Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு நேர்ந்த கதி.. இளம் பெண்ணின் துணிச்சல்!

Featured Replies

பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு நேர்ந்த கதி.. இளம் பெண்ணின் துணிச்சல்!

 

கேரள மாநிலம் கொல்லத்தில் இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆண் உறுப்பை அந்தப் பெண் அறுத்துள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

lila-shahani-rape-deaf-mute-human-rights

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்ணமுலாவில் உள்ள பெண் வீட்டுக்குப் பூஜை செய்வதற்காக ஶ்ரீஹரி என்ற கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 23 வயது பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியைக் கொண்டு சாமியாரின் ஆண் உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். பலத்த காயமடைந்த அந்த சாமியார் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அந்த சாமியாரின் மீது பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், 'பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இந்த சாமியாரைப் பின்பற்றுபவர்கள். அந்தப் பெண் அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் சூழலில் அந்த சாமியார் அடிக்கடி வீட்டுக்கு வந்து பூஜை செய்வார். அந்தப் பெண் 12-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் அவரது தாய்க்கு தெரிந்தே நடைபெற்றுள்ளது. அவரது தாயும் இந்தச் செயலுக்கு உடந்தை' என்று சிறுமி தெரிவித்ததாக அவர்கள்  தெரிவித்துள்ளனர். தற்போது அந்தச் சாமியார் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், 'அந்த பெண்ணின் செயல் தைரியமானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/india/89860-a-rape-victim-girl-cut-off-the-rapist-genitals.html

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் நோயை சுகமாக்குவதாக கூறி தாயையும், என்னையும் பலாத்காரம் செய்த சாமியார்.. கேரள மாணவி கதறல்

 

திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பக்கவாதம் தாக்கிய தனது தந்தையை குணப்படுத்துவதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து தன்னையும், தனது தாயையும் சாமியார் சீரழித்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும்.

இவரது ஆணுறுப்பை 23 வயதாகும் சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்துவிட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்த முடியாது tw_cold_sweat:

கணேஷனந்தாவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆணுறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

கள்ளக்காதல் :rolleyes:

கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார். அந்த மகள்தான் இப்போது கோபத்தில் கணேஷனந்தா ஆணுறுப்பை வெட்டிவிட்டார்.

தந்தை உடல்நிலை

தந்தை உடல்நிலை

போலீசாரிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், தான் 12ம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், பில்லி, சூனியம் போன்றவற்றால் அவருக்கு இப்படி ஆனதாக நம்பி தனது தாயார் கணேஷனந்தாவை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.

கள்ள உறவு

தனது தந்தை பக்கவாதத்தில் இருந்ததால், தனது தாய், கணேஷனந்தாவுடன் கள்ள உறவு கொண்டதாகவும், அதன்பிறகு தன்னையும் சாமியார் பலாத்காரம் செய்ய தொடங்கியதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் அந்த மாணவி.

குழந்தைகள் மீதான வன்முறை tw_bawling:

மாணவி 12ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே சாமியார் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

****

கப்பாத்து பண்ணினது போதாதென்று வழக்கு வேற. 

இந்த பிரச்சனையில் இருந்து தப்ப, உந்த கள்ள சாமியார், வேற நல்ல சாமியாரிடம் தான் போகோணும். 

****

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆ சாமியிடம் நஷ்டஈடாக பெருந்தொகைப்பணம் அறவிட்டு பிள்ளைக்கு மட்டும் படிப்புக்கு வைப்பில் இடவேண்டும்.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

ஆ சாமியிடம் நஷ்டஈடாக பெருந்தொகைப்பணம் அறவிட்டு பிள்ளைக்கு மட்டும் படிப்புக்கு வைப்பில் இடவேண்டும்.....! tw_blush:

தொழில் செய்ய முடியாமல், முதலே போட்டுது.. நீங்கள் வேற இன்னும் புடுங்க வேணும் எண்டுறியள் சுவியர்...  :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தொழில் செய்ய முடியாமல், முதலே போட்டுது.. நீங்கள் வேற இன்னும் புடுங்க வேணும் எண்டுறியள் சுவியர்...

