Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

Featured Replies

குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

 

 

கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

17968634_10207125683695189_1765150401_o.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

17888995_10207119710305858_1089721449_n.

மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/19056

  • கருத்துக்கள உறவுகள்

கொலன்னாவ குப்பைமேடு சரிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயின.

புதைந்து போன வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

அதேவேளை, இன்னமும் சுமார் 20 பேர் வரையில் குப்பை மேட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும், காணாமல் போயுள்ளவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை.

garbage dump collapse (1)garbage dump collapse (2)garbage dump collapse (1)

http://www.puthinappalakai.net/2017/04/16/news/22558

  • தொடங்கியவர்
மீதொட்டுமுல்லை அவலம்: பலியாகியோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு
 
 

article_1492321028-Untitled-1.jpgமீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தின் போது குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தேடுப் பணியில் தொடர்ந்தும் இன்றும் (16) மீட்புக் குழுவினர், தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டன.

- See more at: http://www.tamilmirror.lk/194802/ம-த-ட-ட-ம-ல-ல-அவலம-பல-ய-க-ய-ர-ன-எண-ண-க-க-ஆக-அத-கர-ப-ப-#sthash.9TCL6mjI.dpuf
மீதொட்டுமுல்லை அவலம்: இறுதிக் கிரியை இன்று...
 
16-04-2017 11:11 AM
Comments - 0       Views - 16

article_1492321408-C9glLLtUMAAzWC9.jpg

மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் இறுதிக் கிரியை, இன்று (16) இடம்பெறவுள்ளது.

புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டதில் 23 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

article_1492321418-C9glLLtUMAIz__Q.jpgarticle_1492321426-C9glLLvU0AAgjCU.jpgarticle_1492321435-C9glLMHVoAERe7O.jpg

 
 0
- See more at: http://www.tamilmirror.lk/194803/ம-த-ட-ட-ம-ல-ல-அவலம-இற-த-க-க-ர-ய-இன-ற-#sthash.kqk3ZdIE.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குப்பைமேட்டில் புதையுண்டவர்களை தேடும் பணியில் முப்படை; பலி 20 ஆக உயர்வு

 

இலங்கையில் கொழும்பு மாவட்டம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

மீட்புப்பணி

போலீஸ், முப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த சுமார் 1000 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கிய பெண்கள், சிறுவர்கள் உட்பட 20 பேரின் மரணங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் சனிக்கிழமை இரவு பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த குப்பைமேடு தொடர்பாக பிரதேச மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். சாலையில் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் பின்புலமே பிரதான தடையாக இருப்பதாக சமூக ஆர்வலர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைமலை

அரசியல் ரீதியான பேதங்களை மறந்து இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்களால் வலியுறுத்தப்படுகின்றது இந்த அனர்த்தம் பற்றியும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றார்.

பேரிடர் முகாமைத்துவ மையத்தில் இடம் பெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைத்துள்ளதாக துனை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவிக்கின்றார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரண சடங்குகளுக்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கவலையில் மக்கள்

இது தொடர்பான தீர்மானம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் கூ;ட்டப்பட்ட கூட்டமொன்றில் எடுக்கப்பட்டுள்ளது.

தாமதமின்றி இழப்பீடுகளை வழங்குதல், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறும் இதற்கான மாற்று கொழும்பு மாநகர சபைக்கு கட்டளை பிறப்பித்தல் மற்றும் தற்காலிகமாக இரு வாரங்களுக்கு குப்பைகளை தொம்பே மற்றும் கரலியான ஆகிய இடங்களிலுள்ள திம்ம கழிவுகள் மையத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/sri-lanka-39612727

  • கருத்துக்கள உறவுகள்

மீள் சுழற்ச்சி முறையில் சிறந்த அனுபவம் , அதனை வைத்து தயாரிக்கும்  பொருட் களை இன்னும் கண்டு பிடிக்காதது இது போல இன்னும் பல உயிர்களை கொல்லும் 

  • தொடங்கியவர்

குப்பை மேடு சரிந்தமை இயற்கை அனர்த்தமா ? , மனித நடவடிக்கையா?

 

(எம்.எப்.எம்.பஸீர்)

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை இயற்கையாக ஏற்பட்டதா அல்லது  மனித நடவடிக்கை ஒன்று காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பல்கோண விசாரணை ஒன்று பல குழுக்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகள் தொடர்பில் சொகோ எனப்படும் குற்றம் இடம்பெற்ற இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்கும் தடயவியல் பிரிவும் சிறப்பு விசாரணைகளை நடத்தியுள்ளது. இதனை விட இது தொடர்பில் பேராதணை பல்கலைக்கழகத்தின் புவியல் பிரிவின் 10 பேர் கொண்ட விஷேட குழுவொன்றும் மீதொட்டமுல்ல அனர்த்தம் சம்பவித்த பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

17968634_10207125683695189_1765150401_o.

http://www.virakesari.lk/article/19078

  • தொடங்கியவர்

பலியானோர் தொகை 26 ஆக உயர்வு

01-5205f5c5b85ac2d8a2d32829fd9d268802121cf0.jpg

 

பலியானோர் தொகை 26 ஆக உயர்வு
தொடர் குப்பை சரி­வுகள் இடம்­பெறும் அபாயம்  

305 குடும்­பங்கள் நலன்­புரி நிலை­யங்­களில்
(எம்.எப்.எம்.பஸீர்)

வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 26 ஆக உயர்ந்­துள்­ளது. 6 சிறு­வர்கள், 9 பெண்கள் உள்­ளிட்ட 26 பேரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­துடன் காய­ம­டைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். 

அவர்­களில் ஒரு­வரின் நிலைமை கவலைக்கிட­மாக உள்­ள­தா­கவும் அவ­ருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். 

இதேவேளை, நேற்று இரவு புதையுண்டுள்ள ஒருவரினது என கருதப்படும் உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கால் ஒன்றே இவ்வாறு மீட்கப்

பட்டதாக மீட்புப்பணியாளர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மீட்­கப்­பட்ட 26 சட­லங்­களில் 5 சட­லங்கள் தொடர்ந்தும் அடை­யாளம்  காண்­ப­தற்­காக  பொலிஸ் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் குப்பை மேடு சரிந்­ததில், அதன் அருகில் இருந்த வீடு­க­ளுக்குள் இருந்­த­வர்கள் மண், குப்பை மற்றும் கட்­டட 

 இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள நிலையில் அவர்­களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து 

முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த குப்பை மேடு சரிவு அன்ர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட 180 குடும்­பங்­களைச் சேர்ந்த 625 பேர் தொடர்ந்து கொலன்­னாவ டெரன்ஸ் என் சில்வா வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­க­ளுக்­கான உலர் உணவு உள்­ளிட்ட வச­திகள் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் ஏற்­பாட்டில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

 இந் நிலையில் நேற்று முன் தினம் சரிவுப் பகு­தி­யினை ஆய்வு செய்த பேரா­தணை பல்­க­லைக்­க­ழக புவியல் தொடர்­பி­லான 10 பேர் கொன்ட விஷேட குழு, தேசிய கட்­டிட ஆய்வு மையம் மற்றும் சுரங்க, அகழ்­வா­ராய்ச்சி மையத்தின் பரிந்­து­ரைக்கு அமைய, மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்டை அண்­மித்த பகு­தியில் வசிக்கும் 125 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. 

