Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் இரு முனைப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-அருஸ் (வேல்ஸ்)-

அண்மைக்காலமாக சிறிலங்கா அரசின் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பன மகிந்த ராஜபக்ச அரசு ஒரு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் முறியடிக்கப்படும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவுமே சிங்கள மக்களை நம்பிக்கை கொள்ள வைத்திருக்கும். அதில் தவறும் இல்லை ஏனெனில் அரசின் பிரச்சாரபோரின் (Pசழியபயனெய றுயச) வலிமை அது.

பொதுவாக போரானது இரு முனைகளில் போரிடப்படுவதுண்டு ஒன்று களத்தில் நடைபெறும் நேரடிச்சமர், இரண்டாவது மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெற்றி கொள்ளும் பிரச்சாரப்போர். இங்கு பிரச்சாரப் போரானது மக்களை தமக்கு பின்னால் அணிதிரளச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரமாகும்.

அதில் மிகைப்படுத்தல்கள், பொய்யான தகவல்கள், தவறான வழிநடத்தல்கள் எல்லாம் அடங்கியிருக்கும். எனினும் அரசியலிலும், ஆட்சி அதிகாரங்களிலும் அது குறுகிய கால நன்மையை கொடுக்கவல்லது. அதாவது எதிர்காலத்தில் தமக்கு பேரழிவை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளையும் பெரும் வெற்றிகரமான நடவடிக்கையாக தற்காலத்தில் காண்பிக்கும் பெருமை பிரச்சாரப் போருக்கு உண்டு.

அரசியலைக் கடந்து இராணுவ வழிகளில் நோக்கினால் இந்த பிரச்சாரப்போரினால் இரு பாரிய நன்மைகளை படையினர் அடையமுடியும். ஒன்று தமது மக்களினதும், படையினரினதும் மனோபலத்தை கட்டியெழுப்புதல், இரண்டாவது எதிர்ப்படையையும், எதிர்த்தரப்பு மக்களையும் அச்சமுறச்செய்தல் அல்லது அவர்களின் மனவலிமையை சிதைத்தல்.

சிறிலங்கா அரசும், அதன் தென்னிலங்கை ஊடகங்களும் தமது படையினரால் பெறப்படும் சிறு, சிறு முன்னேற்றங்களையும் பெரும் இராணுவ வெற்றிகளாகவும், புலிகளின் மிகப்பெரும் தோல்விகளாகவும் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் காண்பிப்பதில் கடும் பிரயத்தனம் எடுத்து செயற்படுகின்றன.

சிங்கள மக்களிடம் தம்மை பலசாலிகளாக காட்டும் அரசுகள் தமது செல்வாக்கை தக்கவைக்க முடியும் என்;பது அவர்களின் கணக்கு. அதேபோலவே சர்வதேசத்தில் புலிகளை பலவீனர்களாக காட்டிக்கொள்வதன் மூலம் புலிகள் மீதான சர்வதேசத்தின் பார்வையை தமது பக்கம் திருப்பி அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும், ஒரு சிறு குழுவாகவும் சித்தரிக்க முடியும்.

இந்த நோக்கங்களை வலிமையான களங்களில் புலிகளுடன் மோதிப் பெற்றுவிட முடியாது என்பது சிங்கள அரசிற்கு நன்கு புரிந்த விடயம். எனவே தான் தமது மோதல்களை மென்மையான இலக்குகளை நோக்கி திருப்பிய அதேசமயம் பிரச்சாரப்போரை வலிமையாக்கியுள்ளது அரசு.

அண்மையில் கைப்பற்றப்பட்ட வாகரையும் அதன் பின்னர் நடந்த பிரச்சாரங்களையும் சற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும் அதாவது அரச படைகள் களத்தில் குவித்த கவனத்தை விட தொலைக்காட்சிகளும், தென்னிலங்கை பத்திரிகைகளும், வானொலிகளும் செலுத்தியவை தான் அதிகம். அரசும் வாகரையில் நடத்திய களமுனை போரைவிட, பிரச்சாரப் போரைத் தான் வலிமையாக்கி இருந்தது.

