Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சராக தான் இருக்கவேண்டுமென நினைத்தே மக்கள் அணிதிரண்டனர் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Featured Replies

முதலமைச்சராக தான் இருக்கவேண்டுமென நினைத்தே மக்கள் அணிதிரண்டனர் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

முதலமைச்சராக தான் இருக்கவேண்டுமென நினைத்தே மக்கள் அணிதிரண்டனர் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

முதலமைச்சராகத் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கவேண்டுமென்றே பொதுமக்கள் தமது வீட்டின்முன் அணி திரண்டனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,  “மாகாண சபையில் முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எங்களுக்கு நன்மை இல்லை. எங்களுக்கு ஓர் அமைச்சுப் பதவியும் இல்லை.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சரியான கொள்கையை வெளிப்படுத்தி, மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கொள்கையில் இருப்பதால் அவர் பழிவாங்கப்படுகின்றார்.

அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத்தான் அவருக்கு ஆதரவாக அணி திரண்டோம். மற்றவர்கள் செயற்பட்டது தொடர்பில் இன்று கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது.

விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் மக்களை அணி திரட்டவில்லை.

அணி திரண்ட மக்கள் தான் மீண்டும் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்று கூடினார்கள் என்று விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறான ஒன்று” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=72736

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கதைத்து  குழப்புவதால் தான் மக்கள் உங்களை ஒரு மாற்றீடாக கூட பார்ப்பதில்லை என்ற உண்மை எப்ப புரியபோகுதோ தெரியலை .

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் அவர்களது வழிகாட்டிகள்  சரியில்லை

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

கஜேந்திரகுமார் அவர்களது வழிகாட்டிகள்  சரியில்லை

சொந்த புத்தி இல்லையா ? இல்லாட்டி காசை வாங்கிகொண்டு பேருக்கு எதிர்கடை என்று சைக்கிள் ஓடுறாரோ என்று இவரின் இந்த அறிக்கையை பார்த்தபின் சந்தேகம் எழுகிறது . 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

சொந்த புத்தி இல்லையா ? இல்லாட்டி காசை வாங்கிகொண்டு பேருக்கு எதிர்கடை என்று சைக்கிள் ஓடுறாரோ என்று இவரின் இந்த அறிக்கையை பார்த்தபின் சந்தேகம் எழுகிறது . 

கூட்டமைப்பின் வழி தமிழ் மக்களிற்கு எந்த ஒரு சிறு துரும்பையும் தராது என்ற எண்ணத்தில் கூட்டமைப்பினை உருவாக்கிய பலரில் ...இருந்த ஒருவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட  த தே ம முன்னணி  இன்று விஜய காந்த்  ரேஞ்சில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
கஜேந்திரகுமார் அவர்களுக்கு சொந்தப்புத்தி இருந்தாலும்... அவருடன்  சேர்ந்த ஒரு சிலரால் அவர் பிழையான வழியில் கொண்டு செல்லப்படுகின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பதவியும் பெயரும் ஒரு சிலருக்கு இன்று தேவைப்படுகின்றது.
அதில் த தே ம மு யும் சேர்ந்து விட்டது . 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரக்குமாரின் கொள்கைகளை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்பிற்கு எதிராக அவர்கள் இறங்கியபோது வாக்குகள் பிரிக்கப்படலாம் என்கிற காரணமாக அது இருக்கலாம். இதைவிடவும் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

அதேபோல இன்று திரு விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பெருகி வரும் மக்கள் ஆதரவென்பது தமிழ்க் கூட்டமைப்பின்மேல் மக்கள் அடைந்துவரும் அதிருப்தியென்பதும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கூட்டமைப்பின் வழிநடத்துனர்களான சம்மந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களது அரசுடனான தோழமைப் போக்கும் கையாலாகத்தனமும் கூடக் காரணமாக இருக்கலாம். அதனால் மக்கள் மாற்றுத்தலமை ஒன்றைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது அவர்களுக்குக் கிடைத்த நம்பிக்கைக் கீற்றாக திரு விக்னேஸ்வரன் அவர்களைப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இன்றைய சிங்கள பெளத்த பேரினவாதத்தினை கட்டிக் காத்து நிற்கும் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ்த் தலமையாக எவர் வந்தாலும் எதுவுமே மாறிவிடப்போவதில்லை என்கிற நிலை இருக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகள் இப்போதைக்கு நிறைவேறப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இதுவரை இந்த அரசினால் ஏற்படுள்ள நல்ல விடயங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. சில இடங்களிலிருந்து  ஆக்கிரமிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை
 தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சில அபிவிருத்திகள் போன்றவை.  இவை தம்மால்த்தான் நடைபெறுகின்ற என்று கூட்டமைப்பு உரிமைகோருவது வியப்பானது. சில வெளிநாட்டு அழுத்தங்களினால் இவை நடைபெறுகின்றன என்பதே உண்மை.

