Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி நீதிமன்றில் மனு

Featured Replies

பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி நீதிமன்றில் மனு

 
பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி நீதிமன்றில் மனு கோப்புப் படம்
 

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார்.

அதையடுத்தே தடை உத்தரவு கோரும் இந்த மனு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/11335.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னால் உடனே நிப்பாட்டி விடுவார்கள் 

5 minutes ago, MEERA said:

நல்ல விடயம்

 

  • தொடங்கியவர்

இலங்கை வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி சுமந்திரன் வழக்கு

 

வடக்கு கிழக்கு பகுதிகளில் 65000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி சுமந்திரன் வழக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்நிர்மான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பகுதிகளில் 65000 வீடுகளை அமைக்கும் கட்டுமான பணிகளை (Metal constriction France) மெடல் கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் பிரெஞ்ச் நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் மேற்கொள்ளும் போது அரசாங்கம் கேள்வி பத்திரங்களை ( Tender ) கோரும் நடவடிக்கைளை முறையாக மேற்கொள்ள தவறியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வீடுகளுக்கு அதிக செலவிட நேரிட்டுள்ளதாக கூறினார்.

அதேபோன்று இவ்வாறு அமைக்கப்படும் வீடுகள் குறைந்த தரத்தை கொண்டதாக அமையுமென்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சம்பந்தப்பட்ட வீடுகளை நீண்டகாலம் பயன்படுத்துவது குறித்து உத்தரவாதம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் எச்சரித்தார்.

எனவே இந்த வீட்டு திட்டத்தை சம்பந்தப்பட்ட பிரெஞ்ச் நிறுவனமூடாக கட்டப்பட கூடாதென்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானமொன்று எடுத்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எனவே இந்த திட்டம் முன்னெடுப்பதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-40600437

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும் பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார்.

அப்ப காரணம் இது இல்லையோ??? 

அண்மையில் ஆடிய திருகுதாளங்களினால் அடுத்த தேர்தலில் வெல்ல சுமந்திரன் இதுபோன்று ஏதாவது கூத்துக்களை அரங்கேற்ற வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்!

சம்பந்தன் கிளிநொச்சியில் தவமிருக்கிறார்!

இவர்களின் மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் நாடகம் எவ்வளவு தூரம் செல்லுமென பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இலங்கை வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி சுமந்திரன் வழக்கு

 என்ன இது!?!?!?!?!?!?  

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருகுது......:cool:

  • தொடங்கியவர்

பொருத்து வீட்டுக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் மனு

 

 

Sumanthiran.jpg

வடக்கில் நிர்­மா­ணிக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் பொருத்து வீட்டுத் திட்­டத்­துக்கு  எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினை நேற்று தககல்ச் செய்­துள்ளார்.  

சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள் குடி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கார அமைச்சர் சுவா­மி­நாதன், ஏர் செல்லர் மிட்டல் கொன்ஸ்ட்­ரக்ஷன் பிரான்ஸ் மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரை பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பி­ன­ராக பெய­ரிட்டே இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவை அவர் இவ்­வாறு தாக்கல்  செய்­துள்ளார்.

2015.செப்­டம்பர் மாதம் 22 ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்ட பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் வடக்கில் யுத்­ததால் பாதிக்­கப்­பட்ட 65 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சுவா­மி­நாதன் 24.03.2016 அன்று பார­ளு­மன்றில் அறி­வித்­த­தாக குறிப்­பிட்­டுள்ள மனு­தா­ர­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமந்­திரன், அது தொடர்­பி­லான அமைச்­ச­ரவை பத்­திரம், ஹன்ஸாட் என்­ப­வற்­றையும் இணைத்து இந்த திட்டம் வடக்கின் சூழ­லுக்கு ஒத்து வராது என மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் இரும்­பி­னா­லான இந்த பொருத்து வீடு­களை நிர்­மா­ணிக்க ஒரு வீட்­டுக்கு 2.1 மில்­லியன் ரூபா செல­வாகும் எனவும் மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழக ஆய்வின் பிர­காரம் சீமந்து கல்­லினால் வீடொன்றைக் கட்­டு­வதை விடவும் இது செலவு கூடி­யது எனவும் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சுமந்­திரன்,  திட்­டத்தை நிறுத்­தவும், உடனடியாக  இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுவதை தடுக்க இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்கவும் இம்மனு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/21841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.