டுரை இலகு நடையில் ஆழமாக சிந்திக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக, எல்லோர் பார்வையிலும் உங்கள் கருத்துக்கள் இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதிலே இங்கு சிக்கல்கள் இருக்கின்றன. வெறுமனே நீங்கள் சொன்னது போல, ஊடகங்கள் இவற்றை செய்ய முடியாது என்ற மருதங்கேணியின் கருத்தோடு ஒத்து போகவும் முடியாது. அதே நேரம் அவரது கருத்தை புறந்தள்ளவும் முடியாது. பொருளாதரவளத்தை பொறுத்தவரை தமிழீழ நிர்வாக கட்டுப்பாட்டு பகுதி தன்னிறை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதை மறுப்பதற்க்கில்லை. சிறிலங்காவை நம்பி தமிழீழம் இன்று இருப்பதாய் ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்துக்கு, கணினி வன்னிபகுதிக்கு சிறிலங்கா அரசு தடை செய்திருந்த காலத்தில், கணிணி அங்கே கொண்டு வந்து பயிற்ச்சிகளை வழங்வுதும் சாத்தியமாயிற்று. அதே போல எரி பொருள், ஜயசிக்குறு காலத்தை இதற்க்கு உதாரணமாக கொள்ளலாம். சிறிலங்கா, வன்னிக்கான, அல்லது தமிழீழ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருளாதார தடைகளை விதிப்பதின் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வன்னிக்கும், யாழும் பொருட்கள் அனுப்புவது தடுக்கப்பட்டிருந்த நிலையில், யாழில் அரச கட்டுப்பகுதியில் ஏற்ப்பட்ட பொருள்த்தட்டுப்பாடு வன்னியில் ஏற்ப்படவில்லை காரணம், பெருமளவான பொருட்களை தாமே உற்பத்தி செய்யும் நிலைக்கு மக்கள் வளர்ச்சியடைந்து விட்டனர்.,

அதே நேரம் நீங்கள் சொல்வது போல, சர்வதேச, சிங்களவர்கள் சம்பந்தமான. செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்க கூடாது என்பது எவ்வளவுக்கு சரியானது என்பது எனக்கு தெரியாது விடினும். ஒரு இனத்திற்கெதிராக, அல்லது ஆதரவாக, எப்படியான குரல்கள் எழுகின்றன, என்பதையும், எதிரியின், மற்றும் எதிரி சார்ந்தவனின் பார்வை எங்கே, எப்படி நோக்குகின்றது என்பதையும் நாம் அறிந்திருந்தல் நன்று. எம்மை பற்றியும், எமது பலத்தின் மீதும் நம்பிக்கை கொண்டாலும், நாளை ஒரு தேசம் என்று வரும் போது அதை உலகில் நிலை நிறுத்த சர்வதேச அங்கீகாரம் என்பது இன்றியமையாதது. சர்வதேசமோ, சிங்கள அரசாங்கமோ, வெளியில் ஊடகங்களுக்கு சொல்வதை தமது அரசியல் இலக்காக ஒரு போதும் கொண்டிருப்பவை அல்ல. வெளியே எதிராகவும், உள்ளே ஆதரவாகவும், அரச பரிமாற்றங்கள் நடைபெறுவது வழமை. எனவே, ஊடகம் என்ற ஒன்றின் கடமை செய்திகளை எமக்கு தருவது அது எந்த செய்தியாயினும். ஈழத்தமிழருக்கு விடிவு தரக்கூடிய செய்திகளை மட்டும், நமது ஊடகங்கள் வெளியிடுமாயின் அது எம்மையும், எமது மக்களையும் கிணற்றுத்தவளையாகவே மாற்றும். மற்றும் படி அறிவுபூர்வமானதாக்காது என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடக தர்மம் என்பது சந்தர்ப்பத்திற்கேற்ப மாறுபடுவது. அதிலும் முக்கியமாக யுத்த காலங்களில் ஒரு ஊடம் என்ன செய்தியை வெளியிடுகிறது என்பது மிக மிக sensitive ஆனது. அதனால் தான் ஊடக கட்டுப்பாட்டுத்துறையை நிறுவி தணிக்கை செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தணிக்கை எவ்வளவு effective ஆனது என்பதனை புனிதன் அவர்களின் கட்டுரையில் விளக்கியிருந்தார் (Galle port attackt உதாரணத்தினூடாக.)