தொடர்ச்­சி­யாக குப்பை மேட்டில் சரி­வுகள் இடம்­பெற வாய்ப்­புள்­ளதால் இவ்­வாறு அவர்கள் பாது­காப்­பான இடங்­களை நோக்கி அனுப்பி வைக்­கப்ப்ட்­டுள்­ளனர். குப்பை மேடு சரிவு கார­ண­மாக மீத்­தொட்­ட­முல்­லவின் நாக­ஹ­முல்ல வீதி, தஹம் புர, மிரிகே வத்த மற்றும் 23 ஆம் தோட்டம் ஆகிய பகு­திலில் உள்ள வீடுகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் நீர் விநி­யோக கட்­ட­மைப்பு முற்­றாக சிதைந்­துள்­ளது. இதனால் அப்­ப­கு­தியில் நீரா­னது நிரம்­பி­யுள்ள நிலையில் அவை குப்பை மேட்டின் அடிப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்­துள்­ளதால் மேலும் சரி­வுகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என கட்­டிட ஆய்­வு­மைய நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தை­ய­டுத்தே இவர்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

புத்­தாண்டு தின­மான கடந்த 14 ஆம் திகதி பிற்­பகல் 2.00 மணி­ய­ளவில் மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேடா­னது பாரிய சத்­த­துடன் அதன் அருகே இருந்த வீடுகள் மீது சரிந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் அதனுள் புதை­யுண்­டுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ச்­சி­யாக நேற்று மூன்­றா­வது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டது.

அனர்த்தம் சம்­ப­விக்கும் போது, எத்­தனை பேர் வீடு­களில் இருந்­தார்கள் என்­பது தொடர்பில் சரி­யான தக­வல்கள் இல்­லா­ததன் கார­ண­மாக மேலும் எத்­தனை பேர் மண்­ணுக்குள் புதை­யுன்டு காணாமல் போயுள்­ளனர் என்­பதை சரி­யாக கூற முடி­யா­துள்­ள­தாக மீட்புப் பணி­யா­ளர்கள் சார்பில் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார். 

எந்த தரப்­பி­ட­மி­ருந்தும் புதை­யுண்­டுள்­ள­வர்கள் அல்­லது காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் சரி­யான எண்­ணிக்கை மற்றும் தக­வல்கள் தமக்கு கிடைக்­கா­ததால் இந் நிலைமை தொடர்­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் உயி­ருடன் மீண்­ட­வர்கள் தம்­முடன் யாரெல்லம் வீட்டில் இருந்­தனர், யாரை­யெல்லாம் காண­வில்லை என்­பதை தெளி­வாக கூறு­வார்­க­ளயின் அதனை மையப்­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 எவ்­வா­றா­யினும் கேச­ரி­யிடம் கருத்து தெரி­வித்த மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்­டுக்கு எதி­ரான மக்கள் இயக்­கத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி நுவன் போப்­பகே, குறைந்­தது 22 பேர் வரை தற்­போ­தைய சூழலில் மண்­ணுக்குள் சிறைப்­பட்­டி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார். எனினும் அதனை சரி­யாக கூற முடி­யாது என சுட்­டிக்­காட்­டிய அவர் தமது தக­வல்­க­ளுக்கு அமை­யவே அந்த எண்­ணிக்கை கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் புது வருடம் என்­பதால் வீடு­களில் இருந்த உற­வி­னர்கள் போன்றோர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­படல் வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 இத­னி­டையே நேற்று முன் தினம் பேரா­தனை பல்­க­லையின் புவியல் தொடர்­பி­லான சிறப்பு குழுவும் தேசிய கட்­டிட ஆய்வு மையம் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் தலை­வர்­களும் மீத்­தொட்ட முல்ல குப்பை மேட்டு பகு­திக்கு விஜயம் செய்து நில­வ­ரத்தை ஆராய்ந்­தனர்.

  நேற்று முன் தினம் சரி­வுக்கு உள்­ளான மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டின் பகு­தி­களை நேரில் சென்று பார்­வை­யிட்ட தேசிய கட்­டிட ஆய்வு மையத்தின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ். பண்­டார கேச­ரிக்­கு­தெ­ரி­விக்­கையில் .

' குப்பை மேட்டின் ஒரு பகு­தியில் இருந்த பள்­ளத்தில் தொடர்ச்­சி­யாக குப்­பைகள் நிரப்­பட்­டுள்­ளன. இந் நாட்­களில் நில­விய மழை­யுடன் கூடிய கால நிலைக்கு மத்­தியில் ஏற்­பட்ட அழுத்தம் கார­ண­மாக இதன் போது, மேட்டின் மறு புற கீழ்ப் பகு­தி­யா­னது மேல் நோக்கி உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு உயர்ந்த பகு­தியில் காணப்­பட்ட வீடுகள் மற்றும் கட்­டி­டங்­களும் அத­னுடன் சேர்ந்து உயர்ந்­துள்­ளன. பின்னர் அந்த உயர்ந்த பகு­தி­யா­னது சரிந்­துள்­ளது. இத­னையே எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது என தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளி­யன்று அனர்த்தம் ஏற்­பட்டு சுமார் 10 மணி நேரத்தின் பின்­ன­ரேயே மீட்புப் பணி­க­ளுக்­கு­ரிய வச­திகள் கிடைத்­தன. அதற்கு உட்­பட்ட நேரத்தில் பொலி­ஸாரும் பொது மக்­களும் இரா­ணு­வத்­தி­னரும் மீட்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். குறிப்­பாக மண் அள்­ளு­வ­தற்கு தேவை­யான ட்ரெக்­டர்கள் அல்­லது லொரிகள், எக்­ஸி­னேற்­றர்கள் போன்­ற­வற்­றுக்கு தட்­டுப்­பாடு நில­விய நிலையில் பல மணி நேரம் கழித்தே அவை கிடைத்­தன. , உட­ன­டி­யாக கிடைத்­தி­ருப்பின் மேலும் சிலரை உயி­ருடன் மீட்­டி­ருக்­கலாம் எனவும் பிர­தேச மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் மீட்புப் பணி­க­ளுக்கு முப்­ப­டை­யினர், பொலிஸார் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் தொடர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், இன்றும் அந் நட­வ­டிக்­கைகள் தொடர்­வுள்­ளன.