போலிகள் களையெடுக்கப்பட வேண்டும் நாதம்ஸ். அப்பதான் அசல் கொஞ்சமாவது தலையெடுக்கும்......!  tw_blush:

எங்கேயோ கேரளாதானே எண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது, இப்ப வெளிநாடுகளில் இருந்துதான் நம்ம இனம் அதிகமாக அங்கு போகுது....!  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

போலிகள் களையெடுக்கப்பட வேண்டும் நாதம்ஸ். அப்பதான் அசல் கொஞ்சமாவது தலையெடுக்கும்......!  tw_blush:

எங்கேயோ கேரளாதானே எண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது, இப்ப வெளிநாடுகளில் இருந்துதான் நம்ம இனம் அதிகமாக அங்கு போகுது....!  :unsure:

இது சொல்லித்திருத்த முடியாது.

இது, மனஉளைச்சலில் வருபவர்களிடம், பணம் அல்லது உடலை விலை பேசும் தவிச்ச முயல் அடிக்கும் வேலை. 

இறைவனிடம் விட வேண்டியது தான்.

மகிந்தர், ஜெயலலிதா இப்போ ரஜனி என்று பலர் கவுந்து தான் போயிருக்கிறார்கள். என்ன செய்வது சகல மதங்களிலும் இந்த வகை போலிகள் உண்டே.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அரிவாள் பேசியிருக்கு .......!  tw_blush:

  • தொடங்கியவர்

கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பைத் துண்டித்த இளம் பெண்

 

 
01TVTVMEDICALCOLLE_3166579f.jpg
 
 
 

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. இவரை இன்று காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90% அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேறி வருகிறார். இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது பிறப்புறுப்பை அறுத்ததாக 23 வயது பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த தகவலின்படி அப்பெண்ணின் தாயாருக்கும் கணேஷனந்தாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாகவே உறவு இருந்துள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் மகளையும் பாலியல் உறவில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண்ணின் தாயும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாயின் அனுமதியுடன் தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாலேயே அவரது பிறப்புறுப்பைத் துண்டித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது"

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது வயது 23. ஆனால், அவர் 12-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே தன்னை அந்த சாமியார் வல்லுறவில் ஈடுபடுத்தியதால் புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/கேரளாவில்-பாலியல்-பலாத்காரம்-செய்த-சாமியாரின்-பிறப்புறுப்பைத்-துண்டித்த-இளம்-பெண்/article9708616.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தொழில் செய்ய முடியாமல், முதலே போட்டுது.. நீங்கள் வேற இன்னும் புடுங்க வேணும் எண்டுறியள் சுவியர்...  :grin: 

அது தானே இப்ப சுய தொழிலும் செய்ய முடியாது.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மலையாள மாந்திரிகள் முன்னர் யாழ் நகரிலும் இருந்து கொண்டு கள்ள விளையாட்டுக்கள் செய்தவை. ஒன்னிரண்டை இயக்கம் பிடிச்சு உள்ள போட்டு தட்டி எடுக்க.. எல்லாம் படையெடுத்து ஓடிட்டுது.  

மலையாளக் கூட்டத்திடம் கள்ளத்தொடர்புக்கு அளவு கணக்கே இல்லைப் போல.

இந்த.. கத்தரிப்பு அவசியம் தான். ஆனால்.. கள்ளத் தொடர்புக்கு அழைப்பை ஏற்படுத்தி வசதி செய்து கொடுக்கும் பெண்களுக்கு..எதை அறுப்பது..??! 

அந்த தாயின் தவறே.. மகளின் இந்த நிலைக்கும் காரணம். அந்த தாயை யார் தண்டிப்பது. கணவருக்கு உடல்நலக் குறைவென்றால்.. அதனால் காம இச்சை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் என்றால்..  விவாகரத்துச் செய்துவிட்டு.. இன்னொருவரோடு சட்டப்படி வாழ்ந்து தொலைச்சிருக்கலாமே. இது தானும் சீரழிஞ்சு.. சொந்தப் பிள்ளையையும் சீரழிச்சிருக்குது ஒரு தாய். அதுக்கும் எதையாவது வெட்டி எறியனும். காமம் குறைய. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கான சட்டம்

.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெரும் சபலமானவராம் இவர்.

கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.

கொடுமைக்கார தாய்

சாமியாரிடமிருந்து கிடைத்த பணத்திற்காக, அப்பெண்ணின் தாயும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 12வது வகுப்பு படிக்கும் காலம் முதல் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் சாமியார். தற்போது 23வயதாகும் அந்த பெண் சட்டக் கல்லூரி மாணவி.

