Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் துணை..ஆண், பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா?

உங்கள் துணை..ஆண், பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா? 10 members have voted

  1. 1. உங்கள் துணை..ஆண், பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா?

    • ஆம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்!
      6
    • இல்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இது ரசிகையின் திருமணத்துக்கு முன்னுள்ள காதல் விவாதத்தின் இன்னொரு பாகமாகத் தொடர்கின்றது.

ரசி அக்கா..உங்கள் வாக்கெடுப்பு ஓகே.

ஆனால்..இப்பிடி முன்னால் காதலை ஆண் ..மனைவிக்கு சொல்வதற்க்கும்...பெண்.. கணவருக்கு சொல்வதற்க்கும் வித்தியாசம் இல்லையா? நான் நினைக்கிறேன் இருக்கென்று.

என்னதான் வெள்ளைக்க்காரிங்க போல நம்ம ஆண்டிக்கள் மேக்கப் போட்டாலும்...ஆண் என்றால்" அவன் ஆம்பிளை ப்பிள்ளை எப்பிடியும் இருப்பான்" பெண் என்றால்" பொம்பிளைப்பிள்ளைக்கு என்ன காதல் வேண்டி இருக்கு" என்று தான் கேட்பார்கள். அவர்களும் பெண் தான் அது வேறு விடயம். (ஆண்களள விட பெண்களுக்கு பெண்கள் தான் எதிரியே!)ஆனால் பெண் காதலை ஏற்றுக்கொள்வதற்க்கும்..ஆண் காதலை ஏற்றுக்கொள்வதற்க்கும் வித்தியாசம் இருக்கு.

இதையே...உங்கள் துணை..ஆண், பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா

இல்லையா என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்..எப்போது சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள்..எப்படி அதை கை ஆளுவீர்கள் என்று கேட்டால்..என்ன? இது என்னோட ஒரு கருத்து தான் அக்கா..

  • தொடங்கியவர்

நண்பன் ஒருவனின் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அவன் திருமணம் செய்ததும் தனது பழைய காதலை மனைவியிடம் சொல்லியிருந்தான். ஆனால் பிரச்சனை எப்படி வந்ததென்றால், சில காலத்தின் பின் இருவரிடையே வாக்குவாதங்கள் வந்தபோது மனைவி இவனின் பழைய காதலைப் பற்றி குத்திக் காட்டி கதைக்கத் தொடங்கிவிட்டாள். இவனுக்கு இப்போதும் வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என நினைத்து சந்தேகப் படத்தொடங்கி விட்டாள். :icon_idea::lol::lol::D

வாக்குவாதம் என்றது ஒராள் தன்ர பாட்டில கதைக்கிறதில்லைதானே...நண்பன் விட்டுக்குடுத்திருக்கலாமெல

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீரப்பிரதாபங்கள் யாழ் களத்துக்கு உதவலாம். வாழ்க்கைக் களத்தில உதவாது.

சரி காதலை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எத்தனை ஆண்கள் தங்களின் முதல் மனைவியாக விதவைப் பெண்களை ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்கின்றனர். எத்தனை பெண்கள் மனைவியை இழந்த ஆண்களை கணவனாக்கத் தயாராக இருக்கின்றனர்.

தாயகத்தின் போரினால் பாதிக்கப்பட்ட குடும்ப ஆண்களையும் பெண்களையும் புகலிடத்தில் உள்ள எத்தனை பெண்கள் காதலிக்கவும் திருமணம் செய்யவும் தயாராக உள்ளனர்.

சும்மா சப்பைக்கட்டுக்கும் தங்களின் பருவக் கூத்துக்களில் நிகழ்ந்த தவறுகளை நியாயப்படுத்தவும் இப்படி முன்னாள் காதலை பின்னாள் கணவனுக்கு சொல்வோம் என்று கதையளக்கின்றனர். அதுவேற புதுமை முற்போக்கு என்று காட்டுவர். இது காலம் காலமாய் நடக்குது..ஆனால் நாம் கேட்டது போல இந்தப் புலம்பல் புகலிடத்துப் பெண்கள் மனைவியை இழந்து தவிக்கும் தாயக ஆண் ஒருவரை காதலிக்கவும் திருமணம் செய்யவும் தயாராமோ..??!