இந்த குப்பை மேடு சரிவு கார­ண­மாக மர­ணித்­துள்ள 24 பேரில் 11 பேரின் இறுதிக் கிரி­யைகள் நேற்று இடம்­பெற்­றன. ஒரே குடும்­பத்தை சேர்ந்த தாய், தந்தை மகள் மற்றும் மகளின் மகள் உள்­ளிட்ட நால்­வரின் இறுதி கிரி­யை­களும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் மூவரின் இறுதிக் கிரி­யையும் இடம்­பெற்­றன. முன்­ன­தாக நேற்று முன் தினம் இந்த அனர்த்­ததில் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

மீரி­ய­பெத்த மண் சரிவின் போது மீட்புப் பணி­களை முன்­னெ­டுத்த இரா­ணுவ விஷேட படை­ய­ணிக்கு கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான இரா­ணுவ கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்­கவின் கீழ் மீட்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மீட்புப் பணி­களில் மேஜர் ஜெனரல் சுதத் ரண­சிங்­கவின் வழி நடத்­தலின் கீழ் சுமார் 600 வரை­யி­லான முப்­படை வீரர்­களும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் நேரடி மேற்­பார்­வையில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க மற்றும் விஷேட பொலிஸ் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய 150 வரை­யி­லான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் விமா­னப்­ப­டையின் பெல் 212 ரக ஹெலி­கப்­டர்கள் 2 உம் தயார் ம்னிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

கொழும்பு மா நகர சபைக்கு உட்­பட்ட பகு­தி­களின் குப்­பைகள் புளூ­மெண்டல் பகு­தியில் கொட்­டப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­ட­தைய்­டுத்து 2008 ஆம் ஆண்டு மீத்­தொ­ட­முல்­லையில் குப்பைக் கொட்டும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின.

 இந் நிலையில் ஒரு நாளைக்கு 8 டொன் வரையில் குப்­பைகள் மீத்­தொட்ட முல்­லையில் கொட்­டப்­ப­டு­வ­துடன் சுமார் 300 அடி வரையில் குப்பை மேடா­னது வளர்ந்­துள்­ளது. ஆரம்­பத்தில் 2 ஏக்­கர்­க­ளுக்கு உட்­பட்டு கொட்­டப்­பட்டு வந்த குப்­பை­க­ளா­னது தற்­போது 20 ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்து குப்பை மேடாக பரந்­துள்­ளது.

 தற்­போது சரி­வுக்கு உட்­பட்­டுள்ள மீத்­தொட்­ட­முல்லை குப்பை மேட்டு பகு­தி­யா­னது முன்­னைய வயல் பகு­தி­யாகும். ' பொத்­துவில் வயல்' என அழைக்­கப்­படும் இப்­ப­கு­தி­யா­னது 1989 ஆம் ஆண்டு கொழும்பை அழி­வுக்கு உட்­ப­டுத்­திய வெள்ளப் பெருக்கு கார­ண­மாக கடுமையாக சேதமடைந்த பகுதியாகும். அதன் பின்னர் அப்பகுதியை நிரப்பி முல்லேரியா நகர சபையானது கொலன்னாவை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகளை மட்டும் கொட்ட ஆரம்பித்துள்ளன. குப்பைக்கு மேலால் மண்ணை போட்டு நிரப்பி குப்பைகளை கொட்டும் முறைமை ஆரம்பத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மா நகர சபை பகுதிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளும் மீத்தொட்ட முல்ல குப்பை மேட்டில் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு மலை போல் காட்சி தரும் நிலையில், அதனை அண்டிய பகுதியில் மட்டும் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டு 30 ஆயிரம் பேர் வரை வசிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-17#page-1

  • தொடங்கியவர்

ஐந்து தினங்­க­ளுக்குள் அறிக்கை வேண்டும்

p10-9d1227f48bf875e7f53b5b7d9ea6e6f390b516af.jpg

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ரவு 
 (நமது நிருபர்)

மீ­தொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்­த­மையால் அனர்த்­தத்­திற்குள்­ளான குடும்­பங்­களின் எண்­ணிக்கை மற்றும் சேத­ம­டைந்த சொத்­துக்கள் பற்­றிய கணிப்­பீ­டு­க­ளையும்,

 மதிப்­பீ­டு­க­ளையும் மேற்­கொண்டு அது தொடர்­பான அறிக்­கையை ஐந்து தினங்­க­ளுக்குள் சமர்ப்­பிக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். 

அத்­துடன் அனர்த்­தத்­திற்கு உள்­ளான மக்­க­ளுக்கு கூடி­ய­ளவு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும், அந்த நட­வ­டிக்­கை­களின் போது பணத்தை ஒரு தடை­யாக கரு­த­வேண்டாம் என்றும் ஜனா­தி­பதி அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

மீத்ட முல்­லையில் குப்பை மேடு இடிந்து வீழ்ந்­த­மையால் ஏற்­பட்ட அனர்த்­தத்­திற்கு உள்­ளான மக்­க­ளுக்கு உதவி வழங்­குதல் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் நேற்று முற்­பகல் இடர் முகா­மைத்­துவ அமைச்சில் நடை­பெற்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்­க­ளான அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம­ஜ­யந்த, ராஜித சேனா­ரத்ன, சம்­பிக ரண­வக, விஜே­தாச ராஜ­பக்ஷ, ஏ.எச்.எம். பௌஸி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார், பிர­சன்ன சோலங்­க­ஆ­ரச்சி ஆகி­யோரும்;, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­தர, முப்­ப­டை­களின் தள­ப­திகள் உள்­ளிட்ட பாது­காப்பு துறையின் பிர­தா­னி­களும், அரச அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில்,

மீத்ட முல்ல பகு­தியில் தற்­போது எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள மக்­களை அந்த பிர­தே­சத்­தி­லி­ருந்து அகற்றி அவர்­களை பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும்.

இதற்­காக மீதொட்­ட­முல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நெல் விற்­பனை சபைக்கு சொந்­த­மான 03 களஞ்­சிய சாலை­களை தற்­கா­லி­க­மாக உப­யோ­கிக்க முடியும். அத்­துடன் மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுடன் தற்­கா­லிக இருப்­பிட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்­க­ளது வீடு­களில் காணப்­படும் பெறு­ம­தி­மிக்க பொருட்­களின் பாது­காப்பு தொடர்­பாக கவனம் செலுத்­தப்­பட வேண்டும். அவை தொடர்பில் உரிய மதிப்­பீ­டு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும், பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு முறை­யான செயற்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அனர்த்­தத்­திற்கு உள்­ளான குடும்­பங்­க­ளுக்கும், சொத்­துக்­க­ளுக்கும் நட்­ட­ஈடு வழங்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே அனர்த்­தத்­திற்கு உள்­ளான குடும்­பங்­களின் எண்­ணிக்கை மற்றும் சேத­ம­டைந்த சொத்­துக்கள் பற்­றிய கணிப்­பீ­டு­க­ளையும், மதிப்­பீ­டு­க­ளையும் மேற்­கொண்டு அது தொடர்­பான அறிக்­கையை ஐந்து தினங்­க­ளுக்குள் எனக்கு சமர்ப்­பி­யுங்கள்.

மக்­களின் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளா­காத வகையில் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளுங்கள். அத்­துடன் அனர்த்­தத்­தினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் இறுதி அஞ்­சலி நிகழ்­வுகள் மற்றும் அம் மக்­க­ளது தேவை­களைக் கண்­ட­றிந்து உத­வி­களை வழங்­குங்கள் என்றார்.

