Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மைந்தனுக்கு ஆப்பு...

Featured Replies

வன்னி மைந்தனுக்கு ஆப்பு...

யாழ்கள நிர்வாகிகளால் அடுத்தடுத்து என் மீது பழிவாங்கும்

நிலைகளை ஆடுத்தடுத்து தொடர்கிறது.

எந்தவித முன்னறிவித்தலும் இன்றி..எழுதப்புடும் ஆக்கங்கள் முடக்கப்படுகின்றன.

தொடராக என் மீது அவர்கள் தமது பலப்பிரயோகத்தை மேற்க்கொண்ட

வண்ணம் உள்ளனர்.

இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும்

வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால்

வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை

மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும

சித்தப்பா பெறாமகளை முடித்த உங்கள் கதை சம்மந்தமாக எனக்கு பிறகு காவடியும், அதன் பிறகு நெடுக்கும் கருத்துக்கள் எழுதி இருந்தார்கள். காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் அல்லது சிந்தனை காரணமாகவே உங்கள் கதை அகற்றப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அதற்காக உங்கள் ஆக்கங்கள் நிருவாகத்தினால் தணிக்கை செய்யப்படுவதாய் நினைக்காதீர்கள். களவிதிகள் எல்லோருக்கும் பொதுவானதே.

உங்கள் ஆக்கங்களைப் பொருத்தவரை என்னால் கூறக்கூடிய அறிவுரை, அசாதாரணமான அல்லது காலத்திற்கொவ்வாத ஆக்கங்களை களத்தில் இணைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உலகில் நீங்கள் சொல்லும் விடயங்கள் நடைபெறவில்லை அல்லது நீங்கள் சொல்லும் விடயங்கள் தேவையற்றது என்பதல்ல அர்த்தம். அதாவது யாழ் களத்தின் Visionற்கு ஏற்றவாறு அல்லது அதனுடன் ஒத்துப்போகின்றவாறு உங்கள் ஆக்கங்களை படைக்க முயலுங்கள்!

உங்களிடம் திறமை உள்ளது. எனவே மனம் சோர்ந்து போகாதீர்கள். ஐயா மோகன் கூறியது போல் வித்தியாசமான கருத்துக்களை, ஆக்கங்களை உங்கள் Personal Blogல் இணைக்கலாம். இதற்கு உதாரணமாக கான்பரா மற்றும் சின்னக்குட்டியின் Personal Blogsஐ கூறலாம். வாசகர்கள் உங்கள் Blogஐ பார்வையிடுவதற்கு உங்கள் Signatureமூலம் இணைப்பை கொடுக்கலாம் அல்லது கான்பரா செய்வதுபோல் வெறும் லிங்க்கை மாத்திரம் புதிய தலைப்பில் இணைத்து விடலாம்.

சின்ன விசயத்திற்கு போய் மண்டையை உடைக்காதீர்கள். எல்லாரும் :rolleyes: 22ம் திகதி :lol: என்று எதிர்பார்த்து உற்சாகமாக இருக்கும் இந்நேரத்தில் வன்னியின் மைந்தனாகிய தாங்கள் மனம் கோணக்கூடாது!

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னிமைந்தன்.

இவ்விடயம் தொடர்பாக எவரைச் சந்தேகிக்கின்றீர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் "அவர்கள்" என்று பொதுவாக எழுதுவதன் மூலம் காமசூத்திரா தொடர்பாக நிர்வாகத்திடம் பரிந்துரை செய்ததையும் நீர் கருதுகின்றீர் என்றால் அதற்குப் பதிலளிக்க வேண்டியவனாகின்றேன்.

உமது காமசூத்திரா கட்டுரை தொடர்பாகவே நான் நிர்வாகியிடம் பரிந்துரை செய்தேன். வேறு எவ்வித கட்டுரை தொடர்பாகவும் அல்ல. அது அப்பகுதியில் வெளிப்படையாகவே நிர்வாகியிடம் வேண்டுகோளாக விட்டிருந்தேன். மற்றும்படி உம் ஆக்கங்களில் எவ்வித குறுக்கீடும் நான் செய்யவில்லை.

விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான, மற்றும் காம உணர்வுகளை தூண்டக்கூடியதாக நினைக்கும் கட்டுரைகளை இணைப்பவர்கள் யாராக இருப்பினும் எதிராக எழுதுவேன். அவ்வளவே! மற்றும்படி யார் மீதும் தனிப்பட்ட விரோதம் காட்டப் போவதில்லை. அவ்வாறு காட்டும் அளவிற்கு எனக்கு அறிமுகமானவர்களும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவின் கதையை நான் வாசிக்கவில்லை.. இருப்பினும் அதில் ஒவ்வாத விடயங்கள் இருந்திருப்பதாக ஊகிக்கமுடிகின்றது..

யாழ்களம் பொதுவாகவே நிறையச் சுதந்திரத்தை அளித்துள்ளது. எனினும் அதைச் துஷ்பிரயோகிக்கும் அளவிற்கு கருத்துக்களையோ, ஆக்கங்களையோ எழுதுவதைத் தவிர்க்கவேண்டும்.. சிலவேளைகளில் விவாதநோக்கத்திற்காக, அல்லது விதண்டாவாதத்திற்காக நாம் எழுதிய கருத்துக்க்கள் உங்கள் பார்வையில் எல்லை மீறி இருந்திருந்தால் மன்னிக்கவும்..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தரே அமைதி அமைதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளை மணமுடித்த சித்தப்பா கதையில் வன்னி மைந்தன் வேண்டுமென்றே கதையைப் புரிதலுக்கு எந்த விதத்திலும் துணைநிற்காத இரண்டு படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை தனது கிளுகிளுப்பு நோக்கத்திற்காக இணைத்திருந்தார். ஒருவேளை அதுவே காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும்

வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால்

வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை

மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன்.. யாழ் களம் 1, 2 இல் பல இழுபறிகள் நடந்துள்ளது. யாழின் பழைய உறுப்பினர் ஒருவரோடு சமீபத்தில் கதைக்கக் கிடைத்த போது சில விடயங்களை அவர் சொன்னார்.

யாழ் சீரான இயக்கத்தில் இருந்ததாகவும் பின்னர் பாலியல் கவிதைகள் கட்டுரைகளைப் போட்டு சிலர் யாழ் கள உறுப்பினர்கள் மத்தியில் பாலியல் அறிவு முதிர்ச்சி முன்னேற்றம் வேண்டினர் என்றும்.. அதன் தொடர்சியாக யாழில் புதிய பிரிவுகள் உருவாக்கக் கோரினர் என்றும் அவை பின்னர் தீவிர இலக்கியங்கள் சிந்தனைகள் என்ற போர்வைக்குள் இடப்பட்டன என்றும் நமக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் நீங்கள் பதிந்த சில பாலியல் சம்பந்தப்பட்ட தரவுகள் அகற்றப்பட்டிருப்பதானது தீவிர இலக்கியம் சுதந்திரமான பாலியல் பேச்சு என்பதை யாழில் நிறுவ கங்கணம் கட்டி நின்றவர்களை தோற்கடித்துள்ளது எனலாம்.

சபேசன் போன்றோர் ஈழத்தில் விபச்சாரிகள் மீதான மரண தண்டனையைத் தொடர்ந்து விபச்சாரம் அல்லது பெண்கள் தமது உடல் இச்சைக்காக பல ஆண்களைச் சரணடைதல் தவறல்ல என்பதை கிபி கிமு என்று போட்டு மொகாலயர் காலத்துக் கதையைப் போட அதற்கும் இங்குள்ள கூட்டம் வங்காளத்து வாங்கி மொகாலய காலத்து உதாரணம் இக்காலத்துக்கும் பொருந்தும் என்று சாதிக்க நின்றனர். ஆனால் இன்று காம சூத்திரம் தொடங்கி உங்கள் கதைகள் வரை நீக்கப்பட்டதானது அவர்கள் ஆரம்பித்த புள்ளியையே அழித்துவிட்டது.