சுனாமியால் பாதிக்கப்பட்ட பல நூறு ஆண்கள் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உள்ளனர். அதேபோல் வீரப்பிரதாபங்கள் பேசும் ஆண்களில் எத்தனை பேர் ஈழத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கு மறுவாழ்வளிக்க அவர்களைக் காதலிக்க தயாராக உள்ளனர்..?! முன்னைய காதலைச் சொல்லலாமோ விடலாமோ என்று நியாயம் கேட்பவர்கள்.. இவற்றிற்கு ஏன் முன்வரக் கூடாது. தமக்கு ஒரு நியாயம் பிறர்க்கு இன்னொன்று.

எம்மைப் பொறுத்தவரை காதலோ திருமணமோ எல்லாம் ஒருவரோடு என்ற நிலைப்பாடுதான். வீரப்பிரதாபங்கள் எல்லாம் மனச்சாட்சிக்கு சரிப்பட்டு வராதவை. விதவைகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய மன ஸ்திரம் நமக்கில்லை. அது அவ்வளவு சுலபமாகவும் தெரியவில்லை. அந்த வகையில் இந்த நம்பர் 1 , 2 காதல்களை செய்யவும் அதை 3வாத கலியாணம் செய்யிறவரிடம் பெருமைக்காக காதல் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்லிக்காட்டவும் நாம் தயாரில்லை. உண்மை இதுதாங்க. நாம தப்புப்பண்ணி இருக்காட்டா ஏன் பயப்பிட வேணும்..! துணிஞ்சு நிற்கலாம்...! துணிந்து பேசலாம். பதுங்க பயப்பிட., பதிலுக்கு குத்திக்காட்ட வாதிட வேண்டிய அவசியமில்லை..! அதுக்காக இங்க வாதிடுறவங்க தப்புப் பண்ணுனவங்க என்ற அர்த்தமில்லை. பொதுவான கருத்தாக எடுக்கப்பட வேண்டும். :D:lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ஙரழவந யெஅநஸ்ரீ'மாப்பிளை' னயவநஸ்ரீ'குநடி 25 2007இ 05:16 Pஆ' pழளவஸ்ரீ'263052'ஸ

ஜளணைநஸ்ரீ4ஸஜஉழடழசஸ்ரீசூ696969ஸஜ

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சொன்னால் என்ன பெண் சொன்னால் என்ன இரணடு பக்கமும் இதே பரச்சினை இருக்கத்தான் செய்யும். நடைமுறையை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கொண்ட ஆண் அல்லது பெண் துணையாக கிடைத்தால் அவர்களிடத்தில் சொல்லும் பொழுது அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனநினைக்கன்றேன்.

ஒவ்வொரு மனிதனும் சுயகட்டுப்பாடின்றி தான் செய்யும் தவறுகளை எல்லாம் நடைமுறை என்று ஏற்றுக் கொள்ள நியாயம் கற்பிக்க வெளிக்கிட்டால் கொலைகளும் நியாயமாகும்..! அந்த வகையில் உங்களைக் கொல்ல நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..?! அதுவும் நடைமுறைச் சாத்தியம்தானே. இது உயிர்க் கொலையல்ல. அதையும் தாண்டி மனசுக் கொலை..! வேணும் என்றால் கொலைஞர்கள் தங்கள் தங்கள் தவறுகளின் பெருமைக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நியாயவான் கொலைஞனை அங்கீகரிக்கான்..! :D:lol::icon_idea:

  • தொடங்கியவர்

அப்பு நெடுக்கு சரியான சந்தேகப் பேர்வழியாக இருக்கும் போல இருக்குதே?

அப்பப்பா! இந்த கிழட்டு வயசிலையே மனுசனுக்கு இவ்வளவு சந்தேகம் என்றால், இளம் பெடியனாகத் திருந்த காலத்தில் தனது மனைவியைப் போட்டு என்ன ஆட்டு ஆட்டிச்சுதோ! :icon_idea::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல வேண்டும் என்றில்லை. அந்தந்த வயதில் துளிர் விடும் சில ஆசைகள் எல்லாம் முதலில் காதலே இல்லை. எது காதல் என்பதற்கு வரைவிலக்கணம் சொல்லுங்கோ அதுக்குப் பிறகு அதைச் சொல்லலாமா விடலாமா என்று யோசிக்கலாம்.

ரிஷிமூலம்/ நதிமூலம் எல்லாம் பார்க்க வெளிக்கிட்டா திருமணவாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.

பழைய காதலை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இல்லவே இல்லை. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. சொல்ல வேண்டும் என்று துணிந்து வெளிக்கிட்டால் அதன் பிறகு வருகின்ற பிரச்சனைகளையும் சமாளிக்கத் துணிவுள்ளவையாய் இருக்க வேண்டும்.