தேடுதல் மற்றும் மீட்பு நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் குறித்து இதன்­போது கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன், மக்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கும், மீள குடி­ய­மர்த்­து­வ­தற்கும் அரசினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பான கூட்டங்களை மூன்று தினங்களுககொரு தடவையாவது நடத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதற்கு அமைவாக எதிர்வரும் புதன்கிழமை மு.ப. 8.30க்கு இடர் முகாமைத்துவ அமைச்சில் மீண்டும் மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-17#page-1

  • தொடங்கியவர்

பலியானோர் தொகை 27 ஆக உயர்வு ; 30 பேரைக் காணவில்லை, மீட்பு நடவடிக்கைகள் தொடர்கிறது மீதொட்டமுல்லயில்

Published by Priyatharshan on 2017-04-17 13:58:59

 

வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 27 ஆக உயர்ந்­துள்­ளதாகவும் 30 பேரைக் காணவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

17949814_10207140562747156_64713957_o.jp

இச்சம்பவத்தில் 7 சிறு­வர்கள்இ 9 பெண்கள் உள்­ளிட்ட 27 பேரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­துடன் காய­ம­டைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

 

இதேவேளைஇ நேற்று இரவு புதையுண்டுள்ள ஒருவரினது என கருதப்படும் உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கால் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டதாக மீட்புப்பணியாளர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மீட்­கப்­பட்ட 27 சட­லங்­களில் 5 சட­லங்கள் தொடர்ந்தும் அடை­யாளம் காண்­ப­தற்­காகபொலிஸ் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் குப்பை மேடு சரிந்­ததில்இ அதன் அருகில் இருந்த வீடு­க­ளுக்குள் இருந்­த­வர்கள் மண்இ குப்பை மற்றும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள நிலையில் அவர்­களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

 

இந்த குப்பை மேடு சரிவு அன்ர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட 180 குடும்­பங்­களைச் சேர்ந்த 625 பேர் தொடர்ந்து கொலன்­னாவ டெரன்ஸ் என் சில்வா வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­க­ளுக்­கான உலர் உணவு உள்­ளிட்ட வச­திகள் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் ஏற்­பாட்டில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் சரிவுப் பகு­தி­யினை ஆய்வு செய்த பேரா­தணை பல்­க­லைக்­க­ழக புவியல் தொடர்­பி­லான 10 பேர் கொன்ட விஷேட குழுஇ தேசிய கட்­டிட ஆய்வு மையம் மற்றும் சுரங்கஇ அகழ்­வா­ராய்ச்சி மையத்தின் பரிந்­து­ரைக்கு அமையஇ மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்டை அண்­மித்த பகு­தியில் வசிக்கும் 125 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

 

தொடர்ச்­சி­யாக குப்பை மேட்டில் சரி­வுகள் இடம்­பெற வாய்ப்­புள்­ளதால் இவ்­வாறு அவர்கள் பாது­காப்­பான இடங்­களை நோக்கி அனுப்பி வைக்­கப்ப்ட்­டுள்­ளனர். குப்பை மேடு சரிவு கார­ண­மாக மீத்­தொட்­ட­முல்­லவின் நாக­ஹ­முல்ல வீதிஇ தஹம் புரஇ மிரிகே வத்த மற்றும் 23 ஆம் தோட்டம் ஆகிய பகு­திலில் உள்ள வீடுகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் நீர் விநி­யோக கட்­ட­மைப்பு முற்­றாக சிதைந்­துள்­ளது.

 

இதனால் அப்­ப­கு­தியில் நீரா­னது நிரம்­பி­யுள்ள நிலையில் அவை குப்பை மேட்டின் அடிப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்­துள்­ளதால் மேலும் சரி­வுகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என கட்­டிட ஆய்­வு­மைய நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தை­ய­டுத்தே இவர்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

 

புத்­தாண்டு தின­மான கடந்த 14 ஆம் திகதி பிற்­பகல் 2.00 மணி­ய­ளவில் மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேடா­னது பாரிய சத்­த­துடன் அதன் அருகே இருந்த வீடுகள் மீது சரிந்­தி­ருந்­தது.  இந்­நி­லையில் அதனுள் புதை­யுண்­டுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ச்­சி­யாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அனர்த்தம் சம்­ப­விக்கும் போதுஇ எத்­தனை பேர் வீடு­களில் இருந்­தார்கள் என்­பது தொடர்பில் சரி­யான தக­வல்கள் இல்­லா­ததன் கார­ண­மாக மேலும் எத்­தனை பேர் மண்­ணுக்குள் புதை­யுன்டு காணாமல் போயுள்­ளனர் என்­பதை சரி­யாக கூற முடி­யா­துள்­ள­தாக மீட்புப் பணி­யா­ளர்கள் சார்பில்இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

 

எந்த தரப்­பி­ட­மி­ருந்தும் புதை­யுண்­டுள்­ள­வர்கள் அல்­லது காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் சரி­யான எண்­ணிக்கை மற்றும் தக­வல்கள் தமக்கு கிடைக்­கா­ததால் இந் நிலைமை தொடர்­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் உயி­ருடன் மீண்­ட­வர்கள் தம்­முடன் யாரெல்லம் வீட்டில் இருந்­தனர்இ யாரை­யெல்லாம் காண­வில்லை என்­பதை தெளி­வாக கூறு­வார்­க­ளாயின் அதனை மையப்­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 

எவ்­வா­றா­யினும் கருத்து தெரி­வித்த மீத்­தொட்­ட­முல்ல குப்பை மேட்­டுக்கு எதி­ரான மக்கள் இயக்­கத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி நுவன் போப்­பகேஇ

 

குறைந்­தது 22 பேர் வரை தற்­போ­தைய சூழலில் மண்­ணுக்குள் சிறைப்­பட்­டி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார். எனினும் அதனை சரி­யாக கூற முடி­யாது என சுட்­டிக்­காட்­டிய அவர் தமது தக­வல்­க­ளுக்கு அமை­யவே அந்த எண்­ணிக்கை கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் புது வருடம் என்­பதால் வீடு­களில் இருந்த உற­வி­னர்கள் போன்றோர் தொடர்­பிலும் அவ­தானம்  செலுத்­தப்­படல் வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 

இத­னி­டையே நேற்று முன் தினம் பேரா­தனை பல்­க­லையின் புவியல் தொடர்­பி­லான சிறப்பு குழுவும் தேசிய கட்­டிட ஆய்வு மையம் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் தலை­வர்­களும் மீத்­தொட்ட முல்ல குப்பை மேட்டு பகு­திக்கு விஜயம் செய்து நில­வ­ரத்தை ஆராய்ந்­தனர்.

 

நேற்று முன் தினம் சரி­வுக்கு உள்­ளான மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டின் பகு­தி­களை நேரில் சென்று பார்­வை­யிட்ட தேசிய கட்­டிட ஆய்வு மையத்தின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ். பண்­டார ­தெ­ரி­விக்­கையில் .