ஏனென்றால் தமிழ்த்தலமைகளை தமது இருப்பினை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே மாறி மாறி அரசேறும் சிங்களப் பேரினவாதிகள் பாவித்துவருகிறார்கள் என்பது சரித்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

ஏனென்றால் தமிழ்த்தலமைகளை தமது இருப்பினை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே மாறி மாறி அரசேறும் சிங்களப் பேரினவாதிகள் பாவித்துவருகிறார்கள் என்பது சரித்திரம்.

சரியாகச்சொன்னீர்கள் ரகு அண்ணை ,தலீவர் சம்பந்துவிட்கு எதிர்க்கட்சி தலீவர்  பதவி கொடுத்து வாயை அடைத்ததும் பேரினவாதிகளின் இராசதந்திரம் தான். இராசதந்திரிக்கே இராசதந்திரம் கற்பித்திருக்கிறது சிங்கள் பேரினவாதம் 

3 hours ago, ragunathan said:

தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சில அபிவிருத்திகள் போன்றவை.  இவை தம்மால்த்தான் நடைபெறுகின்ற என்று கூட்டமைப்பு உரிமைகோருவது வியப்பானது.

வேறு வழி ...தங்களது சொகுசுவாகனமும் ,வாசஸ்தலமும் கையை விட்டு போய்விடுமே .அதுதான் யாரோ பெறும் பிள்ளைக்கு தங்களது இனிசியலை வைக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ragunathan said:

கஜேந்திரக்குமாரின் கொள்கைகளை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்பிற்கு எதிராக அவர்கள் இறங்கியபோது வாக்குகள் பிரிக்கப்படலாம் என்கிற காரணமாக அது இருக்கலாம். இதைவிடவும் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

அதேபோல இன்று திரு விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பெருகி வரும் மக்கள் ஆதரவென்பது தமிழ்க் கூட்டமைப்பின்மேல் மக்கள் அடைந்துவரும் அதிருப்தியென்பதும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கூட்டமைப்பின் வழிநடத்துனர்களான சம்மந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களது அரசுடனான தோழமைப் போக்கும் கையாலாகத்தனமும் கூடக் காரணமாக இருக்கலாம். அதனால் மக்கள் மாற்றுத்தலமை ஒன்றைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது அவர்களுக்குக் கிடைத்த நம்பிக்கைக் கீற்றாக திரு விக்னேஸ்வரன் அவர்களைப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இன்றைய சிங்கள பெளத்த பேரினவாதத்தினை கட்டிக் காத்து நிற்கும் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ்த் தலமையாக எவர் வந்தாலும் எதுவுமே மாறிவிடப்போவதில்லை என்கிற நிலை இருக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகள் இப்போதைக்கு நிறைவேறப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இதுவரை இந்த அரசினால் ஏற்படுள்ள நல்ல விடயங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. சில இடங்களிலிருந்து  ஆக்கிரமிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை
 தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சில அபிவிருத்திகள் போன்றவை.  இவை தம்மால்த்தான் நடைபெறுகின்ற என்று கூட்டமைப்பு உரிமைகோருவது வியப்பானது. சில வெளிநாட்டு அழுத்தங்களினால் இவை நடைபெறுகின்றன என்பதே உண்மை.

ஏனென்றால் தமிழ்த்தலமைகளை தமது இருப்பினை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே மாறி மாறி அரசேறும் சிங்களப் பேரினவாதிகள் பாவித்துவருகிறார்கள் என்பது சரித்திரம்.

மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றிகள் , ...மகழ்ச்சி:10_wink:

18 hours ago, பெருமாள் said:

இப்படி கதைத்து  குழப்புவதால் தான் மக்கள் உங்களை ஒரு மாற்றீடாக கூட பார்ப்பதில்லை என்ற உண்மை எப்ப புரியபோகுதோ தெரியலை .

கஜேந்திரக்குமாரின் பலவீனம் குழப்ப அரசியல்!

அவரது பேச்சுக்களில் நிலையான, தெளிவான கருத்துக்களை விட விதண்டாவாதமும் குழப்பமுமே பலமடங்கு மிகையாக இருக்கும்.

19 hours ago, Athavan CH said:

அதற்காகத்தான் அவருக்கு ஆதரவாக அணி திரண்டோம்.

கஜேந்திரகுமார் ஏதோ தனக்காகவே மக்களும் இளைஞர்களும் திரண்டார்கள் என்று நினைத்துக்கொண்டால்  அதைவிட மோசமான கற்பனை வேறு எதுவுமே இருக்கமுடியாது.

19 hours ago, Athavan CH said:

விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் மக்களை அணி திரட்டவில்லை.

விரைவில் சுமந்திரன், மாவை, சிறீதரன், சரவணபவன் போன்ற சதிகாரர்களுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தான் எழுதினேன்.அதற்க்குள் அவர் எம்மவர்களால் உணரப்பட்டு விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.