முதலில் வாகரையின் ஆக்கிரமிப்பு சுதந்திரக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மகிந்தரால் அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிலங்கா அரசின் மாதாந்த பாதுகாப்புச்சபைக் கூட்டமும் கொழும்பு கில்டன் ஆடம்பர விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு வந்த மகிந்த ஒரு கேக் பெட்டியுடன் தான் வந்திருந்தார். வாகரை வெற்றி விழாவை கொண்டாடும் முகமாக கேக்கை வெட்டும்படி தனது அபிமான இராணுவத்தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவை கேட்டுக்கொண்டார் மகிந்த.

ஆனால் அதை மறுத்த பொன்சேகா தன்னுடன் அழைத்து வரப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 23 படையணியின் தளபதியான பிரிகேடியர் தயா ரட்னாயாக்கவை (பொதுவாக படையணித் தளபதிகள் பாதுகாப்புச்சபை கூட்டத்திற்கு வருவதில்லை) கேக்கை வெட்டும் படி கேட்டுக்கொண்டார். அவரும் கேக்கை வெட்ட விழாவும் கூட்டமும் சூடுபிடித்தது.

அதனுடன் மட்டும் நின்றுவிடவில்லை கொண்டாட்டங்கள், சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் வாகரையில் மகிந்த உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கி தனது வெற்றியை தொடர்ந்து கொண்டாடினார். இதனுடனும் வெற்றிவிழா நின்றபாடில்லை ஒவ்வொரு நாளும் தோண்டித் தோண்டி ஆயுதங்கள் அள்ளிக்கொண்டு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் இன்றும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன.

அதாவது, வாகரை தமிழீழத்தின் வலிமை மிக்க தளப்பகுதிக்கு நிகராக சித்தரிக்கப்பட்டதுடன், புலிகளின் மூன்றில் ஒரு பங்கு ஆயுதங்கள் அங்கு அள்ளப்பட்டதாகவும் கதைகள் அளக்கப்படுகின்றன. இரு 152 மி.மீ ஆட்டிலெறிகள், 12 மோட்டார்கள், 700-க்கும் மேற்பட்ட ரீ-56 ரக துப்பாக்கிகள், இரு விமான எதிர்ப்புத்துப்பாக்கிகள் உட்பட சிறிலங்கா படைகள் அறிவித்த ஆயுதங்களின் பட்டியல் மிக, மிக நீளம்.

இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவித்ததுடன் மட்டும் சிங்கள அரசு நிற்கவில்லை வாகரையில் வைத்து அவற்றை ஊடகங்களின் கமராக்களின் வெளிச்சத்திற்கு விருந்தாக்கியதுடன், சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சியிலும் வாகரையில் கைப்பற்றிய ஆயுதங்களுக்கான தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டன.

இது உண்மையா அல்லது பொய்யா என ஆராயத்தேவையில்லை ஏனெனில் வாகரையில் 400 புலிகள் தான் இருக்கிறார்கள் என்று கூறிய அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களின் தகவலை தந்தது எப்படி? சரி தப்பிச் சென்ற 400 புலிகளும் ஆயுதங்களை புதைத்துவிட்டு தொப்பிக்கலவுக்கு கைவீசிக்கொண்டா சென்றார்கள்? ரீ-56 துப்பாக்கிகளையும் காவமுடியாத அளவிற்கு புலிகள் களைத்து போய்விட்டனரா? என்ற கேள்விகளுக்கான விடைகளை தேடும் போது அது புரியும்.

விடுதலைப் புலிகள் பின்னர் தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆயுதங்களை புதைத்துவிட்டு சென்றதாகவும் சிறிலங்கா அரச தரப்புக் கதைகளை கூறியது. அதாவது தொப்பிக்கல காட்டில் தாக்குதல் திட்டத்தை வகுத்துவிட்டு 700 புலிகள் வெறும் கையுடன் வந்து புதைத்த ஆயுதத்தை தோண்டி எடுத்து வாகரையில் தாக்குதல் நடத்த எண்ணியிருந்தனர் என்றால் அது தான் இந்த வருடத்தின் சிறந்த நகச்சுவை.

இந்த பொய்யான பிரச்சார போர் தொடர்பாக வரலாற்றில் என்ன கூறப்பட்டுள்ளது?