புலம்பெயர் ஊடகங்களிற்கு ஒரு கட்டுப்பாட்டுச்சபை கிடையாது. அதனால் அவர்கள் தாங்களாகவே தங்களுக்குச்சரி என்று படுவதை வெளியிடுகிறார்கள். பல சமயங்களில் அவர்களின் செய்திகள் backfire பண்ணுவதற்கு வாய்ப்புள்ளது என்று சில அறிவாளிகள் ( (குறு+நெடு)க்ஸ் ) ஆதங்கப்படுகிறார்கள்.

சில தமிழ் ஊடகங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திகளை சேகரிப்பதாக மருதங்கேணி அவர்கள் கவலைப்பட்டார். உண்மை தான், ஆனாலும் களத்தில் நிற்கும் போராளிகள் படும் கஷ்டங்களுடன் இதை ஒப்பிட முடியுமா? இறுதி வெற்றியை விரைவு படுத்த வேண்டாமா?

...

திண்ட உணவு செமிக்க உலாவருபவர்களிற்கு என்னத்திற்கு "ஊக்குவிப்பு கற்பனைகள்"? அவர்கள் பொருளாதார நெருக்கடியில் பசியால், மருந்துத் தட்டுப்பாட்டால் இராணுவ நெருக்கடிகளில் நம்பிக்கையிழந்து ஒடிந்து கொண்டிருப்பவர்களா? யார் இணையத்தில் பார்க்கிறார்கள்? யார் ஏனைய புலபெயர்ந்த சமூக ஊடகங்களை பார்க்கிறார்கள்?

குறுக்கால போவான் அவர்களே,

உங்கள் பதிப்புக்களில் அநேகமானவை மற்றவர்களின் கருத்துக்களை கேலி செய்வதாகவே அமைகிறது. நீங்கள் பக்கம் பக்கமாக அடித்துத் தள்ளும் பதிவுகளின் மூலம் உங்கள் நோக்கம் எனக்குப் புரியவில்லை. உங்கள் கொள்கை என்ன, புலத்திலுள்ள தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் ? தெளிவாக, என்போன்ற விளக்கம் குறைந்தவர்களுக்குப் புரியும்படியாக எழுதுவீர்களா ?

நன்றி.

திரு; குறுக்காலபோவான்!

உங்களுடைய கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ஒரு வேளை நீங்கள் அவசரத்தில் வாசித்து விட்டு எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டு எதையோ கேட்க நினைக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நேரம் கிடைப்பின் மீண்டும் ஒருமுறை கவனமாக வாசித்து விட்டு என்னை தெளிவாக கேட்டால் உங்களுக்க என்னால் பதில் கூற முடியும்.

ஒருவேளை எனது தமிழ் விளக்க குறைவுதான் காரணமோ தெரியவில்லை அப்படியாயின் பதில் தராததிற்கு மன்னிக்கவும்!

எனது கருத்தின் நோக்கம் ஊடகதுறையை வளர்ப்பதில் எமக்கும் பங்குண்டு என்பதே.

இதை நீங்கள் மறுக்கின்றீர்களா? அது தவிர்த்து பாரதியின் கவிதை வெறும் உதாரணமே. அது எனது கருத்திற்கு தேவையே இல்லை சுட்டிகாட்டவே எழுதினேன்.

முதலில், நான் ஒருபோதும் தாயகத்தில் இயங்கும் ஊடகங்களை கூறை கூறியது கிடையது. அவர்கள் தாம் இயங்கும் தளத்தில் தாங்கள் இயங்க வேண்டிய தாயகத்து சமூகத்தை நேக்கி திறம்பட இயங்குகிறார்கள். அதற்கு மேலாக பல தடவைகள் புலம்பெயர்ந்தவர்களின் கண்ணோட்டத்தில் வரவேண்டிய பல விடையங்களை (புலிகளின் தடை பற்றிய விடையங்கள்) தாயகத்தில் இருந்து மிகவும் சிறப்பாக நாடிபிடித்து எழுதியிருக்கிறார்கள். நல்ல உதாரணங்கள் உதயன், ஈழநாதம், தினக்குரல். கொழும்பில் இருந்து வரும் தினக்குரலின் செய்திகள் ஆசிரியர் தலையங்கங்கள் பற்றி சில விமர்சனங்கள் எனக்குள் இருந்தாலும் அதை வெளியில் எழுதுவதை இதுவரை தவிர்த்திருக்கிறன் ஏன் என்றால் அவர்கள் கூட ஒரு நெருக்கடியில் தான் தென்பகுதியில் இயங்குகிறார்கள் என்று. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இலங்கைத் தீவிற்கு வெளியில் இருந்து சுதந்திரமான சமூகத்தில் இயங்குபவர்கள் எழுதுபவர்கள் பற்றியதே எப்பொழுதும்.

