Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

 

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்- மன்னார், மன்னார்- வவுனியா, தம்புள்ள- திருகோணமலை வீதிகளையே அபிவிருத்தி செய்து தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

nitin-gadkari-ranil

எனினும், உள்ளூர் அனுமதி மற்றும் காணிகள் சுவீகரிப்பு போன்றவற்றை உள்ளீர் முகவர் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும் என்றும், காணிகள் சுவீகரிப்பு மற்றும் ஏனைய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல், இந்த திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடினம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த வீதிகள் அமைப்புக்கான நிதி தொடர்பாகவும் நேற்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனைத்துலக ஆலோசகரை நியமிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இறுதியான திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு இந்திய அரசாங்கம் இதனை முன்னெடுக்கும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா- சிறிலங்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கு தமது அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/04/27/news/22770

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழருக்காக வீதிகளமைப்பதுபோன்ற பரப்புரை. தமது பண்டங்களையும் பாதுகாப்பு நலன்களையும் பேணுவதே வடவரதும் சிங்களவரதும் நோக்கம். முதலில் அனைத்துலக தரத்திலான சனனாயகத்தை மலரச்செய்தால் வீதிகளின் தேவைகளை அந்தந்த மக்களே நிறைவுசெய்துகொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தங்கடை நாட்டை பார்த்துகொள்வது கிண்டியாவுக்கு நல்லது.முதலில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு  ஒழுங்கான கழிப்பிடவசதி கூட கொடுக்க முடியாத கிண்டிய அரசின்  இந்த செயல் பிச்சைகாரன் இன்னுமொரு பிச்சைகாரனுக்கு கடன் கொடுத்து ஆளுமைபடுத்துவதுக்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

முதலில் தங்கடை நாட்டை பார்த்துகொள்வது கிண்டியாவுக்கு நல்லது.முதலில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு  ஒழுங்கான கழிப்பிடவசதி கூட கொடுக்க முடியாத கிண்டிய அரசின்  இந்த செயல் பிச்சைகாரன் இன்னுமொரு பிச்சைகாரனுக்கு கடன் கொடுத்து ஆளுமைபடுத்துவதுக்கு ஒப்பானது.

சீனா கடலுக்காலைபட்டுப்பாதைபோட்டு வெளியாலை சுற்றிவளைக்க கிந்தியா தரைப்பாதைபோட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தத் துடிக்கினம். தமிழீழத்தில் இருந்த நடைமுறைஅரசை வீழ்த்தியதன் பயனை கிந்தியா சிங்களத்திடம் வரலாற்றுரீதியாகக் கற்றதை மீண்டும் கற்றுக்கொள்ளும். 

மக்களின் வரிப்பணத்தை அந்த மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவிடும் பண்பு கிந்தியாவிடம் கிடையாது. படுப்பதற்காக(சில மணித்தியாலங்கள் ஒதுங்க) பாரவூர்திகளின் வருகைக்காக முப்பாய் போன்ற பெருநகரத்தில்கூட  மக்கள் காத்திருப்பதை மோடிகளும் ராகுல்களும் அம்பாணிகளும் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஈணவும்..  விடாது,  நக்கவும்... விடாது"  
அந்த... மிருக வெறி பிடித்த நாடு தான், இந்தியா.

இதனிடம்... தமிழர், கொடுத்த, உயிர்  விலை அதிகம்.
இனியும்... ஏமாறுபவன், அடி  முட்டாள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, nunavilan said:

மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை......  ஒரு றோட்டு சொந்தமாய் போட வழியில்லை. இதுக்கை கோட்டு சூட்டு வேறை....பஞ்சப்பரதேசியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.