'போர் என்று ஒன்று ஆரம்பிக்கும் போது அதில் முதலில் மரணத்தை தழுவுவது உண்மை தான்" (வுhந கசைளவ உயளரயடவல றாநn றயச உழஅநள ளை வுசரவா- ரு.ளு. ளுநயெவழச ர்சையஅ துழாளெழnஇ 1917) இது 1917 ஆம் ஆண்டு அமெரிக்க செனற்றர் கிராம் ஜோன்சன் கூறியது. அது தான் உண்மையும் கூட.

ஆட்சி அதிகாரங்களை தக்கவைப்பதற்கு மகிந்தரிடம் எதுவுமே இல்லை. பலமான அரசியல் பலமில்லை, உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பில்லை, முற்போக்கான சிங்கள மக்களில்லை. இந்த மூன்றிலும் ஒன்றேனும் சரிவர அமையப்பெறாது ஆட்சியில் அமர்ந்த மகிந்தருக்கு தனது அரசியல் வாழ்வை தக்கவைக்க தெரிந்த ஒரேவழி இனப்போர் தான். ஆனாலும் விடுதலைப் புலிகளை பலமான களங்களில் சந்திக்க தன்னிடம் உள்ள படையினரின் ஆயுதப்பலமும், ஆட்பலமும், மனோ வலிமையும் போதுமானதான என்பது அவருக்கு சந்தேகமே.

எனவே தான் போர் நிறுத்தம் என்ற கேடயத்தை இறுகப்பற்றிய படி மிக இலகுவான இலக்குகளை பெரும் படைகொண்டு கைப்பற்றியுள்ளது அரசு. ஆனால் தன்னால் கைப்பற்றப்பட்ட பிரதேசம் புலிகளின் பலம் வாய்ந்த தளம் என்பதை காட்டவேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. அப்போது தான் தனது அரசியல் பலவீனங்களை அதற்குள் மறைக்க முடியும் என்பதுடன். எதிர்க்கட்சிகளின் வாயையும் அடைக்கமுடியும்.

அரசின் இந்த நடவடிக்கைய தான் மகிந்தர் அரச தலைவரான பின்னர் நடைபெற்ற இரண்டு சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் இராணுவ அணிவகுப்புக்கள், கனரக வாகனங்கள், நவீன போர்க்கலன்களின் சாகாசங்கள் என்பனவும் எடுத்துக் காட்டியுள்ளன.

எனவே தான் வாகரை விடுதலைப் புலிகளின் மிகப்பெரும் கோட்டையாக சித்தரிக்கப்பட்டதுடன் அந்த கோட்டையை தக்கவைக்க ஆயிரத்துக்கு மேற்பட்ட கனரக ஆயுதங்களுடன் புலிகள் போரிட்டதாகவும். இறுதியில் படையினரின் அடி தாங்கமுடியாது ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு வெறும் கையுடன் புலிகள் தப்பி ஓடியதாகவும் அம்புலிமாமா கதைகள் புனையப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் தான் ஊடகத்துறையினருக்கு காண்பிக்கப்படும் ஆயுதங்கள். அந்த ஆயுதப்பட்டியலை கூர்ந்து பார்த்தால் ஒன்று புரியும் 1,000 படைக்கலன்களில் ஒன்று கூட தனித்துவமானவை இல்லை. எல்லாம் சிறிலங்காப்படைகள் பயன்படுத்தும் ரகத்தை சேர்ந்தவை.

இதன் மூலம் தென்பகுதிச் சிங்கள ஊடகங்களை தன்பக்கம் இழுத்து தனது அரசியல் நாடக அரங்கை பலப்படுத்த முனைந்துள்ளது அரசு. சிறிலங்கா அரசை பொறுத்தவரை தமிழ் மக்கள் மீதான இனப்போரின் பிரச்சாரங்களுக்கு தென்னிலங்கை ஊடகங்களின் ஆதரவை பெறுவதில் அதிக சிரமங்கள் இருப்பதில்லை. ஏனெனில் தென்னிலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் இனவாதப் போக்குடையவை மேலும் போருக்கு ஆதரவானவை. அதாவது தமது நாட்டின் பொருளாதாரமும், சிங்கள இளைஞர்களின் உயிரும் அநியாயமாக இழக்கப்படுவதை நினைத்து அவை ஒருபோதும் கவலை கொள்வதில்லை.

மேலும் அரசினாலும் அதன் ஊடகங்களினாலும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தென்பகுதியில் மக்கள் மத்தியில் எடுபடுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதாவது

- மக்கள் தமது நாட்டினதும், தமது எதிர்காலம் தொடர்பான செய்திகளை நம்ப தயாராக இருத்தல்.

