Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ

Featured Replies

லண்டனிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ

 

 

லண்டனிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ
 

பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

24 தொடர் மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 200 இற்கும் மேற்பட்ட தியணைப்புப் படையினர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/06/லண்டனிலுள்ள-தொடர்மாடிக்/

  • தொடங்கியவர்

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து

 

மேற்கு லண்டனில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

தீ விபத்து

லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லண்டன் நகர தீயணைப்பு படை சுமார் 40 தீயணைப்பு வண்டிகளை அனுப்பியுள்ளது.

எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டிடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

''நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,'' என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

''நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,'' என்றார் அவர்.

''அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்துள்ளது,'' என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

''அந்த கட்டிடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,'' என்றார் அவர்.

''நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய தீ விபத்து சம்பவம். முழு கட்டிடமும் நொறுங்கிப் போகிறது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,'' என்றார் டௌனி.

http://www.bbc.com/tamil/global-40269789

  • தொடங்கியவர்

 

24 மாடி கட்டடத்தில் தீ விபத்து... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

 

லண்டனில் 24 அடுக்குகள்கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

லண்டன்

லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, 'கிரென்ஃபெல் டவர்'. 24 மாடிகள்கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தக் கட்டடம் 1947ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இன்று, திடீரென்று இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் பரவியது. கட்டடம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், பலர் கட்டடத்துக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/world/92234-24-floor-appartment-in-london-catches-fire.html

  • தொடங்கியவர்

லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ : உயிரிழப்புகள் அதிகரிக்கலாமென அச்சம்,  தீவிரவாதிகளின் சதி செயலா ? - ( காணொளி, படங்கள் இணைப்பு)

 

 

மேற்கு லண்டனில் பயங்கர தீ விபத்தால் 27 மாடி கட்டிடமான கிரென் பெல் டவர் பற்றி எரிந்துகொண்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ffsf.JPG

இந்த தீயை அணைக்கும் பணியில் 40 தீயணைப்பு வாகனங்களுடன் 200 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் கட்டடத்தில் உள்ளவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். 

 

லண்டனின் மேற்கு பகுதியில் லதிமர் சாலையில் உள்ள கிரென்பெல் டவர் 27 மாடி கட்டிடமாகும். இதன் மேற்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

sfsfee.JPG

குறித்த தீ விரைவாக  அனைத்து தளங்களுக்கும் பரவியது. இதனால் ஒட்டுமொத்தமாக 27 மாடி கட்டிடமும் பயங்கரமாக எரிந்து வருகிறது. இப்பயங்கர தீவிபத்தால் ஒட்டுமொத்த கட்டிடமுமே இடிந்து விழும் அபாயம் உள்ளது.

 

இதேவேளை, குறித்த  அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் பரவிய தீ யினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லண்டனில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த தீ விபத்தும் கூட தீவிரவாதிகளின் சதிசெயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. 

sfefef.JPG

அங்கு தீடீரென கட்டடத்தின் மேல் வெளிச்சம் ஒன்றை காண முடிந்ததாகவும் அது விளக்கு என தாம் எண்ணியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

fsfeer.JPG

இதேவேளை, காயமடைந்தவர்கள் அல்லது சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

fsfafsa.JPG

நள்ளிரவு நேரம் என்பதால் பெருமளவானோர் வீடுகளில் தங்கிருந்துள்ளனர். அதில் பலர் உயிருக்கு பயந்து கட்டில்களுக்கு அடியில் பாதுகாப்பு தேடியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இந்த அனர்த்தம் காரணமாக பல உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

DCQZl1wXoAAyy91.jpg

fsdfee.JPG

fsfdgdg.JPG

DCQGa0eWsAArUdd.jpg

 

http://www.virakesari.lk/article/20872

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dichter Rauch steigt in den Londoner Morgenhimmel