'காதல்" என்பதையே பலர் காமத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதால் தான் இந்தப் பிரச்சனையே எழுகின்றது. !!...முதலில் அந்தப் பார்வைக் கோளாறையும் மனசுக் கோளாறையும் தவிர்க்கவேண்டும் தகர்த்தெறிய வேண்டும். !

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு நெடுக்கு சரியான சந்தேகப் பேர்வழியாக இருக்கும் போல இருக்குதே?

அப்பப்பா! இந்த கிழட்டு வயசிலையே மனுசனுக்கு இவ்வளவு சந்தேகம் என்றால், இளம் பெடியனாகத் திருந்த காலத்தில் தனது மனைவியைப் போட்டு என்ன ஆட்டு ஆட்டிச்சுதோ! :lol::D:(

அப்புக்கு சந்தேகம் என்றெல்லாம் கிடையாது. ஒழுக்கம் என்பதை நிறையவே எங்களிடம் மட்டுமன்றி எங்களோட உள்ளவங்கட்டையும் எதிர்பார்ப்பம். அது சந்தேகமல்ல. எதுவானாலும் நேரவே கேட்பம். அது கேட்கிற எமக்கு சந்தேகமாகத் தெரியாது. ஆனால் மறுதரப்பினர் அதை சந்தேகம் என்று சொல்லும் போதே அட இதைச் சந்தேகத்துக்க போடுறாங்களே என்று வியப்பா இருக்கும். இது வெகு சிலரோடு மட்டும் பழகும் போது அடிக்கடி நடக்கும். மற்றும்படி பொதுவாக சந்தேகப்படுபவர்களோடு நாமெல்லாம் அதிகம் நெருங்கிப் பழகுவது கிடையாது. ஆக்கள் கொஞ்சம் ஒரு மாதிரியென்றால் தூர வைச்சிடுவம்..! நாம ஒதுங்கிக்குவம். :huh::icon_idea:

நெடுக்காலபோவான்! நீங்கள் காதலித்து திருமணம் செய்ய உத்தேசித்துள்ளீர்களா அல்லது பேச்சுத் திருமணமா?

வாக்குவாதம் என்றது ஒராள் தன்ர பாட்டில கதைக்கிறதில்லைதானே...நண்பன் விட்டுக்குடுத்திருக்கலாமெல

'ஒவ்வொரு மனிதனும் சுயகட்டுப்பாடின்றி தான் செய்யும் தவறுகளை எல்லாம் நடைமுறை என்று ஏற்றுக் கொள்ள நியாயம் கற்பிக்க வெளிக்கிட்டால் கொலைகளும் நியாயமாகும்..! அந்த வகையில் உங்களைக் கொல்ல நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..?! அதுவும் நடைமுறைச் சாத்தியம்தானே. இது உயிர்க் கொலையல்ல. அதையும் தாண்டி மனசுக் கொலை..! வேணும் என்றால் கொலைஞர்கள் தங்கள் தங்கள் தவறுகளின் பெருமைக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நியாயவான் கொலைஞனை அங்கீகரிக்கான்..!"

நெடுக்ஸ் சார் நடைமுறை என்றசொல் இதற்கு பொருத்தம்இல்லை நான்ஏற்றுக்கொள்கின்றென் ஆனால் என்னுடைய மீனிங் என்னண்டால்

பலருடயவாழ்வில் காதல் குறுக்கிடுகின்றது ஆனால் எல்லோராலும் வெற்றி பெறமுடிவதில்லை. தாய் தந்தையரின் கெடுபடிகாரணமாக சிலரது காதல் தோல்வியில் முடிகின்றது.ஒருசிலர் பெரும்பாலும்ஆண்கள்ஏமாற்றுக

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டும் என்றில்லை. அந்தந்த வயதில் துளிர் விடும் சில ஆசைகள் எல்லாம் முதலில் காதலே இல்லை....

இதையே...உங்கள் துணை..ஆண் பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த தலைப்பில் கொஞ்சம் விளக்கம் தேவையென்று நினைக்கிறேன். ஏனென்றால் காதலில் பல விதம். ஆனால் முக்கியமாக இரண்டு விதமான காதலை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டோமானால்...