 

குப்பை மேட்டின் ஒரு பகு­தியில் இருந்த பள்­ளத்தில் தொடர்ச்­சி­யாக குப்­பைகள் நிரப்­பட்­டுள்­ளன. இந் நாட்­களில் நில­விய மழை­யுடன் கூடிய கால நிலைக்கு மத்­தியில் ஏற்­பட்ட அழுத்தம் கார­ண­மாக இதன் போதுஇ  மேட்டின் மறு புற கீழ்ப் பகு­தி­யா­னது மேல் நோக்கி உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு உயர்ந்த பகு­தியில் காணப்­பட்ட வீடுகள் மற்றும் கட்­டி­டங்­களும் அத­னுடன் சேர்ந்து உயர்ந்­துள்­ளன. பின்னர் அந்த உயர்ந்த பகு­தி­யா­னது சரிந்­துள்­ளது. இத­னையே எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது என தெரி­வித்தார்.

 

கடந்த வெள்­ளி­யன்று அனர்த்தம் ஏற்­பட்டு சுமார் 10 மணி நேரத்தின்  பின்­ன­ரேயே மீட்புப் பணி­க­ளுக்­கு­ரிய வச­திகள் கிடைத்­தன. அதற்கு உட்­பட்ட நேரத்தில் பொலி­ஸாரும் பொது மக்­களும் இரா­ணு­வத்­தி­னரும் மீட்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். குறிப்­பாக மண் அள்­ளு­வ­தற்கு தேவை­யான ட்ரெக்­டர்கள் அல்­லது லொரிகள்இஎக்­ஸி­னேற்­றர்கள் போன்­ற­வற்­றுக்கு தட்­டுப்­பாடு நில­விய நிலையில் பல மணி நேரம் கழித்தே அவை கிடைத்­தன. இ உட­ன­டி­யாக கிடைத்­தி­ருப்பின் மேலும் சிலரை உயி­ருடன் மீட்­டி­ருக்­கலாம் எனவும் பிர­தேச மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

 

எவ்­வா­றா­யினும்  மீட்புப் பணி­க­ளுக்கு முப்­ப­டை­யினர்இ பொலிஸார் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் தொடர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் நிலையில்இ இன்றும் அந் நட­வ­டிக்­கைகள் தொடர்­வுள்­ளன.

 

இந்த குப்பை மேடு சரிவு கார­ண­மாக மர­ணித்­துள்ள 24 பேரில் 11 பேரின் இறுதிக் கிரி­யைகள் நேற்று இடம்­பெற்­றன. ஒரே குடும்­பத்தை சேர்ந்த தாய்இ தந்தை மகள் மற்றும் மகளின் மகள் உள்­ளிட்ட நால்­வரின் இறுதி கிரி­யை­களும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் மூவரின் இறுதிக் கிரி­யையும்  இடம்­பெற்­றன. முன்­ன­தாக நேற்று முன் தினம் இந்த அனர்த்­ததில் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

 

மீரி­ய­பெத்த மண் சரிவின் போது மீட்புப் பணி­களை முன்­னெ­டுத்த இரா­ணுவ விஷேட படை­ய­ணிக்கு கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான இரா­ணுவ கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்­கவின் கீழ் மீட்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

மீட்புப் பணி­களில் மேஜர் ஜெனரல் சுதத் ரண­சிங்­கவின் வழி நடத்­தலின் கீழ் சுமார் 600 வரை­யி­லான முப்­படை வீரர்­களும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் நேரடி மேற்­பார்­வையில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க மற்றும் விஷேட பொலிஸ் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய 150 வரை­யி­லான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் விமா­னப்­ப­டையின் பெல் 212 ரக ஹெலி­கப்­டர்கள் 2 உம் தயார் ம்னிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

 

கொழும்பு மா நகர சபைக்கு உட்­பட்ட பகு­தி­களின் குப்­பைகள் புளூ­மெண்டல் பகு­தியில்    கொட்­டப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­ட­தைய்­டுத்து 2008 ஆம் ஆண்டு மீத்­தொ­ட­முல்­லையில் குப்பைக் கொட்டும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின.

 

இந் நிலையில் ஒரு நாளைக்கு 8 டொன் வரையில் குப்­பைகள் மீத்­தொட்ட முல்­லையில் கொட்­டப்­ப­டு­வ­துடன் சுமார் 300 அடி வரையில் குப்பை மேடா­னது வளர்ந்­துள்­ளது. ஆரம்­பத்தில் 2 ஏக்­கர்­க­ளுக்கு உட்­பட்டு கொட்­டப்­பட்டு வந்த குப்­பை­க­ளா­னது தற்­போது 20 ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்து குப்பை மேடாக பரந்­துள்­ளது.

 

தற்­போது சரி­வுக்கு உட்­பட்­டுள்ள மீத்­தொட்­ட­முல்லை குப்பை மேட்டு பகு­தி­யா­னது முன்­னைய வயல் பகு­தி­யாகும். ' பொத்­துவில் வயல்' என அழைக்­கப்­படும் இப்­ப­கு­தி­யா­னது 1989 ஆம் ஆண்டு கொழும்பை அழி­வுக்கு உட்­ப­டுத்­திய வெள்ளப் பெருக்கு கார­ண­மாக கடுமையாக சேதமடைந்த பகுதியாகும். அதன் பின்னர் அப்பகுதியை நிரப்பி முல்லேரியா நகர சபையானது கொலன்னாவைஇ முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகளை மட்டும் கொட்ட ஆரம்பித்துள்ளன. குப்பைக்கு மேலால் மண்ணை போட்டு நிரப்பி குப்பைகளை கொட்டும் முறைமை ஆரம்பத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது.

 

இந் நிலையிலேயே புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மா நகர சபை பகுதிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளும் மீத்தொட்டமுல்ல குப்பை மேட்டில் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

 

 

தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு மலை போல் காட்சி தரும் நிலையில்இ அதனை அண்டிய பகுதியில் மட்டும் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டு 30 ஆயிரம் பேர் வரை வசிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.virakesari.lk/article/19091

  • கருத்துக்கள உறவுகள்

பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது 

  • தொடங்கியவர்

கவ­ன­யீ­ன­மான அனை­வரும் பொறுப்புக் கூற­வேண்டும்

02-9d50a8524e0f34b1244bf1284370b586892208f0.jpg

 

எதிர்க்கட்சி அறி­விப்பு; பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அனு­தா­பம் தெரி­விப்பு 
 (ஆர்.ராம்)

மீ­தொட்டமுல்­லயில் ஏற்­பட்ட அனர்த்­தத்தில்  பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ள பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கவ­ன­யீ­ன­மாக இருந்த அனைத்து தரப்­புக்­களும் இந்த அனர்த்­தத்­திற்கு பொறுப்புக் கூறும் கடப்­பாட்டைக் கொண்­டுள்­ளன எனவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

அத்­துடன் இவ்­வா­றான சம்­பவம் மீள இடம்­பெ­றா­மையை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என குறிப்­பிட்­டுள்ள எதிர்க்­கட்சி குப்பை அகற்­றுதல் குறித்து உரிய பொறி­மு­றை­யொன்றை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மீத்­தொட்ட முல்­லையில் குப்பை மேடு சரிந்­ததில் ஏற்­பட்ட பாரிய அனர்த்தம் குறித்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வெள­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

மீத்­தொட்­ட­முள்ள பிர­தே­சத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்­பெற்ற துர­திஷ்ட சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த குடும்ப உற­வு­க­ளுக்கு எனது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

இந்த சம்­ப­வ­மா­னது நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்­களின் வாழ்க்­கை­களை பாதித்­துள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்­கை­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் தொடர்ந்து அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும், இப்­ப­டி­யான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றாமல் இருப்­ப­தனை உறுதி செய்­யவும் வேண்டும் எனவும் நான் கோரிக்கை விடுக்­கிறேன்.