லண்டனுக்கு தொடர்ந்து கஸ்டகாலம் போல  இருக்கு.......:(

  • தொடங்கியவர்
லண்டன் தீ: இலங்கையர்கள் சிக்கியுள்ளனரா என விசாரணை
 

image_98b1db2fca.jpg

இங்கிலாந்தின் லண்டன் நகரிலுள்ள 27 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால், இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பான தகவல்களை, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாக்கா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில், இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்டடத்துக்குள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

image_da9eb34de0.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/லண்டன்-தீ-இலங்கையர்கள்-சிக்கியுள்ளனரா-என-விசாரணை/175-198580

  • தொடங்கியவர்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம்

Grenfell-Tower-2.jpg

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையாளர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார்.  எனினும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்

http://globaltamilnews.net/archives/29666

  • தொடங்கியவர்

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

மேற்கு லண்டனில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த புகைப்படத் தொகுப்பு.

  • The fire brigade said 40 fire engines and 200 firefighters had been called to the blaze in Grenfell TowerAFP/GUILIO THUBUM

    மேற்கு லண்டனில் லாடிமர் சாலையில் உள்ள கிரென்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மிகப்பெரிய தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்து நள்ளிரவு 00.54 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • The fire appeared to take hold of the building in one corner before engulfing the tower blockNATALIE OXFORD/PA

    வட கென்சிங்டனில் உள்ள இந்த கட்டடம் 24 மாடிகளை கொண்டது. 1974 ஆம் ஆண்டு கட்டட்பட்ட இந்தக் கட்டடத்தில் 120 வீடுகள் உள்ளன. சுமார் 500 பேர் அதில் வாழ்ந்து வருகின்றனர். நான்காவது மாடியில் முதலில் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.

  • Flames and smoke billow out of Grenfell TowerREUTERS/TOBY MELVILLE

    இரண்டாவது தளத்திலிருந்து கட்டடத்தின் உச்சி வரை கட்டடத்தை முழுமையாக ஆட்கொண்ட தீ வேகமாகப் பரவியது. கட்டடத்திற்குள் இருந்து பலரின் அலறல் குரல்களை கேட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன.

  • As dawn breaks over west London, the fire continued to rage.REUTERS/TOBY MELVILLE

    "தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ''அந்த கட்டடம் முழுவதுமாக எரிந்துள்ளது. நான் இது போன்ற ஓர் அதிர்ச்சியான சம்பவத்தை இதுவரை நேரில் கண்டதில்லை.'' என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி.

  • Grenfell Tower in the early hours of 14 JuneAFP/NATALIE OXFORD

    ''ஒரு ஹாலிவுட் பேரழிவு படத்தில் வரும் காட்சிகளை போன்று இருந்தது'' என்று டவர் பிளாக் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  • Firefighters continue their efforts to put out the fire, as daylight shows the complete destruction of Grenfell TowerREUTERS/TOBY MELVILLE

    தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வரும் நிலையில், தீ விபத்து நிகழ்வதற்கும், வேகமாக பரவுவதற்கும் எது காரணமாக இருந்தது என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. கட்டடத்திலிருந்த தீ விபத்தை எச்சரிக்கும் அலாரம் ஒலிக்கவில்லை என்று குடியிருப்புவாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

  • The A40 - a major route in and out of London - was closed both ways as rush hour began with smoke continuing to pour out of the buildingREUTERS/TOBY MELVILLE

    லண்டன் மேயர் சாதிக் கான் இந்த தீ விபத்தை மிகப்பெரிய விபத்து என்று அறிவித்துள்ளார். அந்த பகுதியிலிருந்த சாலைகள் மற்றும் குழாய் நிலையங்கள் மட்டுமின்றி சுமார் 30 அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  • Firefighters use a jet to tackle the huge fire at Grenfell Tower in Latimer Road, West LondonGETTY/LEON NEAL

    தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கரும்புகை படிந்த கட்டடம் மீது தண்ணீரை பீய்ச்சி வருகின்றனர்.

  • லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)REUTERS/TOBY MELVILLE

    லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார்.

  • லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)REUTERS/TOBY MELVILLE

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் வெளியிடவில்லை.

  • லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)GETTY IMAGES

    அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)GETTY IMAGES

    சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

  • லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)PA

    மோசமாக எரிந்து கரிக்கட்டையை போல் தோன்றும் அந்த கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழக்கூடும் என அஞ்சப்படுவதால் அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசிப்பவர்களும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

 

http://www.bbc.com/tamil/global-40272206

  • தொடங்கியவர்

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்திருந்த நிலையில் தீ விபத்தில் 6 பேர் பலியாகியிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

Update ; லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ : 6 பேர் பலி, 12 பேர் காணவில்லை

 

 

மேற்கு லண்டனில் 27 மாடி கட்டிடமான கிரென் பெல் டவரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்குண்டு 6 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

41683B3200000578-4601902-image-a-73_1497

லண்டனின் மேற்கு பகுதியில் லதிமர் சாலையில் அமைந்துள்ள கிரென்பெல் டவரின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியமையால் 27 மாடியிலும் தீ பரவியுள்ளது.

4168268A00000578-4601902-image-a-65_1497

குறித்த தீயில் சிக்குண்டு 6 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 12 பேர் காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

41684CDF00000578-4601902-image-a-75_1497

மேலும், இத்தீயினால் சிக்குண்டு 50 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4168727900000578-4601902-image-a-84_1497

 

 
 

http://www.virakesari.lk/article/20884

  • தொடங்கியவர்

லண்டன்: தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

 
லண்டன் : பற்றி எரிந்த கட்டடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைபடத்தின் காப்புரிமைEPA

லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஆக்ரோஷமாக எரிந்த தீயில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தாய், அந்தக் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தார், யாராவது பிடித்துக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையி்ல். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை.

கட்டடத்திற்குள் இருந்த பெண் ஒருவர், வெளியே கூடியிருந்த கூட்டத்தினரிடையே தான் தனது குழந்தையை கீழே போடப்போவதாக சைகை செய்தததாகவும், அவர் கட்டடத்தின் 9 அல்லது 10வது மாடியில் இருந்திருக்கிலாம் என்றும் நேரில் கண்ட சமிரா லம்ரானி கூறியுள்ளார்.

கீழே போடப்பட்ட குழந்தையை ஆண் ஒருவர் ஓடிச்சென்று சரியான நேரத்தில் பிடித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கென்சிங்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றிய தீயில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டதாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை உயரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

''கட்டடத்தின் ஜன்னலோரம் வந்து நின்ற குடியிருப்புவாசிகள் பதற்றத்துடன் கதவுகளை தட்டினார்கள், கூக்குரலிட்டார்கள்'' என்று பிரஸ் அசோஷியனிடம் லம்ரானி தெரிவித்துள்ளார்.

''ஜன்னல்கள் சிறிதாக திறந்திருந்த பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கீழே வீசப்போவதாக சைகை செய்தார். மேலும், தனது குழந்தையை யாராவது பிடித்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.

''ஒரு நபர் உடனடியாக முன்னே சென்று கீழே வீசப்பட்ட குழந்தையை பிடித்தார்.''

குழந்தையை வெளியில் வீசிய அந்தத் தாயின் நிலை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/global-40279151

தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை,  தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என நினைத்த அந்த தாயிற்கும் எதுவும் நடந்து இருக்க கூடாது மனம் தவிக்குது.

தாய்மையைக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை. அது மனிதராக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும்!

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  மிகவும் சோகமானதும்

யீரணிக்கமுடியாதுமான  செய்தி..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டிடம் இடிஞ்சு விழவேணுமெண்டுதான் கனபேரின்ரை ஆசையாய் இருந்ததாம்.

சறுக்கீட்டுது....

உ+ம்:-WTC stürzt am 11. September 2001 ein

  • தொடங்கியவர்

லண்டன் கட்டட தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

லண்டனில் இன்று அதிகாலை 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1_23385.jpg

' லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவரில்' இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 24 மாடிகள்கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டடம் 1947-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 600 பேருக்கு மேல் வசித்து வந்த இந்த கட்டடத்தில், தீ விபத்து காரணமாக இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக லண்டன் போலீஸ் தரப்பு தகவல் கூறியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கட்டடத்திலேயே சிக்கி இறந்தவர்கள் பற்றி முழு விபரம் தெரியாத நிலை உள்ளது. 