ஒன்று பழைய காலத்து காதல், மற்றயது இன்றைய காலத்து காதல் அதாவது இன்றைய காலத்து காதல் பெரும்பாலும் காமத்துடன் சேர்ந்தது. இந்த காலத்து காதலை எங்க மனைவியிடமோ அல்லது கணவனிடமோ சொல்லுவது கொஞ்சம் கடினம் ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் பெரும்பான்மையினருக்கு இல்லையென்று தான் குறிப்பிடமுடியும்.

ஆனால் பழைய காலத்து காதல் நிறைய வேறுபாட்டை கொண்டது

அதாவது ஒரு ஆணும் பெண்ணும் மூன்று அடி தூரத்தில் நின்று தான் காதலிப்பார்கள். இதைப்பற்றி நாம் எங்களுடைய மனைவியிடமோ அல்லது கணவனிடமோ சொல்லுவது தப்பில்லையென்று தான் நான் கருதுகிறேன். இதை ஏற்கக்கூடிய பக்குவமும் அவர்களிடம் இருக்கும்.

நன்றி

வல்வை மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துணை..ஆண், பெண்..தன் பழைய காதலை சொன்னால்..ஏற்றுக்கொள்வீர்களா?

ஏன் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நீங்கள் காதலித்து திருமணம் செய்ய உத்தேசித்துள்ளீர்களா அல்லது பேச்சுத் திருமணமா?

எந்த நாகரிகமும் சமூக ஒழுக்கமும் தனி மனித ஒழுக்கமும் மகிழ்வையும் விரும்பும் மனிதன் ஒருவரைத்தான் காதலிப்பான் திருமணம் செய்வான். நமக்குத்தான் அதெல்லாம் நடந்து முடிஞ்சாச்சே...! :P :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சார் நடைமுறை என்றசொல் இதற்கு பொருத்தம்இல்லை நான்ஏற்றுக்கொள்கின்றென் ஆனால் என்னுடைய மீனிங் என்னண்டால்

பலருடயவாழ்வில் காதல் குறுக்கிடுகின்றது ஆனால் எல்லோராலும் வெற்றி பெறமுடிவதில்லை. தாய் தந்தையரின் கெடுபடிகாரணமாக சிலரது காதல் தோல்வியில் முடிகின்றது.ஒருசிலர் பெரும்பாலும்ஆண்கள்ஏமாற்றுக

  • தொடங்கியவர்

எந்த நாகரிகமும் சமூக ஒழுக்கமும் தனி மனித ஒழுக்கமும் மகிழ்வையும் விரும்பும் மனிதன் ஒருவரைத்தான் காதலிப்பான் திருமணம் செய்வான். நமக்குத்தான் அதெல்லாம் நடந்து முடிஞ்சாச்சே...! :P :lol:

காதலித்து திருமணம் முடித்த தங்களுக்கே வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா? பேசாமல் அப்பா, அம்மா காட்டியிருந்த பெண்ணிற்கு தாலி கட்டியிருந்தால் இப்போது கடைசி காலத்திலாவது சீதனக் காசின் உதவியுடன் ஜாலியாக வாழ்ந்திருக்கலாம்! இனியென்ன? பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து திருமணம் முடித்த தங்களுக்கே வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா? பேசாமல் அப்பா, அம்மா காட்டியிருந்த பெண்ணிற்கு தாலி கட்டியிருந்தால் இப்போது கடைசி காலத்திலாவது சீதனக் காசின் உதவியுடன் ஜாலியாக வாழ்ந்திருக்கலாம்! இனியென்ன? பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை! :lol:

சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கவல்ல எமது கருத்தாடல். சமூகத்தில் நடப்பத்தில் எமக்குத் தவறானதாகவும் சமூகத்துக்குப் பாதிப்பானதாகவும் உள்ள விடயத்தை உள்ள விதத்தில் வெளிக்கொண்ர வேண்டும் என்பதே கருத்தாடலின் நோக்கம். மனசு குரங்கல்ல தாவ விடுவதற்கு. அது ஒரு கண்ணாடி. கீறல் விழுந்தால் விழுந்ததுதான். அகற்ற முடியாது. அதனால் பக்குவமா சிந்தித்து நிதானித்து முடிவுகளை எடுக்க வேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று நினைப்பது தவறானது. ஏமாற்றலாம் என்றால் அதற்கு காரணம் கண்டு பிடிக்க எல்லா மனிதனாலும் போலிக்காரணங்களையே பெரிசாகப் புனைந்து காட்ட முடியும். அந்த நிலைகள் கீறல்களை தவிர்க்கப் போவதில்லை. :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.