Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குக்கு வந்த தொழிற்சாலைகளை திருப்பி அனுப்பியதே வடமாகாண சபையின் சாதனை – ச.சுகிர்தன்

Featured Replies

வடக்குக்கு வந்த தொழிற்சாலைகளை திருப்பி அனுப்பியதே வடமாகாண சபையின் சாதனை – ச.சுகிர்தன்

sugirthan.jpg
வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன்  பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் வடக்கின் வேலையில்லா பட்ட தாரிகள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்சியாக 4வது நாளாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களது போராட்டம் நியாயமானதுஇ இப் போராட்டத்தின் நியாய தன்மையை அரசியல்வாதிகள் கருத்தில் எடுக்கவேண்டும். மாகாணசபையும் மத்திய அரசும் அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவேண்டும்.

இவர்கள் கடந்த வருடம் பாரிய போரட்டத்தை செய்த போது வடக்கு மாகாண சபையானது அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அத்துடன் பல வாக்குறுதிகளையும் வழங்கினார்கள் ஆனால் கல்வி அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுகளும் இவர்களது வேலைவாய்பில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

உண்மையில் இவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருந்தால் அதன் முன்னேற்றத்தினை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாகாணசபை உருவாக்கப்பட்டு 3வருடங்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற பகிரங்க குற்ற சாட்டை முன்வைகிறேன்.

எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை.

மாகாண சபை அமைச்சர்கள் உடனடியாக இருகிற வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் அதை பகிரங்கப்படுத்தி விட்டு பட்டதாரிகளுடன் போராட தயாராக வேண்டும். 2015 அவர்களிற்கு நான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்டையில் மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எனது பூரண அதரவினை தெரிவித்து கொள்கின்றேன். என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

http://globaltamilnews.net/archives/19710

  • கருத்துக்கள உறவுகள்

பல்தேசிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் பல்வேறு உள்நோக்கங்களோடு நுழைகின்ற இன்றைய கால வெளியில்.. தொழிற்சாலை வருகுது என்று வாயப் பிளந்து கொண்டு அனுமதிப்பதிலும்.. அவற்றின் வரவுகள்.. சமூக ரீதியாக.. பொருண்மிய ரீதியா.. சுற்றுச்சூழல் ரீதியா.. சொந்த வளப் பாதுகாப்பு ரீதியாக.. எவ்வாறான குறுகிய கால.. நீண்ட கால தாக்கங்களை உண்டு பண்ணும் என்று ஆராய்து அனுமதிப்பது அல்லது மறுப்பதே சிறந்ததாகும்.

வந்த பின் தமிழகம் போல.. கொய்யோ முறையோன்னு மாரடித்துப் பயனில்லை. :rolleyes:

உ+ம்: கரன்ட் கொண்டு வருகுது என்று சந்தோசப்பட்டு அனுமதித்த சுன்னாகம் அனல் மின்னிலையம்.. இறுதியில் தந்ததென்ன..

பட்டும் நம்மால் பாடம் படிக்கப்படவில்லை என்றால்.. தவறு நமதே.. அன்றி வேறவரினதல்ல. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் தான் செய்ய வேண்டும் ஆனால் அது செய்ய கன பேர் வெட் க்கப்படுகிறார்கள் ஏதாவது ஒரு ரை கட்டிய தொழில்  வேணுமாம்  

12 minutes ago, nedukkalapoovan said:

பல்தேசிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் பல்வேறு உள்நோக்கங்களோடு நுழைகின்ற இன்றைய கால வெளியில்.. தொழிற்சாலை வருகுது என்று வாயப் பிளந்து கொண்டு அனுமதிப்பதிலும்.. அவற்றின் வரவுகள்.. சமூக ரீதியாக.. பொருண்மிய ரீதியா.. சுற்றுச்சூழல் ரீதியா.. சொந்த வளப் பாதுகாப்பு ரீதியாக.. எவ்வாறான குறுகிய கால.. நீண்ட கால தாக்கங்களை உண்டு பண்ணும் என்று ஆராய்து அனுமதிப்பது அல்லது மறுப்பதே சிறந்ததாகும்.

வந்த பின் தமிழகம் போல.. கொய்யோ முறையோன்னு மாரடித்துப் பயனில்லை. :rolleyes:

உ+ம்: கரன்ட் கொண்டு வருகுது என்று சந்தோசப்பட்டு அனுமதித்த சுன்னாகம் அனல் மின்னிலையம்.. இறுதியில் தந்ததென்ன..

பட்டும் நம்மால் பாடம் படிக்கப்படவில்லை என்றால்.. தவறு நமதே.. அன்றி வேறவரினதல்ல. :rolleyes:

ஏன் நெடுக்கு இந்த வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி தொழிற்சாலைகள் என்ன மாதிரி  


ஆனால் இப்படியொரு தொழ்ற்சாலை சிங்கள பகுதிக்கு அல்லது முஸ்லீம் பகுதிக்கு  சென்று இருந்தால் நம்ம நிலமை ??

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, முனிவர் ஜீ said:

விவசாயம் தான் செய்ய வேண்டும் ஆனால் அது செய்ய கன பேர் வெட் க்கப்படுகிறார்கள் ஏதாவது ஒரு ரை கட்டிய தொழில்  வேணுமாம்  

ஏன் நெடுக்கு இந்த வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி தொழிற்சாலைகள் என்ன மாதிரி.