என்னுடைய கேள்விகள் பின்வரும் பகுதிகளைப் பற்றியது

தமிழிலே தமிழர்களுக்காக வெளியிடப்படும் ஊடகங்கள் சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதில் என்ன லாபமிருக்கிறது? தமிழரை தவிர்த்து யார் அதை வாசிக்கபோகிறார்கள்???
சர்வதேசத்திற்கோ, சிறீலங்காவிற்கோ, இந்தியாவிற்கோ ஈழத் தமிழர் சார்பில் ஒரு செய்தியை சொல்லும் அளவிற்கு நம்பிக்கையை மரியாதையைப் பெற்ற ஊடகம் புலம்பெயர்ந்த சமூகத்தில் தமிழில் இயங்கவில்லை என்பது ஒரு விடையம். ஆங்கிலத்தில் அதற்குரிய மரியாதையை மதிப்பை பெற்ற ஊடகங்களாக தமிழ்நெற், தமிழ்காடியன் இருக்கிறது. தாயகத்தில் உதயன் இருக்கிறது. ஊடகங்கள் சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல தமிழில் எழுதுவது வேறு சர்வதேசத்தின் கண்ணோட்டத்தில் எமது போராட்டத்தின் இன்றய நிலையை நெருக்கடிக ளை புலம்பெயர்ந்துள்ளவர்களிற்க

ஒரு கட்டத்தில் போராடி மீட்கின்ற பகுதிகளில் அரசயந்திரம் செயலிழக்க வேண்டுவரும். இப்போ வன்னிப்பிரதேசம் போன்று. இன்றைய நிலையில் அரசின் சேவைகள் இல்லாமல் இயங்க முடியவில்லை . காரணம் ஒரு முழுமையான எங்கும் இராணுவம் இல்லாத பகுதி எமது கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இராணுவம் ஊடறுத்து பல பகுதிகளில் நிற்கின்றது. அதுவே அரசு அப்பகுதிகளில் இயங்குகிறது என்பதற்கான ஒரே ஒரு சான்று, இப்போ இராணுவ நலன் சார்ந்த சேவைகளால் மட்டுமே அங்கு மக்கள் நலன் கவனிக்க படுகிறது. எனவே இராணுவம் வெளியேற்றப்படும் போது எல்லாம் நின்றுவிடும்.

அப்போ நாங்கள் எங்களை இயக்கும் தன்மை இயல்பாக வந்துவிடும். அதற்கு உதவிகளை ஜ.நா போன்ற அமைப்புக்கள் , எங்களுடன் மனிதாபிமானத்தில் கைகோர்க்கும் நாடுகள் என பலர் முன்வரலாம். புலம் பெயர் மக்கள் அந்தந்த நாடுகளை உதவி கோரலாம்.

இராணுவம் முற்றாக வெளியேற்றும் போது உலக நாடுகளிடம் இருந்து வரும் எதிர்ப்புகளை எங்கள் பக்கம் சார்பாக மாற்றக்கூடிய ஆயுத்தங்களை புலம் பெயர்மக்கள் செய்ய வேண்டும்

இராணுவம் முற்றாக வெளியேற்றப்படலாம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் தமிழர் தரப்பின் கட்டுப்பாட்டில் வரலாம். ஆனால் அதன் பிறகு நிபந்தனையின்றி கண்ணை மூடிக் கொண்டு சர்வதேசம் ஆதரவு தரப்போவதும் இல்லை அங்கீகாரம் வழங்கப்போவதும் இல்லை. சர்வதேசம் தனது நலன்களிற்கு சார்பாக தான் எப்பவும் பேரம் பேசும் அதை மிகமோசமான மனித அவலங்களை ஏற்படுத்தியும் செய்யக் கூடியது என்பதற்கு நிறையவே வரலாறுகள் உண்டு.