- மக்கள் மத்தியில் பயப்பீதிகளை உண்டு பண்ணி அதை கருத்துள்ளதாக்குதல்.

- ஊடகத்துறைக்கும் மக்களுக்கும் உள்ள உயர்ந்த உறவு.

- சில குறுகிய நலன்களையுடைய வாதங்கள் மூலம் எண்ணங்களை வளர்த்தல், ஆனால் அது தொடர்பான பரந்த வாதங்களை தவிர்த்தல்.

இந்த அடிப்படைத் தத்துவங்களின் அடிப்படையில் தான் சிங்கள அரசுகளும், அதன் ஊடகங்களும் சிங்கள மக்களை கையாள்கின்றன. எனவே சிங்கள மக்களுக்கு வாகரை புலிகளின் கோட்டையாகத் தான் தெரியும். அள்ளப்பட்ட ஆயுதங்கள் புலிகளின் மொத்த ஆயுதங்களில் மூன்றில் ஒன்றாகவும் தெரியலாம். போரில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கைகளும் ஏற்படலாம். ஆனாலும் சிங்கள மக்களை ஏமாற்றும் அரசிற்கு தெரியும் தமது பலம் என்ன புலிகளின் பலம் என்ன என்பது.

எனவே தான் வாகரை கைப்பற்றப்பட்டதை விழுந்து விழுந்து கொண்டாடிய மகிந்த ஒரு பொதுத்தேர்தலை நடத்தத் துணியவில்லை. 95 விகிதம் புலிகளை முறியடித்தாகி விட்டது என கூறிக்கொண்டு 1999 இல் அரச தலைவர் தேர்தலை சந்திக்க முனைந்த சந்திரிகாவிற்கு ஓயாத அலைகள் - 03 என்ன பாடத்தை போதித்தது என்பது மகிந்தருக்கு தெரியாமல் இருக்காது.

சோவியத்து ஒன்றியம் லவிஷ் (டுயஎiளா ஆடைவையசல Pயசயனநள) இல் நடத்தப்பட்ட பாரிய இராணுவ அணிவகுப்பின் மூலம் தனது நாட்டின் வலிமையை உலகிற்கு காட்ட எண்ணியது. ஆனால் அது சோவியத்தின் பலவீனமான பொருளாதார, அரசியல் நிலைமைகளை மறைக்க போதுமானதாக இருக்கவில்லை. அதே போலவே சிறிலங்கா அரசும் தனது அரசியல் பலவீனம், பொருளாதார சீர்கேடுகள், ஊழல் நிறைந்த அரச நிர்வாகம், மக்களின் அடிப்படைத் தேவைளைக்கூட பூர்த்திசெய்ய முடியாத ஆளும் தரப்பு என தன்னிடம் உள்ள ஒட்டு மொத்த பலவீனங்களையும் தமிழ் மக்களின் மீது ஏவிவிடப்பட்ட போரிற்குள் மறைத்து அதனை தனது பிரச்சாரங்களின் மூலம் கட்டிக் காக்க முற்பட்டுள்ளது.

ஆனால் இதன் மூலம் சர்வதேசத்தில் எழுந்த அபிப்பிராயம், அதிகரித்த வாழ்க்கைச் செலவு, சீரழிந்த பொருளாதாரம், உள்ளுர பலவீனமடைந்து வரும் அரசியல் பலம் என மறைமுகமாக நடைபெற்று வரும் பல மாற்றங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளின் பாரிய அடியொன்று சிங்கள அரசின் தலைமீது இடியென இறங்கும் போது மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிவரும் என்பதுடன். பிரச்சாரப் போரின் உண்மைத்தன்மையும் அம்பலமாகும்.

தற்போதும் இராணுவ மேலான்மை என தன்னால் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை தகர்க்கும் புலிகளின் பாய்ச்சல் யாழிலா? மன்னாரிலா? மணலாற்றிலா? வவுனியாவிலா? என நாடிபிடித்து பார்க்க முடியாத அரசு தனது படைகளையும் ஆயுதங்களையும் ஒவ்வெரு முனைக்கும் நகர்த்தியும், எறிகணை வீச்சுக்களை நிகழ்த்தியும் தான் உசார் நிலையில் உள்ளது போல காட்டிக்கொள்கின்றது.