அப்புறம் பெரியாரைத் தூக்கி வந்து பெண்கள் திருமணம் செய்யத் தேவையில்லை எப்படியும் பாலியல் செய்யலாம் என்றனர். ஓரினச் சேர்கைக்கு வக்காளத்துக்கு வாங்கினர். அவற்றை நவகால முற்போக்குப் பாலியல் என்பது போல தோற்றம் காட்ட முனைந்தனர். அவையும்ம் இறுதியில் தோல்வியில் முடிந்தன.

அப்புறம் இந்துக் கடவுள்கள் ஜேசு கிறிஸ்துநாதரை வைத்து பாலியல் வக்கிரங்களைக் காட்டி இந்து மதத்தின் மீது வெறுப்பை ஊட்ட முனைந்தனர். அதற்காக புராண பாலியலைப் பாவிக்க முனைந்தவர்கள் இன்று புராணப் பாலியல் காலத்துக்கு ஒவ்வாதது என்று கூறி இந்து மதத்துக்குள் செருக்கப்பட்ட அவர்களின் புராணப் பாலியல் தவறானது என்பதை ஒத்துக் கொண்டு பெரியார் போன்ற "பெரிய" மனிதர்கள் புராதணப் பாலியலை வைத்து பிராமணர்கள் மீதும் இந்துக்கள் மீதும் திணித்த பாலியல் வக்கிரக் கதைகள் அநாவசியமானவை காலத்துக்கு ஒவ்வாதவை என்பதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஆக இந்து மதத்தின் மீது நாத்திக சாதி வெறியர்களால் பூசப்பட்ட பாலிய வக்கிர சாயம் அவர்களாலேயே காலத்துக்கு ஒவ்வாதவை என்று கரைக்கப்பட்டு இந்து மதம் அதன் ஆன்மீகத் தூய்மையைப் பெற்றுள்ளது.

பாலியல் வக்கிரத்தை வளர்க்க பெண்களின் உறுப்புக்களைக் கவிதைகளில் எழுதி அவை முற்போக்கான பாலியல் சிந்தனை என்று காட்ட விளைந்தவை இன்று உங்களின் இணைப்புக்களை அகற்றியதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ் களம் மீண்டும் அதன் ஆரம்ப இலக்கில் தெளிவாகி நிற்கிறது. இடையில் சில குழப்பவாதிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது. அவர்களே அவற்றைக் காலத்துக்கு ஒவ்வாதவை என்று கழித்துவிட்டதானது அவர்கள் முற்போக்கு என்று எவ்வளவு பிற்போக்கு நிலையில் இருந்துள்ளனர் என்பதைக் காட்டிவிட்டுள்ளது. (பழைய யாழ் உறுப்பினர்கள் சொன்ன தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன)

அந்த வகையில் உங்களின் செயற்பாடுகள் பலத்த வெற்றி. வெற்றியைக் கொண்டாடுவதோடு மட்டும் நிற்காமல் சரியான நேரத்தில் சரியான வடிவத்தில் செயற்பட்டும் யாழுக்குள் தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வையில் நுழையும் போலியானவர்களையும் குழப்பவாதிகளையும் முறியடிப்பது மக்களையும் யாழையும் இலக்கு -நோக்கி தெளிவாக இட்டுச் செல்ல உதவும்.

அந்த வகையில் பழைய தகவல்களைப் பரிமாறிக் கொண்ட யாழ் உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள். சூழ்நிலைக்கேற்ப உங்கள் செயற்பாடுகள் தீவிரமடையவும் சோர்வின்றி உங்கள் வெற்றியைக் கொண்டாடுவதோடு தொடர்ந்து யாழுக்கும் சமூகத்தும் உதவக் கூடிய தகவல்களைத் தாருங்கள் வன்னி மைந்தன். :P :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் 1, 2 இல் பல இழுபறிகள் நடந்துள்ளது. யாழின் பழைய உறுப்பினர் ஒருவரோடு சமீபத்தில் கதைக்கக் கிடைத்த போது சில விடயங்களை அவர் சொன்னார்.