எனவே அனாவசியமான கற்பனையில் மிதக்காதீர்கள். தாயகத்திலை இருக்கிறவை அடிச்சுப் பிடிச்சா சர்வதேசம் எங்கடை பக்கம் சாய்ந்துவிடும் என்று. அந்த அடிபற்றி விதம் விதமாக கற்பனை பண்ணிக் கொண்டு காத்திருப்பது தான் புல்லு முளைக்காமல் போராட்டத்தில் காட்டும் ஈடுபாட்டின் பங்களிப்பின் வெளிப்பாடல்ல. எமது போராட்டத்தின் நோக்கம் எஜமானை மாத்துவது அல்ல. இன்னொருவரை எஜமானாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் அதன் அர்த்தம் எல்லாரோடு சண்டித்தனம் காட்டுவது அல்ல. எகாதிபத்தியத்திற்கு எதிராக உலகில் எங்கும் உள்ளவர்களிற்கும் குரல் கொடுப்போம் என்று புலம்புவது அல்ல. எம்மீது செலுத்தப்படும் அழுத்தங்கள் அதனூட நடத்த முயற்சிக்கப்படும் பேரம் பேசல்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு எந்த அழுத்தங்களிற்கும் அடிபணியாது நின்று பிடிக்கப்பதற்குரிய தன்னிறைவை அடைய வேண்டும். நாம் எந்தளவிற்கு வெளியாரில் தங்கியிருக்கிறோமோ எவற்றிற்கு எல்லாம் தங்கியிருக்கிறோமோ அவர்கள் எல்லாம் அவற்றினூடாக எம்மீது அழுத்தத்தை கொண்டுவருவார்கள் தமக்கு சாதகமாக ஒன்றை எம்மீது திணிக்க. ஜனநாயகம் மனிதத்தன்மை எல்லாம் இதில் பார்க்கப்படமாட்டாது.

இறுதி யுத்தம் எப்படி வெடிக்கும் திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை எப்படி பிடிக்கப் போகிறார்கள் புலிகள், தமிழர் தாயகத்திலுள்ள 8 இற்கும் மேற்பட்ட பற்றலியன் ஆக்கிரமிப்பு இராணுவத்தை எப்படி அகற்றப் போகிறார்கள் என்று புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு வீணீர் சொட்ட சொட்ட கற்பனை பண்ணி ஒரு மண்ணும் கிடைக்கப் போவது இல்லை. அதுவெல்லாம் நேரம் வரும்பொழுது நடக்கும் என்ற முடிவான நம்பிக்கையோடு அதற்கு அடுத்து என்ன வரப்போகிறது இவை எல்லாவற்றிற்கும் எமது பங்களிப்பு என்ன என்பது தான் இன்று எம் எல்லோருக்கும் முன்ன உள்ள தேவை கடமை:

1979 ம் ஆண்டில சொர்க்கன் வைத்துக்கொண்டு இயக்கம் தொடங்கேக்க இப்படித்தான் எல்லாரும் யோசிச்சவை. பிறகு வளர்ந்து தங்களுக்கான தளங்களை உருவாக்கவில்லையா? இந்தியாவுடன் பகைத்த பின்னும் விடுதலை வீச்சுக்கொண்டு போகவில்லையா? எல்லாம் செயற்திட்டங்கள் போட்டு ஒழுங்காக உண்மையோடு செய்தால் எல்லாம் வெற்றியின் பக்கம் சாரும்.

விடுதலைக்கு உதவி செய்ய இவ்வளவு தமிழ் அமைப்புக்கள் ஜரோப்பாவில் முன்வந்து தூதுவராலயம் போல் இயங்குகின்றனவே. போராளிகள் சொல்லும் போதெல்லாம் தமிழர்களை தேடி இவர்கள் வீடுவீடாக வருகிறார்கள் அல்லவா?

அடுத்த கட்டத்தை தாண்டக்கூடிய அனைத்துப் பலமும் எங்களிடம் உண்டு. அதை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்த வேண்டும்.

பலம் என்பது வெறும் ராணுவத்தை வெல்வது அல்ல.

அனைத்து வளங்களையும் எங்கள் சார்பாக மாற்றக்கூடிய பலம்

இராணுவம் முற்றாக வெளியேற்றப்படலாம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் தமிழர் தரப்பின் கட்டுப்பாட்டில் வரலாம். ஆனால் அதன் பிறகு நிபந்தனையின்றி கண்ணை மூடிக் கொண்டு சர்வதேசம் ஆதரவு தரப்போவதும் இல்லை அங்கீகாரம் வழங்கப்போவதும் இல்லை. சர்வதேசம் தனது நலன்களிற்கு சார்பாக தான் எப்பவும் பேரம் பேசும் அதை மிகமோசமான மனித அவலங்களை ஏற்படுத்தியும் செய்யக் கூடியது என்பதற்கு நிறையவே வரலாறுகள் உண்டு.