இன்று, திடீரென்று இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் பரவியது. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள், மற்றும் 40 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

 

மீட்பு பணிகள் இன்னும் முடிவுறாத நிலையில் லண்டன் போலீஸ் தரப்பு, 'தீ விபத்து என்பதால், மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது. மீட்பு பணிகள் முடிவு பெற சில நாள்கள் எடுக்கலாம்.' என்று கூறியது.  

http://www.vikatan.com/news/world/92330-london-fire-accident-death-toll-rises-to-12.html

  • தொடங்கியவர்

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வு

Grenfell-Tower.jpg

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30 பேரில் 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிந்து கொண்டிருக்கும்  கட்டிடத்தின்  இடிபாடுகளுக்குள்  யாரும் உயிரோடு சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்னும் அதற்குள் மக்கள் இருக்கிறார்களா  என்பதனை அறிவதற்காக  மோப்ப நாய்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டடத்தில் தீ பற்றியது குறித்து  கேள்வி எழுந்துள்ளதால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதர் தெரீசா மே, இதுபற்றி முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/29897

  • தொடங்கியவர்

லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பு தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

 

Grenfell-Tower.jpg
லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த  புதன்கிழமை  24 மாடிகளை கொண்ட இந்த  அடுக்குமாடிக்  குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருந்தது.  இந்த தீ விபத்தில் நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 17ஆக காணப்பட்டது.

இந்நிலையில், கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக லண்டன் காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும், 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்  அவர்களில்  12 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  கடந்த இரண்டு நாட்களாக தீ தொடர்ந்து எரிந்து வந்ததாகவும், தற்போது தான் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/30020

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்...பணக்கார ஏரியாவில்,பணக்காரர்களது வீடுகளுக்கு இடையில் இருந்து ஒரே ஒரு கஸ்டப்பவர்கள் வசிக்கும் வீடு தான் எரிந்திருக்கு...சதியாக இருக்குமோ?...எதுக்கும் நாதம்ஸ் துப்பறிந்து சொல்லட்டும்

  • தொடங்கியவர்

லண்டன் தீயில் கருகிய கனவுகள், மிரட்டும் நினைவுகள் (புகைப்படங்களாக)

 
Grenfell tower fire

மேற்கு லண்டனில் நிகழ்ந்த மிகப்பெரிய தீவிபத்து ஒன்றில் 58 பேர் காணாமல் போன நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி வட கென்சிங்டனிலிருந்த 24 மாடி கட்டடமான கிரென்ஃபெல் டவரில் தீ ஏற்பட்ட போது சில குடியிருப்புவாசிகள் மட்டும் தப்பித்ததாகவும், பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

தீயில் காயமடைந்துள்ள பலர் மருத்துவமனைகளிலும் தங்கியுள்ளனர். மேலும், சடலங்களை தேடும் பணியை அவசர சேவை பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இரவு என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக விளக்குகிறோம்.

மிக விரைவில் கட்டடத்தை ஆக்கிரமித்த தீப்பிழம்புகள்

Series of images showing the spread of the fire at Grenfell Towerபடத்தின் காப்புரிமைPA

ஜூன் 14 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 01.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கென்சிங்டன் மற்றும் செல்ஸியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொகுதிகளில் ஏற்பட்ட தீயை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

தீ முதலில் நான்காவது மாடியிலிருந்து ஆரம்பித்து பின்னர் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது.

24 மணிக்கு நேரத்திற்கு பிறகும் அதாவது வியாழக்கிழமை அதிகாலை 01.14 மணி வரை தீ கட்டுப்பாட்டிற்கு வரவில்லை.

Map of Grenfell Tower and surrounding aread

கட்டடத்திற்கு கடும் சேதங்களை உண்டாக்கிய தீ

மேற்கு லண்டனில் சுமார் 1,000 வீடுகளை கொண்டுள்ள ஒரு சமூக வீட்டு வளாகமான லங்காஸ்டர் வெஸ்ட் எஸ்டேட்டின் பகுதியான இந்த கிரென்ஃபெல் டவர் தீ விபத்தால் கடுமையாக சேதமடைந்தது.