புலிகளை திசை திருப்ப வன்னிப்பகுதி நோக்கி இராணுவ நகர்வையும் மேற்கொள்ளலாம் ஆனால் தமிழ் மக்களின் மீது கொடிய போரை திணித்து அதன் மூலம் ஆட்சி நடத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை சிங்கள அரசும், அரசும் தென்பகுதி ஊடகங்களும் தம்மை எவ்வளவு தூரம் தவறாக வழிநடத்தியுள்ளன என்பதை சிங்கள மக்களும் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

http://www.tamilnaatham.com/articles/arush20060930.html

இந்தக் கட்டுரை மூலம் நமக்கு கட்டுரையாளர் சொல்ல வரும் செய்தி என்ன?

சிறீ லங்கா அரசு சொல்வதை நம்பாதே! அவர்கள் பொய்சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்! தேர்வுசெய்யப்பட்ட மென்மையான இலக்குகள் மீது தாக்ககுதல்களை செய்துவிட்டு அவற்றை புலிகளின் பாரிய தோல்விகளாக காட்ட முனைகிறார்கள். கைப்பற்றப்பட்டதாய் காட்டப்படும் ஆயுதங்கள் புலிகளுடையவை அல்ல, அவை படையினருடையவையே! இவைதானா? இவ்வாறு தமிழ் மக்களிற்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்கவேண்டியதன் அவசியம் என்ன? அவ்வாறாயின் தமிழ் மக்களால் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாதா? தோல்விகளைக் கண்டால் தமிழ் மக்கள் துவண்டு விடுவார்களா?

முதலில் எமக்கு வெற்றிகள் கிடைக்கவேண்டுமாயின் தோல்விகளை தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தேவை. சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பிரச்சாரங்கள் செய்வது உண்மைதான், அதற்காக சிறீ லங்கா அரசாங்கம் யுத்தத்தில் பெற்றதாய் தாம் கூறும் வெற்றிகள் சகலவற்றையும் அவை பொய்ப் பிரச்சாரம் எனக்கூறி வாதிடுவது முட்டாள்தனமானது. மாபெரும் படைபலம், ஆயுத பலத்தை கொண்டுள்ள சிறீ லங்கா படைகளால் வெற்றிகளை ஈட்ட முடியாது என பிரச்சாரம் செய்து கட்டுரை எழுதுவது சிறி லங்கா அரசு செய்யும் பொய்ப்பிரச்சாரத்தைவிட கேவலமானது.

எதிரியின் பலத்தை எவ்வாறு புலிகள் புரிந்துவைத்து அதற்கேற்றவாறு தம்மை தயார் செய்து வைத்திருக்கிறார்களோ, அவ்வாறே எதிரியின் உண்மையான பலத்தை தமிழ் மக்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும். எதிரி சும்மா வெறும் ரப்பர் குண்டுகளையும், விளையாட்டுத் துப்பாக்கிகளையும் வைத்து போர் புரியும் டம்மி அல்ல. அவன் பலமானவன். எதிரியின் பலத்தை குறைபோட்டு எடைபோடுவது எப்பொழுதும் ஆபத்தானது. இதனால்தான் எமது தலைவர் சிறிய பாம்பையும் பெரிய தடியால் அடிக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார்.

கட்டுரையாளர்கள் கட்டுரை எழுதும்போது தமிழ் மக்களை சந்தோசப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் தமது கட்டுரைகளை வடிக்காது, தமிழ் மக்களின் மனதை தமிழீழ விடுதலையை நோக்கியதாக பக்குவப்படுத்தும் வகையில், கசப்பான உண்மைகளையும், தோல்விகளையும் தாங்கக்கூடிய வலிமையை அவர்களது மனதில் ஏற்படுத்தும்வகையில் ஆரோக்கியமான கட்டுரைகளை எழுதவேண்டும். வெற்றிகள் எமக்கு லொத்தரி அடிப்பதுபோல் வானிலிருந்து கொட்டப்போவதில்லை. இதற்காக நாங்கள் கொடுக்கவேண்டிய விலைகள் அதிகம். இதற்காக நாங்கள் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் ஏராளம். இதை ஒவ்வொரு தமிழனும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து சிறீ லங்கா அரசின் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு கோமாளித்தனமான கட்டுரைகள் எழுதுவது எம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு, தற்கொலைக்கு சமமானது.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் பலத்தை எவ்வாறு புலிகள் புரிந்துவைத்து அதற்கேற்றவாறு தம்மை தயார் செய்து வைத்திருக்கிறார்களோ, அவ்வாறே எதிரியின் உண்மையான பலத்தை தமிழ் மக்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும். எதிரி சும்மா வெறும் ரப்பர் குண்டுகளையும், விளையாட்டுத் துப்பாக்கிகளையும் வைத்து போர் புரியும் டம்மி அல்ல. அவன் பலமானவன். எதிரியின் பலத்தை குறைபோட்டு எடைபோடுவது எப்பொழுதும் ஆபத்தானது. இதனால்தான் எமது தலைவர் சிறிய பாம்பையும் பெரிய தடியால் அடிக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார்.