எனவே அனாவசியமான கற்பனையில் மிதக்காதீர்கள். தாயகத்திலை இருக்கிறவை அடிச்சுப் பிடிச்சா சர்வதேசம் எங்கடை பக்கம் சாய்ந்துவிடும் என்று. அந்த அடிபற்றி விதம் விதமாக கற்பனை பண்ணிக் கொண்டு காத்திருப்பது தான் புல்லு முளைக்காமல் போராட்டத்தில் காட்டும் ஈடுபாட்டின் பங்களிப்பின் வெளிப்பாடல்ல. எமது போராட்டத்தின் நோக்கம் எஜமானை மாத்துவது அல்ல. இன்னொருவரை எஜமானாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் அதன் அர்த்தம் எல்லாரோடு சண்டித்தனம் காட்டுவது அல்ல. எகாதிபத்தியத்திற்கு எதிராக உலகில் எங்கும் உள்ளவர்களிற்கும் குரல் கொடுப்போம் என்று புலம்புவது அல்ல. எம்மீது செலுத்தப்படும் அழுத்தங்கள் அதனூட நடத்த முயற்சிக்கப்படும் பேரம் பேசல்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு எந்த அழுத்தங்களிற்கும் அடிபணியாது நின்று பிடிக்கப்பதற்குரிய தன்னிறைவை அடைய வேண்டும். நாம் எந்தளவிற்கு வெளியாரில் தங்கியிருக்கிறோமோ எவற்றிற்கு எல்லாம் தங்கியிருக்கிறோமோ அவர்கள் எல்லாம் அவற்றினூடாக எம்மீது அழுத்தத்தை கொண்டுவருவார்கள் தமக்கு சாதகமாக ஒன்றை எம்மீது திணிக்க. ஜனநாயகம் மனிதத்தன்மை எல்லாம் இதில் பார்க்கப்படமாட்டாது.

இறுதி யுத்தம் எப்படி வெடிக்கும் திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை எப்படி பிடிக்கப் போகிறார்கள் புலிகள், தமிழர் தாயகத்திலுள்ள 8 இற்கும் மேற்பட்ட பற்றலியன் ஆக்கிரமிப்பு இராணுவத்தை எப்படி அகற்றப் போகிறார்கள் என்று புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு வீணீர் சொட்ட சொட்ட கற்பனை பண்ணி ஒரு மண்ணும் கிடைக்கப் போவது இல்லை. அதுவெல்லாம் நேரம் வரும்பொழுது நடக்கும் என்ற முடிவான நம்பிக்கையோடு அதற்கு அடுத்து என்ன வரப்போகிறது இவை எல்லாவற்றிற்கும் எமது பங்களிப்பு என்ன என்பது தான் இன்று எம் எல்லோருக்கும் முன்ன உள்ள தேவை கடமை:

யாரத்தான் நம்புவது என்று சும்மா சொல்லால காட்டாம் செயலிலும் காட்டிப்போட்டருங்க உந்த சகுந்தலாம்மா எண்டு புரளி பண்ணிய ஆளுங்க. படங்கள் எல்லாம் விலாவாரியா கொண்டுவந்து இருக்கிறார். ஆள் உண்மையாய்தான் சொல்லியிருக்கிறார். நாமள் தான் பீ...முந்தின..கு..போல சடக்கு புடக்கு எண்டு குழப்பி போட்டமெண்டு படத்தினை ஆராய்ந்தா விளங்குது. அப்ப எம்மள நாமே நம்பி எனி எல்லா தமிழரும் ஒண்டு எமக்கு ஒரு தலைவரே எண்டு வாழ்வோம். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தம் எப்படி வெடிக்கும் திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை எப்படி பிடிக்கப் போகிறார்கள் புலிகள், தமிழர் தாயகத்திலுள்ள 8 இற்கும் மேற்பட்ட பற்றலியன் ஆக்கிரமிப்பு இராணுவத்தை எப்படி அகற்றப் போகிறார்கள் என்று புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு வீணீர் சொட்ட சொட்ட கற்பனை பண்ணி ஒரு மண்ணும் கிடைக்கப் போவது இல்லை. அதுவெல்லாம் நேரம் வரும்பொழுது நடக்கும் என்ற முடிவான நம்பிக்கையோடு அதற்கு அடுத்து என்ன வரப்போகிறது இவை எல்லாவற்றிற்கும் எமது பங்களிப்பு என்ன என்பது தான் இன்று எம் எல்லோருக்கும் முன்ன உள்ள தேவை கடமை:

குறுக்காலை போவான் அவர்களே,

உங்கள் எழுத்துக்கள் எங்கள் சமூகத்துக்கு மிகவும் தேவையானது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்.

"அடி மேல் அடி அடித்தால் அம்மிக்கல் நகராது

வெடி ஒன்று போட்டாலே தகர்ந்து விடும்"

உங்கள் எழுத்துக்கள் வெடி போன்றவை. விரைவில் பலன் கிடைக்கும் என்று நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.