Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!!

Featured Replies

வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!!

 
 

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

20170719_165920-1024x768.jpg

வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.

உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

http://uthayandaily.com/story/10474.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது நீதி கிடைக்கும்?

மிகவும் வெளிச்சமுள்ள நேரம். அவர் அப்படி நிற்காமல்   சென்றிருந்தால் அவர் வாகனத்தின் டயர்ளை சுட்டு அவர் வேகத்தை குறைத்து செயலிழக்க செய்து இருக்காலாம்.

 

 

  • தொடங்கியவர்

மணல் லாரி நிறுத்தாததால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, பருத்தித்துறையில் பதட்டம்

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிக்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் விடுத்த உத்தரவை மீறியும் அந்த லாரி சென்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறந்தவருடைய சடலம் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, ஆத்திரம் கொண்ட அவ்வூர்வாசிகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை காவல் நிலையத்தின் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும், ஆத்திரம் கொண்ட பொது மக்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதையும், அதனால், ஒருவர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, ஊர் மக்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பருத்தித்துறை நகரில் பதட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ் நகரில் இருந்து மேலதிகமாகக் காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருடைய உத்தரவை மீறிச் சென்றதற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முறைகேடாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிககை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-40549901

நேர்மையாக மணல் ஏற்றி இலஞ்சம் கொடுக்க மறுத்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலர் மத்தியில் தோன்றியுள்ளது.

சட்டவிரோத மண்கடத்தலில் ஈடுபடும் கும்பலின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களின் படுகொலை பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது!

 

  • தொடங்கியவர்

 

யாழ் இளைஞன் சுட்டுக்கொலை - பொலிஸார் இருவர் கைது

பருத்தித்துறையில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட லொறி ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நிறுத்தாமல் பயணித்த இந்த லொறியின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பிரதேச மக்கள் அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/151493?ref=home-feed

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு சென்றுள்ள விசேட பொலிஸ் குழு

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருதார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்காக கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று பருத்தித்துறைக்கு சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி உட்பட் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்லவுள்ளனர்.

நேற்று மாலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவில், நிறுத்தாமல் சென்ற மணல் லொரி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னர் பாரிய அளவு பிரதேச மக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு, அதற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

அதன் பின்னர் நிலைமை சமாதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.tamilwin.com/security/01/151491?ref=home-feed

  • தொடங்கியவர்

Update ; வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது

 

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார்.

http://www.virakesari.lk/article/21700

  • தொடங்கியவர்

பொலிஸ் சூட்டில் இளைஞர் சாவு! – வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்!!

 
பொலிஸ் சூட்டில் இளைஞர் சாவு! – வடமராட்சி சம்பவத்தின் முழு விவரம்!!
 
  •  

வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

20170719_165920-1024x768.jpg

20170719_165951-1024x768.jpg

அவரது இடுப்பு மேற்பட்ட பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.”-என்று பொலிஸார் தெரிவித்தனர்.

image-0-02-06-1270f248dde1f620d7b96eceb01604e42d497899456cf3ab2d2cc780c583128d-V.jpg

image-0-02-06-9fd2e47500c43c2ab8582cb37f7211f643496171f18493b780418e5a5bc2a49c-V-copy-1024x768.jpg

உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்றுவந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர்.

image-0-02-06-98c6f8415cf19c957561c13e353cba27e1cd7f273ef703c83063b4033a595603-V-1024x1024.jpg

மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கோசன் துறை மூத்த பொலிஸ் அத்தியட்சிகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.

அதேவேளை, அதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.

20170719_192712-1024x768.jpg

துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.

image-0-02-06-5d70cff38fe1cee411c04a614953a554005fec46b9e1bcd9190463eb1319eedd-V-1024x614.jpg

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

 

http://uthayandaily.com/story/10505.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அநியாயமான சாவு.    இவர் வாகனத்தை சிறிது நிறுத்தி சென்றிருக்கலாம்

மணல் கொள்ளை மட்டுமில்லை கொலையே செய்திருந்தாலும் பொலிசாருக்கு சுடும் அதிகாரத்தை யார் கொடுத்தது // அநியாய சாவு + ஆழ்ந்த இரங்கல்கள்.

சட்டவிரோத மண்கொள்ளைக்கு பாதுகாப்பு வழங்கும் சொறிலங்காவின் சிங்கள போலீசார் தனது சொந்த தேவைக்கு கொஞ்ச மண்ணை எடுத்து சென்றவரை சுட்டு படுகொலை செய்திருக்கலாம் எனறும் கருத இடமுண்டு.