கட்டுரையாளர்கள் கட்டுரை எழுதும்போது தமிழ் மக்களை சந்தோசப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் தமது கட்டுரைகளை வடிக்காது, தமிழ் மக்களின் மனதை தமிழீழ விடுதலையை நோக்கியதாக பக்குவப்படுத்தும் வகையில், கசப்பான உண்மைகளையும், தோல்விகளையும் தாங்கக்கூடிய வலிமையை அவர்களது மனதில் ஏற்படுத்தும்வகையில் ஆரோக்கியமான கட்டுரைகளை எழுதவேண்டும். வெற்றிகள் எமக்கு லொத்தரி அடிப்பதுபோல் வானிலிருந்து கொட்டப்போவதில்லை. இதற்காக நாங்கள் கொடுக்கவேண்டிய விலைகள் அதிகம். இதற்காக நாங்கள் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் ஏராளம். இதை ஒவ்வொரு தமிழனும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து சிறீ லங்கா அரசின் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு கோமாளித்தனமான கட்டுரைகள் எழுதுவது எம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு, தற்கொலைக்கு சமமானது.

பொறுங்கோ இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு. அதுக்கு பிறகு யாழ், மன்னார், மணலாறு, வவுனியா என்று மாறி மாறி இடி விழ துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று ஓடப் போறாங்கள்.

அது போக உந்த உசார் நிலை என்று எல்லா முனைகளிலும் காட்டிக் கொள்ள செலவிடுகிற பணம் சிறீலங்காவையும் வங்குரோத்து ஆக்கிப் போடும். இது தான் தனிநாட்டைப் பெற இலகுவான வழி என்றால் மிகையாகாது.

வன்னியில் இருந்து வன்கூவர் வரை அரசியல் - இராணுவ ஆய்வுகள் செய்வதாக கூறிக்கொள்பவர்கள் பலர் இன்னும் பகிடிக்கும் வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருகிறார்கள

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகெங்கும் ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் அரசியல் பலம் ஒருங்கிணைகாத வரை எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு கேள்விக்குறி?

அதாவது தாயகத்து மக்கள் தம்மால் முடிந்தளவு எமது போராட்டத்தை முன் நகர்த்தியுள்ளனர். இனி, மேற்கொண்டு போராட்டத்தைத் தொடர்வது புல(ன்)ம் பெயர்ந்த தமிழரின் பொறுப்பும் கடமையும்.

தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் வழிமுறைகள் என்ன என்று திருவாளார் சமாதானம் கூறாமலேயே முருங்கை மரத்தில் ஏறிவிடுவார். அவருக்கு உதவி புரிவதற்கு நான் முன்வந்து எழுதிக்கொள்வது..

ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழுவுடன் பிரச்சினைப்பட்டுவிட்டதால், புலிகள் முதலில் ஈ.என்.டி.எல்.எவ் வை அரவணைக்க வேண்டும். அப்படியே சமாதானத்தையும் கட்டிப்பிடிக்கவேண்டும்.

தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் வழிமுறைகள் என்ன என்று திருவாளார் சமாதானம் கூறாமலேயே முருங்கை மரத்தில் ஏறிவிடுவார். அவருக்கு உதவி புரிவதற்கு நான் முன்வந்து எழுதிக்கொள்வது..

ஈ.என்.டி.எல்.எவ் கருணா குழுவுடன் பிரச்சினைப்பட்டுவிட்டதால், புலிகள் முதலில் ஈ.என்.டி.எல்.எவ் வை அரவணைக்க வேண்டும். அப்படியே சமாதானத்தையும் கட்டிப்பிடிக்கவேண்டும்.