கட்டடத்தின் நான்கு முகப்புகளும் சேதமடைந்தன.

Images show fire damage around the tower block

சடலங்களை தேடும் பணியில் அவசர சேவை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தீ விபத்தின் பின்விளைவு மிகவும் பேரழிவாக இருந்ததால் விபத்தில் பலியான சிலரை அடையாளம் காண முடியாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுவர் ஒன்றில் கைப்பட எழுதப்பட்ட அஞ்சலிகளை பொதுமக்கள் விட்டு செல்கின்றனர்.

தீ விபத்து குறித்து ஒரு முழு பொது விசாரணைக்கு பிரதமர் தெரீசா மே உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், குற்றவியல் விசாரணை ஒன்றையும் போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-40313448

  • தொடங்கியவர்

லண்டன் தீ: 79 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

 

கடந்த வாரம் லண்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப் பிடித்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனதால் உயிரிழந்தவர்களாகக் கருதப்படுவர்களின் எண்ணிக்கை 79ஆக இருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக லண்டன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவை ஊழியர்கள் தலைநகரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionலண்டன் தீயில் உயிரிழந்தோருக்கு அவசர சேவை ஊழியர்கள் தலைநகரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

உயிரிழந்தவர்களில் 5 பேரின் அடையாளம் தற்போது முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் மாறக்கூடும் என்று போலீஸ் அதிகாரி ஸ்டூவர்ட் கண்டி தெரிவித்துள்ளார்.

கிரென்ஃபெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்தவர்களில் எல்லோரையும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்று மீண்டும் தெரிவித்த அவர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைய இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

மௌன அஞ்சலியின்போதுபடத்தின் காப்புரிமைPA

தீப் பிடிக்கக் காரணமானவர்கள் என யாராவது இருந்தால், அவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து பற்றிய பொது விசாரணைக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் நிலையில் இருப்பதாகப் பிரதமர் தெரீசா மேயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global-40330395?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தீவைப்பு வெள்ளை தீவிரவாதிகளின்ட வேலை என்டு அந்த நேரமே கதைச்சவையல்...மசூதித் தாக்குதலுக்குப் பிற்கு பார்த்தால் உண்மை போல தான் கிடக்குது...கொஞ்ச நாள் போல எங்களுக்கு இரண்டு பக்கத்தாலேயும் அடி விழும்tw_cry:

  • தொடங்கியவர்

ஒரே அறையில் 42 கருகிய உடல்கள் கண்டெடுப்பு... லண்டன் தீ விபத்தின் சோகம்!

 

தீ விபத்து

 

கடந்த வாரம் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டடத்தின் ஒரே அறையில் மட்டும் 42 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 14ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது. தற்போது அந்த கட்டடத்தில் இறந்தவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீயணைப்புபடை வீரர் ஒருவர் தேடுதல் பணியில் இருக்கும்போது 'ஒரே அறையில் மட்டும் 42 கருகிய உடல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடலை மீட்பதற்கான முயற்சியில் லண்டன் அரசு இறங்கியுள்ளது. ஒரே அறையில் 42 உடல்கள் கருகிய நிலையில் எடுக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/92877-london-fire-rescue-teams-find-42-bodies-in-one-room.html

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

உந்த தீவைப்பு வெள்ளை தீவிரவாதிகளின்ட வேலை என்டு அந்த நேரமே கதைச்சவையல்...மசூதித் தாக்குதலுக்குப் பிற்கு பார்த்தால் உண்மை போல தான் கிடக்குது...கொஞ்ச நாள் போல எங்களுக்கு இரண்டு பக்கத்தாலேயும் அடி விழும்tw_cry:

மறந்தும் வெயிலுக்கு மொட்டாக்கு போடுறன் எண்டு கிளம்பி விடாதேங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

மறந்தும் வெயிலுக்கு மொட்டாக்கு போடுறன் எண்டு கிளம்பி விடாதேங்கோ .

உண்மை தான். முஸ்லிம் மக்கள் மீது அமசடக்காய் தாக்குதல்கள் நடக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.