Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு!

Featured Replies

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு!

சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4_V_Mohan.jpg

இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் துறவறம் ஏற்றுக்கொண்டார். சிறு வயது முதலே பௌத்த சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் துறவறம் ஏற்றுக்கொண்டார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

துறவியாக மாறிய மொஹானின் தற்போதைய துறவறப் பெயர் ரத்னபுரே சித்தசத்தி தேரோ என்பதாகும்.

இச்செய்தி அறிந்த சிங்கள ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/19858

  • கருத்துக்கள உறவுகள்

மொஹான் அவர்களுக்கு அரசியல் பணி செய்ய ஆசை வந்திருக்கலாம். அதற்கான சுலபமான வழியை அவர் பின்பற்றியுள்ளார். :unsure:

இந்திய நாட்டில், அரசியலுக்குள் வரவேண்டும் என்றால் அவர்கள் திரை உலகில் நடிகராக வேண்டும். :)

சிறீலங்கா தீவில், அரசியலுக்குள் வரவேண்டும் என்றால் அவர்கள் மொட்டை அடித்துத் தோரோ ஆகவேண்டும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு சிங்கள பாடகர் தமிழன் ஜனாதிபதியாக வரனும் அப்பத்தான் இலங்கை சுபிட்சம் பெறும் என்று அமெரிக்காவில் வைத்து சொல்ல கூப்பிட்ட சிங்களவங்கள் ஆளுக்கு நல்ல அடிபோட்டுவிட்டாங்கள் உயிர் தப்ப மட்டு மட்டாய் ஓடித்தப்பினவர் 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் பிரபலமான பாடகராக இருந்து அனுபவிக்கமுடியாத இன்பமான வாழ்வை ஒரு தேரராக இருந்து அனுபவிக்க முடியும் என்று இவருக்குத்  தோன்றியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4_V_Mohan.jpg

16வயசிலை கலியாணத்தை கட்டி சகல சுகபோகங்களையும் அனுபவிச்சு பிள்ளையையும் பெத்துப்போட்டுத்தானே  சித்தார்த்த கௌதமரும் புத்தராய் மாறினவர்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது கடினம்....?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம்.?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

முகநூலில் வந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எது கடினம்.?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

முகநூலில் வந்தது 

நல்ல‌ குடும்பஸ்தனாக இருப்பது ரொம்ப கஸ்டம் அதுதான் புத்தர் ஒடினவரோ தெரியாது....:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பெருமாள் said:

தன்னை நம்பி இருந்த மனிசியையும் பிள்ளையையும் நடுத்தெருவிலை தவிக்க விட்டுட்டு  சாமியாகியாகிய துரோகி :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தன்னை நம்பி இருந்த மனிசியையும் பிள்ளையையும் நடுத்தெருவிலை தவிக்க விட்டுட்டு  சாமியாகியாகிய துரோகி :grin:

புத்தரைத் தூற்றக்கூடாது. போற்றவேண்டும் சாமி அவர்களே !! :100_pray:

அவருடைய மிக மிக அகிம்சையான போதனைகளைப் பின்பற்றி வாழ விழைவதால்தான் சிங்கள இனமும், ஒரு மனித இனமாக வாழ்வதற்கு, முயற்சியாவது செய்கின்றது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.