இந்த இக்­கட்­டான நிலை­மையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக பாடு­படும் அனை­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். மேலும் இந்த சம்­ப­வத்தில் காய­முற்­றோ­ருக்­காக நான் வேண்­டு­வ­துடன் அவர்கள் விரைவில் குண­ம­டை­யவும் பிரார்த்­தனை செய்­கிறேன்.

இந்த துர்ப்­பாக்­கிய நிலை­மைக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் எமது சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கு ஒற்­று­மையை வெளிக்­காட்ட முன்­வ­ரு­மாறு நான் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கிறேன் என்­றுள்­ளது.

இதே­வேளை இச்­சம்­பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் குறிப்­பி­டு­கையில்

மீத்­தொட்ட முல்­லையில் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வது குறித்த விவ­காரம் நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விவா­திக்­கப்­பட்­டுள்­ள­தோடு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர்­களின் கவ­னத்­திற்கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

இருப்­பினும் தற்­போது உயிர்கள் பலி­யா­கு­ம­ள­விற்கு நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. இந்த விடயம் குறித்து கவ­ன­யீ­ன­மாக செயற்­பட்ட அனைத்து தரப்­புக்­களும் பொறுப்புச் சொல்­ல­வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்­ளன .

இந்த அனர்த்­தத்தால் பதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைச் தெரி­விப்­ப­தோடு மட்­டு­மல்­லாது இவர்­க­ளுக்­கு­ரிய இழப்­பீ­டுகள் அனைத்தும் வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் கோரு­கின்றோம்.

மேலும் இந்த குப்­பை­களை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் தாமதமடைந்தமை, மாற்றிடமொன்று தெரிவு செய்வதில் தாமதமடைந்தமை உள்ள அனைத்து பின்னணிகள் குறித்த காரணங்களையும் வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு இவ்வாறான சம்பவம் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்படுவதோடு குப்பைகளை அகற்றுவதற்கான உரிய பொறிமுறையொன்றை விரைந்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-17#page-1

  • தொடங்கியவர்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

 


மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு
 

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதன்போது மேலும் 11 பேர் காணமாற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 30 பேர் இதில் காணாமற்போயிருக்கலாம் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

புத்தாண்டுபிறந்து ஒரு சிலமணித்தியாலங்களில் மீதொட்டமுல்ல பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

அனர்த்தம் இடம்பெற்று 4 நாட்கள் கடந்துள்ளபோதிலும் 1000 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளுக்கு அருகில் இருந்த வீதி ஒன்று குப்பைமேட்டினால் முற்றாக மூடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியை இன்று அடையாளம்காணமுடிந்தது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் 180 குடும்பங்களை சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/04/மீதொட்டமுல்ல-அனர்த்தத்-2/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் விடயத்தில் நன்கு திட்டமிடத்தெரிந்த அரசிற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சமுதாய பிரச்சனைகளை திட்டமிட்டு செயற்படமுடியவில்லை.
இப்படியான விடயங்கள் மேலைத்தேய நாடுகளில் நடந்திருந்தால் அந்த அரசு அதற்குரிய  அமைச்சரை இராஜினமா செய்ய வைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர்கள் விடயத்தில் நன்கு திட்டமிடத்தெரிந்த அரசிற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சமுதாய பிரச்சனைகளை திட்டமிட்டு செயற்படமுடியவில்லை.
இப்படியான விடயங்கள் மேலைத்தேய நாடுகளில் நடந்திருந்தால் அந்த அரசு அதற்குரிய  அமைச்சரை இராஜினமா செய்ய வைத்திருக்கும்.

அமைச்சரே இராஜினாமா செய்திருப்பார் ஐயா! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

அவதானத்திற்குரிய பகுதிகள் 3 இனங்காணப்பட்டுள்ளன!

 

 

மீதொட்டமுல்லை குப்பை மேட்டுப் பகுதியில் அவதானத்திற்குரிய வலயங்களை இனங்காணும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதன் பின்னர், அப் பகுதி குறித்து ஆராய அந்த நிலையத்தினால் விஷேட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

இதற்கமைய, குறித்த குழுவினரால் தற்போது மூன்று அவதானத்திற்குரிய பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த வலயங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர், இராணுவத்தின் ஊடாக இது பற்றி மக்களுக்கு தௌிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை, குப்பை மேடு சரிந்தமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் சிலரின் கால் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, இராணுவம் கூறியுள்ளது. 

இதேவேளை, மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவிப் பொருட்களை அனுப்பி வைக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. 

கூடாரங்கள், தண்ணீர் போத்தல்கள் போன்ற பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜப்பான் தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது. 
http://tamil.adaderana.lk/news.php?nid=90556

  • தொடங்கியவர்

உயிரிழந்தோரின் தொகை 30 ஆக உயர்வு : 28 பேரின் கதி என்ன?

 

மீதொட்டமுல்ல அவலம் தொடர்கிறது
(எம்.எப்.எம்.பஸீர்)

வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 30 ஆக உயர்ந்­துள்ள நிலையில் மேலும் 28 பேர் காணாமல் போயுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. அத்துடன் 228 குடும்­பங்­களைச் சேர்ந்த 980 பேர் இடம்­பெ­யர்ந்த நிலையில் நலன்­புரி நிலை­யங்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். இந் நிலையில் இவ்வாறு காணாமல் போனோரின் கதி குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இவர்களும் இறந்திருக்கலாமென்று அஞ்சப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க 15 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் உள்­ளிட்ட 30 பேரே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும்அவர்­களில் 29 பேரின் முழு­மை­யான சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒரு­வரின் சட­லத்தின் பாகங்­களே மீட்­கப்­பட்­ட­தா­கவும் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார்.

நேற்று பகல் அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் 30 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் அவர்­களை தேடும் நட­வ­டிக்கை

தொடர்­வ­தா­கவும் அறி­வித்­துள்­ளது.