ஹி ஹீ ஹீ ஹி.. :icon_idea::rolleyes:

தன்னுடன் தானே பேசும் ஒருவரை தமிழில் எப்படிக் கூறலாம்.. B)

திரு நெடுக்கால போவான் அவர்களே,

நீங்கள் பழைய யாழ்க்களத்தில் நடந்ததாகச் சொல்லும் பழைய விடய்ங்களில் நானும் சம்பந்தப்படிருப்பதால் நீங்கள் எழுதி உள்ள பல பொய்களுக்கு விளக்கம் அழிக்க வேண்டி உள்ளது.

காம இச்சையைத் தூண்டும் வண்ணம் வக்கிரமாக எழுதுவதும், பாலியல் சம்பந்தமாக் எழுதுவதும், ஆண்களின் பாலியல் வக்கிரங்களை அம்பலப்படுத்த எழுதுவதும் ஒன்றல்ல.

யாழ்க் களத்தை நடாத்தும் நிர்வாகிகளுக்கு வேறு பாட்டை அறியும் முதிர்ச்சி இருக்கிறது.

மொட்டாந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு குருவி என்ற முன் நாள் அங்கத்தவர் இங்கு கொட்டிய பிற்போக்குத் தனங்களை நீங்கள் மீண்டும் காவி வருகிறீர்கள்.கிருபன் மேல எழுதினது போல நீங்களே உங்களுக்கு சாட்சி சொல்வது மிகப் பெரிய வேடிக்கை.உங்களுக்கு உளவியல் ரீதியாக நெடு நாள் பாத்திப்பு இருப்பதையே இது எனக்கு உணர்த்துகிறது.மனிதர்கள் முதிர்ச்சி பெறுவதும் கருத்து நிலைகளில் தெளிவு பெறுவதும் சாதரணமான விடயம்.இது உங்களை வெகுவாகப் பாதித்திருப்பது போல் உள்ளது.இதிலிருந்து வெளி வந்து சாதாரண மன நிலையை அடைந்து குணம் பெறுவீர்களாக.இதில் தொடர்ந்து எழுதி எனது நேரத்தை வீணக்க விரும்பவில்லை ,வேறு பிரயோசனமான காரியங்கள் எனக்கு இருக்கின்றன.

நாய் வாலை நிமிர்த்துவது கடினம், சிலருக்கு அதுவே பிறவிக் குணமாக இருப்பதால். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் 1, 2 இல் பல இழுபறிகள் நடந்துள்ளது. யாழின் பழைய உறுப்பினர் ஒருவரோடு சமீபத்தில் கதைக்கக் கிடைத்த போது சில விடயங்களை அவர் சொன்னார்.

அவர்தான் அந்த குருவியாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் கருத்து ஆதிக்கங்களை செயல் ஆதிக்கங்களை அதன் வடிவங்களை அம்பலப் படுத்தும் எழுத்துக்களுக்கும் வன்னி மைந்தன் எழுதும்.. வெள்ளை நிற நைற்றியில் அவளைப் பார்க்க உடம்ப சூடாகி மோகம் பரவி ஆடி முடிக்கும் மஞ்சள் பத்திரிகை எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவை வெளிநாடு வந்து படிச்சு முடிச்சு.. வாழ்வில பிரகாசித்து.. ஒரே கவலையா இருக்கப்பா..

எழுத்துக்கிடையிலான வடிவங்கள் அவற்றின் வேறுபாடுகள் தெரியாதவர்கள் ராணி காமிகஸ் படித்துக் காலத்தைப் போக்கலாம். அதுவே அவர்களின் அறிவு மட்டத்திற்கு பொருத்தமானதும் தகுதியானதும் ஆகும்.

