Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன்

Featured Replies

வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன்
 
15019.jpg
இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பது சரி. இந்த விடயங்கள் நடக்காது. அதுவே உண்மையும் கூட. இந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பும் இருந்து கொண்டிருக்கிறதென அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை   பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
முழுப் பாராளுமன்றமுமே இப்போது அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. 21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவை அமைத்திருக்கிறோம். அதன் தலைவர், பிரதமர் அவர்கள நானும் அதில் அங்கத்தவ ராக இருக்கிறேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.  
இன்னும் இரண்டு வாரத்தில் தொகுப்பை நாங்கள் பாராளுமன்றத்திற்கு கொடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பதற்கான சாத்தியமில்லை. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். 
 
எனது நிலைப்பாடு என்னவென்றால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும். 
அதில் ஒன்று இலங்கை அரசியல் அமைப்பு சமஷ்ரி அமைப்பாக வரவேண்டும். 
இரண்டு, மூன்றாவது இலங்கை அரசியல் அமைப்பிலே மதம் சம்பந்தமான சரத்து மாற்றப்பட்டு மத சார்பற்ற நாடாக இந்தியா வைப்போல இலங்கையை அறிவிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருக்கிறது. 
 
சமஷ்டி, மதசார்பின்மை வட-கிழக்கு இணைப்பு என்ற மூன்றும் அங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது எனது கொள்கை. ஆனால் நடைமுறை அப்படி அல்ல. அந்த மூன்று நடப்பதற்கான சாத்தியமில்லை. அந்த யதார்த்தத்தின் ஒரு பங்காளியாகத்தான் கூட்டமைப்பினர் இருக்கின்றனர். அதற்காக கூட்டமைப்பினரையோ சம்பந்தனையோ குறை சொல்லவில்லை.  
 
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தனும் முழு முயற்சியுடனேயே செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே, இருப்பதை வாங்கிக்கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=15019&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Athavan CH said:

யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை   பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் நிலையை பலவீனமாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

பல்வேறு நாடுகளில் யுத்தத்தின் பின்னர் மக்கள் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அங்கெல்லாம்.. யுத்தம் புரிந்தவர்களின் குற்றங்களை அழிவுகளை சரியாக சர்வதேச மயப்படுத்தி.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுத்தம் புரிந்தவர்களிடம் இருந்து விடுதலை என்பது கட்டாயம் என்பதை உணரச் செய்திருக்கிறார்கள். அதன் பலன்.. சர்வதேச ஆதரவோடு.. அந்த மக்களுக்கு விடுதலை.

இதனை..

பலஸ்தீனம்.. கொசாவோ.. கிழக்குத்தீமோர்.. என்று சமீப கால வரலாற்றில் இருந்து கூட எடுத்துக்காட்டலாம்.

ஆனால்.. எம் மக்களை இனக்கொலை செய்தவனையே.. சர்வதேச அரங்கில்.. எம்மவர்களே.. பாதுகாத்த ஒரே செயற்பாடு.. மனோ கணேசன்.. சம் சும் கும்பலால் தான் அதிகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில்.. இவர்களின் சொந்த பதவி மோகமே.. அதிகம்.. செல்வாக்குச் செய்துள்ளது.

மனோ கணேசன்.. இதனை மறுப்பவராக இருந்தால்.. இந்த இணையத்தளத்தில் வந்து ஒரு நேரடி விவாவதம் செய்வாரா... தயாரா..??!:rolleyes:

மனோ கணேசன்.. சிங்கள அதிகார வர்க்கத்திடம் தன்னை ஒரு நடுநிலைவாதி என்று காட்டி.. தனக்கான சுகபோகங்களை தேடிக் கொள்ள மேற்கொண்ட முயற்சியே தான் அதிகமே.. தவிர.. இவர் தமிழ் மக்களுக்காக.. அவர்களின் உரிமைக்காக உழைத்தது வெகு குறைவு என்பது கள யதார்த்தமாகும். தன்னை நடுநிலைவாதியாக்க.. சில மனித உரிமைக் குரல்களை எழுப்பினார்.. அது ஓரளவு கைகொடுத்ததும்.. அதனை தனித்தும் விட்டார். இப்போ சிங்கள அதிகார வர்க்கத்தை குசிப்படுத்துவதில் மும்மரமாக உள்ளார். 

இதுதான் மனோவின் அரசியல்.. எப்பவும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையான ஜனநாயகவாதின்னா.. இப்படிப் பேசமாட்டார்..

மாறாக.. வடக்குக் கிழக்கு இணைருந்திருக்கனுமா இல்லையா என்பதை அந்த மக்களிடம்.. சர்வதேச வழிமுறைகளின் ஊடாக.. பூரணமான.. ஐநா கண்காணிப்பின்  கீழ்.. ஒரு தேர்தல் மூலம் கேட்கலாமே.

இப்போ.. கனடாவில் கியுபெக் மக்களிடம் கேட்டது போல. ஸ்காட்லாந்து பிரிப்பது பற்றி ஸ்காட்லாந்திடம் கேட்டது போல.. கொசவாவில் கேட்டது போல.. கிழக்குத் திமோரில்.. கேட்டது போல.. எத்தனையோ.. உதாரணங்கள் இருக்கே.