கத்தியால் வெட்டு

சாமியார் தனது தாயிடம் மட்டுமின்றி தன்னையும் தொடர்ந்து பயன்படுத்துவதால் கோபத்தில் இருந்துள்ளார் அந்த மாணவி. இந்த நிலையில், இன்று அதிகாலை தன்னிடம் உறவு கொள்ள கணேஷனந்தா வந்தபோது அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டிவிட்டார் அந்த மாணவி.

முதல்வர் பாராட்டு

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், அந்த மாணவியின் செயலை பாராட்டியுள்ளார். சட்டக் கல்லூரி மாணவியே சட்டத்தை கையில் எடுத்துள்ள போதிலும், முதல்வர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரத்தோடு அந்த பெண் செயல்பட்டதாக விஜயன் தெரிவித்துள்ளார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2017 at 5:30 PM, suvy said:

போலிகள் களையெடுக்கப்பட வேண்டும் நாதம்ஸ். அப்பதான் அசல் கொஞ்சமாவது தலையெடுக்கும்......!  tw_blush:

எங்கேயோ கேரளாதானே எண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது, இப்ப வெளிநாடுகளில் இருந்துதான் நம்ம இனம் அதிகமாக அங்கு போகுது....!  :unsure:

அப்போ கனபேர் போரது தாங்களுக்கு தெரிந்திருக்கிறது போல் துருச்சாமி  

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சாமியார் பிறப்புறுப்பை காதலன் உதவியுடன் மாணவி துண்டித்தார்: டி.ஜி.பி.யிடம் தாய் புகார்

 

காதலை கைவிட கூறியதால் சாமியார் பிறப்புறுப்பை காதலன் உதவியுடன் மாணவி துண்டித்ததாக, அவரது தாயார் கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

 
 
சாமியார் பிறப்புறுப்பை காதலன் உதவியுடன் மாணவி துண்டித்தார்: டி.ஜி.பி.யிடம் தாய் புகார்
 
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கோலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி என்ற கங்கேசானந்த தீர்த்தபாத சுவாமிகள் (வயது 54).

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக கங்கேசானந்த தீர்த்தபாத சாமியார் அவர்களது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அந்த பெண்ணின் மகளான சட்டக்கல்லூரி மாணவியை அந்த சாமியார் கற்பழித்து விட்டார். பல ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்ததால் அந்த மாணவி பொங்கி எழுந்து சாமியாரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசினார். மாணவியின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட கங்கேசானந்த தீர்த்தபாத சாமியார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் தாய் கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். நாங்கள் விசாரித்ததில் அந்த வாலிபர் நல்லவர் இல்லை என்பது தெரிய வந்ததால் எனது மகளிடம் காதலை கைவிடும்படி கூறினேன்.

இதற்கிடையில் எனது கணவரின் நோயை குணப்படுத்துவதற்காக எங்களது வீட்டிற்கு வந்த கங்கேசானந்த தீர்த்தபாத சாமியாரும் எனது மகளுக்கு புத்திமதி கூறினார். இது அவர் மீது எனது மகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று இரவு நாங்கள் அனைவரும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டோம். சாமியாரும் பாலும், பழமும் சாப்பிட்டுவிட்டு தனியறையில் தூங்கச் சென்றார்.

நள்ளிரவில் சாமியாரின் அலறல் சத்தம் கேட்டு நாங்கள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தோம். அப்போது எனது மகள் சாமியாரின் அறையில் இருந்து கையில் ரத்த கறை படித்த கத்தியுடன் ஆவேசமாக வெளியே வந்தார்.

அவரது காதலனின் உதவியுடன் அவர் சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு காதலன் தப்பியோடிவிட்டார். எனவே காதலை கண்டித்ததால் தான் எனது மகள் சாமியாரின் பிறப்புறப்பை அறுத்து உள்ளார். எனவே மகளின் காதலனை பிடித்து விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதேபோல ஸ்ரீஹரி என்ற கங்கேசானந்த தீர்த்தபாத சாமியாரின் தாயார் குட்டியம்மா என்பவரும் டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் செய்துள்ளார். அந்த புகாரில் எனது மகனை இதுபோல கொடுமைப்படுத்தியது தவறு. அவர் ஒழுக்கமான சாமியாராக வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த மாணவியின் காதலை கண்டித்ததால் தற்போது எனது மகன் மீது பொய் புகார் கொடுத்து உள்ளனர். எனவே இதுபற்றி முறையாக விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்த டி.ஜி.பி. சென்குமார் பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/30160601/1088080/My-daughters-boyfriend-chopped-off-godmans-genitals.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.