வன்னி மைந்தன் யாழ் களத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவே இத்தகைய வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டார் என்பது.. இதனை வாசிக்கும் வரை வன்னி மைந்தனுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. அவரே ஆச்சரியப் படப் போகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தீவிர இலக்கியத்துக்கும் வன்னி மைந்தன் எழுதும் நாறிய இலக்கியத்துக்கும் வேறுபாடு பாடு உண்டு. அது நெடுக்காலை போவானைத் தவிர மற்ற சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதப் பிறவிகளுக்கு நன்றாகவே தெரியும். பொறுப்பாளருக்கும் தெரியும்.

தொடர்ந்தும் யாழில தீவிர இலக்கியம் தொடரும்.. நெடுக்கால போவானின் தூண்டுகைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்னவோ, காமசூத்திராவை வைச்சு என்னை யாரும் போட்டுக் கொடுத்துவிட்டார்களா என்று பயந்து போனேன்.

சமூதாயத்திற்கு ஒழுக்கமான கருத்துக்களைப் பரப்பினால் தான், அது குறைந்த பட்சம் 50ஆவது ஒழுக்கமாக நடக்கத் துணியும். தப்புக்கள் நடக்கின்றன என அவற்றை முன்னிலைப்படுத்தும்போது, அதுவே வழிகாட்டியாக அமையும்.

வன்னி மைந்தனுக்கு சொல்லவிரும்புவதும் அது தான். ஆக்கங்கள் என்று மட்டும் பார்க்காமல், அது சமூகத்தில் ஒரு மேய்ப்பாளனாக உங்களை அடையாளப்படுத்தும். சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைத் தாருங்களேன்.

-------------------

சபேசன் செய்தது பிழை என்று கதைக்கின்ற நெடுங்காலபோவான், காமசூத்திராவை ஆதரித்தது எதற்காக? அப்படிப் பார்த்தால் சபேசன் மீது குற்றம் சாட்டும் தகுதி உமக்கில்லை. சபேசனையோ, நாரதரையோ, காவடியையோ, அல்லது பிறரையோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக, காலத்துக்கு காலம் கொண்ட கொள்கைகளை மாற்றும் உமக்கு எப்படி குறை பிடிக்க தகுதியுண்டு.

பெரியாரின் சிந்தனை எவ்வாறு தவறானதோ, அவ்வாறே புராணக்கதைகளில் உள்ள கீழ்தரமான கருத்துக்கள் மழுங்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆதிசங்கரர் மதங்களை ஒன்றிணைக்கும் வரைக்கும், நடந்த வாதப்பிரதிவாதங்கள், இணைந்த பின் திருஸ்டிக்கப்பட்ட கதைகள் சமூகத்திற்கு தவறான வழிகாட்டியாக அமையக்கூடாது.

தீவிர இலக்கியம் அமைக்கப்பட்டதில் இன்று வரைக்கும் எனக்கு உடன்பாடில்லைத் தான். ஆனால் நிர்வாகம், அப்பகுதியில் மட்டறுத்தலை இறுக்கமாக்கி, எம் கோரிக்கையை நிறைவு செய்திருந்தது. அது தான் அது மீறிப்போகாமல் இருக்க வழி செய்தது என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தரே அமைதி அமைதி

ஒல்லாந்து மைந்தரே சா வன்னி மைந்தரே அமைதி அமைதி,, கொண்டலிசா ரைசே சொல்லிட்டா அமைதி காக்க சொல்லி, முரண்டு பிடிக்காதீர், :icon_idea:

இப்படியே முரண்டுபிடிச்சீர், ஜனநாயக வாக்கெடுப்பு நடாத்திடுவம் மைண்ட் இற்.. :P :P :rolleyes:

Edited by Danklas

ஹி ஹீ ஹீ ஹி.. :icon_idea:<_<

தன்னுடன் தானே பேசும் ஒருவரை தமிழில் எப்படிக் கூறலாம்.. B)

அது தானே கிருபன் அண்ணா..நம்ம அங்கொட பல்கலைகழக பட்டதாரிகளுக்கு உரித்தான விசேட குணாம்சம்.. :rolleyes: :P

ஹி ஹீ ஹீ ஹி.. :icon_idea::)