ஆனால் இப்படியொரு தொழ்ற்சாலை சிங்கள பகுதிக்கு அல்லது முஸ்லீம் பகுதிக்கு  சென்று இருந்தால் நம்ம நிலமை ??

வெளிநாடுகளில் ஒரு தொழிற்சாலை அமைப்பதாயின் பின் வரும் வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்..

1. தொழிற்சாலையின் நோக்கம்.

2. அதன் பொருண்மிய தாக்கம்.

3. அதன் சுற்றுச்சூழல் தாக்கம்.

4. அதன் சமூக தாக்கம்.. வருவாய்.. கட்டுமானம்.. எல்லாம்.

5. அதன் ஆரம்பச் செலவு.

6. அதன்.. நடைமுறைச் செலவு.

7. மாசற்ற கழிவகற்றல்.

8. வளப் பகிர்வும்.. இறக்குமதி.. ஏற்றுமதி வழிமுறை

9. மனித வளம்.

10. அனைத்தும் திட்டமாக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு.. அரசு ஒப்புதல் பெற.. சுயாதீன பகுப்பாய்வு.. மற்றும் திறனாய்வு.. அறிக்கை.

11. தொழிற்சாலை காலப்போக்கில் கைவிடப்படின்.. அதனை சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் பாதிப்பின்றி அகற்றும் வழிமுறைகள். 

இவை இன்றி.. வெளிநாட்டில்.. அரச அனுமதியுடன் கூடிய சட்ட ரீதியாக இயங்கவல்ல.. ஒரு தொழிற்சாலை அமைக்க முடியாது. 

இதனை சொறீலங்காவில் கடைப்பிடிக்க முடியுமா..?!

சிலர் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை வரனும் என்றீனம். ஆனால்.. அது இயங்கிய காலத்திலேயே சுண்ணாம்புக்கல் அகழ்வால்.. பலத்த சூழல் பாதுகாப்பை சீர்கேட்டை குடா நாடு சந்தித்தது.

அதுபோல்.. அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலைக் கழிவுகளை பண்ணையை அண்டிய கடலுக்குள் விட்டதால்.. கடல் மற்றும் கடலுயிரின மாசாதலும்.. அந்த மாசுக்களில்.. குறிப்பாக.. பாதரசம் மனித உணவுச் சங்கியிலில் சென்று.. அல்லைப்பிட்டியை அண்டி கடல் தொழில் செய்து வாழ்ந்து வந்த மக்களில் பலரிடம் புற்றுநோய் தாக்கம் காணப்பட்டதும் கடந்த கால ஆய்வுகள். இதனை தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும்.. உறுதி செய்து அன்று மாணவர்களுக்கு போதித்து வந்துள்ளது. 

சிங்களப் பகுதிகளுக்கு போகாத பல நாசகாரத் திட்டங்கள் தமிழ் பகுதிகளுக்குள் திணிக்கப்பட்டும் உள்ளதானே. நுரைச்சேலை அனல் மின்னிலையம்.. திருமலை உத்தேச அனல் மின்னிலையத் திட்டம்.. உட்பட பல.

ஏன் தென்னிலங்கையில் பட கடலேரிகள் இருக்க.. வடக்குக் கிழக்கு கடலேரிகள் இறால் வளர்ப்பென்று இயற்கை வளம்.. நாசமாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால்.. அங்கு முதலிட்டு பணக்காரர் ஆனது அதிகம் சிங்களவர்களாவர். முஸ்லிம்களும். தமிழர்கள் வெகு சிலரே. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரிதான் நெடுக்கு   தெற்க்குப்பகுதியில் எத்தனை தொழில்சாலைகள்  அமைந்திருக்கின்றன அதில் எத்தனை பேர் வேலைசெய்கிறார்கள்  தற்போது ஆடைகள் உற்பத்தி நிலையம் ஆரம்பத்தில் வெள்ளக்காரனுக்கு லங்கோட்டு தைக்க போறாங்கள் என்று கூவின ஆட் கள் அதனை நம்பி வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்கள்   இன்னும் பல தொழிற்சாலைகள்  அமைந்திருக்கின்றனர் அதை அவர்கள் மக்களின் செய்ற்பாடுகளுக்கு  ஏற்றால் போல் அமைக்கவில்லையா


முந்தைய காலம் மகாவலி திசை திருப்புதல்  என நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதனை எத்தனை பேர் தடுத்தார்கள் ஆனால் அதை செய்வித்து இன்று விவசாயம் செய்ய வில்லையா 

தற்போது  எந்த தொழிற்சாலையிலும் பாதிப்பு  இருக்கத்தான் செய்கிறது ஆனால் மாற்று வழி கண்டு பிடிக்காதவரை  நமக்கு  அது தேவையில்லைதான்  வேலைக்கு திண்டாட்டம்  தான் 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி திருப்பி அனுப்பிய தொழிற்சாலைகள் எவை?  கிராம மக்களே முட்டையை காசு கொடுத்து வாங்கும் நிலையில் இருப்பதாக கள உறவு ஒருவர் எழுதி இருந்தார். மக்களின் நிலை இப்படி இருக்கும் போது  உருவாகும் தொழிற்சாலைகளை யாரும் திருப்பி அனுப்புவார்களா? ஏதாவது வளத்தை சுறண்டி  சூழலுக்கு ஒவ்வாத ஏதாவது தொழிற்சாலையை கொண்டு வந்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.