Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிக்காவின் ஊகம் சரியாக இருக்கலாம் – சுமந்திரன்! (சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம்)

Featured Replies

சந்திரிக்காவின் ஊகம் சரியாக இருக்கலாம் - சுமந்திரன்!

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜபக்ஷ காலத்து இராணுவத்தினரின் பழக்கத்தின்படி சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் அவர்கள் அனைவரையும் கொன்றிருப்பார்களேயன்றி இவ்வளவு காலமும் தடுத்து வைத்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்துத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமற்போனோர் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக் கூறுகின்றனர். சந்திரிக்கா அம்மையார் கூறும் ஊகம் சரியானதாக இருக்கலாம். எமது பலத்த சந்தேகமும் அதுவே. ஆனால் ஊகமும் – சந்தேகமும் நீதியையும் – நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. சரியான விசாரணை நடத்தப்படவேண்டும். இதற்குக் காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்.

அந்த அலுவலகம் அமைக்கப்பட்டால் ஒவ்வொரு விடயமாக ஆராயப்படும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=69495

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சட்டவாளர் சாத்திரியார்(யாழ் சாத்திரியாரில்லை) மாதிரிக் கதைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் தனமான பேச்சு. சந்திரிகா போன்ற ஒரு சிங்கள அரசியல்வாதி மாஜி ஜனாதிபதி இந்த விபரங்களை ஊகித்தா அறியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவாது சொல்கிறாரே ஊகத்தை  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Athavan CH said:

சந்திரிக்காவின் ஊகம் சரியாக இருக்கலாம் - சுமந்திரன்!

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன்... சந்திரிக்காவுக்கு, வக்காலத்து வாங்கிறதை விட்டுட்டு...
அதற்கு.... தமிழ் மக்கள் தேர்ந்து எடுத்த, அரசியல் வாதியாகிய இவர், 
சர்வதேச தேசத்தை நோக்கி....  ஏதாவது நடவடிக்கை எடுக்கும் படி, வற்புறுத்தி இருக்கலாமே..
இவர்களின்.. கேடு கெட்ட  அறிக்கைகளுக்கு, மட்டும்... குறைச்சல்  இல்லை.  tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

சந்திரிக்காவாது சொல்கிறாரே ஊகத்தை  

தனி ஒருவன், (முன்னாள் முனிவர் ஜீ...:grin:) ஒன்றை கவனிக்க தவறி விட்டீர்கள். 
சந்திரிக்கா.... முன்னாள் ஜனாதிபதி என்பதனை விட,
அவர்... பாராளுமன்றம் சார்ந்த,  எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லை என நினைக்கின்றேன்.
அரசியலில்.... பென்ஷன் எடுத்தவர்கள், எல்லோரும்...  சொல்லும் வார்த்தைகள் இவை.
நாளை... மகிந்த, கோத்தா, மைத்திரி, சம்பந்தன், சுமந்திரன் எல்லோரும்...  
பென்ஷன் எடுத்தவுடனும், இதைத்தான் சொல்லப் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஏற்றுக்கொள்ளமுடியாத உன்மையென்றாலும் அது உன்மை தானே கடத்தியவர்கள் முதல்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  இது வ்ரை வரவில்லை  எந்த முகாம்களிலும் இல்லையே அப்போ அவர்கள் எங்கே எனபது  பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வி இதுவரைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பதில் இல்லை  அப்போ இவர்கள் எங்கே என நீங்கள் நினைக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பத்மா குமாரி காணாமல் போயிருந்த காலப்பகுதியில் இவரின் உறவினர்களால் இவருக்கு ஆத்ம சாந்தி கிரியைகள் செய்யப்பட்டுள்ளதுடன் கங்கஹியல கோரல பிரதேசசெயலகத்தின் ஊடாக காணாமல் போனோருக்கான நிவாரணமும் பெறப்பட்டுள்ளதோடு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

18 வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் மீட்பு! 26 வருடங்களாக நடந்த கொடுமை

தன் இனத்தையே குதறியெடுக்கும் சிங்களம் மாற்றினத்தை என்ன யெய்யும்....???

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்கு நல்லா ஊகிக்க வரும்... செம்மணி அனுபவம் இருக்குது. இவருக்கு அவா ஊகிப்பதை உறுதிப்படுத்த நல்லா வரும்.. ஏனெனில்.. இவருக்கு அவா வழங்கின வேலை அதுதானே.

இப்பவும்.. உள்ளூரில்.. காணாமல் போனோர் அலுவலகம் அமைத்து லோக்கல் விசாரணை என்று இன்னும் காலம் கடத்தி.. எல்லாத்தையும் சீரழிச்சு விடுவம்.. மறக்கடிச்சு விடுவம்.. என்று தான் சொல்லினமே.. தவிர.. சர்வதேச நீதி விசாரணை என்பதை உச்சரிக்க மாட்டன் என்று அடம்பிடிக்கிறதைப் பார்த்தால்... 

இதுங்க எல்லாம்.. மனிதப் பிறப்புகளா என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இதுங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆனது சாபக் கேடு. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.