தன்னுடன் தானே பேசும் ஒருவரை தமிழில் எப்படிக் கூறலாம்.. B)

:P :P :P :P :P :P :P :rolleyes:<_<:lol::):)

:P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P :P :P :P :P :icon_idea::rolleyes:<_<:lol::)

:P :P :P :P :P :P :P

இதிலிருந்து நீங்கள் விளங்கிகொள்வது யாதெனில், சுவிஸ் கிங்காகிய யாழ் சின்னப்புவின் கனனியில் உள்ள கீமன் மென்பொருள் மப்பில் செயற்படாது நின்றுவிட்டது அல்லது சுவிஸ் கிங்க் சுவிஸில் தற்பொழுது இல்லை என்பதும் அதனால் இன்ரர் நெட் கபேயில் இருந்து யாழை தரிசிக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. :P

புலானாய் பதிவேட்டிலீருந்து. :) :)

  • தொடங்கியவர்

இங்கே இதுவரை இந்த நிர்வாகத்தினர் ஏன் அந்த கதை அகற்றப்பட்டதென்பதற்கு

இதுவரை தனிமடலிலோ அன்றி இந்த பகுதியலோ பதில் ஏதும் தரவில்லை....ஏன்..?

இந்த மௌனம்...ஏன்....???

இதற்கு என்ன காரணம்....???

களத்தித்தின் விதிமுறை இதுவா....??

இதுவா ஒரு தமிழ் தேசிய ஊடகத்தின் தர்மம்...???

ஒருவனுடைய ஆக்கம் எடுப்பதற்கு முன் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்

அல்லது...கருத்துக்கள் பாரிமாற்றம் பகுதியல் அதற்காண காரணத்தை

தெரியப் படுத்த வேண்டும்....இதுவே விதிமுறை..மனிதாபிமானமும் கூட...!

ஏன் இவர்கள் இதுவரை அதனை செய்யவில்லை...??

இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது..

இங்கே தமது எழுத்துக்களால் ஆணித்தரமாக

தமது கருத்துக்களை வைப்பவர்களை ஓரம் கட்டுவதென்றே

முடிவாகியுள்ளது...

இதற்க்கு உதரணம்..- சில வாரங்கள் முன் நெடுக்கால போவனுக்கு...பாரிய

அசு;சறுத்தல் ஒன்று விடப்பட்டிருந்தது...அவரது கருத்துக்கள் ஒரு மட்டுறுத்தினரின் பார்வையின் பின்னே

வெளியிடப்படுமென அறிவுறுத்தப்பட்டது......!

அதற்க்கு அடிப்படை காரணம்..மிகவும் நேர்த்தியானதும்...ஆணித்தரமான

வன்னிமைந்தன்,

சாது மிரண்டால் காடு கொள்ளாது!

பொங்கினார் காடாள்வர்!

பொறுத்தார் நாடாள்வர்!

நாடாள்வோம் வாரீர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவனுடைய ஆக்கம் எடுப்பதற்கு முன் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்

ஆம்.. ஆனால் குப்பைகளை அகற்ற முன்னர் யாருக்கும் முன் அறிவித்தல் கொடுப்பதில்லை.

குப்பைகள் வழித்துத் துடைத்த அகற்றப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தனது தந்திரோபாய காய் நகர்தல் ஊடாக அதில் இருந்து தவறி

மீண்டும் அதே செருக்கோடு..வாதட்டங்களை கருத்து பகிர்வுகளை செவ்வனவே செய்(தார்)கிறார்...

ஓ.. அவர் குருவியாக வெளியேறி நெடுக்கால போவானாக வந்ததை சொல்கிறீரா..? அது தந்திரோபயமா..?

மானக் கேடு..

  • தொடங்கியவர்

தாங்கள் அள்ளி வைத்து ஆhடிய குப்பை கூளங்களை விட இது ஒன்றும்...அப்படியானதல்ல..காவடி

வன்னி!

உமது எழுத்தின் நோக்கமென்ன?