மீட்புப் பணியில் உள்­ளோ­ரினால் காப்­பற்­றப்­பட்­ட­வர்­களில்

7 பேர் வரை தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரு­கின்­றனர். இதில் ஒரு­வரின் நிலைமை கவலைக் கிட­மாக உள்­ள­தா­கவும் அவ­ருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

அத்­துடன் மீட்­கப்­பட்ட 28 சட­லங்­களில் சில சட­லங்கள் தொடர்ந்தும் அடை­யாளம் காண்­ப­தற்­காக பொலிஸ் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் குப்பை மேடு சரிந்­ததில் அதன் அருகில் இருந்த வீடு­க­ளுக்குள் இருந்­த­வர்கள் மண் குப்பை மற்றும் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள நிலையில் அவர்­களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

உயி­ரி­ழந்த 28 பேரில் நேற்று முன் தினம் மாலை வரை 21 பேர் அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்­தனர். அதன்­படி பாத்­திமா ஹம்ரா (தஹம் புர), கங்­கா­னம்கே அர­விந்த (தஹம் புர), அவ­ரது மக­ளான யசங்கா ஹிமி­திரி, பாத்­திமா பஸீர் வஸீம் (தகம் புர), சஷி குமார் தினுகா ( நாவ­ல­பிட்­டிய வரா­கொட பத்­தி­ர­ணகே நந்த சிரி மற்றும் அவ­ரது மனை­வி­யான கயனி சேத்­தனா மற்றும் அவர்­க­ளது மகன்­மா­ரான சரக பத்­தி­ரன ஒசந்த கிம்­ஹான நிமேஷா சிம்­ஹானி ( தகம் புர) பாத்­திமா அசீமா ( குர­ணி­யா­வத்த) வினிதா ஜய­சே­கர மற்றும் அவ­ரது மக­ளான அஷினி நிமந்தி ஜய­சுந்­தர அவந்த ஹிம்­ஹான ( தஹம் புர) டி.எம். நிஹால் குன­ரத்ன (தஹம் புர) விஷ்வ ஒஷான் விக்­ர­ம­சிங்க ( தஹம் புர) கீர்த்தி வர்­ண­புர (பன்­சல்­ஹேன) சேத்­தானி சமாதி (தஹம் புர) சந்ரா மானல் காமினி விக்­ர­ம­சிங்க கவிஷ லக்ஷான் என அடை­யாளம் காணப்ப்ட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்­களின் சட­லங்கள் மீதான பிரேத பரி­சோ­த­னை­களும் கொழும்பு மேல­திக நீதிவான் துலானி அம­ர­சே­க­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய செய்­யப்­பட்டு சட­லங்கள் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

நேற்று நான்­கா­வது நாளாக இடம்­பெற்ற மீட்பு நட­வ­டிக்­கை­களில் முப்­படை மற்றும் பொலிஸார் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தை அவ­தா­னிக்க முடிந்­தது. குறிப்­பாக மீட்பு நட­வ­டிக்­கை­யா­னது பிர­தே­சத்தின் மக்கள் வழங்கும் தக­வல்­க­ளுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. ' இந்த இடத்தில் எமது வீடு இருந்­தது இதில் எம்­முடன் இவர்கள் இருந்­தனர். இவர்­களைக் காண­வில்லை என பொது மக்கள் வழங்கும் தக­வல்­க­ளுக்கு அமை­வாக நாம் மீட்பு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கின்றோம்' என மீட்புப் பணியில் ஈடு­பட்­டுள்ள படை­யினர் சார்பில் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

அத்­துடன் மீட்புப் படையில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் அவ்­வி­டத்தில் இருந்து மண் குப்­பை­களை அகற்­று­வதை அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. குறித்த இடத்தில் அகழ்வின் போது எடுக்­கப்­படும் மண் அதே இடத்­தி­லேயே போடப்­ப­டு­வ­துடன் சில கஷ்­ட­மான சந்­தர்ப்­பங்­களில் மட்டும் ட்ரக்­டர்கள் ஊடாக வெளி இடங்­க­ளுக்கு அந்த மண் அகற்­றப்­ப­டு­கின்­றது.

குப்பை மேட்டு சரிவு மீட்பு நட­வ­டிக்கை இடையே கேச­ரி­யிடம் பேசிய இரா­ணுவ பேச்­சாளர் கூறி­ய­தா­வது

' அர­ணா­யக்க உள்­ளிட்ட பகு­தி­களில் மண் சரிவின் போது மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட படை­யி­ன­ரேயே பெரும்­பாலும் இங்கும் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர். எனினும் மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டு சரிவு நிலை­மை­யா­னது வித்­தி­யா­ச­மா­னது. உண்­மையில் இவ்­வி­டத்தில் மீட்புப் பணி செய்­வது சிர­ம­மா­னது. முன்­னைய சம்­ப­வங்­களின் போது எமது படை­யினர் கைக­ளி­னா­லேயே பல வேலை­களைச் செய்ய முடி­யு­மாக இருந்­தது. எனினும் இங்கு இயந்­தி­ரங்கள் இன்றி எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்க முடி­யா­துள்­ளது. மண் சேறாக உள்­ளதால் மேலும் சிக்­க­லான நிலை ஏற்­பட்­டுள்­ளது. உள்ளே புதைந்­துள்­ள­வர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் இல்­லா­ததால் மீட்புப் பணியை தொடர்­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை 7 பேர் தொடர்­பி­லேயே எமக்கு தகவல் கிடைக்கப் பெற்­றுள்­ளதால் காணாமல் போயுள்ளோர் தொடர்பில் உறு­தி­யான நிலைப்­பாட்டை எடுப்­பதில் எமக்கு சிக்கல் நீடிக்­கி­றது. இதனால் எமக்கு மீட்புப் பணியை முடி­வுக்கு கொண்­டு­வர கால அவ­காசம் தேவைப்­ப­டு­கி­றது. முதலில் மூன்று நாட்­களில் நட­வ­டிக்­கையை முடிக்க எதிர்­பார்த்தோம். எனினும் நிலைமை இங்கு வேறு வித­மாக உள்­ளதால் தொடர்ச்­சி­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும். சில நாட்கள் அதற்­காக எமக்கு அவ­சி­ய­மா­கின்­றன' என்றார்.

இத­னி­டையே குப்பை மேட்டு சரிவு அனர்த்தம் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள சொத்து சேதங்­களை மதிப்­பிடும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. மதிப்­பீட்டு திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களின் வழி நடத்­தலின் கீழ் முப்­படை அரச அதி­கா­ரிகள் பொலி­ஸாரின் உத­வி­யுடன் இந் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச மதிப்­பீட்டு திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மதிப்­பீட்­டாளர் பி.டி.டி.எஸ். முது­கு­மார தெரி­வித்தார்.

இந்த குப்பை மேட்டு சரிவு அனர்த்தம் கார­ண­மாக 228 குடும்­பங்­களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது. இதில் 74 பேர் தொடர்ந்தும் கொலன்­னாவ டெரன்ஸ் என் சில்வா வித்­தி­யா­ல­யத்தில் தங்­கி­யுள்­ள­தாக அந்த நிலையம் சுட்­டிக்­காட்­டி­யது.