ஏன் அதனை இவர் வலியுறுத்தாமல்.. தன்னை சனநாயகவாதி... நடுநிலையாளன் என்று கொண்டு.. சிங்கள எஜமானர்களின் பிற்போகுத்தனமான பாசிச நிலைப்பாட்டுச் சிந்தனைகளுக்கு மக்களை இசைய வகை செய்கிறார்.

இதுதான் இவரின் சனநாயமோ...???! :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இவர் உண்மையான ஜனநாயகவாதின்னா.. இப்படிப் பேசமாட்டார்..

மாறாக.. வடக்குக் கிழக்கு இணைருந்திருக்கனுமா இல்லையா என்பதை அந்த மக்களிடம்.. சர்வதேச வழிமுறைகளின் ஊடாக.. பூரணமான.. ஐநா கண்காணிப்பின்  கீழ்.. ஒரு தேர்தல் மூலம் கேட்கலாமே.

இப்போ.. கனடாவில் கியுபெக் மக்களிடம் கேட்டது போல. ஸ்காட்லாந்து பிரிப்பது பற்றி ஸ்காட்லாந்திடம் கேட்டது போல.. கொசவாவில் கேட்டது போல.. கிழக்குத் திமோரில்.. கேட்டது போல.. எத்தனையோ.. உதாரணங்கள் இருக்கே.

ஏன் அதனை இவர் வலியுறுத்தாமல்.. தன்னை சனநாயகவாதி... நடுநிலையாளன் என்று கொண்டு.. சிங்கள எஜமானர்களின் பிற்போகுத்தனமான பாசிச நிலைப்பாட்டுச் சிந்தனைகளுக்கு மக்களை இசைய வகை செய்கிறார்.

இதுதான் இவரின் சனநாயமோ...???! :rolleyes:tw_angry:

யாரோ சொல்லச்சொன்னதை  பாடுவது போலத்தானிருக்கு

இது ரணிலின் அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

நடிகரோட மகனில்ல...நல்லா நடிப்பாரு ..அவ்வளவுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

மனோவின் கருத்தை தமிழ் மக்கள் பெரிதாக எடுக்கத் தேவையில்லை.இநத அரசியல் நிர்ணய சபையில் மனோவை விட தமிழ்மக்கள் முன் சமஷ்டி கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனமாக வைத்து ஆணை பெற்ற  சம்பந்தன் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் சம்பந்தர் அவ்வாறு செய்யவில்லை.சம்பந்தர் முதன் முதல் பாராளுமன்றத்திற்குத் தெரிவானதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துத்தான். அதனைக்கைவிட்டுக் கடந்த தேர்தலில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். இப்போது அதனையும் கைவிட்டு விட்டு அரசியல் நிஜர்ணய சபையை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்மக்களிடம் கோரிக்கை விடப் போகிறார். இது ஒலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை.தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பில் சர்வதேசத்துடன் பேசுவதற்கு எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் அதனைக் கண்டு கொள்ளாமல் சிங்களத்துக்கு காவடி தூக்கும் வேலையிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளார். சம்பந்தர் போன்ற சந்தர்ப்பவாத சுயநலஅரசியல்வாதிகளால்  முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையும் அதனால் எழுந்த போரும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் போரின் பின்னரான தாக்களையும் சர்வதேசத்தின் முன்வைத்து  தமிழ்மக்களின் உரிமை பற்றி சர்வ தேசத்துக்கு விளக்கியிருக்க முடியும். ஆனால் மாறாக சர்வதேசமே தானாக எடுத்துக் கொண்ட போர்க்குற்ற சிசாரணையை நீர்த்துப் போதகச் செய்வதற்கும் சிங்களத்திற்கு முண்டு கொடுப்பதற்கும் சம்பந்தர் ஆற்றிய கருமங்கள் அதிகம். இவருக்கும் அவருடைய அடிவருடிகளுக்கும் வாக்களித்த தமிழ்மக்கள் அதன்பலனை அனுபவிக்கிறார்கள். அதிகபட்சம் அவரது சொந்தத் தொகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியாவை பாதுகாக்க வக்கற்ற அஇரசியல்வாதிதான் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

Please don't shoot the messenger.

மனோ கணேசன், அவர் கவனித்த நிலைப்பாடினைச் சொல்கிறார். எமக்கு பொறுப்பு கூறும் நிலையில் அவர் இல்லையே. 

இவர் சொல்வதை சம்பந்தரும், சுமேந்திரனும் சொல்லக் கூடாது என்பதே முக்கியம்.

எல்லாம் கிடைக்கும்... பேச்சுவார்த்தை மூலம் என்று சொல்லும் அவர்கள் தானே பதில் அளிக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

Please don't shoot the messenger.

மனோ கணேசன், அவர் கவனித்த நிலைப்பாடினைச் சொல்கிறார். எமக்கு பொறுப்பு கூறும் நிலையில் அவர் இல்லையே. 

இவர் சொல்வதை சம்பந்தரும், சுமேந்திரனும் சொல்லக் கூடாது என்பதே முக்கியம்.

எல்லாம் கிடைக்கும்... பேச்சுவார்த்தை மூலம் என்று சொல்லும் அவர்கள் தானே பதில் அளிக்க வேண்டும்.

உண்மை ...........
அவர் குறைந்த பட்ஷம் எம் முன்னாள் இருக்கும் ஆபத்தை என்றாலும் 
சுட்டி காட்டுகிறார்.

எங்கடையள் இல்லாத புலியை விசாரிக்கிற 
விசர் கூத்து அமைத்து  மேடை ஏற்றுவதில் பிஸி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.