போர் கூச்சல் போடும் உம்மைபோன்ற கருத்தெழுதி கதை அளக்கும் பேர்வழிகள் விடுமுறை நாளிலாவது சிறீலங்கா எம்பசி முன் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தால் பிரித்தானிய தமிழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள். அது சரிவராவிட்டால் வழமைபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணை முழுக்குதான் நல்லது உனக்கு.

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

போர் கூச்சல் போடும் உம்மைபோன்ற கருத்தெழுதி கதை அளக்கும் பேர்வழிகள் விடுமுறை நாளிலாவது சிறீலங்கா எம்பசி முன் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தால் பிரித்தானிய தமிழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள். அது சரிவராவிட்டால் வழமைபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணை முழுக்குதான் நல்லது உனக்கு.

ஏன் விடுமுறை நாளில் சிறிலங்கன் எம்பசி திறந்திருக்குமா? லங்காஷையர் கேற்றில் போய் நின்றால் லண்டன் தமிழர்களை ஒருங்கிணைத்துவிடலாம் என்று சொல்லும் உம்மைப் போன்ற முட்டாள்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :o:o ஒரு மாற்றுத் தீர்வுகளையும் முன்வைக்கமுடியாத உமக்கு ஏன் சமாதானம் என்ற கோஷம்? :lol: பேசாமல் கையைக் கவிட்டுக்குள் இடுக்கிக்கொண்டு நித்திரையைக் கொள்ளும் .. ஏதாவது புதிதாக ஞானம் பிறக்கும். :lol:

ஏன் விடுமுறை நாளில் சிறிலங்கன் எம்பசி திறந்திருக்குமா? லங்காஷையர் கேற்றில் போய் நின்றால் லண்டன் தமிழர்களை ஒருங்கிணைத்துவிடலாம் என்று சொல்லும் உம்மைப் போன்ற முட்டாள்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :o:o ஒரு மாற்றுத் தீர்வுகளையும் முன்வைக்கமுடியாத உமக்கு ஏன் சமாதானம் என்ற கோஷம்? :lol: பேசாமல் கையைக் கவிட்டுக்குள் இடுக்கிக்கொண்டு நித்திரையைக் கொள்ளும் .. ஏதாவது புதிதாக ஞானம் பிறக்கும். :lol:

நான் சொன்ன முதல் யோசனை உமக்கு பிடிக்கவில்லை. சரி, எனது இரண்டாவது யோசனை உமக்கு நல்லா பிடித்திருந்தால் தராளமாக தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரை மூலம் நமக்கு கட்டுரையாளர் சொல்ல வரும் செய்தி என்ன? .....

அப்பிடிப் போடுங்கோ மாப்பிளை.

"தமிழ் மக்களை வெறும் பார்வையாளர்களாக நான் முடக்கி வைத்திருக்கிறேன் நீங்கள் செய்யிறதை செய்யுங்கள்" என்பது அவரின் சிங்கள மக்களுக்கான செய்தி.

தமிழ் மக்களுக்கான செய்தியானது, "புலி எப்படிப் பாய்ந்தது என்ன நடந்தது என்பதை அறிய எனது அடுத்த கத்துரைக்காகக் காத்திருங்கள்" என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன முதல் யோசனை உமக்கு பிடிக்கவில்லை. சரி, எனது இரண்டாவது யோசனை உமக்கு நல்லா பிடித்திருந்தால் தராளமாக தொடரும்.

ஞாயிற்றுக்க்கிழமைகளில் Hayes இற்கு வந்து உமது வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்.. எனக்குப் பிரச்சினையில்லை..

ஞாயிற்றுக்க்கிழமைகளில் Hayes இற்கு வந்து உமது வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்.. எனக்குப் பிரச்சினையில்லை..

நான் மாதத்தில் மூன்று ஞாயிறு வேலை செய்பவன். இருப்பினும் உமது விருப்பம் கரிசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மாப்ஸ் சும்மா தூள் கிளப்பிட்டிங்க.

பக்கா போடு போட்டு கொஞ்ச வார்த்தேலை சும்மா நச்சின்னு இருந்துது உங்க பதில்.

keep it up ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.