 கடந்த 14 ஆம் திகதி வெள்­ளி­யன்று குப்பை மேடு சரிவு கார­ண­மாக மீதொட்­ட­முல்­லவின் நாக­ஹ­முல்ல வீதி தஹம் புர மிரிகே வத்த மற்றும் 23 ஆம் தோட்டம் ஆகிய பகு­திலில் உள்ள வீடுகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் நீர் விநி­யோக கட்­ட­மைப்பு முற்­றாக சிதைந்­துள்­ளது. இதனால் அப்­ப­கு­தியில் நீரா­னது நிரம்­பி­யுள்ள நிலையில் அவை குப்பை மேட்டின் அடிப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்­துள்­ளதால் மேலும் சரி­வுகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என கட்­டிட ஆய்­வு­மைய நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்..

புத்­தாண்டு தின­மான கடந்த 14 ஆம் திகதி பிற்­பகல் 2.00 மணி­ய­ளவில் மீதொட்­ட­முல்ல குப்பை மேடா­னது பாரிய சத்­த­துடன் அதன் அருகே இருந்த வீடுகள் மீது சரிந்­தி­ருந்­தது. இதனால் சுமார் 400 மீற்றர் பகுதி 40 அடி­வ­ரையில் புதைந்து போயுள்­ளது. இந் நிலை­யி­லேயே அதனுள் புதை­யுண்­டுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ச்­சி­யாக நேற்று நான்­கா­வது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டது.

கடந்த வெள்­ளி­யன்று அனர்த்தம் ஏற்­பட்டு சுமார் 10 மணி நேரத்தின் பின்­ன­ரேயே மீட்புப் பணி­க­ளுக்­கு­ரிய வச­திகள் கிடைத்­த­துள்­ளன. அதற்கு உட்­பட்ட நேரத்தில் பொலி­ஸாரும் பொது மக்­களும் இரா­ணு­வத்­தி­னரும் மீட்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். குறிப்­பாக மண் அள்­ளு­வ­தற்கு தேவை­யான ட்ரெக்­டர்கள் அல்­லது லொரிகள் எக்­ஸி­னேற்­றர்கள் போன்­ற­வற்­றுக்கு தட்­டுப்­பாடு நில­விய நிலையில் பல மணி நேரம் கழித்தே அவை கிடைத்­த­தா­கவும் உட­ன­டி­யாக கிடைத்­தி­ருப்பின் மேலும் சிலரை உயி­ருடன் மீட்­டி­ருக்­கலாம் எனவும் பிர­தேச மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் மீட்புப் பணி­க­ளுக்கு முப்­ப­டை­யினர் பொலிஸார் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் தொடர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் நிலையில் இன்றும் அந் நட­வ­டிக்­கைகள் தொட­ர­வுள்­ளன.

மீரி­ய­பெத்த மண் சரிவின் போது மீட்புப் பணி­களை முன்­னெ­டுத்த இரா­ணுவ விஷேட படை­ய­ணிக்கு கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான இரா­ணுவ கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்­கவின் கீழ் மீட்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 மீட்புப் பணி­களில் 150 வரை­யி­லான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் விமா­னப்­ப­டையின் 2 பெல் 212 ரக ஹெலி­கப்­டர்கள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன

கொழும்பு மா நகர சபைக்கு உட்­பட்ட பகு­தி­களின் குப்­பைகள் புளூ­மெண்டல் பகு­தியில் குப்பை கொட்­டு­வது நிறுத்­தப்­பட்­ட­தைய்­டுத்து 2008 ஆம் ஆண்டு மீதொ­ட­முல்­லையில் குப்பைக் கொட்டும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின.

 இந் நிலையில் ஒரு நாளைக்கு 8 டொன் வரையில் குப்­பைகள் மீதொட்ட முல்­லையில் கொட்­டப்­ப­டு­வ­துடன் சுமார் 300 அடி வரையில் குப்பை மேடா­னது வளர்ந்­துள்­ளது. ஆரம்­பத்தில் 2 ஏக்­கர்­க­ளுக்கு உட்­பட்டு கொட்­டப்­பட்டு வந்த குப்­பை­க­ளா­னது தற்­போது 20 ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்து குப்பை மேடான பரந்­துள்­ளது.

தற்­போது சரி­வுக்கு உட்­பட்­டுள்ள மீதொட்­ட­முல்லை குப்பை மேட்டு பகு­தி­யா­னது முன்­னைய வயல் பகு­தி­யாகும். ' பொத்­துவில் வயல்' என அழைக்கப்படும் இப்பகுதியானது 1989 ஆம் ஆண்டு கொழும்பை அழிவுக்கு உட்படுத்திய வெள்ளப் பெருக்கு காரணமாக கடுமையாக சேதமடைந்த பகுதியாகும். அதன் பின்னர் அப்பகுதியை நிரப்பி முல்லேரியா நகர சபையானது கொலன்னாவை முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகளை மட்டும் கொட்ட ஆரம்பித்துள்ளன. குப்பைக்கு மேலால் மண்ணை போட்டு நிரப்பி குப்பைகளை கொட்டும் முறைமை ஆரம்பத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மா நகர சபை பகுதிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளும் மீதொட்ட முல்ல குப்பை மேட்டில் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குப்பைகள் அனைத்தும் கொட்டப்ப்ட்டு மலை போல் காட்சி தரும் நிலையில் அதனை அண்டிய பகுதியில் மட்டும் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டு 30 ஆயிரம் பேர் வரை வசிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-18#page-1

  • தொடங்கியவர்
32 சடலங்கள் இதுவரை மீட்பு
 
19-04-2017 04:41 AM
Comments - 0       Views - 44

article_1492531633-sw.jpgகொலன்னாவை, மீதொட்டமுல்லயில், நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

குப்பைமலை, கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் சரிந்துவிழுந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்தன. எனினும், குப்பை மலைக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ள

- See more at: http://www.tamilmirror.lk/195009/-சடலங-கள-இத-வர-ம-ட-ப-#sthash.pzsUprTE.dpuf
  • தொடங்கியவர்

மீதொட்டமுல்ல மக்களை இலங்கை கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர்

 

 

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் சென்று பார்வையிட்டு அவர்களின் துக்கங்களில் பங்கெடுத்தனர்.

C9wAe2zU0AAspTX.jpg

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கொலன்னாவை ரெரன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தனர்.

C9wAe2yUIAAqL-7.jpg

குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் எய்ட் குழுவினர் 40 இஞ்சி அளவுடைய 4 தொலைக்காட்சிப்பொட்களை வழங்கி வைத்தனர்.

C9wAe2yUAAAI53T.jpg

இதன் இலங்கை கிரிக்ககெட் அணியுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யதமை குறிப்பிடத்தக்கது.

C9wAe2zVwAAGbJ1.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19138

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வீடு : மீதொட்டமுல்லயில் பிரதமர்

 

 

C9wMT-kUIAArU1Y.jpg

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகள் கைளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தெரிவித்தார்.

C9wMT-kVwAABibh.jpg

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

C9wMT-rUwAAvISZ.jpg

 

 

http://www.virakesari.lk/article/19142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.