இது போன்ற சம்பவங்கள் சொறிலங்காவின் சிங்கள போலீஸ் கொலைகாரர்களை தமிழ் மண்ணிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

  • தொடங்கியவர்

இரு பொலிஸாருக்கும் 14 நாள்கள் விளக்கமறியல்! – UPDATE

 
இரு பொலிஸாருக்கும் 14 நாள்கள் விளக்கமறியல்! – UPDATE
 

இரண்டாம் இணைப்பு: 

கைது செய்யப்பட்டுள்ள இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இரு பொலிஸ் உத்தியோகததர்களும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

 

முதலாம் இணைப்பு

வடமராட்சி கிழக்கில் நேற்று இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, தற்போது வாக்குமூலம் வழங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகர்தர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

 

http://uthayandaily.com/story/10707.html

Edited by நவீனன்

sorry ராஜேஷ்

உங்கள் கருத்துடன் என்னால் உடன்படமுடியவில்லை.

சுட்டது தப்பு 

அவர் தனது தேவைக்கு களவெடுத்தாரா அல்லது வியாபாரத்துக்கு களவெடுத்தாரா என்பது விதண்டாவாதம். அவர் கள்ளன் என்பது தெரிகிறது எதுக்கு களவெடுத்தார் என்பது தேவையற்ற வாதம்.

மறுபடியும் sorry ராஜேஷ் 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

 

4 minutes ago, ஜீவன் சிவா said:

sorry ராஜேஷ்

உங்கள் கருத்துடன் என்னால் உடன்படமுடியவில்லை.

சுட்டது தப்பு 

அவர் தனது தேவைக்கு கலவேடுத்தாரா அல்லது வியாபாரத்துக்கு கலவேடுத்தாரா என்பது விதண்டாவாதம். அவர் கள்ளன் என்பது தெரிகிறது எதுக்கு கலவேடுத்தார் என்பது தேவையற்ற வாதம்.

மறுபடியும் sorry ராஜேஷ் 

சொறிலங்காவின் சிங்கள போலீசார் கொலைகாரர்கள் என்பதுவும் நன்றாக தெரிகிறது!

நடந்த பல சம்பவங்களை பாக்கும் போது சொறிலங்காவின் சிங்கள போலீஸ் கொலைகாரர்களை தமிழ் மண்ணிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதுவும் தெளிவாக தெரிகிறது!

ஒரு கொலையை அந்த கொலைகாரர்களே விசாரிக்கவும் அந்த சிங்கள கொலைகாரர்களை அனுராதபுரத்துக்கு கொண்டு செல்வதையும் அனுமதிக்கவே முடியாது!

எனவே இந்த கொலைகாரக் கும்பல் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்பது தெளிவு!

5 minutes ago, Rajesh said:

சொறிலங்காவின் சிங்கள போலீசார் கொலைகாரர்கள் என்பதுவும் நன்றாக தெரிகிறது!

நடந்த பல சம்பவங்களை பாக்கும் போது சொறிலங்காவின் சிங்கள போலீஸ் கொலைகாரர்களை தமிழ் மண்ணிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதுவும் தெளிவாக தெரிகிறது!

ஒரு கொலையை அந்த கொலைகாரர்களே விசாரிக்கவும் அந்த சிங்கள கொலைகாரர்களை அனுராதபுரத்துக்கு கொண்டு செல்வதையும் அனுமதிக்கவே முடியாது!

எனவே இந்த கொலைகாரக் கும்பல் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்பது தெளிவு!

Sorry ராஜேஷ்

ஒரு கொலைகாரகும்பலை வெளியேற்றியாச்சு. இந்த கும்பலையும் வெளியேற்ற வேண்டும். ஆனால் இதுக்கும் ஆயிரம் கருத்தை பகிர்வது வெறுமனே சொறிவதுக்குத்தான் சமம்.

47 minutes ago, Rajesh said:

சட்டவிரோத மண்கொள்ளைக்கு பாதுகாப்பு வழங்கும் சொறிலங்காவின் சிங்கள போலீசார் தனது சொந்த தேவைக்கு கொஞ்ச மண்ணை எடுத்து சென்றவரை சுட்டு படுகொலை செய்திருக்கலாம் எனறும் கருத இடமுண்டு.

 

1 minute ago, ஜீவன் சிவா said:

Sorry ராஜேஷ்

ஒரு கொலைகாரகும்பலை வெளியேற்றியாச்சு. இந்த கும்பலையும் வெளியேற்ற வேண்டும். ஆனால் இதுக்கும் ஆயிரம் கருத்தை பகிர்வது வெறுமனே சொறிவதுக்குத்தான் சமம்.

 

இந்திய கொலைகாரக் கும்பலை அப்பவே வெளியேற்றயாச்சு!

மிஞ்சியிருப்பது சிங்கள கொலைகாரக் கும்பல்!

  • தொடங்கியவர்

சூட்டுச் சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

 
சூட்டுச் சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
 

வடமராட்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனராஜ் தலைமையிலான குழுவினர் இன்று சம்பவ இடத்துக்குச் சென்று ஆராய்ந்ததுடன், உயிரிழந்தவரின் உறவினர்களிடமிருந்தும் தகவல்களை சேகரித்துக் கொண்டனர்.

http://uthayandaily.com/story/10743.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.