நெடுக்கின் எழுத்துக்கள் எல்லா நேரத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

அதைவிட நெடுக்கு இங்கு தனது கருத்தாக எதையும் சிந்தித்து எழுதுவதில்லை. பக்கம் பக்கமாக எழுதிவிடுவதால் அது சரியான கருத்தென்று ஒத்துக் கொள்ள முடியாது. எப்போதுமே நெடுக்கிற்கு தான் எழுதி எழுதி மற்றவர்களைத் தெளிவற்றவர்கள் ஆக்கவேண்டும் என்ற குறிக்கோள் இருக்கின்றதுபோலும் தெளிவானவர்களுக்கு அது புரியும். தெளிவற்றுத் திரியும் உமது தலையில் இரண்டு தேசிக்காய் தப்பித் தோய்ந்துவிட்டு வந்து விடயத்தைப் பாருப்பா.

உதவிக்கு மற்றவரை அழைக்குமுன் உமது இலக்கு எது என்பதில் தெளிவாக இருந்தால் இப்படியான சங்கடச்சூழல் வராது. இப்ப நான் எழுதிட்டேனா இனிமே என்னுடன் விதண்டாவாதத்திற்கு வருவீர்கள்!!!! என்ன பன்மையில் சொல்கிறேனா? உமக்குப் புரிந்தால் சரி

  • தொடங்கியவர்

நான் இங்கே யாரையும் என் பின்னால் வாங்கோ என்று கூப்பாடு போடவில்லை....அந்தன மனிதன் மிக சிறந்த கருத்துகளை தத்துவாத்தமாக தத்துரபமாக வைக்கிறது...

அதை அரை குறை மேதைகள் வந்து நின்று

போடும்ட பாடு தாங்க முடியல...ஆதரம் காட்டாயினம்..கேட்ட யாரையோ வம்புக்கிழப்பினம்...

படையெடுத்து வந்து பறையடித்து பார்த்தியள் கடைசியில் என்னத்தை கண்டியள்...???

மூக்குடைபட்டு போனது யாரு....????

இலக்கியம் என்ற போர்வைக்கள் என்னம்மோ சொன்னீக...

இப்ப என்னடா எண்டா...மாத்தி பெலட்டி அடிக்கிறயள்...

உங்களுக்கு பழகிப் போச்சு முதல் நீங்கள் தெளிவா நில்லுங்கோ....

குத்துக்கரணம் அடிச்சு அடிச்சு...பழக்கப் பட்டு போச்சு...உங்கள யார் வந்தும் தருத்த முடியாது...

உங்களுக்கு குறிக்கோள் வேறு இருக்கு..ச்சீ....சிரிப்பு வருது.....

ஓம்..ஓம்..தேசிக்கு திண்டுதானே ஆதியாருக்கு பழக்கம்....அவருக்கு இந்த கொப்பு தாவிற புத்தி..என்னண்டு மாறும்...

அது தானே அவருடைய வாழ்க்கை....

Edited by vanni mainthan

இதிலிருந்து நீங்கள் விளங்கிகொள்வது யாதெனில், சுவிஸ் கிங்காகிய யாழ் சின்னப்புவின் கனனியில் உள்ள கீமன் மென்பொருள் மப்பில் செயற்படாது நின்றுவிட்டது அல்லது சுவிஸ் கிங்க் சுவிஸில் தற்பொழுது இல்லை என்பதும் அதனால் இன்ரர் நெட் கபேயில் இருந்து யாழை தரிசிக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. :P

புலானாய் பதிவேட்டிலீருந்து. :lol: :lol:

குத்தியா :angry: :angry: றோயல் பமிலியின்ர மானத்தை :angry: ஏற்க்கனவே அது இல்லை ....

இருக்கிறதையும் வாங்கிறான்

எல்லாம் இருக்கட்டும் அப்பு கண்டபடி போடுறாங்களாம் பங்கருக்கையே இருக்கப்பார்

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர் பாருங்கள்.. விரைவில்

இன்னொரு ஆப்பு

சந்தி சிரிக்கும் காவியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.